PDA

View Full Version : அறிந்து சொல்க! - விடுகதை

குணமதி
17-10-2009, 03:35 PM
கங்குகடல் திரிந்தலைந்து கரையில் வந்து

கதிரவனைக் கண்டுடலங் காய்ந்து வற்றி

பொங்குகடற் சீனிதிளைத் தேறி வண்டி

பூவுலகங் காக்கவரும் சிவனு மல்ல

எங்கணுமே இதன்மணமே ஏற்ற மாகும்!

யாவருமே இன்னதென எளிதாய்ச்சொல்வர்!

இங்கிதனை அறிந்துரைக்கும் ஏற்றம் மிக்கார்

எப்போதும் அறிவாளி எனச்சொல் வீரே!

வியாசன்
18-10-2009, 06:54 AM
கருவாடா?

வானதிதேவி
18-10-2009, 07:47 AM
கருவாடு தான் என நானும் நினைக்கிறேன்.

அமரன்
18-10-2009, 08:11 AM
கடல்சீனி.. வித்தியாசமான பிரயோகம்.

வியாசன்
18-10-2009, 09:12 AM
கடல்சீனி.. வித்தியாசமான பிரயோகம்.

அப்படினால் இதன் பதில் உப்பாக இருக்கலாம் ஆம் உப்பேதான்

ஆ.ஜெயஸ்ரீ
18-10-2009, 06:13 PM
உப்பு கல் தான் என நானும் நினைக்கிறேன்

அருள்
19-10-2009, 03:10 AM
ஐயோ ஒன்னுமே புரியல!!!!!!!!!! நான் வரல இந்த விளையாட்டுக்கு.....

குணமதி
19-10-2009, 11:22 AM
விடுகதையின் விடை : கருவாடு

கடல்சீனி - உப்பு

சரியாகக் கூறியோர்க்குப் பாராட்டு!

அனைவர்க்கும் நன்றி.

aren
19-10-2009, 04:52 PM
கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது.

samuthraselvam
20-10-2009, 08:21 AM
விடுகதையே வித்தியாசமாக இருக்கிறது.... தொடருங்கள் சிநேகிதி....

குணமதி
20-10-2009, 11:16 AM
கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது.

நன்றி.

குணமதி
20-10-2009, 11:18 AM
விடுகதையே வித்தியாசமாக இருக்கிறது.... தொடருங்கள் சிநேகிதி....

நான் ஆண்தான்.

நன்றி செல்வம்.

வியாசன்
20-10-2009, 12:34 PM
நான் ஆண்தான்.

நன்றி செல்வம்.

ஐயோ நீங்கள் ஆணா மனைவியிடம் அனுமதிபெற்று உங்களுக்கு தனிமடலில் கடிதம் அனுப்பலாம் என்று பார்த்தேன். ஆண் என்ற ஒற்றை சொல்லில் கனவு தகர்ந்துவிட்டதே :frown::frown:

மன்மதன்
20-10-2009, 02:44 PM
இரண்டு மூன்று தடவை படித்ததும் புரிந்தது..

சரி...சரி.. விடையை பார்த்த பின்னர்..

தொடர்ந்து கொடுங்க குணா..

ஜனகன்
20-10-2009, 03:19 PM
ஹாய் குணா! நான் அண்மையில் அங்கத்தவராக
இணைந்து கொண்டேன். நானும் ஒரு விடுகதை வைத்திருக்கின்றேன்.
எப்படி இங்கு அதை இணைப்பது. கொஞ்சம் சொல்லுங்களேன்

குணமதி
21-10-2009, 03:17 AM
இரண்டு மூன்று தடவை படித்ததும் புரிந்தது..

சரி...சரி.. விடையை பார்த்த பின்னர்..

தொடர்ந்து கொடுங்க குணா..

நன்றி.

குணமதி
21-10-2009, 03:25 AM
ஹாய் குணா! நான் அண்மையில் அங்கத்தவராக
இணைந்து கொண்டேன். நானும் ஒரு விடுகதை வைத்திருக்கின்றேன்.
எப்படி இங்கு அதை இணைப்பது. கொஞ்சம் சொல்லுங்களேன்

மிகவும் எளிது.

மன்றத்தின் முதல் பக்கத்தில் மல்லிமன்றத்தில் சிரிப்புகள் விடுகதைகள் என்பதைச் சொடுக்குங்கள். பலரும் எழுதிய பட்டியல் இருக்கும். அப்பட்டியலின் தலைப்பில் இடப்பக்கத்தில் New Thread என்று ஆங்கிலத்தில் இருக்கும். அதைச்சொடுக்கினால் நீங்கள் எழுத சாளரம் வரும். எழுதி வெளியிடுங்கள்.
நன்றி.

samuthraselvam
21-10-2009, 05:25 AM
நான் ஆண்தான்.

நன்றி செல்வம்.

ஐய...அப்படியாண்ணா? அப்ப, சிநேகிதன்... :rolleyes:

வியாசன்
21-10-2009, 05:31 AM
ஐய...அப்படியாண்ணா? அப்ப, சிநேகிதன்... :rolleyes:

நீங்களும்
சிநேகிதியே சிநேகிதியே
இரகசிய சிநேகிதியே
பாடலாம் என்று கனவுகண்டீர்களா?:lachen001::lachen001::lachen001:

ஜனகன்
21-10-2009, 06:19 PM
மிகவும் எளிது.

மன்றத்தின் முதல் பக்கத்தில் மல்லிமன்றத்தில் சிரிப்புகள் விடுகதைகள் என்பதைச் சொடுக்குங்கள். பலரும் எழுதிய பட்டியல் இருக்கும். அப்பட்டியலின் தலைப்பில் இடப்பக்கத்தில் New Thread என்று ஆங்கிலத்தில் இருக்கும். அதைச்சொடுக்கினால் நீங்கள் எழுத சாளரம் வரும். எழுதி வெளியிடுங்கள்.
நன்றி.

மிகவும் நன்றி குணா.
நீங்கள் சொன்னபடி முயற்சிக்கின்றேன்

குணமதி
27-10-2009, 05:04 AM
மிகவும் நன்றி குணா.
நீங்கள் சொன்னபடி முயற்சிக்கின்றேன்

உங்கள் விடுகதையை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.