PDA

View Full Version : சிதைந்த நாட்களோடு ஓய்தல்



M.Rishan Shareef
19-10-2009, 04:22 AM
சிதைந்த நாட்களோடு ஓய்தல் (http://mrishanshareef.blogspot.com/2009/09/blog-post_13.html)


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# திண்ணை இணைய இதழ்

aren
19-10-2009, 04:28 PM
உங்கள் கவிதை எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கமாக எழுதினால் மறுபடியும் படித்து புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

பிரம்மத்ராஜா
19-10-2009, 05:36 PM
சாதாரணமாக கவிதைகள் சற்று மறைபொருளாக மறைந்திருக்கும் ஆனால் இதில் ஒன்றும் புரியவில்லை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மீண்டும் இதைபோன்று கவிதை வெளியிடும் பொது சற்று புரியும்படியாக எழுதினால் நன்றாக இருக்கும்

M.Rishan Shareef
26-10-2009, 11:14 AM
அன்பின் Aren, pramathraja,

//உங்கள் கவிதை எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கமாக எழுதினால் மறுபடியும் படித்து புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.//

//சாதாரணமாக கவிதைகள் சற்று மறைபொருளாக மறைந்திருக்கும் ஆனால் இதில் ஒன்றும் புரியவில்லை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மீண்டும் இதைபோன்று கவிதை வெளியிடும் பொது சற்று புரியும்படியாக எழுதினால் நன்றாக இருக்கும்//

நான் இறப்பிற்குச் சென்று மீண்டேன். அதன் பிறகு எழுதிய கவிதைதான் இது.
எனவே முன் விபரங்கள் தெரியாதவர்கள் இக் கவிதையைப் புரிந்துகொள்வது கடினம்தான்.

மீண்ட விபரங்கள் இங்கே
இருப்புக்கு மீள்தல் (http://mrishansharif.blogspot.com/2009/05/01.html)

கருத்துக்கு நன்றி அன்பு நண்பர்களே !