PDA

View Full Version : அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை- நிறைவடைந்தது



மதுரை மைந்தன்
18-10-2009, 09:41 AM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை (முதல் பாகம்)

தமிழ் மன்றத்தில் தீபாவளி ரிலீஸாக இந்த அறிவியல் தொடர் கதையை உங்களது ஆசியையும் நல்லாதரவையும் வேண்டி துவக்குகிறேன். இது எனது சொந்த கற்பனையே. இக்கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனைகளே..
_________________________________________________________________

வீட்டின் கதவை திறந்து ஆயாசமாக உள்ளே நுழைந்தார் ராமன்.

" ஏன்னா விசா கிடைச்சுடுச்சா" என்று கேட்டவாறே சமையறையிலிருந்து வெளி வந்தாள் அவரது சகதர்மிணி கமலா.

" ஏண்டாப்பா போன காரியம் கை கூடிடுச்சா" என்று கேட்டவாறு கையில் ஜப மாலையை உருட்டியவாறு பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் பார்வதி அம்மாள் ராமனின் தாயார்.

" இல்லைம்மா விசா கிடையாதுன்னுட்டா" என்றார் ராமன் சலிப்புடன்.

" ஏன் அந்த கட்டேல போறவா அப்படி சொல்லிட்டா. கண்ட காக்கன் போக்கிக்கெல்லாம் விசா தறா. இதோ கோடியாத்து அம்புஜம் ஒண்ணுமெ படிக்கதவ விசா வாங்கி அமெரிக்கா போயிருக்காளே. நீ பெரிய விஞ்ஞானி. உனக்கு ஏன் கிடையாதுன்னு சொல்லிட்டா. பொண்ணோட தலைப் பிரசவத்துக்கு போறேன்னு சொன்னியா?"

" சும்மாயிரும்மா. வயித்தெரிச்சலைக் கிளப்பாதே. அம்புஜம் குழந்தையை பாக்கற தாதியா போயிருக்கா. அதனாலே அவா விசா குடுத்திட்டா. மகளோட பிரசவத்தக்கு போறேன்னு சொன்னா விசா கண்டிப்பா தரமாட்டான்னு பிரண்ட் சொன்னார். மகளை பாத்துட்டு வர விசா கேட்டேன். இல்லைன்னுட்டா. ஆனா கமலா உனக்கு விசா தந்திருக்கா. நீ மட்டும் போயிட்டு வா". "

"அய்யய்யோ நான் எப்படி தனியா போவேன்? நடுவில பிளைட் மாத்தணும்னு சொல்றா. எனக்கு பயமா இருக்கு" என்று கமலா சொன்னார்.

" இதுக்கு தான் நான் அன்னிக்கே சொன்னேன். உன்னொட படிச்சவா எல்லாம் பாங்க் கம்பெனின்னு செர்ந்து இன்னிக்கு பங்களா கார்னு சௌக்கியமா இருக்கா. நீதான் விஞ்ஞானி ஆகப்போறென்னு சொன்னே. கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா வாங்கற சம்பளத்தை விட கொஞ்சம் கூட வாங்கறே. பொண்ணு கல்யாணத்து கடன் வாங்கிட்டு அதை அடைக்க முடியாம முழிக்றே" புல்ம்பினார் பார்வதி அம்மாள்.

" என்னோட பிரண்ட் ஒருத்தருக்கு அமெரிக்க தூதரகத்தில வேலை பார்க்கற ஒருத்தரை தெரியும்னு சொன்னார். நான் அவருக்கு போன் பண்ணி விசாரிக்கறேன்" ராமன் அவரது பிரண்டக்கு போன் செய்து விவரங்களை கூறினார். அவரும் தான் விசாரித்து போன் செய்வதாக கூறி அரை மணி நேரம் கழித்து ராமனை அமெரிக்க தாதரக நண்பரின் போன் நம்பரைக் கொடுத்து பேச சொன்னார்.

அமெரிக்க தூதரக நண்பர் " சார், ஐஆம் சாரி. உங்களுக்கு விசா தரக்கூடாது என்று வாஷிங்டனில் தீர்மானித்திருக்கிறார்கள். அணு ஆயுத பரிசோதனையில் உங்களுக்கும் பங்கிருக்கக் கூடும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்கா உலகத்தில் இருக்கும் அனைத்து அணு ஆயுதங்களை ஒழிக்கவும் அவை மேலும் தயாராகாமல் இருப்பதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால் அதில் சம்பத்தப்பட்ட உங்களுக்கு விசா மறுக்கப் பட்டிருக்கிறது" என்றார்.

" முதலாவதாக எனது ஆராய்ச்சிக்கும் அணு ஆயுத பரிசோதனைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. நான் அந்த ஆராய்ச்சி கூடத்தில் அணு சக்தியின் நற்பயன்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். தற்சமயம் ஓய்வு பெற்று எனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல விரும்புகிறேன். " என்றார் ராமன்.

" நீங்கள் ஓய்வு பெற்றவராய் இருந்தாலும் நாளைக்கு உங்களை மீண்டும் ஆராய்ச்சி செய்ய அழைப்பு வரலாம். உங்களது ஆராய்ச்சிக்கும் அணு ஆயுதத்திற்கும் தொடர்பு கிடையாது என்றாலும் பனை மரத்தின் கீழ் பால் குடித்தாலும் அது கள் என்றே நினைக்க தோன்றும். ஐ ஆம் சாரி" என்றார் தூதரக நண்பர்.

" கமலா வேற வழியில்லை. நீமட்டும் போயிட்டு வா. தைரியமா போ. இந்த காலத்து சின்ன பெண்கள் மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு தனியாகத் தானே போகிறார்கள். மும்பையிலிருந்து நியூ யார்க் நேரடியாக செல்ல பிளைட் இருக்கு. என்ன கொஞ்சம் டிக்கெட் விலை கூடும். பரவாயில்லை. அங்கே மாப்பிள்ளை வந்து உன்னை ரிசீவ் பண்ணுவார். அம்மா நீ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லு. நான் ஏஜண்டிடம் டிக்கெட்டுக்கு சொல்றேன்." என்றார் ராமன்.

கமலா அமெரிக்கா செல்ல மும்மரமாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் ராமனுக்கு அமெரிக்க தூதரகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பரபரப்பாக ராமன் அதை பிரித்து படித்தார். அதில் " மிஸ்டர் ராமன் சில நாடகளுக்கு முன் உங்களது விசா மறுக்கப் பட்டது குறித்து வருந்துகிறோம். உங்களுக்கு விசா வழங்குவதென்று வாஷிங'கடனில் முடிவாகியிருக்கிறது. இந்த கடிதத்தின் நகலையும் பாஸ்போர்டையும் எடுத்துக் கொண்டு தூதரகத்திற்கு வாருங்கள். " என்றிருந்தது.

இதைக் கேட்ட பார்வதி அம்மாள் " நேத்து தான் நான் உனக்கு விசா கிடைக்கணும்னு வேண்டிண்டு பிள்ளையாருக்கு கொழக்கட்டை நைவேத்தியம் செய்வதாக வேண்டினேன். வரப்பிரசாதி பிள்ளையார்" என்றார்.

விசா வாங்கி கொண்டு ஏஜண்டிடம் இரண்டு டிக்கெட்டுகளுக்கு சொல்லி, பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து, ஊருக்கு எடுத்து செல்ல வேண்டிய பெரிய சைஸ் சூட்கேஸ்கள், பெண் மாப்பிள்ளைக்கு துணி மணிகள் என்று பிஸியாக சுற்றி ராமனும் கமலாவும் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர்.

14 மணிநேர பயணத்திற்கு பிறகு நியூ யார்க் வந்ததின் அடையாளமாக ஸடாட்சு ஆப் லிபர்டி என்ற சிலையை வலம் வந்து விமானம் கென்னடி விமான தளத்தில் இறங்கியது. கமலாவுக்கு எல்லாமே மலைப்பாக இருந்தது. சுங்க அதிகாரிகளின் சோதனைகளுக்கு வரிசையில் அவர்கள் காத்திருந்த போது நீல யூனிபார்ம் அணிந்த இடுப்பில் கன், வாக்கி டாக்கி இத்யாதிகளுடன் இரண்டு போலீசார் அவர்களை நெருங்கி அவர்களது பாஸ்போர்ட்களை பார்த்தபின் " மிஸ்டர் ராமன் கம் வித் அஸ் ப்ளீஸ்" (மிஸ்டர் ராமன் தயவு செய்து எங்களுடன் வாருங்கள்) என்று கூறி அவரை அழைத்து சென்றனர். தனித்து விடப் பட்ட கமலா விக்கித்து நின்றார்.

