PDA

View Full Version : ராஜ் ராஜரத்தினம்...அறிஞர்
21-10-2009, 07:00 PM
ராஜ் ராஜரத்தினம்...

நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயார்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் ஃபண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ (திஙிமி) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயார்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப்புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி' ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்' அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.

இன்டெல். ஐ.பி.எம்., மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன

பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறை யில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச்சந்தையில் லாபம் பார்த்தார் என்று எஃப்.பி.ஐ. தனது

முதல் குற்ற அறிக்கையில் கூறியிருக்கிறது. இவரை பொறி வைத்துப் பிடித்தவர், அதிபர் ஒபாமாவினால் சமீபத்தில் நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ப்ரித் பராரா என்ற பஞ்சாபி - இந்தியர்தான்!

இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போரில், தனது வியாபாரத் தொடர்புகள் கருதி நடுநிலை எடுத்து வந்த ராஜ், 2000-ம் ஆண்டு முதல் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கமான ஜிஸிளி எனும் 'தமிழர் மறுவாழ்வு அமைப்பு' மூலம், இலங்கையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு எழுந்தது. 2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது.


இலங்கையின் அரசியல்வாதிகளை இவர் நன்கு கவனித்து வந்ததாலோ என்னவோ... ஈழப்பகுதிகளில் இவர் செய்த உண்மையான மனிதாபிமான செயல்களை பாராட்டியே வந்தனர். அதேசமயம், 'இவர் ஈழப்பிரச்னையில் தலையிடுகிறார்' என்று உளவு அமைப்புகள் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலேந்து மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசினால் கைது செய்யப்பட்ட ஜிஸிளி-ஜிகிவிமிலி ஸிணிபிகிஙிலிமிஜிகிஜிமிளிழி ளிஸிநிகிழிமிஞீகிஜிமிளிழி தலைவர் கருணாகரன் கந்தசாமி, போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் 'மிஸ்டர் பி' என்பவர் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீஸ் கைப்பற்றியது. 2000, 2004 ஆண்டுகளில் தலா ஒரு மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் இலங்கை வங்கியில் இருந்து சேகரித்தது. யானையிறவு போரில் புலிகள் வெற்றிபெற இந்த நன்கொடைகள் பெருமளவு உதவியதாகவும் இலங்கை போலீஸார் அரசுக்குத் தகவல் தந்தனர்.

மொத்தத்தில், 2000-ம் ஆண்டு முதலே போலீஸாரின் பார்வையில் வந்த ராஜ், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார் என்று தெரிகிறது.

எஃப்.பி.ஐ - கோர்ட்டில் உத்தரவு பெற்று இவரது தொலைபேசி,கைபேசிகளை ஒட்டுக்கேட்டது. இவரது பிஸினஸ் கோஷ்டியில் ஒரு ரகசிய உளவாளியை நுழைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தலைவர் திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் ரத்தினத்திடம் 'ப்ளாங்க் செக்' கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்' என்றாராம் ராஜ். இதற்காக ராஜ் வைத்த ஒரே கண்டிஷன், புலிகளின் ஆதரவு பெற்ற மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் கேரன் பார்க்கரை அழைத்துப் பேச வைக்கவேண்டும் என்பது என்றும் கூறப்படுகிறது. பிறகு, பலமுறை புலிகளின் ஆதரவுக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்றும் அதையெல்லாம்

எஃப்.பி.ஐ தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தது என்றும் சொல்கிறார்கள் இப்போது.

