PDA

View Full Version : புதினம் இணையத்தளம் திடீர் மூடல்?



Honeytamil
19-10-2009, 12:26 PM
விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.ஆனால் திடீரென்று புலிகளுக்கு எதிரான செய்திகளையயும் கட்டுரைகளையும் வெளியிட்டு உலகெங்குமுள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதினம் இணைய மூடப்பட்டது ஒன்றும் புதினம் அல்ல எதிர்ப்பாக்கப்பட்ட ஒன்று. ஊடகம் என்பது நடு நிலையாக ஏழுத வேண்டுமே தவிர யாருக்காகவும் எவர் சார்பாகவும் எழுதக் கூடாது இது புதினத்துக்கு மட்டும் அல்ல அனைத்து இணைய தளத்துக்கும் பொருந்தும் ஊடகம் என்பது நீதிக்குச் சமமானது.

நன்றி : One india

அறிஞர்
19-10-2009, 01:53 PM
இது... துக்கமான செய்தி..

மற்ற தளங்கள் வாயிலாக செய்திகள் வரவும் வாய்ப்புள்ளது.

வியாசன்
19-10-2009, 02:24 PM
வெல்கின்ற குதிரையிலைதானே பணம் கட்டுவார்கள்.

aren
19-10-2009, 04:12 PM
இந்த தளத்தை வேறு யாராவது வெளிநாட்டிலிருந்து நடத்தலாமே உள்ளூரில் கெடுபிடிகள் அதிகமாக இருந்தால்.

செய்திகளை அங்கேயிருந்து யாராவது அலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கொடுக்கலாமே.

அமரன்
19-10-2009, 09:10 PM
ஆரென் அண்ணா. இது வெளி நாட்டிலிருந்து இயக்கப்பட்ட தளம்தான். இப்போது மூடப்பட்டுள்ளது. வருவாய் இன்மை காரணமாக இருக்கலாம்.

aren
20-10-2009, 12:16 AM
ஆரென் அண்ணா. இது வெளி நாட்டிலிருந்து இயக்கப்பட்ட தளம்தான். இப்போது மூடப்பட்டுள்ளது. வருவாய் இன்மை காரணமாக இருக்கலாம்.

வருவாய் இல்லையென்றால் உறுப்பினர்களிடம் கேட்டுருக்கலாமே. மக்கள் நிச்சயம் உதவிடுவார்களே.

anna
30-10-2009, 10:43 AM
வருவாய் இன்மை காரணமாகத்தான் இந்த இணையத்தளம் பூட்டப்பட்டு இருக்கிறது. போதுமான நிதி புலிகளிடம் இருந்து வந்திருக்கிறது. தற்போது இல்லை என்பதால் மூடப்பட்டு இருக்கிறது.அவ்வளவு தான், மற்றபடி வேறு செய்திகள் இல்லை.

குணமதி
30-10-2009, 11:45 AM
எப்படியிருந்தாலும், வருந்தத் தக்க செய்தி!

வியாசன்
30-10-2009, 03:55 PM
வருவாய் இன்மை காரணமாகத்தான் இந்த இணையத்தளம் பூட்டப்பட்டு இருக்கிறது. போதுமான நிதி புலிகளிடம் இருந்து வந்திருக்கிறது. தற்போது இல்லை என்பதால் மூடப்பட்டு இருக்கிறது.அவ்வளவு தான், மற்றபடி வேறு செய்திகள் இல்லை.


இணையத்தளம் நடாத்துவதற்கு பணம் இல்லையென்பது பொய் நிருபர்களுக்குதான் பணம் கொடுக்கவேண்டும். அவர்களும் பகுதிநேரமாகத்தான் நிருபர்களாக இருந்தார்கள். அவர்கள் வேறு ஊடகங்களின் நிருபர்கள்தான். இப்போது இவர்கள் வேறு காரணங்களுக்காகத்தான் நிறுத்தியிருக்கின்றார்கள். சிலவேளை சில அச்சங்கள் காரணமாக இருக்கலாம்