PDA

View Full Version : மோகம்!!!!



aren
17-10-2009, 05:40 PM
தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே பயிலவேண்டும்
தமிழ் மட்டுமே தமிழ்நாட்டில
என்று தினமும் கூவும்
அரசியல்வாதியின் மகன்
கான்வென்ட் பள்ளியில்
ஆங்கில வகுப்பில்!!!!

அமரன்
18-10-2009, 08:04 AM
ஊருக்கடி உப-தேசம்
உனக்கல்லடி பெண்ணே..

கொசுக்கடி.:icon_b:

அன்புரசிகன்
19-10-2009, 01:21 AM
யார் சொன்னது.. அவர்களது பிள்ளைகள் மேலத்தேய நாடுகளின் உயர் பள்ளிகளில் அல்லவா பள்ளிகொள்கிறார்கள்....

அருள்
19-10-2009, 03:06 AM
உண்மையை ஊர் அறிய சொன்னால் எப்படி?????

Mano.G.
19-10-2009, 04:04 AM
பிற்காலத்தில் தமிழ் சோறு போடாதே,
அந்த சந்தேகம் தான் காரணமோ

aren
19-10-2009, 04:40 PM
ஊருக்கடி உப-தேசம்
உனக்கல்லடி பெண்ணே..

கொசுக்கடி.:icon_b:

நன்றி அமரன். இப்படித்தானே பலர் இன்றும் இருக்கிறார்கள்.

aren
19-10-2009, 04:41 PM
யார் சொன்னது.. அவர்களது பிள்ளைகள் மேலத்தேய நாடுகளின் உயர் பள்ளிகளில் அல்லவா பள்ளிகொள்கிறார்கள்....

இருக்கலாம் அன்புரசிகரே. அதைத்தானே இங்கே சொல்கிறேன். ஊருக்கு ஒரு உபதேசம் ஆனால் அவர் குழந்தைகளுக்கு நேர்மாறான வழிமுறைகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-10-2009, 04:42 PM
உண்மையை ஊர் அறிய சொன்னால் எப்படி?????

நன்றி அருள். ஊருக்குத் தெரிந்த விஷயத்தைத்தானே இங்கே சொல்லியிருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-10-2009, 04:43 PM
பிற்காலத்தில் தமிழ் சோறு போடாதே,
அந்த சந்தேகம் தான் காரணமோ

நன்றி மனோ. அப்படி பிற்காலத்தில் தமிழ் சோறு போடாது என்று அவர்கள் நினைத்தால் ஏன் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள் என்பதே என் வாதம்.

நன்றி வணக்கம்
ஆரென்

samuthraselvam
20-10-2009, 08:25 AM
அவங்கெல்லாம் அப்படிதான்... ஒருக்கு ஒரு பேச்சு... தனக்கொரு பேச்சு...

அவங்கம்மா பாவம் கான்வென்டில் படிக்க வைக்கும் வசதி இருந்திருக்காதோ என்னவோ?