PDA

View Full Version : பாலகுமரன்அருள்
19-10-2009, 07:29 AM
இந்த திரியில் பாலகுமரன் நாவல்களில் நான் படித்து ரசித்த எழுத்துகளை இல்லை என்னை மயக்கிய எழுத்துகளை பதிவு செய்யலாம் என உள்ளேன். முடிந்தால் அல்லது உங்களையும் மயக்கினால் ஆதரவு தாருங்கள்

மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ.
ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை.
போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை.
நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை.
முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை.
தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம்
போல அழுக்கு இல்லை.
கனகாம்பரம் போல அலட்டல் இல்லை.
மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை.
சாமந்தி போலத் திமிரில்லை.
தாமரைபோல கர்வமில்லை.
மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ.
குடித்தனப் பொம்பிளை போல
காதல், காமம், அமைதி,
அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.
- 'அடுக்கு மல்லி நாவலில்'.

ஜனகன்
19-10-2009, 08:09 AM
நானும் வாசித்து ரசித்தேன், நல்ல வரிகள்
அனுபவத்தில் கண்டது அனைவருக்கும் ஏற்றது

இதயம்
19-10-2009, 11:17 AM
பாலகுமாரன் பலருக்கு ஒரு வசிய எழுத்தாளர். வாசகர்கள் படைப்பை படித்து அதன் கருத்தை சிலாகிக்கும் போது வரும் எழுத்தாளர்களில் பாலகுமாரனும் இடம்பெறுவார். அவரின் மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரைகள் எனக்கு பிடித்த படைப்புக்கள். அவரின் எழுத்தில் எனக்கு வசியம் எதுவும் தோன்றாவிட்டாலும் அவரின் சில எழுத்துக்களை படிக்கும் போது மனசுக்குள் போய் அப்படியே உட்கார்ந்து கொள்ளும். மல்லிகைப்பூ சம்பந்தமான இந்த கருத்தும் அப்படித்தான் மனசின் உள்ளே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

தோற்றத்தில் எளிமையானது மல்லிகைப்பூ. ஆனால் அதன் குணத்தால் மயங்காதவர்கள் மிகவும் அரிது. பொதுவாய் ஆண்களுக்கு பிடிக்கும் பூ பெண்களுக்கு பிடிக்காது. பெண்களுக்கு பிடிக்கும் பூ ஆண்களுக்கு பிடிக்காது. இரு பாலாருக்கும் பிடித்து, இருவரிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வசியம் மல்லிகைப்பூவுக்கு மட்டுமே உண்டு. அதை சரியாய் புரிந்து பாலகுமாரன் சொன்ன வார்த்தைகள் இவை..!!

இரசிக்க வைத்த வரிகளை தந்த நண்பருக்கு நன்றிகள்.!

மன்மதன்
19-10-2009, 03:52 PM
மல்லிகையே மல்லிகையே..


மல்லிகையை பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம்..

பாலகுமாரன் மல்லிகைக்கே ரொமாண்டிக் வருமளவுக்கு அழகாக கொடுத்திருக்கிறார். இதை மல்லிகை படித்தால் கொஞ்சம் கர்வம் வரத்தான் செய்யும்..!

poornima
19-10-2009, 04:29 PM
மல்லிகைப்பூ மடுமல்ல அல்லாத்தையும் பத்தி அருமையாய் எழுதற வசீகரிக்கிற ஒரு எழுத்து பாலகுமாரனுடையது..

அண்மை காலமாய் ஆன்மீக நாவல்களில் நிறைய நாட்டம் செலுத்துவதால் பழைய பாலகுமாரனை தொலைத்துக் கொண்டிருப்பதாய் ஒரு எண்ணம்

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

aren
19-10-2009, 04:49 PM
மல்லிகைப்பூ நல்ல மணமுடைய பூ. ஆனால் அதற்காக மற்ற பூக்கள் குறைந்தது என்பது கிடையாது. ஒவ்வொரு பூக்களிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் உள்ளது.

மாலையில் மல்லிகை வீசும் மணமே தனிதான்.

மன்மதன்
19-10-2009, 04:57 PM
மாலையில் மல்லிகை வீசும் மணமே தனிதான்.

மல்லிகை மணத்தில் மயங்கினோர் மங்கம்...ஸாரி..சங்கம் :D

aren
19-10-2009, 04:58 PM
மல்லிகை மணத்தில் மயங்கினோர் மங்கம்...ஸாரி..சங்கம் :D

சங்கத்திற்கு தலைவர் ஆருங்கோ. நீங்களா அல்லது நம்ம தலையா?

மன்மதன்
19-10-2009, 06:33 PM
சங்கத்திற்கு தலைவர் ஆருங்கோ. நீங்களா அல்லது நம்ம தலையா?

ஆருங்கோ இல்லை.. ஆரென்கோ.....:icon_rollout:

aren
19-10-2009, 06:35 PM
ஆருங்கோ இல்லை.. ஆரென்கோ.....:icon_rollout:

நம்ம தல இதற்கு மிகவும் தகுந்தவர். அவரையே தலைவராக தேர்ந்தெடுங்கள்.

அருள்
20-10-2009, 07:29 AM
அந்தக் கால பாலகுமரன்......
கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது


உனக்கென்ன கோவில் குளம்
சாமிபூதம் ஆயிரம் ஆயிரம்
வலப்பக்க கடல் மண்ணை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே, நாளைக்கேணும் தவறாமல் வா!”

------------------------------------------------------------------------------------


‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்
உருவி அறுத்தவைக் கொஞ்சம்
புரண்டு படுக்கையில்
நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்
பதறி தவிக்கையில்
வேறுடன் போனவை ஆயிரம்…

நீயின்றி தளர்ந்த நாளில்
இப்புற்களின் மேலே அமர்ந்து
மொத்தமும் மீண்டும் நினைக்க
மனசுக்குள் சோகம் வளரும்
புற்களாய்… புதராய்… காடாய்…’

poornima
21-10-2009, 09:05 AM
நம் மன்றத்து மூத்த குடிமகன் இளசு பாலகுமாரன் கவிதைகள் பற்றி ஆராய்ந்து தனிச்சுட்டியே தந்திருக்கிறார் இங்கு நம் மன்றத்தில்
http://tamilmantram.com/vb/showthread.php?t=4073

aren
21-10-2009, 05:07 PM
பழையத் திரிகளை மறுபடியும் படித்து அசைபோடுவதற்கு ஏற்படுத்தித்தந்த பூர்ணிமா அவர்களுக்கு என் நன்றிகள்.

இளசு
10-02-2010, 08:22 PM
அன்புத்தோழி பூர்ணிமாவுக்கு நன்றி..


சட்டென தொடர்புள்ள திரியின் சுட்டி தந்து அசத்திவிட்டீர்கள்..


இப்போதெல்லாம் அடிக்கடி காணமுடிவதில்லையே.... பணிப்பளுவா?
நேரம் அமையும்போதெல்லாம் மன்ற உலாவர வேண்டுகிறேன்.