PDA

View Full Version : சிட்டுக்குருவி

குணமதி
21-10-2009, 12:51 PM
சின்ன சிட்டுக் குருவியே!

சிறக டிக்கும் குருவியே!

மின்ன லாகப் பறக்கவும்

மேலும் கீழும் செல்லவும்

உன்னைப் பழக்கி விட்டதார்?

உண்மை சொல்ல வேண்டுமே!

என்னைக் கூட உன்னைப்போல்

எளிதில் பறக்கச் செய்வரா?

aren
21-10-2009, 03:37 PM
சென்றமுறை சென்னை சென்றபொழுது ஒரு சிட்டுக்குருவையைக் கூட காணமுடியவில்லை. ஏன் என்று காரணம் தெரியவில்லை.

என்னுடைய அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் நான்கு சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. தினமும் ஒரு முறையாவது அவற்றைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல். அது பல சமயங்களில் நிறைவேறிவிடுவது குறித்து கொஞ்சம் சந்தோஷம்.

குணமதி
22-10-2009, 04:13 PM

நன்றி.

ஜனகன்
22-10-2009, 05:25 PM
நல்ல பாட்டு. சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு

குணமதி
22-10-2009, 05:40 PM
நல்ல பாட்டு. சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு

நன்றி.

அமரன்
24-10-2009, 07:46 AM
பறவையைக் கண்ண்டான்.. விமானம் படைத்தான்..

எதையும் மனிதன் உருவாக்கவில்லை. இயற்கையிலிருந்து உருவி எடுத்து பொருத்தினான். சின்ன வயசில் இப்படியான பாடல்கள் அம்மாவும் ஆசிரியையும் பாடிக்காட்டிய போது இந்த உண்மை புரியவில்லை. இப்போது புரிகிறது.

நாளைய சந்ததிக்கு நல்லதொரு பாடல்.

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகின்றன உங்கள் எழூத்துகள்.

குணமதி
24-10-2009, 01:24 PM

மிக்க நன்றி.