PDA

View Full Version : மாங்காய்ப் பித்து (Mango Madness)



சொ.ஞானசம்பந்தன்
21-10-2009, 07:48 AM
மாங்காய்ப் பித்து (Mango Madness)

மூன்று மாதச் சூலிகள், 'மாங்காய், மாங்காய்' என்று தேடிப் பிடித்து விரும்பித்தின்று மகிழ்வார்கள். அதுதான் மாங்காய்ப் பித்து என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் எழுதுவது ஒரு மனநோய் பற்றி.

ஆஸ்திரேலிய வடபகுதி மக்களை அக்டோபர் நவம்பர் மாதங்களில் தாக்கக் கூடியது. கோடைக்காலம் நெருங்க நெருங்க வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துக் கொண்டே போகும். மக்கள் தங்கள் ஆற்றல் குறைந்து சுறுசுறுப்பு சூனியமானதாய் உணர்வார்கள். இந்தப் பொது சங்கட நிலைமையைச் சிலரால் தாக்குப் பிடிக்க இயலாது. அளவுகடந்த மன இறுக்கமும் நிம்மதிக் குறைவும் அவர்களுக்கு உண்டாகும். இதுவே மாங்காய்ப் பித்து.

எல்லாவித மனக்கோளாறுகளும் முற்றுவதும், புதியவர்களைப் பற்றுவதும் அந்தக் கால கட்டத்தில் அதிகரிப்பதாய் உளநோய் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சரி, இதற்கும் மாங்காய்க்கும் என்ன தொடர்பு? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறதே?

தொடர்பு உண்டு. அது ஆஸ்திரேலியாவில் மாங்காய் பழுக்கும் பருவம். எனவே அந்தப் பெயர்.

இந்நோய் ஏற்படுவதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. வெப்பக் கால ஈரப்பதத்தில் மக்கள் பல வாரங்கள் உழல்வதால் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்கும் சக்தி குறைந்துவிடுகிறது என்பது மருத்துவர்களின் கருத்து. தெற்கிலிருந்து வட பகுதிக்கு அப்போது பெயர்கிற மக்கள் மனக்குழப்பத்துக்கு ஆளாவதும் பருவகால அசெளகரியந்தானாம்.

காரணம் புரியாமையால் தடுப்புக்கு வழியில்லை. நீர்மங்களை நிறையப் பருகுவதும், இயன்றவரைக் குளிர் சூழலில் வாழ்வதும் அதிக சிரமம் தரும் வேலைகளை ஒத்திவைப்பதும் அறிவுடைமையாம்.

(மையக்கருத்தைத் தந்த நூல் : Good Health Fact Book)

aren
21-10-2009, 08:08 AM
என்னவோ புதுசு புதுசாக ஏதோதோ சொல்கிறீர்கள். நமக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதப்பா!!!

வியாசன்
21-10-2009, 09:24 AM
நன்றி ஞானநசம்மந்தன். மாங்காய் பித்து உங்கள் விளக்கத்தின் மூலம் தெரிந்துகொண்டேன் நன்றி

தாமரை
21-10-2009, 11:09 AM
நம்ம ஊர்ல கூடத்தான் மாங்கா மடையன் என்ற சொற்றொடர் புழக்கத்தில் இருக்கு..

நம்ம ஊர்லயும் சித்திரை மாதக் கத்திரி வெயிலில் மக்களுக்கு மண்டை குழம்பித் திரியறாய்ங்க.. மாங்கா சீசனும் அதுதான்..

நாம முடிச்சு போடலை அவ்வளவுதான்,, ஹி ஹி

பா.ராஜேஷ்
21-10-2009, 05:45 PM
நல்ல விளக்கம், நன்றி அன்பரே!!

ஜனகன்
21-10-2009, 06:48 PM
நம்ம ஊர்ல கூடத்தான் மாங்கா மடையன் என்ற சொற்றொடர் புழக்கத்தில் இருக்கு..

நம்ம ஊர்லயும் சித்திரை மாதக் கத்திரி வெயிலில் மக்களுக்கு மண்டை குழம்பித் திரியறாய்ங்க.. மாங்கா சீசனும் அதுதான்..

நாம முடிச்சு போடலை அவ்வளவுதான்,, ஹி ஹி

ஓ.... கோ.. அப்படியா விஷயம்
அதுதான் சித்திரை மடையன் என்று, ஏப்ரல் பூல்
கொண்டாடுகின்றார்களோ????????? :icon_p:

அறிஞர்
21-10-2009, 07:04 PM
புதிய விசயங்கள்..
நன்றி அன்பரே....

ரங்கராஜன்
23-10-2009, 09:40 PM
அது என்ன ஆஸ்திரேலியாவில் என்னுடைய அலுவலகத்திற்கு வாங்க மாங்காய் பித்து, பலப்பழ பித்து என்று நிறைய விதமான பித்துக்களை காட்டுகிறேன். அதுவும் இரவு வேலையில் என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் பித்துக்குளி முருகேசன் மாதிரி தான் திரிவார்கள்.......... இப்போ நான் இரவு பணியில் இருக்கிறேன்.............. ஆமா நான் யாரு??????? இங்க என்ன செய்து கொண்டு இருக்கிறேன்??????? ஒண்ணும் புரியவில்லை........ எனக்கும் மாங்காய் பித்து ?????

அமரன்
24-10-2009, 07:28 AM
சீரியசான இடத்தைக் காமெடி ஆக்கிட்டாங்கப்பா.

சிரிப்பு நல்ல மருந்தாம். அதனாலும் இந்த திரி மருத்துவப் பகுதிக்குப் போகிறது.

பகிர்வுக்கு நன்றி ஞானசம்பந்தன்.

அவுசில் இருக்கிறவங்க யாரப்பா.

சொ.ஞானசம்பந்தன்
27-10-2009, 03:00 AM
படித்த, ரசித்த, பின்னூட்டமிட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.