தொடரும்...

அன்புரசிகன்
19-10-2009, 01:19 AM
மறுத்தவர்கள் அழைத்திருக்கிறார்கள்.. ஏதாவது வில்லங்கமோ... புது இடத்தில் கமலா ... சுவாரசியமாக உள்ளது... தொடருங்கள்.

பிரம்மத்ராஜா
19-10-2009, 05:25 AM
கதை தொடக்கம் நன்றாக இருக்கிறது எதோ வில்லங்கமான சம்பவம் நடக்க போகிறது போல் தோன்றுகிறது தாமதிக்காமல் அடுத்த பகுதியையும் உடன் வெளிஇடவும்

ஜனகன்
19-10-2009, 07:41 AM
கதை நல்ல சுவாரஸ்யமாக போகின்றது
மிகுதி பகுதியையும் பதியுங்கள் விரைவில்

மதுரை மைந்தன்
24-10-2009, 10:37 PM
மறுத்தவர்கள் அழைத்திருக்கிறார்கள்.. ஏதாவது வில்லங்கமோ... புது இடத்தில் கமலா ... சுவாரசியமாக உள்ளது... தொடருங்கள்.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-10-2009, 10:39 PM
கதை தொடக்கம் நன்றாக இருக்கிறது எதோ வில்லங்கமான சம்பவம் நடக்க போகிறது போல் தோன்றுகிறது தாமதிக்காமல் அடுத்த பகுதியையும் உடன் வெளிஇடவும்

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-10-2009, 10:40 PM
கதை நல்ல சுவாரஸ்யமாக போகின்றது
மிகுதி பகுதியையும் பதியுங்கள் விரைவில்

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-10-2009, 10:44 PM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை (பாகம்-2)

ராமனை கூட்டி சென்ற அமெரிக்க போலீஸார் கென்னடி விமான தளத்தின் ஒரு கோடியிலிருந்த ஒரு ராணுவ விமானத்திற்கு அவரை அழைத்து சென்றனர். விமானத்தினுள் நுழைந்த ராமனை ஒரு வெண்தாடி கொண்ட சூட் அணிந்த வெள்ளையர் " வெல்கம் டாக்டர் ராமன். என் பெயர் வில்சன். நான் அமெரிக்க அணு சக்தி துறையின் தலைவர். உங்களை இம்மாதிரி அழைத்து வந்ததற்கு எங்களை மன்னிக்கவும். வாருங்கள் நாங்கள் உங்களை வாஷிங்டனுக்கு அழைத்து செல்கிறோம். ஏன் என்ற காரணத்தை விமானம் செல்லும் போது நான் உங்களுக்கு கூறுகிறேன்" என்று ஆங்கிலத்தில் கூறி ராமனை தனது பக்கத்து சீட்டில் அமரச் செய்தார்.

அந்த விமானம் சிலர் மட்டுமே செல்லக் கூடிய தாக இருந்தது. ராமனை அழைத்து வந்த போலீசாரிடம் வில்சன் ஏதோ கூற அவர்கள் அவருக்கு சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றனர். விமானத்தில் அவர்கள் இருவர் மட்டுமே பயணித்ததை ராமன் கவனித்தார். விமானம் மேலே கிளம்பியவுடன் காதுகளில் ஸ்பீக்கர்களைத் தான் பொருத்தி கொண்டு ராமனையும் அவ்வாறே செய்ய சொன்ன பின் வில்சன் பேச ஆரம்பித்தார்.

" சுமார் 15 நாட்களுக்கு முன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தலைமையில் ஒரு விசேட சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில் அமெரிக்க அதிபருடன் வெளியுறவு இலாகாவின் காரியதரிசிஇ தலைமை ராணுவ அதிகாரிகள் இவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அணு ஆயுத ஒழிப்பு சம்பந்தமாக அந்த சந்திப்பு நிகழ்வதாக அதிபர் கூறினார்."

" நாம் இன்று ஒரு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படும் முக்கியமான சந்திப்பில் இருக்கிறோம். இன்று அமெரிக்க பாதுகாப்பிற்கு ஒரு பெரும் சவாலாக அயோக்கிய நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் இறங்கி இருக்கின்றன. அத்துடன் அமெரிக்க எதிர்ப்பு தீவிர வாதிகள் அணு ஆயுதங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமது தோழமை நாடுகளுக்கும் பேராபத்து நிகழும். இந்த பேராபத்திலிருந்து அமெரிக்காவை காப்பாற்ற நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.அதன் படி நான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து அணு ஆயுத ஒழிப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் அனைவரையும் கையொப்பம் இட வைக்கப் போகிறேன். " என்றார் அதிபர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் " மன்னிக்வும் மிஸ்டர் பிரஸிடெண்ட். இந்த திட்டத்தில் சில சிக்கல்கள் இருக்கினறன. முதலில் எல்லா நாடுகளும் இதற்கு ஒப்புதல் அழிப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. அப்படியே அனைவரும் ஒப்புக் கொண்டாலும் அணு ஆயுதங்களை அனைவரும் ஒரே நேரத்தில் அழிக்க வேண்டும். அப்படி செய்யா விட்டால் கால தாமதம் செய்யும் நாடுகள் தங்களது மனதை மாற்றிக் கொண்டால் அவர்கள் கை ஓங்கி விடும்".

அவர் சொல்லி முடித்ததும் நான் எழுந்து " மிஸ்டர் பிரஸிடெண்ட் அணு ஆயுதங்களை விஞ்ஞான முறைப்படி செயலிழக்க செய்து விட்டால் உலகில் யாரும் அணு ஆயதங்களை பயன் படுத்த முடியாது" என்றேன்.

அதிபர் " விஞ்ஞான முறை என்றால் எப்படி என்று விளக்க முடியுமா?" என்று கேட்டார். "இக்கேள்விக்கு பதிலை நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து மேற் கோள் காட்டி விளக்கினேன்" என்றார் வில்சன் ராமனிடம்.

" அணு ஆயுதங்களில் யுரேனியம்-235 அல்லது ப்ளுடோனியம் தாது பொருட்களை நியூட்ரான் துகள்களைக் கொண்டு தாக்கும் போது ஒரு அணு பிளவு பட்டு அதிலிருந்து வெளி வரும் 2-3 ந்யூட்ரான்கள் மேலும் 2-3 அணுக்களை பிளவு செய்கிறது.ஒவ்வொரு பிளவிலும் பன்மடங்கு சக்தி வெப்பமாகவும் கதிர் வீச்சுகளாகவும் வெளி வருகின்றன. இவ்வாறான அணுப் பிளவுகள் கட்டுங்கடாமல் போகும் போது வெளி வரும் சக்தி அணு குண்டாக வெடிக்கிறது. அணு உலைகளிலும் இத்தகைய தொடர் பிளவகள் ஏற்பட்டாலும் அவற்றை போரான் காட்மியம் போன்ற உலோக பொருடகளைக் கொண்டு கட்டுப் படுத்துவதால் தொடர்ந்து சக்தி வெளிப்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் வைக்கும் போது அது ஒரு குண்டாக வெடிப்பதில்லை. இவ்வாறே காற்று மண்டலத்தில் சில மாறுதல்களை ஏற்படத்தி அணு குண்டில் விளையும் தொடர் பிளவுகளை கட்டுப் படுத்தினால் உலகத்தின் எந்த மூலையிலும் அணு குண்டு வெடிக்காது".

இதைக் கேட்ட அதிபர் என் கைகளைப் பிடித்து குலுக்கி " இது ஒரு நல்ல யோசனை. இதற்கான ஆராய்ச்சிகளை உடனே துவக்குங்கள்" என்றார்.

ராணுவ அதிகார் ஒருவர் "விஞ்ஞான முறைப்படி அணு ஆயுதங்களை கட்டுப் படுத்துவது நல்ல யோகனை தான் என்றாலும் ஆராய்ச்சி மடிய பல வருடங்கள் அகலாம். இதனிடையே நமது எதிரிகள் தங்களது அணு ஆயத உற்பத்தியை பெருக்கி நம்மை தாக்க கூடும்" என்றார்.

