Log in

View Full Version : எம்.பி.க்கள் குழு அறிக்கை



அறிஞர்
15-10-2009, 02:43 PM
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவலநிலையும் கோரிக்கைகளும் : எம்.பி.க்கள் குழு அறிக்கை

சென்னை, அக்.15, 2009 : இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதாகவும், தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கையாக இருப்பதாகவும் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு திரும்பிய டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு தனது ஆய்வறிக்கையை முதலமைச்சர் கருணாநிதியிடம் புதன்கிழமை அளித்தது.

அந்த அறிக்கையின் விவரம் :

'இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அப்படி இல்லாமல் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் சில நாட்களில் பெருமழை அந்த பகுதியில் பெய்யக்கூடும் என்ற நிலைமை இருப்பதால், ஏற்கனவே வசதி இல்லாத இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மழையினால் மேலும் துன்பப்படுவார்கள். மழையினால் ஏற்படும் சேறு, சகதிகளில் குடியிருக்கவும், படுத்து தூங்க வேண்டிய நிலைமை ஏற்படும்பொழுது எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவற்றை எல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை நாங்கள் சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை ஒவ்வொன்றாக அவரிடத்திலே தொகுத்துக் கூறிஇருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி ஆவண செய்வதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை அல்லலுக்கு மத்தியிலே அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எல்லாம் அங்கிருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

அவர்களை வெளியே அனுப்புவதற்கான ஓர் ஆரம்பத்தை தொடங்கி படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எங்களிடம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்ற நம்பிக்கை எங்கள் உள்ளங்களில் துளிர்க்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்கெனவே இந்த முகாம்களில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மேலும் சொல்லெண்ணா துயரத்தைத்தான் ஏற்படுத்தும்.

இலங்கையில் உள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான உதவிகளை தற்போது செய்துகொண்டிருப்பதை விட மேலும் அதிகமாக இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கலந்து பேசப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அந்த வேண்டுகோள் விடவும் தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

அடிப்படை தேவைகளான உணவு, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், வீடு கட்டுவதற்கான உதவிகள், கல்வி வசதி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசிடமிருந்து உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையும் முதல்-அமைச்சர் கருணாநிதி மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தோம்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையையும் விளக்கிக் கூறினோம். அந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோக் பிரசாத்துடைய அணியினருடன் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதித்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீகாந்த், பத்மினி சிதம்பரநாதன், சேனாதிராஜா, சிவசக்தி, ஆனந்தன், முகமது இமாம், பிரேமசந்திரன், பொன்னம்பலம், ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.

பின்னர் ஆனந்த் சங்கரி தலைமையிலான டி.டி.என்.ஏ. அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்தோம். முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போர் முடிந்த பிறகு சகஜ நிலை திரும்பிட இந்தியாவின் முயற்சிதான் ஒரே நம்பிக்கை என்றும் அவர்கள் கூறினார்கள்.

வவுனியாவில் 'மணிக் பண்ணை' என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 8 முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்தோம். அந்த பண்ணை ஏறத்தாழ 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியை 8 முகாம்களாக பிரித்து ஒவ்வொரு முகாமையும் முள்கம்பி வேலிகளால் தடுத்து வீதிகளின் இருபுறமும் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குழாய்கள் மூலமாக குடிநீர் வசதிகள் செய்துகொடுத்துள்ளனர். சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்றபோது ஏராளமான மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள். எங்களை எப்படியாவது முகாம்களில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

பொதுவாக, அவர்களில் பலபேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாமல் குளிக்கவும் மலம் கழிக்கவும் அவர்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிராக மிக நீண்ட வரிசையாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்களை வழியெங்கும் நாங்கள் பார்த்தோம்.

