PDA

View Full Version : பதிவுகள் காணாமற் போகின்றன.......



Nanban
09-10-2003, 07:01 AM
சமீப காலமாக தமிழ்மன்றத் தளத்தில், சில பதிவுகள் காணாமல் போகின்றன. யாரும் அது தங்கள் மனதை புண்படுத்துகிறது என்று எந்தவித புகாருக்கும் உட்படாத பதிவுகள் அவை. உதாரணமாக, தமிழ்லியோ எழுதிய ஒரு கவிதைக்கு நான் என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் பதில் விளக்கமும் எழுதியிருந்தார். மீண்டும் அந்தக் கவிதைப் பக்கம் சென்ற பொழுது, இரு பதிவுகளையும் காண முடிவதில்லை. அதே போல, நூர் பாத்திமா என்ற கவிதையிலும் என்னுடைய ஒரு பதிவைக் காணவில்லை. கடைசியாக அதற்குப் பதிவு செய்தவர், இளசு என index பக்கத்தில் இருந்தது. என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்க உள்ளே நுழைந்தால், அதையும் காணவில்லை. அதே போல, ஒரு தனிமடல் வந்திருந்தது balakmu என்ற நண்பரிடமிருந்து. ஒருமுறை படித்து விட்டு, மறுமுறை அதைப் படிக்க உள்ளே சென்ற பொழுது, அந்த தனி மடலையேக் காணவில்லை.

இது ஏதும் தளத்தில் உள்ள பிரச்னையா? அல்லது நான் உபயோகிக்கும் கணிணியின் பிரச்னையா? அல்லது ஏதேனும் வைரஸ் பிரச்னையா? விஷயம் தெரிந்த யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்........

இக்பால்
09-10-2003, 07:45 AM
இளசு அண்ணா கூறியது....

என்னைப் பொருத்தவரை தைரியம், சுதந்தரம் இவற்றுக்கு
பொதுவாழ்வில் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன் -
அது அடுத்தவர் மூக்கின் நுனி.
பிறர் மனம் புண்படுத்த வாய்ப்புள்ள தைரியத்தை நசுக்கினால்
அந்த ஒருவர் மனம் புண்படும்தான்...
அவர் வலியில் கத்தினால் எனக்கு வருவது இரக்கம் அல்ல..
பலர் மனம் காப்பாற்றிய திருப்தியே வரும்.

ஹமாயூன் தம்பி கூறியது....

மற்றவர்களுக்கு தவறாக தோன்றும் எந்த சொல்லை கத்தரிக்கவும் கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிமை உள்ளது. அந்த சொல்லை கத்தரித்ததால் உங்களை அவமானபடுத்தியதாக தாங்கள் ஏன் கருத வேண்டும் ? எல்லோரும் உங்களைப் பற்றி நல்லவிதமாக சிந்திக்க அதை ஏன் வாய்ப்பாக நீங்கள் எடுத்துக் கொள்ள கூடாது ? உங்கள் பெரிய படைப்பு ஒன்றை நீக்கி விட்டது போல கோபப்படுகிறீர்களே ?


ஆகையால் நண்பர் நண்பனே...உங்கள் பார்வையில் நல்லதாக தெரிந்தது
பொதுப்பார்வையில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.
அதனால் கண்காணிப்பாளர் குழு நீக்கி இருக்கலாம். அதே சமயம்
இளசு அண்ணாவின் entry கடைசியாக இருந்ததால் அண்ணா மற்றவர்கள்
நலன் கருதி நீக்கி இருக்கலாம்.

தனிமடல் என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. அது பற்றி ஏற்கனவே
நான் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறேன். நாம் அனுப்பும் தனிமடலை
கண்காணிப்பாளர் விரும்பினால் திறந்து பார்க்க இயலுமா என.

எதற்கும் அண்ணா, பப்பியின் பதிலையும் நான் எதிர்பார்க்கிறேன்.

-அன்புடன் அண்ணா.

(என்னுடைய இந்த பதிவு ,பிரச்னையை பெரியது படுத்த அல்ல.
பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர என்பதாக புரிந்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.)

இளசு
09-10-2003, 08:17 AM
நண்பன் அவர்களுக்கு
உங்கள் கருத்தும் தமிழ்லியோ அவர்களின் விளக்கமும் இங்கே உள்ளன.
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2090

நீங்கள் இங்கே தேடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2115

நூர்பாத்திமாவில் இன்று காலை 8.45மணிக்கான என் பதிவு இன்னும் உள்ளது..
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=25447#25447

பதிவு இதுதான்..

