PDA

View Full Version : என் கனவிற்கு விடை சொல்லுங்கள்Ravee
20-10-2009, 10:55 PM
என் கனவிற்கு விடை சொல்லுங்கள்


http://static.flickr.com/3253/2507105000_5e631614a4.jpg

பலமுறை நான் காணும் கனவு இது
இது ஏன் வருகிறது என்று இன்றுவரை தெரியாது
ஆட்கள் யாரும் இல்லா
அனாதையாய் போன சாலை ஒன்று
காலர நடந்து வருவேன்
எங்கோ கேட்கும் லியோனியின் பேச்சு
கோவில் திருவிழாவோ தெரியாது
காதுக்கு இதமாய் தமிழ் ஏற்ற இறக்கங்களுடன்
கண்ணுக்கு எதிரே ஒரு மாளிகை
காரணம் தெரியாது அதனுள் போவேன்
கம்பிகளால் அடைத்த நடைபாதை
மேலே ஏறி இறங்கி சென்று கொண்டே இருக்கும்
பல வளைவுகள் கடந்து
ஒரு திருப்பத்துடன் கூடிய மாடிப்படி
அகலமான படிகள் கீழே பெரியதாய் ஒரு முற்றம்
முற்றத்தின் வடகோடியில் ஒரு வளைவு
அதன் பின்னே என்ன இருக்கும் ஒரு ஆவல்
படிகளில் மெதுவாக இறங்க
மனது ஏனோ படபடக்கும்
உள்ளே எங்கேயோ ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும்
படிகளின் கடைசி திருப்பத்தில் நின்று திரும்பி பார்ப்பேன்
அங்கே........................................................................
கொழுத்த சிங்கங்கள் மூன்று என்னையே உற்று நோக்கும்
என் கால்கள் கட்டிப்போட்டது போல கிடக்க
உடல் எல்லாம் வேர்க்கும்
இதயம் இருமடங்கு வேகம் கொண்டு துடிக்க
அறிவு சொல்லும் பின்னே போ , பின்னே போ
என் கால் செருப்பு கல்லாய் போனது போல
கைகளால் அவைகளை கழட்டி எறிகிறேன்
கண்ணுக்கு நேரே ஒரு சிங்கம்
நான்கு படிகளாய் தாண்டி ஓடுவேன்
ஒரே திருப்பத்தில் மாடிப்படிகள் முடிந்து போக
என் பின்னே இருமடங்கு வேகத்தில் ஒரு சிங்கம்
கம்பிகள் கொண்ட நடை பாதை கடந்து
பாழாய் போன சில அறைகள்
மின்கம்பிகள் அறுந்து கிடக்க
எந்த மின் இணைப்புகளும் இல்லாமல்
கால் வரை கவ்வ வந்த சிங்கத்தின்
வாயில் இருந்து ஒரே தாவலில்
அந்த அறைக்குள் பாய்வேன்கனவு கலைந்துவிடும்
ஆனால் உள்ளத்தின் பதட்டம் அடங்க
ஒரு பத்து நிமிடங்கள்
அறிவு இப்போது நிதானமாக தேடும் இதன் அர்த்தத்தை
எத்தனையோ தடவை கண்ட கனவுக்கு
இன்று வரை விடை தெரியவில்லை
யாரவது சொல்லுங்கள் ...................
அந்த முற்றத்தில் சிங்கத்துக்கு என்ன வேலை ? ? ?

வியாசன்
21-10-2009, 05:34 AM
நிஜமாகத்ததான் கேட்கின்றீர்களா?

aren
21-10-2009, 05:43 AM
பயம் உங்கள் உள் மனதில் பயம். அதுதான் காரணம்.

படுக்கும்பொழுது எனக்கு ஒன்றும் ஆகாது, நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று மனதினில் திடமாக சொல்லிக்கொண்டு படுங்கள். உங்களை எந்த கனவும் ஒன்றும் செய்யாது.

அருள்
21-10-2009, 09:49 AM
அட போங்க என் கனவில் வேற யாரோ எல்லாம் வராங்க. சிங்கம் வருதே என்று சந்தோஷ படுங்க

Ravee
23-10-2009, 04:11 PM
அருள் சார் அப்படி யார் வராங்க சொல்லுங்க. நானும் ஒரு முறை அவங்கள வந்து பார்க்கிறேன்.

Ravee
23-10-2009, 04:13 PM
எனக்கு இப்போது இலங்கையில் அதிக நண்பர்கள் வந்த காரணத்தாலோ என்னவோ இப்படி சிங்கம், புலி கனவுகள் வருகிறது என்று நினைக்கிறேன்

ஜனகன்
23-10-2009, 04:49 PM
திருநீறு (விபூதி) பூசிக்கொண்டு படுக்கப் போங்கள்.
கெட்ட கனவு வராது

ஆ.ஜெயஸ்ரீ
23-10-2009, 06:51 PM
நாம் உள் மனதில் நினைக்கும் செய்திகளே கனவாக வரும் என்று சொல்வார்கள் . அடிப்படையில் நீங்கள் எதையோ நினைத்து அச்சம் அடைகிறீர்கள் . உங்களை நீங்களே சுய சோதனை செய்து கொண்டால் உங்களின் கனவுக்கான காரணம் தெரியும்

Ravee
24-10-2009, 02:26 PM
http://icdn.indiaglitz.com/tamil/news/muni301106_1.jpg

தாயத்து கட்டனுமா ஜனகன் :lachen001: :mini023: :aetsch013:

ஜனகன்
24-10-2009, 06:05 PM
http://icdn.indiaglitz.com/tamil/news/muni301106_1.jpg

தாயத்து கட்டனுமா ஜனகன் :lachen001: :mini023: :aetsch013:கை வசம் அதிகம் இருந்தால் எனக்கும் ஒன்று
அனுப்பி வையுங்கள். ஒரே கெட்ட கெட்ட கனவாய்
வருது :traurig001::traurig001::traurig001:

வியாசன்
24-10-2009, 06:12 PM
கை வசம் அதிகம் இருந்தால் எனக்கும் ஒன்று
அனுப்பி வையுங்கள். ஒரே கெட்ட கெட்ட கனவாய்
வருது :traurig001::traurig001::traurig001:

ஜனகன் கண்டதையும் பார்க்க கூடாது. பார்த்தால் கனவிலை இப்படித்தான் வரும். உங்கள் வயசுக்கு மீறினதை பார்க்காதையுங்கோ :lachen001::lachen001::lachen001:

ஜனகன்
24-10-2009, 06:25 PM
ஜனகன் கண்டதையும் பார்க்க கூடாது. பார்த்தால் கனவிலை இப்படித்தான் வரும். உங்கள் வயசுக்கு மீறினதை பார்க்காதையுங்கோ :lachen001::lachen001::lachen001:

வியாசன் நான் கண்டதை எல்லாம் பார்ப்பதில்லை
விரும்பி காட்டினால்தான் பார்ப்பேன்