ஆனால், ராஜரத்தினத்தின் நண்பர் வட்டமோ, ''அவர் தமிழ் ஆர்வலர். ஆகவே பேரவைக்கு நன்கொடை கொடுத்தார். பல்வேறு சேவை மையங்களுக்கும்தான் வாரி வாரி வழங்கியுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் புலி ஆதரவாளர் என்று கூறுவது தவறு. சிறிய வயதில் கஷ்டப்பட்ட ராஜ், ஏழைகளுக்கு உதவினார். சுனாமி தாக்கிய கிராமங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இதை அன்றைய இலங்கை அதிபரே பாராட்டினார்!'' என்று கூறுகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனை தலைமை டிரஸ்டியாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க - இந்திய ஃபவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தில் ராஜ் டிரஸ்டியாக செயல்படுகிறார். இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பெரும் கொடை வள்ளல் ராஜ்தான். இதனால், இவர் புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. இவரது கம்பெனியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். செல்வச் செழிப்பில் வளைய வந்த ராஜ், ஒரு சமயம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 500 விருந்தினர்களை களிப்பூட்டினார். பங்குச் சந்தை முதலாளிகள், வங்கித் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என்று கீகிலிலி ஷிஜிஸிணிணிஜி நபர்கள் அன்று அந்த கப்பலில் மிதந்தனர். மிக உயரிய ஒயின், புளூ லேபிள் விஸ்கி ஆறாக ஓடியது. விருந்தினர்களோடு அந்த கப்பல் நியூயார்க் மாநகரை சுற்றி வந்தது. பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலும், புலிகளின் ஆதரவுப் பழியும் ராஜ் மீது இறங்கியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து புலிகள் ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில், புலிகளின் ஆதரவு பிரமுகர்கள் மீது அமெரிக்கா வழக்குகளை தூசி தட்டி எடுப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கைது நடந்ததா என்ற கேள்வியும் இதனால் எழத் துவங்கியுள்ளது.

(நன்றி-விகடன்)

அன்புரசிகன்
21-10-2009, 08:20 PM
இலங்கையின் புலனாய்வுப்பிரிவு ஏற்கனவே கையை விரித்துவிட்டது. அவர் TRO ற்கு பணம் வழங்கிய சமயத்தில் இலங்கையிலோ அமெரிக்காவிலோ விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டிருக்கவில்லையாம்.

தவிர அண்மையில் இலங்கை அரசிற்கு கூட பணம் வழங்கியிருக்கிறார். அதற்காக மகிந்த கூட தனிப்பட்ட ரீதியில் நன்றி தெரிவித்திருந்தாராம்....

அறிஞர்
21-10-2009, 09:14 PM
பணம் கிடைக்கும் வரை பெற்றுக் கொண்டு.... இப்பொழுது கையை விரித்துள்ளது.. இலங்கை அரசு....

இவரை போன்ற பல பண முதலைகள் அமெரிக்காவில் இன்றும் இருக்கிறார்கள்.

aren
22-10-2009, 03:04 AM
இதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். இவர் வெளியே வந்துவிடுவார். கவலைபடவேண்டாம்.

அமரன்
24-10-2009, 07:55 AM
விலாங்குத்தனமான காரியம்.

இப்படிப் பார்க்கப் போனால் வெளிநாட்டிலுள்ள்ள 95 விழுக்காடு தமிழரை கைது செய்ய வேணும்.

aren
25-10-2009, 05:16 AM
விலாங்குத்தனமான காரியம்.

இப்படிப் பார்க்கப் போனால் வெளிநாட்டிலுள்ள்ள 95 விழுக்காடு தமிழரை கைது செய்ய வேணும்.

இதன் பின்னனி வேறாக இருக்கும் அமரன். வேறு காரணங்களுக்காக இவரை முடக்கப்பார்க்கலாம். அதற்கான முயற்சியாகவும் இது இருக்கலாம்.

praveen
25-10-2009, 06:59 AM
தமிழன் ஒருவர் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற சாதனையை குறைக்க இன்னொருத்தர் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள் போல :).

இவர் மீது பிரதானமாக வழக்கு பதிந்திருப்பது பங்குவர்த்தகம் முறைகேடு பற்றியதே. அந்த கேஸ் ஸ்டிராங்காக இருக்காது என்று இருப்பதால் போனது வந்தது என்று அனைத்து பழசையும் கிண்டிப்பார்க்கிறார்கள் போல.

புலிகளிடம் காசு வாங்கி கொண்டு தான் அவர்களுக்கு ஆதரவாக நடக்கிறீர்களா என்று வைகோ - விடம் முன்னர் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட போது, புலிகளுக்கு பணத்தேவை அதிகம் உண்டு, இதில் அவர்கள் எனக்கு பணம் கொடுத்தார்கள் அதனால் தான் இப்படி என்பது தமிழ் உணர்வை கொச்சைப்படுத்துவதாகும் என்று சொல்லியிருந்தது நியாபகம் வருகிறது.