" நீங்கள் சொல்வது உண்மை. ஆகவே நாம் பல நாட்டு தலைவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து அணு ஆயுத ஒழிப்பை முயலுவோம். அதே நேரத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் துவங்கி துரிதமாக நடக்கட்டும்" என்றார் அதிபர்.

நான் அதிபரிடம் இந்த யோசனை உங்களது என்றும் அவரை ஆராய்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்றேன். அவர் உங்களது விவரங்களை உள் நாட்டு பிரிவுக்கு அனுப்ப அவர்கள் நீங்கள் அமெரிக்காவிலிருக்கும் உங்களது மகளை பார்க்க விசா வேண்டி விண்ணப்பித்திருந்ததை மறுக்கப் பட்டிருப்பதை மாற்றி உங்களை இங்கு வரவைத்தார்கள்" என்றார் வில்சன். மேலும் அவர் " இது ஒரு ரகசிய ஆராய்ச்சி என்பதால் போலீசார் கென்னடி விமான தளத்தில் அவ்வாறு அழைத்து வந்தார்கள். உங்களது மனைவியாரிடம் விசயத்தை எடுத்து சொல்லி வேறு யாரிடமும் நீங்கள் எங்கு சென்றிருக்கிறீர்கள் என தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுமாறு நான் சொல்லி இருக்கிறேன்" என்று வில்சன் முடிக்கவும் விமானம் வாஷிங்டன் விமான தளத்தில் இறங்கியது.

தொடரும்

மதி
25-10-2009, 03:12 AM
அடடா.. சுவாரஸ்யமாக போகின்றது.. இரண்டு நாளைக்கு முன் தான் நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்குக் காட்டி கொடுத்ததாக அமெரிக்க விஞ்ஞானியை அந்நாட்டு அரசு கைது செய்தது. அவர் சந்திராயன் உருவாக்கத்திலும் பங்கு வகித்தார் என்பது கொசுறு செய்தி..! அது மாதிரி தான் போகக் போகிறதென்று நினைத்தேன்..

தொடருங்கள் சார்..

அன்புரசிகன்
25-10-2009, 08:07 AM
ஆக்கபூர்வமான விடையத்திற்கு அழைத்திருக்கிறார்கள்... அதுசரி ஆத்துக்காரி கமலாமாமி என்னபாடு பட்டிருப்பார்??? நட்டாத்தில் அல்லவா விட்டுவிட்டு வந்திட்டார்.........

தொடருங்கள்...

பிரம்மத்ராஜா
25-10-2009, 09:08 AM
ஸ்வாரஸ்யமான கதை அடுத்த பாகம் பதிக்கும்போது தனிமடலிலாவது தகவல் சொல்லுங்களேன் எனென்றால் சில நேரங்களில் கவனிக்காமல் இருந்து விடுவதும் உண்டு தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் தொடர்ந்து எழுதுங்கள் கால இடைவெளி அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் அன்பான வேண்டுகோள்

ஜனகன்
25-10-2009, 02:34 PM
பாகம் இரண்டாவது வாசித்தேன் சுவாரசியமாக
போகின்றது கதை. மதுரை மைந்தன்! இது உங்கள் சொந்த ஆக்கம்தானே?? எப்படியப்பா இப்படியெல்லாம் சிந்திக்க தூட்டுகிறது.

கா.ரமேஷ்
26-10-2009, 06:12 AM
இரண்டாவது தொடரும் மிக அருமை... முந்தைய தொடர் போலவே மிக ஆவலாக எதிர்பார்க்க வைக்கிறது கதை வாழ்த்துக்கள்... தொடருங்கள் மதுரை மைந்தன்....

வியாசன்
26-10-2009, 06:30 AM
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கதை நன்று .அதிகம் காத்திருக் வைக்க வேண்டாம். விரைவாக தொடருங்கள்.

மதுரை மைந்தன்
27-10-2009, 08:41 AM
அடடா.. சுவாரஸ்யமாக போகின்றது.. இரண்டு நாளைக்கு முன் தான் நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்குக் காட்டி கொடுத்ததாக அமெரிக்க விஞ்ஞானியை அந்நாட்டு அரசு கைது செய்தது. அவர் சந்திராயன் உருவாக்கத்திலும் பங்கு வகித்தார் என்பது கொசுறு செய்தி..! அது மாதிரி தான் போகக் போகிறதென்று நினைத்தேன்..

தொடருங்கள் சார்..


வாங்க மதி சார். உங்களது பின்னூட்டத்தை எதிர் பார்த்தேன். நன்றி

மதுரை மைந்தன்
27-10-2009, 08:44 AM
ஸ்வாரஸ்யமான கதை அடுத்த பாகம் பதிக்கும்போது தனிமடலிலாவது தகவல் சொல்லுங்களேன் எனென்றால் சில நேரங்களில் கவனிக்காமல் இருந்து விடுவதும் உண்டு தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் தொடர்ந்து எழுதுங்கள் கால இடைவெளி அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் அன்பான வேண்டுகோள்


உங்களது அன்பான வேண்டுகொளுக்கு நன்றி. வேலைப் பளுவின் காரணத்தால் சில சமயம் தாமதம் ஏற்படலாம். விரைவில் தொடர முயற்சிக்கிறேன். மிக்க நன்றி

மதுரை மைந்தன்
27-10-2009, 08:48 AM
ஆக்கபூர்வமான விடையத்திற்கு அழைத்திருக்கிறார்கள்... அதுசரி ஆத்துக்காரி கமலாமாமி என்னபாடு பட்டிருப்பார்??? நட்டாத்தில் அல்லவா விட்டுவிட்டு வந்திட்டார்.........

தொடருங்கள்...

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. கமலா என்ன ஆனார் என்பதை அடுத்த பாகத்தில் காணலாம்

மதுரை மைந்தன்
27-10-2009, 08:53 AM
பாகம் இரண்டாவது வாசித்தேன் சுவாரசியமாக
போகின்றது கதை. மதுரை மைந்தன்! இது உங்கள் சொந்த ஆக்கம்தானே?? எப்படியப்பா இப்படியெல்லாம் சிந்திக்க தூட்டுகிறது.


நான் அறிஞர் அப்துல் கலாமின் சீடன். அவரின் அறிவுரை படி அறிவியலில் கணவு காண்கிறேன். அவை நடை முறை சாத்தியமானால் அதன் பெருமை அவரையே சேரும். உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
27-10-2009, 08:54 AM
இரண்டாவது தொடரும் மிக அருமை... முந்தைய தொடர் போலவே மிக ஆவலாக எதிர்பார்க்க வைக்கிறது கதை வாழ்த்துக்கள்... தொடருங்கள் மதுரை மைந்தன்....


உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர் ரமேஷ்

மதுரை மைந்தன்
27-10-2009, 08:57 AM
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கதை நன்று .அதிகம் காத்திருக் வைக்க வேண்டாம். விரைவாக தொடருங்கள்.

விரைவில் தொடர்றேன் உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி

மதுரை மைந்தன்
27-10-2009, 09:03 AM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை (பாகம்-3)


ராமனை அமெரிக்க போலீசார் அழைத்து சென்றதும் திகைத்து போன கமலாவிற்கு பக்கத்திலிருந்த இந்திய பயணிகள் ஆறுதல் கூறினார்கள்.

"விசாவில் ஏதாவது பிரச்னை இருக்கும் அதை விசாரிக்க கூட்டி சென்றிருப்பார்கள்" என்றார் ஒரு பெண்மணி.

" உங்களை அழைத்து செல்ல யாராவது வரகிறார்களா?" என்று கேட்டதற்கு கமலா தனது மகளும் மாப்பிள்ளையும் வந்திரப்பார்கள் என்றார்.

கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் ஒரு இந்தியர் உதவி செய்ய தனது மற்றும் ராமனுடைய சூட்கேஸ்களை ஒரு ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தார் கமலா. அங்கு அவரைப் பார்த்து உற்சாகமாக கைகளை வீசி வரவேற்ற மகளையும் மாப்பிள்ளையும் பார்த்த போது கமலாவுக்கு அழுகை வந்தது.

