PDA

View Full Version : ஒபாமா கொண்டாடிய தீபாவளி!



Honeytamil
16-10-2009, 04:41 AM
எதிர்வரும் சனிக்கிழமை உலகெங்கிலும் வாழ் இந்துக்களினால் தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படவிருப்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், இதனை அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா நேற்றைய தினம் தனது வெள்ளைமாளிகையில் வைத்து கொண்டாடியதனை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?

அமெரிக்காவின், முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் காலத்தில் (2003) இருந்தே தீபாவளிப்பண்டிகை இவ்வாறு கொண்டாடப்படுகிறது.எனினும் வெள்ளைமாளிகையில் அல்லாது, அருகில் இருக்கும் கட்டிடத்தில் கொண்டாடப்படுவதுடன்,அமெரிக்க அதிபரும் இதில் கலந்துகொள்ள மாட்டார்.

முதல் முறையாக வெள்ளை மாளிகையிலேயே தீபாவளிக்கொண்டாட்டத்தினை கொண்டாட அனுமதி கொடுத்துள்ளார் ஒபாமா. அதோடு அவரும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

http://i38.tinypic.com/2sju9.jpg

வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இவ்விழா நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் ஆகியோரும் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

எனினும், எளிமையான முறையிலேயே இவ்விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஒபாமா விளக்கினை ஏற்றி வழிபட்டார். விழாவின் இறுதியாக மேரிலாண்டில் உள்ள சிவா-விஷ்ணு கோவில் தலைமை அர்ச்சகர் சிறீ நாராணயணாச்சர் திகலகொட்டே சமஷ்கிருத மந்திரகளை ஓதி நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், வருகிற சனிக்கிழமை இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், மற்றூம் புத்தமதத்தின் ஒரு பிரிவினர் என அமெரிக்காவிலும், உலகம் எங்கும் தீபங்களின் திருவிழாவை கொண்டாடவுள்ளனர். இருளை வென்ற ஒளியின் விழா இது. அறியாமையை அழித்து அறிவு வென்ற நாள் இது.

இது மகிழ்ச்சியான தருணம். அதோடு தேவையானோருக்கு உதவிட நாம் உறுதி பூண்டு கொள்ள வேண்டிய தருணமும் கூட என தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் ஹேப்பி தீபாவளி, சால் முபாரக் என கூறிய போது அனைவரும் கை தட்டினர். பின்னர், அர்ச்சகரின் கையை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தூயவன்
16-10-2009, 09:19 AM
வாவ் நம்ம ஒபாமா வாழ்க :D :D

அறிஞர்
16-10-2009, 02:05 PM
இது வரை எந்த அதிபரும்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதில்லை..

ஒபாமா இந்தியர்களின் மனதை கவர.. முதல் முறையாக கலந்துக் கொண்டுள்ளார்

அன்புரசிகன்
17-10-2009, 12:10 AM
அடுத்த அமெரிக்க அதிபரும் ஒபாமா தான் என்பது புலனாகிறது... நம்மவர்களின் ஓட்டு நிச்சயமாக்கப்படுகிறது போலும்...

வாழ்க ஒபாமா...:sport-smiley-014:

வியாசன்
17-10-2009, 08:10 AM
மெல்ல மெல்ல உள்ளங்களை கவரும் உத்தி வாழ்க ஒபாமா

பரஞ்சோதி
17-10-2009, 08:13 AM
போகிற போக்கை பார்த்தால் ஒபாமா என்னுடைய பிறந்த நாளை கூட வெள்ளை மாளிகையில் கொண்டாடுவார் போல :)

இது ஒரு நல்ல முயற்சி. அன்பு என்றும் நூலில் அனைவரும் கோர்க்கப்படுவோம்.