PDA

View Full Version : "ங்க"



சரண்யா
19-10-2009, 03:15 AM
ங்க".....குழந்தை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..

"ங்க"...
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...

Mano.G.
19-10-2009, 03:40 AM
கடந்த ஆறு வருடங்கலாக நான் தமிழ் நாட்டிற்கு வருடத்தில் ஒருமுறை வந்து செல்கிறேன், இந்த கவிதையில் காணப்பட்ட "ங்க" என்ற சொல், சென்னையில் கேட்பதற்கு மிக மிக அறிதாகவே உள்ளது, மலேசியா வந்துள்ள இந்திய அதுவும் தமிழர்களிடம் விசாரித்த பொழுது இந்த சொல்லை கோயம்புத்தூர் வாசிகள் தான் அதிகம் பயன் படுத்துவார்கள் என அறியப்பட்டேன். ஆனால் இங்கு மலேசியாவில் தமிழில் உறையாடும் பொழுது இந்த "ங்க" என்ற சொல்லை பயன்படுத்த தவறினால் அது மறியாதையை அற்ற செயலகிவிடும். அதனால் நீங்க, அவங்க, வாங்க, உங்க, அதே போல பிள்ளைகள் தனது பெற்றோரை ஆமாங்க அப்ப, ஆமாங்க அம்மா, சரிங்க பா, சரிங்க மா, ஆமாங்க சித்தப்பா, சரிங்க அத்தை என்ற வார்த்தைகள் அதிகம் உபயோகிப்பதை காணலாம்

மனோ.ஜி

aren
19-10-2009, 03:48 AM
ங்க என்று குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துச் சொல்லும்பொழுது பாசம் கொஞ்சம் தள்ளிப்போகிறதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. வா போ என்று அழைக்கும்பொழுதுதான் அதன் அன்யோன்யம் இருப்பதாக எனக்குப் படுகிறது.

அருள்
19-10-2009, 05:44 AM
ங்க என்று குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துச் சொல்லும்பொழுது பாசம் கொஞ்சம் தள்ளிப்போகிறதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. வா போ என்று அழைக்கும்பொழுதுதான் அதன் அன்யோன்யம் இருப்பதாக எனக்குப் படுகிறது.

இதை நானும் வழிமொழிகிறேன்.

இருந்தாலுங்க உங்க படைப்பு ரொம்ப நல்லா இருந்ததுங்க

ஜனகன்
19-10-2009, 06:52 AM
ஏனுங்க!!!!!!!!!!!!
யாழ்ப்பாண தமிளுமுங்க அப்பிடித்தான்.
இன்சாருங்க இன்சாருங்க பத்துக்கிலோ
ஏறுதுங்க

இதயம்
19-10-2009, 10:27 AM
மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கு முடிச்சி போடும் முயற்சி தான் இது என்றாலும் அதிலிருக்கும் கருத்து என்னை கவர்கிறது. தமிழ் மொழியின் மரியாதையோடு சொல்லப்படும் ”ங்க” என்பதை பலவீனமாக உணர்கிறேன். ஆங்கில மொழியில் இந்த பலவீனம் இல்லை. ஒருவர் அழைக்கும் வார்த்தையை வைத்தே மரியாதையை நிர்ணயம் செய்துவிடுவது மொழியின் பலவீனம் தான் என்றாலும் மரியாதையை தனிப்பட்ட முறையில் உறுதியுடன் தெரிவிக்க தமிழ் மொழியில் இப்படி ஒரு வழி இருப்பது அதன் பலம் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

பொதுவாக “ங்க” எனும் வார்த்தை வேண்டுமானால் மரியாதைக்காக ஊக்குவிக்கப்படலாம். ஆனால் அன்பு, பாசம், காதல் போன்ற உயர்ந்த உணர்வுகளை காட்ட “ங்க” உதவாது..! வழக்கமாக வெளியில் மனைவி கணவனை “ங்க” என்று அழைத்தாலும் அந்நியோன்ய தருணங்களில் வா, போ, வாடா, போடா சுகத்தை “ங்க” எப்போதும் தராது. அப்படி தான் தாய், தந்தை, சகோதரர்கள் போன்ற உறவுகளிலும்..!! “ங்க” என்பது உறவுக்குள் ஒரு திரையை போட்டு வைப்பதாக தான் நான் உணர்கிறேன்.

இருந்தாலும் மரியாதை உணர்வை ஊக்குவிக்கும் கவிதைக்காக சரண்யாவிற்கு பாராட்டுக்கள்..!!

பா.ராஜேஷ்
19-10-2009, 03:26 PM
அன்னியர்களிடம் பழகும்போது கூட இந்த "ங்க" உபயோகிக்கப் படுவதில்லை என்றே தோன்றுகிறது. மரியாதை மிக அவசியம்(ங்க)...

aren
19-10-2009, 03:43 PM
வழக்கமாக வெளியில் மனைவி கணவனை “ங்க” என்று அழைத்தாலும் அந்நியோன்ய தருணங்களில் வா, போ, வாடா, போடா சுகத்தை “ங்க” எப்போதும் தராது. ..!!

சரி ....... புரியுது புரியுது!!!!

samuthraselvam
20-10-2009, 08:42 AM
ஆனாலும் இது கொங்கு நட்டு பாசைக்கே உரிய மரியாதைக்குரிய எழுத்துக்கள்... கொங்குத் தமிழை ரசிப்பவர்களுக்கு அது மிகவும் பிடித்தமானது... நானும் கூட கொங்கு தமிழ் தான் பேசுவேன்.... ரசிச்சு பேசுவேனுங்க... தக்ஸ் அண்ணாகூட கிண்டல் செய்வார்... என்ன கோவை சரளா மாதிரி பேசுற? என்பார்.. ஆனாலும் எனக்கு பிடிக்கும்...

சரண்யா
20-10-2009, 08:49 AM
அட அடா இரண்டு எழுத்துக்குள்ள இவ்வளவா........"ங்க"

நன்றிகள் அனைவருக்கும்....பகிர்ந்து கொண்டதற்கு....

நேசம்
20-10-2009, 01:11 PM
சரி ....... புரியுது புரியுது!!!!
சரி சரி புரியுது எங்களுக்கும்

வியாசன்
20-10-2009, 02:25 PM
ஏனுங்க இந்த ங்க விலை இத்தனை வெசயம் இருக்குதாங்க தெரியாமப்போச்சுங்க.
ரொம்ப நன்றிங்க. நல்லாதான் எழுதுவுறிங்க. வர்றேங்க

அமரன்
20-10-2009, 05:26 PM
மேலைத்தேசக் கலாச்சாரத்தில் எத்தனை வயசு மூத்தவரானாலும் பெயர் சொல்லிப் பழகுவது வழக்கம். அலுவலக உயர் அதிகாரிகளைக் கூட அந்த மாதிரித்தான். ஆனாலும் மரியாதையைக் கொடுத்து வாங்குகிறார்கள்.

அழைப்பதிலும் தொங்கிக்கொண்டு உள்ளது நமது கல்லாச்சாரம்.

மரியாதைப் பன்மை விகுதி என்று இலக்கணம் தமிழில் உள்ளது. இலக்கணப்படி மொழியாளல் நல்லது அன்றோ.

சிந்திக்க ஒரு கவிதை. பாராட்டுகள் சரண்யா.

சரண்யா
23-10-2009, 04:52 AM
நன்றிகள் அமரன் அவர்களே...