'வெல்கம் டு அமெரிக்கா என்று அவரைக் கட்டிக் கொண்டாள் அவரது மகள்.

மாப்பிள்ளை மரியாதையாக "எப்படி இருக்கீங்க ஆண்டி" என்றார்.

" எங்கே அப்பாவை காணோம்" என்ற மகளின் கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்த போது ராமனை கூட்டி சென்ற அமெரிக்க போலீசார் அங்கு வந்து

" மன்னிக்க வேண்டும் மேடம். உங்கள் கணவரை ஒரு முக்கியமான பணிக்காக வாஷிங்டனுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். பணி முடிந்தவுடன் அவர் உங்களிடம் திரும்புவார். உங்களை அடிக்கடி தொடர்பு கொள்வார். அவரைப் பற்றி கவலைப் படாதீர்கள். ஒரு வேண்டுகொள். தயவு செய்து நிங்கள் வேறு யாரிடமும் இதப் பற்றி கூற வேண்டாம். இதை நீங்கள் செய்ய தவறினால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். ராமனுடைய சூட்கெஸ்களை தாருங்கள். நாங்கள் அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறோம்" என்று ஆங்கிலத்தில் கூறினார்கள்.

கமலாவின் மகள் ஜானகிக்கு எல்லாம் புதிராக இருந்தது.

" அதான் அவரைப் பத்தி கவலைப் படவேண்டாம்னு சொல்றாங்களே. நீங்க வாங்க வீட்டக்கு போகலாம்" என்று மாப்பிள்ளை ஆறுதல் கூறினார். சூட்கேஸ்களை தனது காரில் ஏற்றி கமலா ஜானகியுடன் நியூ ஜெர்ஸியல் உள்ள தனது வீட்டிற்கு பயணமானார்கள்.

வாஷிங்டன் விமான தளத்திலிருந்து வில்சனும் ராமனும் காரில் அங்கிருந்து 2 மணி பயண தூரத்தில் இருந்த விஞ்ஞான ஆராய்ச்சி கூடத்திற்கு பயணமானார்கள்.

பயணம் துவங்கியவுடன் ராமன் வில்சனிடம் " நீங்கள் என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனது கட்டரையின் தலைப்பே விஞ்ஞானத்தில் எனது அதீத கற்பனைகள் என்று தான் இருக்கிறது. அணுசக்தி ஆராய்ச்சியில் நான் அதன் நற்பணிகளைப் பற்றியே ஈடுபட்டிருந்தேன். தற்சமயம் ஓய்வு பெற்று எனது மகளைப் பார்க்க வந்த இடத்தில் என்னை இதில் ஈடுபடுத்துவது நியாயமா?" என்றார்.

" உங்களது ஆராய்ச்சியால் உலகில் அணு ஆயுதங்களை செயலிழக்க முடியுமென்றால் நீங்கள் அதில் பெருமை கொள்ள வேண்டும்" என்றார் வில்சன்.

" உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். அமெரிக்கா விஞ்ஞான துறையில் முண்ணனியில் இருக்கும் நாடு. நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள் இங்கு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் என்னை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" என்று வில்சனிடம் கேட்டார் ராமன்.

" உங்களுக்கு ஒரு உண்மையை கூறுகிறேன். நல்ல வளர்ச்சி அடைந்த விஞ்ஞான ஆராய்ச்சியில் கணிதம் பெரும் பங்கு வகிக்கின்றது. கணிதத்தை புரிந்து செயலாற்ற நல்ல தத்துவங்கள் தேவப்படுகின்றன. உலகிலேயே மிக உன்னதமான தத்துவங்கள் உங்களது வேதங்களில் கூறப்பட்டிருக்கின்றன. அணு குண்டை முதன் முதலாக அமெரிக்காவில் நெவேடா பாலைவனத்தில் பரிசோதித்தபோது அதிலிருந்து கிளம்பிய ஒலி ஒளி இவற்றைப் பார்த்த அணு குண்டின் தந்தை எனப்படும் ஓபன் ஹீமர் என்பவர் தனக்கு கீதையில் நானே ஒளியும் ஒலியுமாக இருப்பேன் என்று கண்ணன் கூறியது நினைவுக்கு வந்ததாக கூறினார். அதனால் தான் இந்த ஆராய்ச்சியில் வேதங்களைப் பயின்ற உங்களால் வெற்றி காண முடியும் என நம்புகிறேன்" என்றார் வில்சன்.

பயணத்தின் முடிவில் ஆராய்ச்சி கூடத்தின் பாதுகாப்பு பிரிவின் முன் கார் நின்றது. ராமனை அழைத்து சென்று உள்ளே இருந்த அதிகாரிகளிடம் வில்சன் கூற அவர்கள் ராமனது புகைப் படத்தை எடுத்து அதை ஒரு பாதுகாப்பு அடையாள அட்டையில் ஒட்டி அவரிடம் கொடுத்தனர்.

" ஆரய்ச்சி கூடத்திற்கள்ளே உள்ள விருந்தினர் மாளிகையில் நீங்கள் தங்க ஏற்பாடாகி இருக்கிறது. தங்கும் விடுதியல் நீங்கள் சமைத்து சாப்பிட எல்லா வசதிகளும் பொருந்திய சமையலறை உள்ளது. நீங்கள் அதை பயன் படுத்தலாம். அல்லது நீங்கள் விருப்பப் பட்டால் அருகிலுள்ள மார்கெட்டிலிருக்கும் இந்திய உணவகத்திலிருந்து உணவை நீங்கள் தொலை பேசி மூலம் தருவிக்கலாம். நீங்கள் இன்று ஓய்வெடுங்கள். நாளை நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்" என்று கூறி விடை பெற்றார் வில்சன்.

தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அந்த விடுதியில் அவரது சூட்கேசுகள் ஏற்கனவே வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ராமன் ஷவரில் குளித்து இந்திய ரெஸ்டாரண்டிலிருந்து சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட்டபின் அசதியில் துயில் கொண்டார். நள்ளிரவில் திடீரென்று கண் முழித்த ராமன் படுக்கை அறை ஜன்னலில் தெரிந்த ஒரு உருவத்தை பார்த்து அதிர்ச்சியுற்றார்.

தொடரும்

அன்புரசிகன்
27-10-2009, 12:20 PM
மூன்றாவது பாகத்தின் முடிவில் திருப்பங்கள் காத்திருக்கிறது போலும். அமெரிக்காவிலும் விபரீதங்கள் வருமா...

அடுத்த பாகத்தினை சீக்கிரம் தந்திடுங்கள்...

மதுரை மைந்தன்
28-10-2009, 08:02 AM
மூன்றாவது பாகத்தின் முடிவில் திருப்பங்கள் காத்திருக்கிறது போலும். அமெரிக்காவிலும் விபரீதங்கள் வருமா...

அடுத்த பாகத்தினை சீக்கிரம் தந்திடுங்கள்...

தவறாமல் எனது கதைகளை படித்து பின்னூட்டங்கள் அளிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

உங்களது நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்

வியாசன்
28-10-2009, 10:23 AM
சுஜாதாவின் கதைகளை படிப்பதுபோன்ற விறுவிறுப்பு மகவும் சுவாரசியமாக இருக்கின்றது.ஓரு குறை கதை சிறிய பகுதியாக இருக்கின்றது. சீக்கிரம் முடிவடைந்தவிடுகின்றது. தொடருங்கள்

ஜனகன்
28-10-2009, 02:13 PM
ரொன்ப நல்லாய் போகின்றது கதை, தொடரை
எதிர்பார்க்கின்றேன்

மதி
28-10-2009, 02:32 PM
விறுவிறுப்பாக செல்கிறது கதை... சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போடுங்கள்

அறிஞர்
28-10-2009, 02:44 PM
அருமையான கதை...

கற்பனை வளத்தில்... அமெரிகாவில் கதை நன்றாக செல்கிறது...

வியாசன்
28-10-2009, 03:00 PM
அருமையான கதை...

கற்பனை வளத்தில்... அமெரிகாவில் கதை நன்றாக செல்கிறது...


பல இலைமறை காய்களுக்கு தளம் கிடைத்திருக்கின்றது. இவர்களில் ஒரு சுஜாதாவோ ,சாண்டில்யனோ , கல்கியோ உருவாகமாட்டார்களா?