மேலும், ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிக மோசமான நிலையை சந்திக்க வேண்டியது இருக்கும். சதுப்பு நிலக்காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிவிட்டால் அவர்கள் பாடு மிகவும் கொடுமையாக இருக்கும். உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்றுநோய் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும்.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும். அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும் இதுபோன்ற முகாம்கள் மிகக்குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக்கணக்கில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்குவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து அவரிடம் வன்னித் தமிழ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் படும் கொடுமைகளை விவரித்தோம். பருவமழை தொடங்கும் முன்பாக அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அதுபோல, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலையை விளக்கிக் கூறினோம். அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அவர் மிக விளக்கமாக பதில் அளித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைத்து இருப்பதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர், இலங்கை அரசின் மறுகுடியமர்த்தும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீனை சந்தித்துப் பேசினோம். மாலை 3 மணிக்கு இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முகாம்களில் நிவாரணப் பணிகளையும் மறுகுடியமர்த்தும் பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்புக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

தற்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் எல்லை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை நீக்கும் பணியில் இலங்கை ராணுவம் இந்தியா, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் உதவியோடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மறுகுடியமர்த்தும் பணிகளில் நில ஆவணங்களை பரிசீலித்து சரியான நபர்களைத்தான் குடியமர்த்தப்போவதாகவும் எனவே, சிங்களர்களையோ ஏனைய சமூகத்தினர்களையோ குடியமர்த்தும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆவணங்கள், படங்கள் மூலம் விளக்கிய பசில் ராஜபக்சே, ஓரிரு நாட்களில் மறுகுடியமர்த்தும் பணிகளைத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். தொடர்ந்து அவர்கள் முகாம்களிலேயே இருக்க நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தோம். அவர் எங்களுடைய கோரிக்கைகளை விரிவாக கேட்டு உரிய விளக்கங்களை தந்தார்.

மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவதிகளை சந்தித்து வந்தபோதிலும் இலங்கை அரசு அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இலங்கை அரசு இன்னும் 2 வாரத்தில் ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

கடைசியாக, இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவை சந்தித்து இதே பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித் போகுலகாமாவை சந்தித்தபோது அவர் இலங்கை - இந்திய கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ர சிங்கேவையும் சந்தித்துப் பேசினோம்,' என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி - விகடன்

அறிஞர்
15-10-2009, 02:44 PM
நன்றி -விகடன்
இலங்கையில் தமிழர்கள் படும் அவதியை விவரிக்க வார்த்தையில்லை : திருமாவளவன்

சென்னை, அக்.15, 2009 : இலங்கை முகாம்களில் குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயண அனுபவம் குறித்து திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், "ஈழத்தமிழர்களை நேரில் கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக் கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள்.

குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. 5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. "அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்க வில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.

இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக்காலத்துக்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர். உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. "எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்று அவர்கள் கதறி அழுதனர். முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்வார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது," என்றார் திருமாவளவன்

ராஜபக்சேவின் நகைச்சுவை!

தமிழக நாடாளுமன்றக் குழு கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது, "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர், ஆதரவாளர், நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் மறைந்திருப்பார். திருமாவளவனை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம்," என்று கனிமொழியிடம் ராஜபக்சே நகைச்சுவையாக கூறியதாகவும், அதை சிரித்தப்படியே திருமாவளவன் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்து பேட்டியின் போது கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்,'' என்றார் திருமாவளவன்.

அறிஞர்
15-10-2009, 02:46 PM
தமிழர் படும் அவல நிலை மாற இந்திய அரசு விரைவில் உதவி நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்.

இது சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற செய்திகள் மன்றத்தில் வெளியிடவேண்டாம்.

வியாசன்
15-10-2009, 04:38 PM
அறிஞரே இது சம்மந்தப்பட்ட கலைஞரின் பேட்டிக்கும் திருமாவின் பேட்டிக்கும் முரண்பாடு உள்ளதல்லவா? அப்படியானால் திருமாவின் பேட்டி பொய்யானதா?

அறிஞர்
15-10-2009, 05:39 PM
எம்பிக்கள் கொடுத்த அறிக்கையும், திருமாவின் அறிக்கையும் ஒத்துப்போகிறது.
-----------
கலைஞர் பதவியில் இருப்பவர்... சில செய்திகளை உள்ளவண்ணமாக தர இயலாது. பதவியில் இருக்கும்பொழுது ஆளும் அரசை அணுசரித்து செல்லவேண்டும். அதனால் மழுப்பலாக பதில் கூறுவர்.... (கேட்டால்... அரசியல் சாணக்கியம் என்பர்)

கேள்வி - முகாம்களில் தமிழர்கள் நிலை என்ன?

