PDA

View Full Version : விடுவிப்பாயே!



குணமதி
22-10-2009, 02:01 AM
காலுமிரண் டுண்டெழுந்து நடக்க மாட்டாள்!

கண்ணிரண்டும் மேல்சிமிட்டி விழிக்க மாட்டாள்!

கோலுண்டு தானறுப்பாள் கத்தியன்று!

கூன் வளர்ந்த முதுகுண்டு, நிமிரமாட்டாள்!

பாலுவந்து குடித்தறியாள் பாக்குத் தின்பாள்!

பகருமவள் மூட்டியுடன் பகுத்து வாழ்வாள்!

மேலினிய மணம்வீசும் மானேமீ

மெல்லியளே நீயுமிதை விடுவிப்பாயே!

ஜனகன்
22-10-2009, 05:06 PM
பாக்குவெட்டி

பா.ராஜேஷ்
23-10-2009, 12:13 PM
ஜனகன் சொன்னதே சரி என படுகிறது!

குணமதி
23-10-2009, 01:27 PM
சரிதான்;
பாக்குவெட்டி சரியான விடையே!
இருவருக்கும் பாராட்டு.
அனைவர்க்கும் நன்றி.

ஜனகன்
23-10-2009, 03:41 PM
என்னாலையும் முடியும் என்று ஒரு நப்பிக்கை வருகிறது:)

குணமதி
23-10-2009, 05:01 PM
என்னாலையும் முடியும் என்று ஒரு நப்பிக்கை வருகிறது:)

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

தமிழ் தெரிந்த எவராலும் முடியுமே!

முதலில் சொல்லிய பெருமைக்ககும் பாராட்டுக்கும் உரியவராகியிருக்கிறீர்கள்.
நன்றி.

வியாசன்
23-10-2009, 05:29 PM
மதி உங்கள் கவித்திறன் என்னை மலைக்க வைக்கின்றது. பாராட்டுக்கள்

குணமதி
23-10-2009, 05:49 PM
மதி உங்கள் கவித்திறன் என்னை மலைக்க வைக்கின்றது. பாராட்டுக்கள்

மிக்க நன்றி நண்பரே.

ஆ.ஜெயஸ்ரீ
23-10-2009, 07:13 PM
என்னால் உங்களின் புதிருக்கான விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை . தமிழ் தெளிவாக அறிய நான் இன்னும் தூரம் போக வேண்டுமோ ?

அமரன்
24-10-2009, 07:32 AM
என்னால் உங்களின் புதிருக்கான விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை . தமிழ் தெளிவாக அறிய நான் இன்னும் தூரம் போக வேண்டுமோ ?

ஏழு படி முன்னால் போனால் போதும். புதிருக்கான விடை கிடைத்து விடும்.

குணமதி
24-10-2009, 01:08 PM
என்னால் உங்களின் புதிருக்கான விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை . தமிழ் தெளிவாக அறிய நான் இன்னும் தூரம் போக வேண்டுமோ ?

கண்டிப்பாக முடியும்.

செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தொடர்ந்து படித்து வந்தீர்களானால் எளிதில் புரிந்துவிடும்.

நன்றி.

குணமதி
24-10-2009, 01:09 PM
ஏழு படி முன்னால் போனால் போதும். புதிருக்கான விடை கிடைத்து விடும்.


சரியாகச் சொன்னீர்கள்!

நன்றி.