PDA

View Full Version : உலகின் மிக குள்ள மனிதர்



அறிஞர்
16-10-2009, 02:08 PM
உலகின் மிக குள்ள மனிதர் உயரம் 2 அடி கூட இல்லை நேபாளத்தில் வாமனன்


காத்மாண்டு, அக். 16: நேபாளத்தில் வசிக்கும் 18 வயது இளைஞர்தான் உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்று கருதப்படுகிறது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உயரம் 56 செ.மீ. (2 அடிக்கும் குறைவு).

நேபாள தலைநகர் காத்மாண்டுவைச் சேர்ந்தவர் ககேந்திரா தாபா மாகர். வயது 18. வெடவெட என உயரக் கூடிய இளம் வயதில் இவர் 22 அங்குலம்தான் வளர்ந்துள்ளார். அதாவது, 56 செ.மீ. இது 2 அடிக்கு 4 செ.மீ. குறைவு.

மாகர் 14 வயதில் இருந்தபோதே கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்தார். ஆனால், 18 வயதுக்குள் வேகமான வளர்ச்சிக்கு வாய்ப்பிருப்பதாக கருதி, மாகரின் விண்ணப்பத்தை கின்னஸ் அமைப்பு நிராகரித்து விட்டது.

4 ஆண்டுகள் கழித்து இப்போதும் அதே உயரமே இருப்பதால், கடந்த புதன்கிழமை 18 பூர்த்தியான மாகர், உலகின் மிக குள்ள மனிதர் என்ற சாதனைக்காக கின்னசுக்கு மீண்டும் விண்ணப்பம் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவரது தந்தை ரூப் பகதூர் தாபா கூறுகையில், ÔÔபிறக்கும்போது உள்ளங்கை அளவுதான் இருந்தான். அவனால் எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பெருமை கிடைத்துள்ளது’’ என்றார் அவர்.
மாகரின் நண்பர்கள், அவனுக்கென இணைய தளம் தொடங்கினர். அதன்படி, பிறக்கும்போது அவர் 600 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹீ பிங் பிங் என்ற சீனர் 73 செ.மீ. உயரத்துடன் கின்னசில் இதுவரை இடம் பெற்றுள்ளார்.

நன்றி-தினகரன்

http://dkn.dinakaran.com/16102009/DN_16-10-09_E1_12_02%20CNI.jpg

http://msnbcmedia1.msn.com/j/ap/bb4ec786-0f40-4a86-bc78-4186fac8e396.h2.jpg

http://blog.taragana.com/n/wp-content/uploads/2009/06/smallestlad2.jpg

வியாசன்
16-10-2009, 03:57 PM
நன்றி தல அப்பா அம்மாவுக்கு ஆடைகள் வாங்குகின்ற செலவு குறைவு

அறிஞர்
16-10-2009, 05:32 PM
பொண்ணு தேடறதும் கொஞ்சம்.. கஷ்டம் தான்

வியாசன்
16-10-2009, 05:38 PM
தல என்ன பெரியவர்கள் சொல்கின்றதுபோல் இனிமேலா பிறக்கப்போகின்றார் ஏற்கனவே ஒருத்தி பிறந்திருப்பார். ஆனாலும் இவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கதல்ல.

வானதிதேவி
29-10-2009, 10:37 AM
நினைத்தால் யார் மடியிலும் அமரலாம் பார்த்தீர்களா.ஆனாலும் பாவம் அவருக்கும் மனம் என்று உண்டல்லவா.

anna
29-10-2009, 11:05 AM
காமெடியாக சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லலாம். ஆனால் அவரின் மனநிலை சக மனிதர்கள் போல் அல்லாமல் இருக்கின்றோமே என்று வருத்தப்படுமே அன்றி சந்தோசப்படாது. கின்னஸ் சாதனை என்ற பெருமை இந்த குறையால்தானே வந்தது என சந்தோசப்பட்டு கொள்வர். இது கூட சில நிமிடங்கள் தான் இருக்கும்.

குணமதி
29-10-2009, 01:10 PM
உமர்கயாமின் பானைகள் புனைவான் பாடல்கள் பற்றிய நினைவு வருகிறது.