பதில் - கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.

வியாசன்
15-10-2009, 06:39 PM
தல இது ராஜபக்சவுக்கு பிரச்சாரமாக போகப்போகின்றது. உங்கள் மனச்சாட்சிப்படி பதில் சொல்லுங்கள்.

1 வேறு யாரையும் முகாமிற்குள் அனுமதிக்க மறுத்தவர்கள் ஏன் இவர்களை அனுமதிக்கின்றார்கள்? முகாமினுள் அப்படி எதுவும் இல்லையென்றால் யாரும் பார்க்கலாமல்லவா?

2 இது ராஜபக்சவுக்கு இந்தியா செய்துகொடுக்கின்ற ஒரு ஏற்பாடு இனிமேல் வேறுநாடுகள் ஏதாவது முகாமைப்பற்றி பேசினால் இந்த அறிக்கையை காண்பித்த தப்பிக்க முடியுமல்லவா?

3 காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கின்ற இந்திய அரசு ஏன் எங்கள்மீது போரை திணித்தது?

நன்றி

அமரன்
16-10-2009, 05:55 AM
திருமாவும் மற்ற உறுப்பினர்களும் அடைப்க்கப்பட்டிருக்கும் மக்களின் அவலத்தை தகுந்தபடி வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். முகாம்களில் மக்கள் சுகுசாக வாழ்வதாக குழுவில் எவரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆரம்பம் நல்லதொரு முடிவைத் தரட்டும். அதை நோக்கியே எங்கள் பார்வை இருக்கட்டும். சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதையும் தேவை இல்லாமல் கதைப்பதையும் தவிர்த்து ஆக வேண்டிய நல்லதைப் பாருங்கள்.

வியாசன்
16-10-2009, 08:26 AM
திருமாவும் மற்ற உறுப்பினர்களும் அடைப்க்கப்பட்டிருக்கும் மக்களின் அவலத்தை தகுந்தபடி வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். முகாம்களில் மக்கள் சுகுசாக வாழ்வதாக குழுவில் எவரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆரம்பம் நல்லதொரு முடிவைத் தரட்டும். அதை நோக்கியே எங்கள் பார்வை இருக்கட்டும். சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதையும் தேவை இல்லாமல் கதைப்பதையும் தவிர்த்து ஆக வேண்டிய நல்லதைப் பாருங்கள்.

அமரன் முதல்வர் சற்று அசெளகரியம் என்று குறிப்பிட்டது போதாதா? அவர் இப்போது ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் ஆகிவிட்டார் போலும். அவருக்கு தன்னலம் சார்ந்த அரசியல்தான் தெரியும்.

ஆதி
16-10-2009, 09:46 AM
அமரன் முதல்வர் சற்று அசெளகரியம் என்று குறிப்பிட்டது போதாதா? அவர் இப்போது ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் ஆகிவிட்டார் போலும். அவருக்கு தன்னலம் சார்ந்த அரசியல்தான் தெரியும்.*

உங்களின் இந்த கேள்விக்கு அறிஞர் அண்ணாவின் இந்த பதிவில் பதில் இருக்கிறது வியாசன்..

கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.


எந்த விடயமும் குறையின்றி நிகழ்வதில்லை.. நிகழும் சம்பவத்தில் நமக்கு சாதகமாக எதாவது நிகழுமேயானால் அதனை ஏற்போம்..

வியாசன்
16-10-2009, 11:15 AM
*

உங்களின் இந்த கேள்விக்கு அறிஞர் அண்ணாவின் இந்த பதிவில் பதில் இருக்கிறது வியாசன்..

கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.


எந்த விடயமும் குறையின்றி நிகழ்வதில்லை.. நிகழும் சம்பவத்தில் நமக்கு சாதகமாக எதாவது நிகழுமேயானால் அதனை ஏற்போம்..

ஆதி மலசலம் கழிப்பதற்கு மணித்தியாலக்கணக்கில் காத்திருப்பது சற்றுவசதி குறைவு மூன்றுநாளைக்கு 20லீற்றர் தண்ணீர் சற்று வசதிகுறைவு

இதைவிட 15 நாளைக்குள் 58000 ஆயிரம் பேரை விடுதலைசெய்வதாக கருணாநிதி கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம் அப்படி எதுமே இல்லையென்று குறிப்பிட்டுள்ளது.

