PDA

View Full Version : யாரென்று சொல்க!



குணமதி
19-10-2009, 03:57 PM
குலைகுலைக்கும் அழுகலுண்டு தென்னை யன்று
குலத்திலிசைந்து ஒழுகாது வேசி யன்று
வலியசண்டைக் கேகுமது வம்பன் அன்று
மனைபுகுந்து அடிவாங்கும் திருடன் அன்று
அலைந்துமிகத் தானுழலும் தென்றல் அன்று
அதட்டிநின்றால் கால்தூக்கிக் காட்டிச் செல்லும்
கலைபோன்ற மிரண்டவிழி ஆர ணங்கே
கண்மணியே யாரென்று சொல்லு வாயே!

aren
19-10-2009, 04:01 PM
நாய் என்று எனக்குப் படுகிறது. தவறாகவும் இருக்கலாம், ஏனெனில் எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது.

ஆதி
19-10-2009, 04:09 PM
நாய் என்று எனக்குப் படுகிறது. தவறாகவும் இருக்கலாம், ஏனெனில் எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது.

உங்க பதில் சரி தானண்ணா..

aren
19-10-2009, 04:11 PM
உங்க பதில் சரி தானண்ணா..

வாவ்!! எனக்குக்கூட இதெல்லாம சொல்லத் தெரியுமா?

நன்றி ஆதி.

குணமதி
21-10-2009, 12:43 PM
விடுகதையின் விடை : நாய்

கண்டுபிடித்தோர்க்குப் பாராட்டு.

அனைவர்க்கும் நன்றி.

வியாசன்
21-10-2009, 12:45 PM
வாழ்த்துக்கள் ஆரென்

aren
21-10-2009, 03:51 PM
வாழ்த்துக்கள் ஆரென்

எனக்கும் எப்பவாவது விடை சொல்லத்தெரியுது என்று தெரிகிறது.

குணமதி
23-10-2009, 01:37 PM
எனக்கும் எப்பவாவது விடை சொல்லத்தெரியுது என்று தெரிகிறது.


முதலில் விடையைக் கூறியவர் நீங்களே!
சிறப்புப் பாராட்டுக்குரியவர்.