PDA

View Full Version : பாதி முட்டை...சத்துணவு...?சிவா.ஜி
15-10-2009, 05:53 PM
நான் சில நாட்களுக்கு முன் எழுதிய கதையின் உண்மை நிகழ்வை ஜூனியர்விகடன் படம்போட்டுக் காட்டியுள்ளது. மனிதநேயமுள்ள தலைவர்களால் அமல் படுத்தப்பட்ட இந்த மேலான திட்டம் இப்படிப்பட்ட மனிதாபிமானமேயில்லாத அரசு ஊழியர்களால் சிதைக்கப்படுவதைக் காண சகிக்க முடியவில்லை.

செய்தி

''எங்க ஊரு பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு பாதி முட்டையை மட்டும்தான் கொடுக்குறாங்க. பாதிக்கு பாதி

மோசடியா கணக்கெழுதி காசை அமுக்கிடு றாங்க, சார்...''

http://i194.photobucket.com/albums/z250/sivag/sathunavu.jpg

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைமேடு

ஊராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் அந்த அரை முட்டை அநியாயம்!

பள்ளி அருகே குடியிருக்கும் கண்ணன் என்பவர். ''இந்த பள்ளிக்கூடத்துல 300 குழந்தைகளுக்கு மேல

படிக்கிறாங்க. வாரத்துல மூணு நாளைக்கு முட்டை போடச்சொல்லி அரசாங்கத்துல சொல்லியிருக்காங்க. ஆனா,

எங்க ஊரு பள்ளிக்கூடத்துல மட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரை முட்டைதான் போட்டுக்கிட்டு இருக்காங்க.

இதை ஊர்க்காரங்களே பல தடவை தட்டிக் கேட்டும் பலனில்லை. வாத்தியாருங் கள்ல ஆரம்பிச்சு

ஒவ்வொருத்தரும் ஆளுக்கு மூணு நாலு முட்டைன்னு பங்கு போட்டுக்குற அக்கிரமம் வேறு நடக்குது. ஏழைப்

பசங்களோட வயித்துல அடிக்க எப்படித்தான் மனசு வருதோ?'' என்றார் வேதனையோடு.

மதிய உணவு இடைவேளை வரை நம் அடையாளம் தெரியாதபடி காத்திருந்து, முட்டை எப்படி

வழங்கப்படுகிறது என கவனித்தோம். குழந்தைகள் சாப்பாட்டுக்காகத் தட்டுடன் நிற்க... ஒரு வாளி நிறைய தோல்

உரிக்கப்பட்டு இரண்டாக வெட்டப்பட்ட முட்டைகளை வைத்திருந்தார்கள். அனைத்துக் குழந்தைகளுக் குமே

அரை முட்டைதான் கொடுத்தார்கள். அதனை நாம் படமெடுத்தோம். உடனே ஓடோடி வந்த சத்துணவு

அமைப்பாளர் பாலகிருஷ்ணன், ''யாரைக் கேட்டு படம் எடுக்குறீங்க?'' என பதறினார்.

''போதிய முட்டைகள் எங்களுக்கு கொடுக்கப்படுறது இல்லை. அதனாலதான் எல்லோருக்கும் பகிர்ந்து

கொடுக்கும் விதமா இப்படிப் போடுறோம். எல்லா மாணவர் களுக்கும் முழு முட்டை கொடுக்க நான் என்ன

சொந்தமா கோழிப்பண்ணையா வெச்சிருக்கேன்?'' என்று லாஜிக் பேசினார் பாலகிருஷ்ணன்.

அப்போது அங்கே வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இதையெல்லாம் கண்டுகொள்ளாதவராக நகர்ந்தார்.