அவர் நாலுமணித்தியால உண்ணாவிரதம் இருந்தவராயிற்றே .தானே போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறி முடித்துவிட்டு சென்றவர் வேறு என்ன செய்வார்.

அமரன்
16-10-2009, 08:26 PM
இந்த விஜயத்தின் விளைவாக, எமது சொந்தங்களை எங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்ற யாழ்ப்பாணத்தமிழர்களின் விண்ணப்பங்கள் தூசுதட்டப்பட்டு இன்று ஒரு தொகுதி மக்கள் முகாமிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்ந்து மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்ப்பட அழுத்தங்களைப் பிரயோகித்தால் நலம். நாம் குறைசொல்லிக், குழப்பம் விளைவித்து, நலக்கேடு ஏற்படுத்தாமல் இருப்போம்.

பரஞ்சோதி
17-10-2009, 08:38 AM
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

கலைஞர் வீட்டில் ஒரு 100 கட்சி ஆட்கள் போய் தங்கி பார்க்கட்டும், அவருக்கு அது வசதி குறைவா என்று தெரியும்.

நம் வீட்டில் 4 பேர் வந்தாலே நம் வசதிகளை இழக்கிறோம், இலட்சம் மக்களை அடிமை போல் ஒரு கூண்டுக்குள் அடைத்து, வாழ சொன்னால் அது எப்படிங்க வசதியாக இருக்க முடியும், அதிலும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளம் வயதானவர்கள், குழந்தைகள், நினைக்கவே கொடுமையாக இருக்குது.

இனியாவது அம்மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும், இனி ஒரு முறை இம்மாதிரியான வாழ்க்கை யாருக்கும் அமைய வேண்டாம் என்பதே இந்த தீபாவளி நாளில் இறைவனுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

aren
17-10-2009, 09:33 AM
அவர் நாலுமணித்தியால உண்ணாவிரதம் இருந்தவராயிற்றே .தானே போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறி முடித்துவிட்டு சென்றவர் வேறு என்ன செய்வார்.

வியாசன் அவர்களே தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றே விரும்புகிறது. ஆனால் இலங்கை இன்னொரு தனி நாடு, அங்கே வேண்டுகோள் மட்டுமே விட முடியும், நாம் நேரடியாகப்போய் காரியத்தில் இறங்கமுடியாது, அது இன்னொரு நாட்டுடன் போர் புரிவதற்கு சமமாக கருதப்படும்.

நிச்சயம் உங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும். கொஞ்சம் காத்திருங்கள். இந்த விஜயம் பல விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதுவரைக்கும் தமிழக அரசாங்கத்தை திட்டுவதை தவிறுங்கள்.

வியாசன்
18-10-2009, 07:06 AM
வியாசன் அவர்களே தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றே விரும்புகிறது. ஆனால் இலங்கை இன்னொரு தனி நாடு, அங்கே வேண்டுகோள் மட்டுமே விட முடியும், நாம் நேரடியாகப்போய் காரியத்தில் இறங்கமுடியாது, அது இன்னொரு நாட்டுடன் போர் புரிவதற்கு சமமாக கருதப்படும்.

நிச்சயம் உங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும். கொஞ்சம் காத்திருங்கள். இந்த விஜயம் பல விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதுவரைக்கும் தமிழக அரசாங்கத்தை திட்டுவதை தவிறுங்கள்.

ஆரென் இது ஒரு திட்டமிட்ட இந்திய அரசின் செயற்பாடு. ஜி.எஸ்.பி எனப்படும் ஐரோப்பிய வரிச்சலுகையை தடைசெய்யப்போவதாக ஐரோப்பியநாடுகள் எச்சரிக்கின்றது. அதை பெற்றுக்கொள்ள இந்திய சோனியா அரசு உதவிசெய்கின்றது. அதற்கு தமிழக எம்பிக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு குடும்பநலம் சார்ந்து செயற்படுவதால் அதனிடமிருந்து தமிழர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கமாட்டாது. பொறுத்திருந்து பாருங்கள்.