நண்பன் அவர்களுக்கு
நீங்கள் கேட்டபடிச்செய்ய கணினி வல்லுநர் தேவை.
மேலிடப்பார்வைக்கு வைக்கிறேன்.

தனிமடல்கள் - உங்களைத் தவிர நிர்வாகம் பார்க்க முடியாது. அப்படி ஒரு வசதிக்கு அவசியம் இல்லை. தலைவர் PMஇன் தமிழாக்கமாய் இரகசியச் செய்தி என்பார்.
அவை காணாமல் போனால், தனிப்பட்டவரின் பொறுப்பே ஆகும்.
ஆனால், உறுப்பினர்கள் தாமாகவே பழைய PMகளை அவ்வப்போது அகற்றி
சுத்தப்படுத்தவேண்டும் என்று வேண்டுகிறோம்.

இளசு
09-10-2003, 08:37 AM
புதியவர்களும் பழைய தலைப்பை படிக்காத பழையவர்களும்
மீண்டும் ஒரு முறை படிக்கவும்...

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=562

ஏப்ரல் 19 2003.


நண்பர்களே.. நண்பிகளே..

புதிதாக இளசு, ராம்பால் என்று இரண்டு மாடரேட்டர்கள் தேர்வு செய்திருந்தோம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் சொல்லிவிடுகிறேன். அப்போது தான் உங்களுக்கு ஐயப்பாடு இருக்காது.

1) இளசு அவர்களுக்கு உங்களுடைய பதிப்புகளினுள் கை வைக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அதில் வரும் எழுத்துப் பிழைகளையும், கருத்துப் பிழைகளையும், ஆங்கில தலைப்புகளை, விளக்கமில்லா தலைப்புகளையும் திருத்தும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2) ராம்பால் அவர்களுக்கு உங்கள் கருத்துக்களை அலசிப் பார்த்து பிறகு உங்களுக்கு விஷேச அனுமதிகள், சலுகைகள் வழங்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

3) இருவருக்குமே, தவறான நமது மன்றத்துக்கு புறம்பான கருத்துக்கள் உள்ள பதிப்புகள் வெளிவந்தால் அதை வேறு இடங்களுக்கு மாற்றவும், நீக்கவும் உரிமை உள்ளது.

உங்கள் பதிப்புகள் காணாமல் போயிருந்தால், இவர்கள் இருவரிடமும் கேட்டு எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

நன்றி..

ஒவ்வொரு திருத்தத்துக்கும் தனிமடல் நான் தரவேண்டும் என விதி இல்லை.

இக்பால்
09-10-2003, 10:48 AM
இளசு அண்ணா... இந்தப் பதிவில் உங்களிடம் யாரும் தனிமடல்
கேட்கவில்லையே?!!!



உங்கள் பதிப்புகள் காணாமல் போயிருந்தால், இவர்கள் இருவரிடமும் கேட்டு எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.


ஆகையால் நண்பர் நண்பன் உங்களிடம் எங்கே என கேட்டு இருக்கிறார்.
தவறில்லை என நினைக்கிறேன்.

முழுப் பதிவையும் நீக்கும்போது கூட நீங்கள் அனுமதி கேட்டுத்தான்
நீக்குகிறீர்கள். அது கூட தேவையில்லை. ஆனால் உறுப்பினரின் மரியாதை
கருதி அதை நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் பெருந்தன்மை. நன்றி அண்ணா.

Nanban
09-10-2003, 02:47 PM
நான் கூற வந்தது தணிக்கைச் செய்யப் படும், பதிவுகளைப் பற்றியது அல்ல. இளசு அவர்கள், இங்கே காண்க என்று குறிப்பிட்டுக் கொடுத்த சுட்டியின் மூலம் கூட என்னால் காணமுடியவில்லை. மேலும், சற்று நேரம் முன்பு கவிதைப் பக்கத்ற்கு சென்று வந்த பொழுது, பல கவிதைகளைக் காண முடிவதில்லை. செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 4 வரை, உள்ள எந்தக் கவிதைகளையும், காணவில்லை. நட்சத்திரனின் கவிதைத் தொகுப்பு, நண்பர் ராம்பாலுக்கு எழுதிய எனது கவிதை என்று பலவும். இது சென்ஸார் பிரச்னை அல்ல. அதனால் தான், இது எதனால் என்று கேட்டேன். அதே சமயம் செய்திப் பிரிவிற்கு சென்ற பொழுது, மேற்கூறிய தேதிகளில் பதிவு செய்யப்பட்டவைகளைக் காண முடிந்தது. இந்த மாதிரியான பிரச்னைகளை நான் மட்டும் தான் சந்தித்தேனா, அல்லது எல்லோரும் சந்திக்கிறார்களா என்று அறியும் பொருட்டும் கேட்டேன்.

