PDA

View Full Version : இனிய மகளே!



குணமதி
20-10-2009, 11:42 AM
கன்னற் சாறே கனியமுதே!

கருத்தில் இனிக்கும் தமிழமுதே!

என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்த

இனிய மகளாய் வந்தவளே!

உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!

ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!

இன்னா கொடுமை இவ்வுலகில்

இல்லா தாக்க எழுந்திடுவாய்!

வியாசன்
20-10-2009, 12:31 PM
குணாமதி தாலாட்டிலேயே புதுமைப்பெண்ணாக வளர்க்கும் உங்கள் துணிச்சல் பாராட்டத்தக்கது. பாட்டில் மட்டும் புதுமைப்பெண்ணாக இருக்காமல் நிஜத்திலும் வாழ வேண்டும்.

அதுசரி புதுமைப்பெண் என்றால் என்ன? பப்புக்கு போவது தண்ணியடிப்பதா..........

அமரன்
20-10-2009, 06:09 PM
இலக்கிய நயத்துடன் நவீன தாலாட்டு.

இன்னும் வேண்டும்.

குணமதி
22-10-2009, 04:14 PM
இருவர்க்கும் நன்றி.

ஓவியன்
29-12-2009, 07:06 AM
தமிழ் இனிமை
மழலைப் பேறும் இனிமை...

இரண்டும் இணையும் இந்தக் கவியை நான் விளக்கவும் வேண்டுமோ...??

பாராட்டுகள் குணமதி..!!

குணமதி
29-12-2009, 07:19 AM
தமிழ் இனிமை
மழலைப் பேறும் இனிமை...

இரண்டும் இணையும் இந்தக் கவியை நான் விளக்கவும் வேண்டுமோ...??

பாராட்டுகள் குணமதி..!!

மிக்க நன்றி.

அரசன்
31-12-2009, 11:12 AM
குணமதியின் தாலாட்டு, குன்றின் மேல் ஒளி!

கவிதைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சி. அதானால என்ன வரும்போது அணியுரை குடுப்போம்ல.

குணமதிக்கு என் பாராட்டுக்கள். நிறைய கொடுங்கள்