வியாசன்
18-10-2009, 07:13 AM
இந்த விஜயத்தின் விளைவாக, எமது சொந்தங்களை எங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்ற யாழ்ப்பாணத்தமிழர்களின் விண்ணப்பங்கள் தூசுதட்டப்பட்டு இன்று ஒரு தொகுதி மக்கள் முகாமிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்ந்து மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்ப்பட அழுத்தங்களைப் பிரயோகித்தால் நலம். நாம் குறைசொல்லிக், குழப்பம் விளைவித்து, நலக்கேடு ஏற்படுத்தாமல் இருப்போம்.

நண்பரே நான் குறைசொல்லவில்லை. விடுதலை செய்வதாக கூறி ஒரு முகாமிலிருந்து கூட்டிச்சென்று வேறு முகாம்களில் வைத்திருக்கின்றார்கள். வவுனியா முகாமிலிருந்து அழைத்துச்சென்று யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களில் வைத்திருக்கின்றார்கள். அதனால்தான் செஞ்சிலுவைச்சங்கம் போன்றவற்றை அனுமதிக்கின்றார்கள் இல்லை. அறிக்கைகளை கண்டு நீங்களும் ஏமாந்துவிடுகின்றீர்கள். ஏன் உண்ணாவரதம் இருந்த கலைஞர் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்றார் நீங்களும் அதை நம்பினீர்கள். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை அதை நீங்கள் யோசிக்கவில்லையா?

aren
18-10-2009, 07:18 AM
வியாசன், உங்களுக்கு இருக்கும் பிரச்சனை அனைவருக்கும் புரிகிறது. ஆனால் நீங்கள் வெறுமனே தமிழக அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் திட்டிக்கொண்டிருப்பதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. ஆகையால் எந்த விதமாக முயற்சிகள் செய்தாலும் அதை முதலில் வரவேற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வியாசன்
18-10-2009, 07:20 AM
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

கலைஞர் வீட்டில் ஒரு 100 கட்சி ஆட்கள் போய் தங்கி பார்க்கட்டும், அவருக்கு அது வசதி குறைவா என்று தெரியும்.

நம் வீட்டில் 4 பேர் வந்தாலே நம் வசதிகளை இழக்கிறோம், இலட்சம் மக்களை அடிமை போல் ஒரு கூண்டுக்குள் அடைத்து, வாழ சொன்னால் அது எப்படிங்க வசதியாக இருக்க முடியும், அதிலும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளம் வயதானவர்கள், குழந்தைகள், நினைக்கவே கொடுமையாக இருக்குது.

இனியாவது அம்மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும், இனி ஒரு முறை இம்மாதிரியான வாழ்க்கை யாருக்கும் அமைய வேண்டாம் என்பதே இந்த தீபாவளி நாளில் இறைவனுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

பரஞ்சோதி உங்களைப்போன்றோர்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டும். இங்கு நான் வீணாக வம்புக்காக இந்த பதிவுகளை பதிக்கவில்லை. தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் . தமிழகத்தில் பல ஊடகங்கள் (சண் ரீவி கலைஞர் ரீவி ) போன்றவை எமது செய்திகளை சொல்வதில்லை. தமிழக அரசும் பலவிடயங்களை மறைத்து மக்களுக்கு தெரியவிடாமல் செய்கின்றது. அவலங்களை அரசியலாக்குகின்றது. மன்றத்தில் பலர் இதைப்பற்றிய செய்திகள் தேவையற்றதாக கருதுகின்றனர். உங்களைப்பொன்ற ஒருசிலரையாவது
இந்த செய்திகள் அடைகின்றதல்லவா அதற்காகத்தான் இணைக்கின்றேன்.

வியாசன்
18-10-2009, 07:47 AM
இதை பாருங்கள் கீழ்த்தரமான பிரச்சார உத்தியை

http://athirvu.com/phpnews/images/KALI-POSTER.jpg

அமரன்
18-10-2009, 07:53 AM
நண்பரே நான் குறைசொல்லவில்லை. விடுதலை செய்வதாக கூறி ஒரு முகாமிலிருந்து கூட்டிச்சென்று வேறு முகாம்களில் வைத்திருக்கின்றார்கள். வவுனியா முகாமிலிருந்து அழைத்துச்சென்று யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களில் வைத்திருக்கின்றார்கள். அதனால்தான் செஞ்சிலுவைச்சங்கம் போன்றவற்றை அனுமதிக்கின்றார்கள் இல்லை. அறிக்கைகளை கண்டு நீங்களும் ஏமாந்துவிடுகின்றீர்கள். ஏன் உண்ணாவரதம் இருந்த கலைஞர் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்றார் நீங்களும் அதை நம்பினீர்கள். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை அதை நீங்கள் யோசிக்கவில்லையா?