புலிகள் பலவிதமான நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களிடம் பணம் இயக்கத்திற்கு பெற்றுள்ளனர். அதில் இவர் தான் அதிகம் கொடுத்தார் என்று சொல்ல முடியாது. சிக்கினவர் மீது இம்மாதிரி குற்றச்சாட்டு சொல்லப்படும் போது அது பத்திரிக்கைகளில் பரப்பரப்பாக எழுத விசயம் கிடைப்பதற்கே.

நாடு கடந்த தமிழீழம் அமைக்க முற்பட்டார் என்று கே.பி யை பிடித்தது மாதிரி அமெரிக்காவில் வாழும் உருத்திரகுமார் அவர்களை என்னவாவது செய்ய முடிந்ததா?.

புலிகள் முத்திரை குத்தி அப்பாவி மக்களை கொன்றது போக இப்போது முன்னர் உதவியவர்களையும் பழிவாங்க இலங்கை அரசு அண்டர்கிரவுண்ட் வேலை செய்கிறது. அது தான் தற்போது இவர் மீது 30 பேர் புலிகளால் பாதிக்கப்பட்டவர் என வழ்ககு பதிந்துள்ளார்களாம். அவர் பிடிக்கப்பட்டது பங்கு வர்த்தகம் மோசடிக்காக ஆனால் பின் தொடர்ந்த வழக்கு புலிகள் போருக்கு பணம் கொடுத்தார், அதனால் பாதிக்கப்பட்டோம் என்று சிலர்.

வழக்கு உடைக்கப்பட்டு வெளியே வந்து விடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் கொஞ்ச காலம் ஆகும் என்று தெரிகிறது. இந்தியாவாக இருந்தால் இருக்கிற கேஸை எல்லாம் அவர் மேலே போட்டிருப்பார்கள் :).

அன்புரசிகன்
25-10-2009, 08:21 AM
இந்தியாவாக இருந்தால் இருக்கிற கேஸை எல்லாம் அவர் மேலே போட்டிருப்பார்கள் :).
:D:D

அமெரிக்கா சற்று வித்தியாசமாக உள்ளது. பிடித்த கேஸ் பூட்டகேஸ்ஸாக மாறியதால் வேறு கேஸ் பதிந்திருக்கிறார்.

விகடன்
28-10-2009, 05:51 AM
அமெரிக்கா ராஜ் ராஜரத்தினத்தை பிரபல்யப்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், இதுவரை காலமும் நான் இப்படி ஒருவரை அறிந்திருக்கவில்லை. இப்போது நானே அறிந்திருக்கிறேன் என்றால் யோசித்துப் பாருங்கள் ???

அறிஞர்
28-10-2009, 02:35 PM
அமெரிக்கா ராஜ் ராஜரத்தினத்தை பிரபல்யப்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், இதுவரை காலமும் நான் இப்படி ஒருவரை அறிந்திருக்கவில்லை. இப்போது நானே அறிந்திருக்கிறேன் என்றால் யோசித்துப் பாருங்கள் ???ஊரில் விசாரித்துப் பாருங்கள்.. பினாமி பேரில் பலருக்கு உதவியிருப்பார்.

சுனாமி நேரத்தில் பல உதவியுள்ளனர்.. அவர்களில் இவரும் ஒருவராக இருந்திருப்பார்.

aren
28-10-2009, 03:05 PM
அடுத்தமுறை தேர்தலில் நிற்கலாம் என்கிறீர்களா

இன்பா
31-10-2009, 11:47 AM
திருப்பதி தரிசனத்துக்கும் பிறகு, பல மாற்றங்களை தலைவர்கள் கண்டிருக்கிறார்கள், ஏன் காணமலே கூட போயிருக்கிறார்கள், அந்த வகையில் இலங்கை அதிபர்...

ஆகவே அடுத்த தேர்தலில் ஏகோபித்த ஆதரவுடன் அடுத்த முறையும் பக்ஷே வெல்வார் என்பது என் அனுமானம் :D