முத்து
09-10-2003, 02:58 PM
[quote]நான் கூற வந்தது தணிக்கைச் செய்யப் படும், பதிவுகளைப் பற்றியது அல்ல. இளசு அவர்கள், இங்கே காண்க என்று குறிப்பிட்டுக் கொடுத்த சுட்டியின் மூலம் கூட என்னால் காணமுடியவில்லை

நண்பன் அவர்களே ... நீங்கள் சொன்ன எல்லாச் சுட்டிகளுக்கும் என்னால் செல்லமுடிகிறது... அங்கு உங்கள் கணினியில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்று நினைக்கிறேன் ...

Nanban
09-10-2003, 03:41 PM
ஆம், அப்படித்தான் நினைக்கிறேன் - நீங்கள் சற்று முன்னர் பதிப்பித்திருந்த பதிவைக் கூட என்னால் காண இயலவில்லை. (நூர் பாத்திமாவில் தான்) 40 பதிவுகள் என்று index பக்கத்தில் போட்டிருந்தாலும், 34 பதிவுகள் தான் இருக்கின்றன. சில சமயங்களில் அவை தெரிகின்றன. சில சமயங்களில், அவை தெரிவதில்லை....... என்ன செய்வது என்றும் புரியவில்லை.........

இளசு
09-10-2003, 04:20 PM
இந்தப் பதிவில் உங்களிடம் யாரும் தனிமடல்
கேட்கவில்லையே?!!!


அடுத்த சந்தேகம் இதுவாய் இருக்கும் என என் அனுமானம்!
என் செயல்களை நியாயப்படுத்த வேண்டிய நிலைமை இப்போது!

இக்பால்
10-10-2003, 10:20 AM
pkiqbal wrote:
இந்தப் பதிவில் உங்களிடம் யாரும் தனிமடல்
கேட்கவில்லையே?!!!



அடுத்த சந்தேகம் இதுவாய் இருக்கும் என என் அனுமானம்!
என் செயல்களை நியாயப்படுத்த வேண்டிய நிலைமை இப்போது!


இளசு அண்ணா... உங்கள் மனதை கவலைப் படுத்த அப்படி சொல்லவில்லை.
அப்படி என் செயல்கள் தவறாக பட்டிருந்தால் என் தவறுகளை பொறுத்துக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.உங்கள் மேல் மிகுந்த பாசம் உண்டு
என்பது உண்மை.
மன்னிப்பு கேட்க வேண்டுமா? -அன்புடன் இளவல்.

poo
10-10-2003, 06:11 PM
நண்பன் அவர்களின் கணனி பிரச்சிணையால் வந்த பதிவுக்கு ஏன் இத்தனை விவாத பதிவுகள்.. மன உளைச்சல்கள்?!..

கொஞ்சம் யோசித்து நிதானித்து ஒவ்வொரு பிரச்சிணைக்கும் எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதை நினைத்து பதிவுகளை பதித்தோமானால் இந்த சச்சரவே இல்லை!!

Nanban
11-10-2003, 05:32 AM
நண்பன் அவர்களின் கணனி பிரச்சிணையால் வந்த பதிவுக்கு ஏன் இத்தனை விவாத பதிவுகள்.. மன உளைச்சல்கள்?!..

கொஞ்சம் யோசித்து நிதானித்து ஒவ்வொரு பிரச்சிணைக்கும் எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதை நினைத்து பதிவுகளை பதித்தோமானால் இந்த சச்சரவே இல்லை!!

தேவையற்ற ஒரு விவாதத்திற்கு, நான் காரணம்மாகி விட்டது வருத்தம் அளிக்கிறது. கணனிப் பிரச்னையா என்று முதலில் நான் தீர்மானித்துக் கொண்டு, பின்னர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். இந்த மொத்தப் பதிவையுமே நீக்கி விட்டால், நன்றாக இருக்கும். ஏனென்றால், எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமே இல்லாமல், மன சஞ்சலங்களை உருவாக்கிய ஒரு பக்கம் என் பெயரில் இருக்க வேண்டாம் என்று தான்........