வியாசன்..

எந்த விடயத்திலும் என் சய சிந்தனையை உபயோகித்து விட்டுத்தான் கதைப்பேன். மற்றவர்கள் ஆய்வுகள், அறிக்கைகள்ம் தொலைச் செய்திகளை அப்படியே நம்பி அவற்ற்றில் நாண்ண்டு கொண்டு நிற்பதில்லை.

அனுப்பப்பட்டு விட்டனர் என்று நான் எழுதிய கணத்தில் யாழ்ப்பாணத்துடன் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன். முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அப்போது மீள் குடியேற்றப்பட்ட ஒருத்தருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். தம்முடன் சேர்த்து 2000 பேர் அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

இதில் தொய்வு ஏற்படாமல் செய்ய யாரால் எல்லாம் முடியுமோ அவரை எல்லாம் நாம் நாட வேண்டிய சூழ்நிலை. எங்கள் வீம்பும், வரட்டுக் கௌரவமும் பழைய கரள் கதையும் அங்கிருக்கும் மக்களைப் பாதிக்கும் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகாம் மக்களின் விடுதலையிலிருந்துதான் தாய விடுதலை துளிர்க்கும் என்பது என் நம்பிக்கை. அப்படி இல்லை. அவர்கள் கஷ்டப்பட்டால்தான் எல்லாருக்கும் விடுவு என்று நினைக்கும் கூட்டத்தில் நீங்கள் இல்லை என்பதுவும் என் நம்பிக்கை.

இன்னொன்றை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் சொல்லும் நியாயமான, சரியான, நல்ல கருத்துகள் பல நிராகரிக்கப்படுவது சொல்லும் முறையில் தவறிருப்பதாலும்தான்.

எல்லாத்திலும் சந்தேகித்து அரசியல் சாயம் பூசும் உங்களிடம் ஒரு கேள்வி.

முகாம் மக்களை எப்படி விடுவிப்பது....? நழுவாமல் பதில் சொல்லுங்கள். ஆரோக்கியமாக அலசுவோம்.

வியாசன்
18-10-2009, 08:17 AM
வியாசன்..





எல்லாத்திலும் சந்தேகித்து அரசியல் சாயம் பூசும் உங்களிடம் ஒரு கேள்வி.

முகாம் மக்களை எப்படி விடுவிப்பது....? நழுவாமல் பதில் சொல்லுங்கள். ஆரோக்கியமாக அலசுவோம்.


ஆம் அமரன் கொஞ்சப்பேரை அவர்கள் விடுதலை செய்தது உண்மைதான். ஆனால் அடுத்தடுத்தமுறை விடுதலை செய்யப்பட்டதாக கூறி அவர்களை கொண்டு சென்று நாவற்குழி முகாமில் வைத்திருக்கின்றார்கள். இதையும் நீங்கள் உங்கள் உறவினர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்களை பார்த்தீர்கள்தானே. எதையும் அவர்கள் பிரச்சாரத்துக்காகதான் செய்வார்கள். ஒன்றும் நடக்காமலேயே விடுதலை பெற்றுக் கொடுத்ததாக பாராட்டு. கொஞ்சமும் கூச்சமில்லாமல் இருக்க எப்படி கலைஞரால் முடிகின்றது.

உங்கள் கேள்விக்கு எனது பதில் தயக்கம் இல்லாமலும் யோசனை இல்லாமலும் சொல்லக்கூடியது

நாம் போராட வேண்டும். எம்மீது பாசம் கொண்ட தமிழக மக்களையும் இணைத்து ஐரோப்பிய நாடுகளில் அதன் பாராளுமன்றங்கள் முன்பாக அமைதியான தொடர்போராட்டங்கள் நடாத்தவேண்டும் . எம்கையே எமக்குதவி. எமக்குதவ வரும் எந்த பிசாசையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அது சீனாவாக இருந்தாலும் சரி பாகிஸ்தானாக இருந்தாலும் சரி , இஸ்ரேலாக இருந்தாலும் சரி இதுதான் எமக்குகந்த வழி . தமிழக விளம்பர அரசியல்வாதிகளால் எமக்கு எதுவும் கிடைக்காது.