மதுரை மைந்தன்
01-11-2009, 09:59 AM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை (பாகம்-4)

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த உருவத்தை பார்த்து அதிர்ச்சியுற்ற ராமன் தான் அறையின் உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததை நினைத்துக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று தனது இஷ்ட தெய்வங்களை வேண்டி கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டார். பயணக் களைப்பில் அப்படியே உறங்கி விட்டார். மறு நாள் அங்கு வந்த வில்சனிடம் இதைக் கூற அவர் " அந்த உருவம் உங்களது பாதகாப்பிற்காக போடப்பட்டிருக்கும் ராணுவ வீரர். அவர் இரவு முழுவதும் ரோந்து வருவார். நீங்கள் அவரைப் பற்றி பயப்படத் தேவையில்லை." என்றார். விலனது விருந்தாளி. ;சன் ராமனை பரிசோதனை கூடத்தை சுற்றி காட்டி அங்கு ஏற்கனவே வேலை பார்ப்பவர்களிடம் இவர் எனது விருந்தாளி. இங்கு சில நாடகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். நீங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பும் தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

ராமனை அவருடைய தனிப்பட்ட அறைக்கு அழைத்து சென்று அவரது இருக்கையில் அமர வைத்தார் வில்சன். " நான் யாரிடமும் நீங்கள் அணு ஆயுதத்தை பற்றி ஆராய்ச்சி செய்யப் போவதாக கூறவில்லை. நீங்களும் யாரிடமும் கூற வேண்டாம்" என்று செhன்னார் வில்சன். ராமன் தயங்கியவாறு " நான் ஏதோ விபரீத கற்பனை பண்ண அதை உண்மையாக்க என்னை சொல்கிறீர்களே ஒரு வேளை இந்த ஆராய்ச்சி பலன் தராவிட்டால்" என்று இழுத்தார். அதற்கு வில்சன் சிரித்துக் கொண்டே " உங்களது கீதையில் கடமையை செய் பலனை எதிர் பாராதே என்று சொல்லியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். கொஞ்சமும் தயக்கமின்றி முழு மனதுடன் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள். ஆராய்ச்சி வெற்றி அடையும் போது அதனால் உலக மக்கள் அவர்களது வருங்கால சந்ததிகள் பலனைடைவார்கள். அவர்கள் உங்ளை கடவுளாக கும்பிடுவார்கள்." என்றார்.

" உங்களது ஆராய்ச்சிக்கான உபகரணங்களை ஒரு லிஸ்ட் போட்டு தாருங்கள். அவைகளை நான் தருவிக்கறேன். அமெரிக்காவிலள்ள எந்த பரிசோதனை கூடத்திலும் நீங்கள் ஆராய்ச்சி செய்ய அதிபர் அனுமதி வழங்கியிருக்கிறார். நாசா ஓக்ரிட்ஜ் லபாரட்டரி மற்றும் பல்வேறு பல்கலை கழகங்களில் உங்களுக்கு அனுமதி ஏற்கனவே வாங்கியிரக்கிறேன். அவர்களுடைய இணையதளங்களில் நுழைந்து தகவல்களை எடுக்க உங்களுக்கு விசேட அனுமதிக்கான பாஸ்வோர்ட் இதோ" என்று அதை கொடுத்தார். ராமனிடம் வில்சன் ஒரு மொபைல் போனை கொடுத்து நிங்கள் உங்கள் மனைவியிடம் பேசி நிங்கள் பாதகாப்பாக இருப்பதை கூறுங்கள். இது ஒரு விசேட போன். இதன் எண்ணை மறு முனையிலிருப்பவர்கள் அறிய முடியாது என்று சொல்லி விடை பெற்று சென்றார்.

போனில் கமலாவுடன் பேசினார் ராமன். " உங்க குரல் கேட்டு இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. அங்கே எங்கு தங்கியிருக்கீங்க. சாப்பாட்டுக்கு என்ன பணறீங்க?. இங்கே நான் மகளை பார்த்து அணு அணுவா ரசிக்கிறேன்." என்றார் கமலா.

" நீ அணு அணுவா என்ஜாய் பண்றே. இங்கே நான் அணு அணுவா சங்கடத்தில் தத்தளிக்கிறேன். வில்சன் என்ற அமெரிக்க விஞ்ஞானி என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். தங்குவதற்கு வசதியான வீடும் அருகாமையில் இந்திய ரெஸ்டாரண்டும் இருப்பதால் சாப்பாட்டு கவலையில்லை. வந்த வேலை சீக்கிரம் முடியணும்னு பகவானை பிரார்த்திக்கிறேன்." என்றார் ராமன்.

கமலாவுடன் பேசிய பிறகு செய்யப் போகும் ஆராய்ச்சியை பற்றி யோசிக்கலானார். ஒரு ஆராய்ச்சியில் துவக்கம் சரியாக இருந்தால் அது பாதி வெற்றி என்பதை அறிந்த ராமன் எப்படி எங்கிருந்து துவங்குவது என்று தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.




தொடரும்

வியாசன்
01-11-2009, 03:00 PM
மதுரை மைந்தா அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளதே. முடிவுற்றபின் படித்து பார்க்கலாம் என்றால் பாழும் மனம் கேட்குதில்லையே. ஒரு அற்புதமான தொடர். முடிந்தவரை நீட்டிச்செல்லுங்கள். ஆனால் சிறிய பகுதியாக எழுதவேண்டாம். இன்னமும் கொஞ்சம் பெரிதாக எழுதுங்கள். நல்ல கற்பனை வளம். முடிந்தால் உங்கள் நடையை இன்னமும் கொஞ்சம் சிறப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாசகன் வியாசன்.

பிரம்மத்ராஜா
01-11-2009, 04:01 PM
வாசகர்களின் குரலுக்கும் செவிமடுத்து உங்கள் வேலைபளுவுக்கும் இடையில் நல்ல கதை தந்து கொண்டிருக்கின்டீர்கள்
வியாசன் அவர்கள் சொல்வதுபோல் நடையையும் சற்று மெருகேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்

மதுரை மைந்தன்
02-11-2009, 10:18 PM
சுஜாதாவின் கதைகளை படிப்பதுபோன்ற விறுவிறுப்பு மகவும் சுவாரசியமாக இருக்கின்றது.ஓரு குறை கதை சிறிய பகுதியாக இருக்கின்றது. சீக்கிரம் முடிவடைந்தவிடுகின்றது. தொடருங்கள்

கதை சில பாகங்களில் சிறியதாகி போய் விடுவதற்கு மன்னிக்கவும். அதை சரி செய்ய முயற்சிக்கிறேன். உங்களது பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகத்தை தருகின்றன. நன்றி

மதுரை மைந்தன்
02-11-2009, 10:20 PM
ரொன்ப நல்லாய் போகின்றது கதை, தொடரை
எதிர்பார்க்கின்றேன்

உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி

மதுரை மைந்தன்
02-11-2009, 10:22 PM
விறுவிறுப்பாக செல்கிறது கதை... சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போடுங்கள்

உங்களது பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
02-11-2009, 10:25 PM
அருமையான கதை...

கற்பனை வளத்தில்... அமெரிகாவில் கதை நன்றாக செல்கிறது...

உங்களது பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நன்றி.

மதுரை மைந்தன்
02-11-2009, 10:27 PM
வாசகர்களின் குரலுக்கும் செவிமடுத்து உங்கள் வேலைபளுவுக்கும் இடையில் நல்ல கதை தந்து கொண்டிருக்கின்டீர்கள்
வியாசன் அவர்கள் சொல்வதுபோல் நடையையும் சற்று மெருகேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்

கதையின் நடையில் மெருகெற்ற முயற்சிக்கிறேன். நன்றி

மதுரை மைந்தன்
02-11-2009, 10:31 PM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை (பாகம்-5)

ஆராய்ச்சியை எங்கு துவங்குவது என்று யோசிக்கலானார் ராமன். அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய காற்று மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தி அணு குண்டு வெடிக்கும் முன் அதில் ஏற்படம் தொடர் சங்கிலி யான அணுப்பிளவுகளைக் கட்டுப் படுத்தலாம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் அதை நடைமுறைப் படுத்தும் நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்ட பின் அதில் உள்ள சிக்கல்கள் அவரை பயமுறுத்தின. முதலாவதாக காற்று மண்டலத்தை மாற்றினால் உயிரினங்களுக்கும் விளை பயிர்களுக்கும் ஏதாவது சேதம் உண்டாகுமா என்று கண்டறிய வேண்டும். அடுத்த கட்டமாக ஒரு சிறிய பரிசோதனை கூடத்தில் காற்று மண்டலத்தை மாற்றி அணுப் பிளவுகளில் எற்படும் மாற்றங்களை ஆராயந்து தக்க முடிவெடுக்க வேண்டும். இவை வெற்றியடைந்தால் பெரிய அளவில் காற்று மண்டலத்தை மாற்ற முயல வேண்டும்.