இக்பால்
11-10-2003, 06:52 AM
நண்பர் நண்பன்... உங்கள் சந்தேகம் நீங்கள் கேட்டது சரிதான்.

ஒரு விசயம் மனிதருக்கு மனிதர் வித்தியாசப் பட்டு, தவறாக

புரிந்து கொள்ளுதல் இவ்வுலகில் இயற்கைதான். ஆகையால்

நீங்கள் மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். எல்லோரும் நல்லவரே.

-அன்புடன் அண்ணா.

இளசு
11-10-2003, 08:04 AM
சில அசந்தர்ப்பச் சூழல்கள்...
"கண்ணு பட்டிருக்குமோ?"
திருஷ்டி கழிஞ்ச்சாச்சு!!

puppy
11-10-2003, 08:08 AM
நல்லவைகள் மட்டுமே நடந்தால் வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ள
முடியாது நண்பனே...பராவாயில்லை இருக்கட்டும்.......
உங்கள் பதிவால் மனசஞ்சலமே இல்லை......
-----------
தேவையற்ற ஒரு விவாதத்திற்கு, நான் காரணம்மாகி விட்டது வருத்தம் அளிக்கிறது. கணனிப் பிரச்னையா என்று முதலில் நான் தீர்மானித்துக் கொண்டு, பின்னர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். இந்த மொத்தப் பதிவையுமே நீக்கி விட்டால், நன்றாக இருக்கும். ஏனென்றால், எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமே இல்லாமல், மன சஞ்சலங்களை உருவாக்கிய ஒரு பக்கம் என் பெயரில் இருக்க வேண்டாம் என்று தான்........[/quote]

poo
11-10-2003, 01:43 PM
நண்பரே உங்களை குறைகூறப்போவதில்லை யாரும்..

மன்னிக்கவும்.. மீண்டும் பேசவேண்டாமென பெரியவர்கள் சொல்லியதால் இந்த பதிவில் நான் முழுக்கு போட்டு வெளியேறிவிடுகிறேன்!

கணணிப்பித்தன்
13-10-2003, 01:57 PM
நான் பதித்த தலப்பயும் அழித்தீர்கள்
அதைப்பற்றி இங்கு எழுத்தியதையும் காணவில்லை
நான் ஒன்றும் ஆபாசமாகவோ அல்லது நீங்கள் விரும்பாத ஈழம் பற்றியோ எழுதவில்லை
இந்திய ஜனாதிபதி கூறியதைத்தான் எழுதினேன்

உங்களைப்பற்றி நன்றாகப் புரிந்து கொண்டேன்

மதியாதோர் வாசல் மிதியாதே

நன்றி
வணக்கம்

இராசகுமாரன்
13-10-2003, 05:04 PM
கணணிப் பித்தன் அவர்களே..
உங்கள் பதிப்பில் குற்றம் இல்லை, அதை தொடர்ந்து கருத்து சொன்னவர்களிடம் தான் தவறு உள்ளது.
இதை நீங்கள் நெறிப்படுத்தும் நமது உதவியாளர்களுக்கு எழுதி இருந்தால் தக்க பதில் அளித்திருப்பார்கள், அல்லது நீங்கள் எனக்கு ஒரு தனிச் செய்தி அனுப்பி இருக்கலாமே?
மனம் வருந்தாமல் தொடர்ந்து பங்கேற்கவும்.

இக்பால்
14-10-2003, 05:12 AM
கணிணிப் பித்தன் அவர்களே... நீங்கள் இந்த மன்றத்தில் இணைந்து

ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகி விட்டது. தொடர்ந்து தங்கள்

பங்கும் இருந்திருக்கிறது. எல்லோருடைய அன்பையும் நீங்கள்

கிடைக்கப் பெற்று இருக்கலாம். நீங்கள் நம் மன்றம் வராமல்

இருக்க முடிவு செய்ய இது தருணம் இல்லை. ஆகவே தலைவர்

கூறிய வகையில் மனம் வருந்தாமல் தொடர்ந்து பங்கேற்கவும்.

எங்கள் கரங்கள் உங்களை நோக்கி.-அன்புடன் அண்ணா.