போட்டோ ஆதாரங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமாரிடம் விவரம் கொடுத்தோம். அதிர்ந்து போன

கலெக்டர், ''எல்லா ஸ்கூலுக்கும் கேட்குற அளவுக்கு முட்டை கொடுக்க சொல்லியிருக்கோம். இவங்க சப்ளை

போதலைனு எப்படி சொல்றாங்க?'' என்றபடியே தனது உதவியாளரை கூப்பிட்டார். ''அந்த பள்ளிக்கூடத்தோட

சத்துணவு அமைப்பாளரை உடனடியா சஸ்பெண்ட் பண்ணிடுங்க. அந்த இடத்துக்கு வேற ஒருத்தரை உடனடி

யாக டிரான்ஸ்ஃபர் பண்ணி, எல்லா குழந்தைகளுக்கும் முழு முட்டை ஒழுங்கா கிடைக்க வழி பண்ணுங்க!''

என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு நம்மை பார்த்தார்.

உடனடியாக ஆக்ஷன் எடுத்த கலெக்டர் சந்திரகுமாருக்கு ஜுவி பறக்கும் படை சார்பாக நன்றிகளை

சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

(என்னுடைய கதைக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம்தான். கதையில் பாதிப்பேருக்கு முழுமுட்டை கிடைத்தது....நிஜத்தில் எல்லாருக்கும் பாதிமுட்டை கிடைக்கிறது....ம்....)

நன்றி - ஜூனியர் விகடன்

அறிஞர்
15-10-2009, 05:55 PM
நடப்பை கதையாக்கினவர் நீங்கள்..

இன்று நிஜத்திருடர்கள்.... பிடிபட்டனர்....

நன்றி சிவாஜி.

சிவா.ஜி
15-10-2009, 06:07 PM
நன்றி அறிஞர். இன்னும் பலபேரின் திருட்டுகள் வெளிப்படுத்தப்படவேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெருகவேண்டும்.

arun
31-10-2009, 05:00 AM
அரசு என்னவோ செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் சில வழி பிள்ளையார்கள் தான் இன்னும் திருந்தவில்லை அவர்கள் திருத்தப்பட வேண்டும்...

aren
31-10-2009, 08:49 AM
அரசின் திட்டங்கள் இப்படித்தான் இடைத்தரகர்களால் மக்களுக்கு செல்லாமலேயே இடையிலேயே காணாமல் போய்விடுகிறது.

இப்படி ஏமாற்றி சம்பாதித்து என்ன பயன். அதற்கு பதில் உழைத்து சம்பாதித்தால் அதில் ஒரு சந்தோஷம் இருக்கும்.

நேசம்
01-11-2009, 03:52 AM
சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கே.பாவம் எழை குழந்தைகள் உணவு விசயத்தில் கொள்ளையடிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.

வியாசன்
01-11-2009, 03:23 PM
குழந்தைகள் உணவை திருடி தங்களை வளர்த்து கொள்கின்ற ஜடங்கள் . கேவலமாக இல்லையா?

samuthraselvam
02-11-2009, 09:17 AM
அப்படியே நான் படித்த பள்ளிக்கும் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்..... அங்கேயும் இதே கொடுமைதான்....

aren
02-11-2009, 01:53 PM
அப்படியே நான் படித்த பள்ளிக்கும் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்..... அங்கேயும் இதே கொடுமைதான்....

அப்படின்னா இதைப் பற்றி கம்பெளயிண்ட் செய்ய வேண்டியதுதானே.

நாம் சும்மா இருப்பதால்தான் தப்பு செய்பவர்கள் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.

ஜனகன்
02-11-2009, 02:33 PM
எவ்வளவுதான் விளம்பரத்தின் மூலமோ அல்லது வேறுவழியிலோ எடுத்துசொன்னாலும். பிடிங்கி தின்பவர்களுக்கு, அதில் ஒரு சந்தோசம்.


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது.

சிவா.ஜி
06-11-2009, 12:16 PM
பிடுங்கித் தின்றாலும் பரவாயில்லை.....இது கொள்ளை. இந்தமாதிரியான ஆசிரியர்களால் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்?

அரசு ஆசிரியர்கள் என்பவர்கள் இப்போதெல்லாம் வெறும் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக மட்டுமே இருக்கிறார்கள். இவர்களால் கல்விக்கோ, சமுதாயத்துக்கோ எந்த பலனும் இல்லை.