இவ்வாறு சிந்தித்த ரமனுக்கு அவரது தாயார் அடிக்கடி சொல்லும் 'போகாத ஊருக்கு வழி சொல்றே" நினைவுக்கு வந்து சிரிப்பு வந்தது. இந்த முறை இல்லாமல் வேறு ஏதாவது எளிய முறை கிடைக்குமா என பல புத்தகங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தேடினார். விஞ்ஞான முன்னேற்றங்களில் இந்திய தத்துவங்கள் பெரிதும் பயன் படும் என்ற வில்சனின் வார்த்தைகள் அவர் காதில் எதிரொலிகக்க இந்திய தத்துவம் சம்பந்தமான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார்.

படிப்பிற்கிடையே அங்கிருந்த காபி அறைக்கு சென்று காபி அருந்தி வரலாம் என்று அங்கு விரைந்தார். காபி தயாரிக்கும் எந்திரத்தில் தனக்கு வேண்டிய அளவு ஸ்டராங்கான காப்பியை எடுத்துக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்து செய்தி தாள்களை புரட்டியவாறு காபியை அருந்திக் கொண்டிருக்கையில் எதிர்புறத்தில் அமர்ந்திருந்த ஒரு வெள்ளையர் தன்னையே உற்று கவனிப்பதை பார்த்தார்.

" ஐ ஆம் ஸ்டீபன் கிரிகோரி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசலானார் அவர். " உங்களை டிஸ்டர்ப் பண்ணுவதற்கு மன்னிக்கவும். உங்களை பார்த்தால் நீங்கள் ஒரு இந்தியரைப் போல் தெரிகிறது. நான் ரஷ்ய நாட்டை சேர்ந்தவன்." என்றார் அவர். நீண்ட வெண் தாடியுடன் தடித்த கண்ணாடி அணிந்திருந்தார் அவர்.

" நீங்கள் வில்சனிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். அவர் ஒரு அணு சக்தி துறையை சேர்ந்தவர் என்று அறிகிறேன். உங்களை ஒரு முக்கியமான வேலைக்கு இங்கு அழைத்து வந்திருக்கிறார்களென நினைக்கிறேன். அது என்ன முக்கியமான வேலை என்று அறிவதில் எனக்கு ஆர்வமில்லை. உங்களிடம் ஒரு முக்கியமான தகவலை கூற விரும்புகிறேன். உங்களது ஆராய்ச்சி வெற்றி அடைந்தாலும் தோல்வியுற்றாலும் நிங்கள் உங்களது தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். " என்றார் அவர்.

உங்களுக்கு எப்படி இது தெரியும் என்று ராமன் கேட்டதற்கு அவர் " எனக்கு நேர்ந்ததை வைத்து கூறினேன். ரஷ்யாவில் நான் லேசர் கதிர் வீச்சுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்றிருந்தேன். அமெரிக்காவின் ஸ்டார் வார்ஸ் என்ற ப்ரோகிராமைப் பற்றி அறிவீர்களென நினைக்கிறேன். அந்த ப்ரோகிராமில் அமெரிக்கா தன்னை தாக்க வரும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவு கணைகளை கண்டறிந்து விண் வெளியிலேயே அவற்றை எதிர் கொண்டு அழிக்கும் அமைப்பு உருவாக ஆராய்ச்சிகள் நடந்தன. அப்போது அதில் பணி புரிய இவர்கள் என்னை இங்கு அழைத்து வந்தார்கள். வில்சன் உங்களிடம் இந்தியாவை புகழ்ந்து பல விஷயங்களை கூறியிருப்பாரே. அதே மாதிரி இவர்கள் என்னிடம் ரஷ்யாவின் பெருமைகளை கூறி என்னிடம் நல்ல அபிப்ராயத்தை உண்டு பண்ணினார்கள். நானும் உற்சாகமாக ஆராய்ச்சியில் ஈடு பட்டேன். ஆராய்ச்சியின் முடிவில் ரஷ்யா திரும்பி எனது மீதி வாழ் நாட்களை அங்கு கழிக்கலாமென கனவு கண்டேன். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ப்ரோக்ராமை கை விட எனது ஆராய்ச்சி தடை பட்டது. அப்போது நான் ரஷ்யா திரும்ப நினைத்த போது இவர்கள் எனது பாஸ்போர்டை கைபற்றி என்னை திரும்பி செல்ல முடியவில்லை. ப்ரோக்ராம் கைவிடப் பட்டாலும் எனக்கு அதைப் பற்றிய தகவல்கள் தெரியும் என்பதால் எனக்கு இந்த கதி ஏற்பட்டது." என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட ராமன் அணு ஆயுதங்களின் நாச வேலைகளிலிருந்து உலகை காப்பாற்ற தனக்கு தோன்றிய நல்லெண்ணத்தை கூறப் போக அதுவே அவரை இந்த இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியிருப்பதை நினைத்து கலங்கினார். சொர்கமே ஆனாலும் சொந்த ஊர் போல் வருமா என்று ஏங்கினார்.

தொடரும்

அன்புரசிகன்
02-11-2009, 11:24 PM
கதையில் சிறு மாற்றம் வந்துள்ளது. அவருக்கு ஆராச்சியின் பின்பான விபரீதத்தினை யாரோ எடுத்துரைத்துள்ளார்...

இது உண்மை தான். எனக்கு தெரிந்த அறுவைச்சிகிச்சை வைத்திய பேராசிரியர் ஒருவர் இலங்கைவரமுற்பட்டபோது அவர் வந்தது இருசக்கர நாற்காலியில் தான். பேச்சு ஏதும் இல்லை. வந்து ஒருவாரத்தில் இறந்துவிட்டார். இது நடந்தது ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன்...

உங்களின் அடுத்த பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மதி
03-11-2009, 01:37 AM
அடப்பாவிகளா... இப்படியும் பண்ணுவாங்களா??? ம்ம்.. மேற்கொண்டு தொடருங்கள் சார்..

பிரம்மத்ராஜா
03-11-2009, 01:52 AM
ரஷ்யர் அமெரிக்காவின் குணத்தை கூறிவிட்டார். கதையின் போக்கை பார்த்தால் நம்மவர் ஆராய்ச்சியை பாதியில் நிறுத்திவிடுவார் போலிருக்கிறதே.

ஜனகன்
03-11-2009, 08:07 PM
வெள்ளைக்காரன் சொன்னதை வைத்து பார்த்தால், ராமன் ஆராச்சியை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் போய் சேந்தால் தப்பித்துக்கொல்லாம் போல் இருக்கிறது.இல்லாவிட்டால் அவர் கெதி அம்போதான்.
கதை நல்ல சுவாரசியமாக போகின்றது. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.நன்றி

மதுரை மைந்தன்
06-11-2009, 10:22 AM
அணுவைத் துளைத்து - அறிவியல் தொடர் கதை (பாகம் 6)


ரஷ்ய விஞ்ஞானி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமன் உடன் கமலாவுக்கு போன் செய்தார்.

" உஙகளுக்கு ஒரு நல்ல செய்தி. நம்ம பொண்ணுக்கு அழகா ஒரு பிள்ளை குழந்தை பிறந்திருக்கான். நீங்க தாத்தாவியிருக்கீங்க. பேரனை வாழ்த்த எப்போ வறீங்க" என்றார் கமலா.

" என்னால் எப்போது வர முடியும் என்று தெரியாது. நீ பகவானை வேண்டிக்கோ. பேரனுக்கு என்னோட வாழ்த்தெல்லாம் அணு ஆயுத உலகப் போரில் அவன் மடியக்கூடாது. அப்படி அந்த யுத்தம் வந்து பூமி நாசமடையும் போது அதில் அவன் நரக வாழ்க்கை வாழக் கூடாது. என்னோட ஆராய்ச்சி அதற்கு பயன் படுமென்றால் நான் மகிழ்ச்சியுடன் கண் மூடுவேன்" என்றார் ராமன்.

" ஐயயோ நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசறேள்? உங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லையே"

" சாரி. நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிட்டேன். நம்ம பேரன் பெரியவனாகி சீரும் சிறப்புமா வாழ்ந்து மகராசனா இருக்கணும்".

வேறு ஒன்றும் பேச முடியாமல் ராமனுக்கு தொண்டை அடைத்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த வில்சன் " ஹலோ ராமன். ஆராய்ச்சியில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறீர்கள்?" என்றார்.

ராமன் அவரிடம் தனது பழைய யோசனையான காற்று மண்டலத்தை மாற்றி அணு அயதங்களை செயலிழக்க வைப்பதில் உள்ள பல சிக்கல்களை எடுத்து கூறி அதற்கு மாற்றாக வேறு ஒரு வழியை ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறினார்.

" தயவுசெய்து மனதை ஒரு நிலைப் படுத்தி ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் யோகாசனம் பண்ணுகிறீர்களா?"

" ஆமாம். தினம் காலையில் மெடிடேஷன் பண்ணிவிட்டு தான் ஆராய்ச்சியை துவக்ககிறேன்." என்று சொன்ன ராமன் தயங்கியவாறு " ஆராய்ச்சியின் முடிவில் நான் எனது மனைவி மகளை பார்த்து விட்டு மனைவியுடன் இந்தியா திரும்புகிறேன்." என்றார்.

" ஓ அதுக்கென்ன அது உங்களுடைய விருப்பமென்றால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால் கீதையில் சொந்தங்களில் பற்று வைப்பதைப் பற்றி கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்களென நினைக்கிறேன்" என்றார் வில்சன்.

ராமனுக்கு கீதாச்சாரத்தின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

"கண்ணன் சொன்னது கீதையிலே அதை
கருத்தில் கொள்வாய் வாழ்க்கையிலே
அண்ணன் தம்பி சுற்றம் எனபதெல்லாம்
நமது அறிவில் குழப்பம் தரும் மாயைகளே".

" ஆமாம். எனக்கு அது நினைவிருக்கிறது. இனிமேல் மனதை நிலை நிறுத்தி ஆராய்ச்சி செய்கிறேன்".

" தட்ஸ் க்ரேட்" என்று சொல்லி விடை பெற்றார் வில்சன்.

ராமன் திவிரமாக பல நூல்களையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஆராய்ந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டார். தனக்கு ஒதக்கப் பட்டிருந்த ஆராய்ச்சி கூடத்தில் பல சிறிய அளவு பரிசோதனைகள் செய்தார். இருந்தும் அவருக்கு ஒரு தெளிவான முடிவக்கு வர முடியவில்லை.

ராமனுக்கு கல்லூரி நாடகளில் ஒரு பழக்கம் இருந்தது. தேர்வுக்கு முன்னால் பல நாடகள் தீவிரமாக படித்து விட்டு தேர்வுக்கு முதல் நாள் புத்தகங்களை தள்ளி விட்டு சினிமாவுக்கு சென்று விடுவார். அப்படி செய்தால் தான் அவரக்கு தேர்வில் நன்றாக எழுத வரும். அது நினைவுக்கு வர ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு தொலைக் காட்சி பெட்டியின் முன் அமர்ந்தார். ஜீ டி.வி யில் மஹாபாரதம் சீரியல் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. வில்சனுக்கு பொன் செய்து அவரை அங்கு வரவழைத்து தன் யோசனையை கூறினார்.

"அணுப்பிளவின் போது வெளிவரும் நியூட்ரான் துகள்களுடன் சேர்ந்து மிகவும் சிறிய ந்யூட்ரினோ துகள்களும் வெளி வரகின்றன. இந்த துகள்கள் அணுப்பிளவு நடப்பதில் கிரியா ஊக்கிகளாக செயல் படுகின்றன. இந்த ந்யூட்ரினோ துகள்களை அழித்து விட்டால் அணு குண்டு வெடிப்பது சாத்தியமில்லை. ந்யூட்ரினொ துகள்களை அழிக்க எதிர் ந்யூட்ரினொ துகள்களை செலுத்தினால் அது சாத்தியம்" என்றார் ராமன்.

" எதிர் ந்யூட்ரினோ துகள்களை எப்படி உருவாக்கலாம் அவற்றை எப்படி செலுத்தலாம்" என்று கேட்டார் வில்சன்.

" அண்ட வெளியிலிருந்து பல சக்தி வாய்ந்த ந்யூட்ரான் புரோட்டான் வருகின்றன. இவற்றைக் கொண்டு ஒரு செயற்கை கோளில் எதிர் ந்யூட்ரினோ துகள்களை உருவாக்கி பூமியில் நமக்கு வேண்டிய இடத்திற்கு அனுப்ப முடியும்" . ராமனுக்கு இந்த யோசனை மஹாபாரதம் சீரியலில் துரொபதியின் சேலையை கௌரவர்கள் பற்றி இழுக்க அவள் கண்ணனை துதிக்க வானிலிருந்து கண்ணன் சேலைகளை தொடர்ந்து அனுப்பியதை பார்த்ததிலிருந்து தான் உதித்தது.

" இந்த யோசனை நல்ல யோசனை. முந்தைய யோசனையான காற்று மண்டலத்தை மாற்றுவதில் அமெரிக்காவின் அணு ஆயுதங்களும் செயலிழந்து அமெரிக்காவின் பலம் குறைந்து விடும். அனால் இந்த யோசனையில் அமெரிக்கா தன்னுடைய அணு ஆயுதங்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற நாடுகளின் ஆயுதங்களை செயலிழக்க வைப்பதால் அமெரிக்க தனிப் பெரும் நிகரற்ற சக்தியாக விளங்கும்" என்றார் வில்சன்.

நாசா விஞ்ஞானிகளுடன் ரகசியமாக கலந்துரையாடி ஒரு செயற்கை கோளையும் அதில் எதிர் ந்யூட்ரினோ துகள்களை உருவாக்கும் இயந்திரத்தையும் வைத்து விண் வெளியில் மிதக்க விட்டனர்.

" நாம் இந்த முறையை சோதிக்க நெவாடா பாலைவனத்தில் ஏற்பாடு செய்கிறேன். நமக்கு வெற்றி நிச்சயம்" என்று ஆனந்தமாக சுறினார் வில்சன். அம்மாதிரியே ஏற்பாடகளும் செய்யப் பட்டு அந்த நாளும் வந்தது.

என்ன தான் வில்சன் ரகசியமாக ஏற்பாடுகள் செய்திருந்தாலும் எப்படியோ மோப்பம் பிடித்து பல பத்திரிகை காரர்களும் தொலைக் காட்சி நிறுவனங்களும் நெவாடா சோதனைக் களத்தில் குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு செயற்கோளையும் எதிர் ந்யூட்ரினோ துகள் உருவாக்கும் இயந்திரத்தைப் பற்றியும் தெரியாது. அவர்கள் அமெரிக்கா மற்றுமோர் அணு சோதனை செய்யப் போவதாக நினைத்தனர்.

அணு குண்டு ஒன்றை பாலைவனத்தில் தூர வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க ஏற்பாடாகியிருந்தது. எல்லா ஏற்பாடகளும் முடிந்து அணு குண்டை வெடிக்க வைக்கும் பட்டனை அமுத்த கவுண்ட் டவுன் துவங்கியது. 10 9 8...........2 1 0 என்றவுடன் வில்சன் பட்டனை அழுத்த அணு குண்டு வெடித்தது கண்டு ராமன் அதிர்ச்சிகுள்ளானார்.

தொடரும்

அன்புரசிகன்
06-11-2009, 02:29 PM
கதை விறுவிறுப்புக்கட்டத்தினை அடைந்துவிட்டது போல் உள்ளது. அடுத்த பாகம் எப்போது??? இங்கு எனக்கு BP ஏறப்போகுது... :D

ஜனகன்
11-11-2009, 09:47 PM
கதை சுவாரசியமாக போகின்றது. தொடரட்டும்

மதுரை மைந்தன்
15-11-2009, 06:59 AM
அணுவைத் துளைத்து- அறிவியல் தொடர் கதை- நிறைவடைந்தது

அணு குண்டை வெடிக்க செய்த சிறிது நேரத்தில் ராமன் குண்டு வெத்ததைப் பார்த்து திகைப்புற்றாலும் உண்மையில் அணு குண்டு வெடிக்கவில்லை என்பதை உணர்ந்தார். இதற்கான காரணம் அணு குண்டின் வடிவமைப்பில் முதலில் சாதாரண டி.என்.டி வெடிமருந்தை வெடிக்கசெய்து அதன் விளைவால் இரண்டு தனித் தனியான பாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் யுரேனியம் அல்லது ப்ளுடோனியம் இணைந்து கிரிட்டிக்கல் மாஸ் என்று சொல்லப்படும் எடையை கடப்பதால் கட்டுக்கடங்காமல் ஏற்படும் அணுப் பிளவுகளின் விளைவே அணு குண்டு வெடிப்பதாகும். அப்படி அணு குண்டு வெடிக்கும் போது வானளாவிய புகை மண்டலம் ஒரு குடை போல் எழும்பும். அணு குண்டிலிரந்து வெளி வரும் அணுக்கதிர் வீச்சுக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அளவு மானிகளில் ஒளியையும் ஒலியையும் உண்டாக்கும். இவை அனைத்தும் நிகழாமல் முதலில் வெடித்தது டி.என்.டி வெடி மருந்தே என்றறிந்து ராமன் தனது கண்டபிடிப்பு வெற்றியடைந்ததைக் குறித்து மகிழ்ந்தார்.

ஆனால் அருகிலிருந்த வில்சன் அவரிடம் பத்திரிகையாளர்களை கண் சாடை காட்டி " ஐ ஆம் சாரி டாக்டர் ராமன் சோதனை தோல்வியடந்து விட்டது. நாம் மீண்டும் முயற்சிப்போம்" என்றார். பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரிகைகளுக்கு " அமெரிக்க அணு குண்டு சோதனை தோல்வியடைந்தது. விஞ்ஞானிகள் ஏமாற்றம். சோதனை தொடரும்" என்று ப்ரேக்கிங் ந்யூஸ் கொடுத்தார்கள்.

பத்திரிகை தொலைக்காடசியாளர்கள் அங்கிருந்து அகன்று தனித்து விடப் பட்டதும் வில்சன் ராமனின் கைகளைப் பற்றிக் கொண்டு

" இது ஒரு மாபெரும் வெற்றி. அமெரிக்காவின் பயம் நீங்கி பலம் பெருக இது வழி வகுக்கிறது. அதிபர் உங்களுக்கு விருதுகள் வழங்குவார்" என்றார்.

" எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி. நான் எனது மனைவியுடன் இந்தியா திரும்ப விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடுகள் செய்ய முடியுமா?"

" அதுவும் சரிதான். நான் அதிபரை சந்தித்து சோதனையின் வெற்றியை கூற வேண்டும். அப்போது உங்களது கோரிக்கையை அவரிடம் கூறி ஏற்பாடுகள் செய்கிறேன்" என்று சொல்லி ராமனுடன் நெவாடாவிலிருந்து வாஷிங்டன் திரும்பி ராமனை அவரது கெஸ்ட் ஹவுஸில் விட்டு விட்டு வெள்ளை மாளிகைக்கு விரைந்தார் வில்சன்.

வெள்ளை மாளிகையில் அவசரமாகவும் ரகசியமாகவும் கூட்டப்பட்ட சந்திப்பு ஒன்றில் வில்சன் சோதனையின் வெற்றியையும் அதன் விளைவாக அமெரிக்கா மற்ற நாடுகளின் அணு ஆயுதங்களை செயலிழக்க செய்ய முடியும் என்பதை எடுத்துரைத்தார். அங்கு குழுமியிருந்த வெளி நாட்டு விவகார செகரட்டரி பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷாம்பெய்ன் பாட்டிலை திறந்து அதை குடித்து கொண்டாடினார்கள். வில்சன் அதிபரிடம் ராமன் இந்தியாதிரும்ப விரும்புவதாக கூறினார்.

" ராமன் இந்தியா திரும்புவது நமக்கு ஆபத்தானது. அவருககு அவரது வங்கி கணக்கில் பெரிய தொகை ஒன்றை வழங்கி தங்குவதற்கு வீடு கார் மற்றும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து அவரை இங்கேயே தங்க வையுங்கள்" என்றார் அதிபர்.

" அவரிடம் நான் ஏற்கனவே இதை கூறி விட்டேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார்" என்றார் வில்சன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எப்.பி.ஐ தலைவர் " எனக்கு தெரிந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் ராமனது மூளையில் லேசர் கதிர்களைக் கொண்டு அமெரிக்காவுக்கு அவர் வந்த பின் நிகழ்ந்தவைகளை மறந்து விடுமாறு செய்து விடுவார்" என்றார். அதிபரும் வில்சனும் இது நல்ல யோசனை என்று ஏற்றுக் கொண்டனர்.

ராமனை அவரது கெஸ்ட் ஹவுஸில் சந்தித்த வில்சன் அவரிடம் அளவளாவியபடியே ராமன் அருந்திய ஆரஞ்சு சாற்றில் மயக்க மருந்தை கலந்து கொடுக்க ராமன் மயங்கி விழுந்தார். மயங்கிய ராமனை மூளை அறுவை நிபுணரிடம் எடுத்து சென்று அவர் லேசர் கதிர்களைக் கொண்டு ராமனின் அமெரிக்க நினைவுகளை இழக்க செய்தார்.

நினைவு திரும்பிய ராமன் " நான் எங்கிருக்கிறேன். கென்னடி விமான தளத்தில் இருக்கும் எனது மனைவி என்ன ஆனாள்" என்றார். " என் பெயர் வில்சன். கென்னடி விமான தளத்தில் ஆண்களுக்கான ரெஸ்ட் ரூமில் மயங்கி கீழே விழுந்த உங்களுக்கு மண்டையில் அடிபட்டு பல மாதங்களாக நினைவு திரு;ப பல மாதங்கள் ஆகி விட்டது. உங்களது மனைவி மகள் வீட்டில் நலமாக இருக்கிறார். உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கிறான்" என்றார். ராமன் அவருக்கு நன்றி சொல்லி விட்டு மனைவியை உடனே பார்க்க வேண்டும் என்றதால் அவரை ந்யூ ஜெர்சியில் உள்ள அவரது மகளின் வீட்டிற்கு ஒரு காரில் அனுப்பி வைத்தார் வில்சன்.

மகள் வீட்டில் மனைவியையும் பேரக்குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த ராமனிடம் அவர் இத்தனை நாட்களாக எங்கிருந்தார் என்று கேட்டார் கமலா. தனக்கு நிகழ்ந்தது என்ன என்று தெரியாது என்று ராமன் கூற " பாவிகள். உங்களிடமிருந்து வேலையை வாங்கிக் கொண்டு அவர்கள் உங்களது நினைவகளையையும் மறக்க செய்து விட்டார்களே ஆண்டவன் புண்ணியத்தில் இந்த மட்டுமாவது உயிருக்கு ஆபத்து இல்லாமல் திரும்பினீர்களே. நாம் இன்றே இந்தியா திரும்புவோம்" என்றார் கமலா.

முற்றும்

அன்புரசிகன்
15-11-2009, 08:17 AM
அவரது திறமையால் அவரது நாட்டுக்கு ஏதும் நன்மைகிட்டாது போய்விட்டது. அமெரிக்காவின் குணங்களை ஏற்கனவே அறிந்ததும் உங்களது முடிவும் ஒற்றுமையாகவே உள்ளது.

வாழ்த்துக்கள் அண்ணா...

வியாசன்
15-11-2009, 04:19 PM
நல்லகதை அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது. பல விடயங்களை தெரிந்து வைத்துள்ளீர்கள். அவசரமாக முடிக்கபட்டதில் ஏமாற்றமே.

ஆனாலும் நல்ல கதையை படித்த திருப்தி

ஜனகன்
15-11-2009, 06:37 PM
நன்றாக முடித்துள்ளிர்கள் கதையை. இவ்வளவு விரைவாக முடியும் என நான் நினைக்கவில்லை. என்றாலும் நல்ல கதைவாசித்த திருப்தி. நன்றி