அமரன்
18-10-2009, 08:31 AM
திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நன்றி வியாசன். இப்படித்தான் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று பொதிந்திருக்கும். உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

உங்கள் அம்மாவை கண்டபடி திட்டி விட்டு உங்களிடம் உதவி கேட்டால் செய்வீர்களா..? எம்மீது பாசங்கொண்ட தமிழக மக்களின் உறவுக் கயிறு எங்கள் வார்த்தை வாள்களால் வெட்டப்படாதிருக்க வேண்டும். அதை நாங்கள் செய்கிறோமா....?


விளம்பர விரும்பி அரசியல்வாதிகள்.. அவர்களாலும் எங்களுக்கு ஆதாயம் உள்ளது. அதை ஏன் நாங்கள் பயன்படுத்திக்கக் கூடாது. அரசியல் வியாபாராத்தில் அவர்களுக்கும் இலாபம்.. எங்களுக்கும் இலாபம்.. சரியாத்தானே போயிட்டிருக்கு..

அண்மைக்கால ஐரோப்பிய அறவழிப்போராட்டங்களில் எத்தனை பேர் கலந்து கொள்ள்கிறார்கள்...?

எங்கள் எழுத்துகளும் கருத்துகளும் உறங்கும் எங்கள் புலம்பெயர் உறவுகளைத் தட்டி எழுப்பட்ட உபயோகப்படட்டும். போராட்டக் களத்துக்கு கட்டி இழுத்து வரட்டும்.

என்ன.. எம் மக்களை நோக்கி எங்கள் பேனாக்களைத் திருப்புவோமா.

ஐரோப்பாக்களில் நடத்தும் போராட்டங்கள் கூடச் சாத்தியமில்ல வியாசரே.. இலங்கை மக்களும் போரடவேண்டும். உயிரைத் துச்சமென மிதித்து அச்சமில்லை எனப்பாடி உச்சப் போர்க்குணத்தை அவர்களும் காட்ட வேண்டும். காட்ட வைக்க மை நிரப்புவோமா..

வியாசன்
18-10-2009, 08:59 AM
திமுகவினர்

ஐரோப்பாக்களில் நடத்தும் போராட்டங்கள் கூடச் சாத்தியமில்ல வியாசரே.. இலங்கை மக்களும் போரடவேண்டும். உயிரைத் துச்சமென மிதித்து அச்சமில்லை எனப்பாடி உச்சப் போர்க்குணத்தை அவர்களும் காட்ட வேண்டும். காட்ட வைக்க மை நிரப்புவோமா..

அமரன் அந்த மக்கள் வதை முகாமிலிருந்தே போராட ஆரம்பித்துவிட்டார்கள். அதில் ஒருவர் கொல்லப்பட்டதையும் அறிவீர்கள். போஸ்ட்டர் ஒட்டியதற்கு நன்றி சொல்கின்றீர்கள் தமிழ உறவுகள் பலர் இதை நம்பி கலைஞரால் முகாமிலிருந்த மக்கள் விடுதலைபெற்றுவிட்டதாக நம்பியிருந்துவிடுவார்கள். நாம் தமிழக மக்களை எப்போதும் நம்பவேண்டும். தன்னுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பதவிபெறுவதற்காக டில்லிக்கு சென்ற கலைஞர் பாவப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக தந்தி மட்டுமே கொடுத்தார்.

அமரன்
18-10-2009, 09:49 AM
போஸ்டருக்கு மேலே நீங்கள் முதலில் எழுதியது கலைஞரின் பிரச்சார உத்தி. அதை மாற்றினேன். அடுத்த பதிவில் நீங்கள் சொன்னது திமுகவினர் பிரச்சார உத்தி என்று. அதுக்காக நன்றி சொன்னேன் நண்பரே. எதுக்கெடுத்தாலும் கலைஞரை நோக்கிக் கை நீட்டுவதை விட்டு விடும் அளவுக்கு புரிதல் கொண்டு விட்டீர்கள்ள் என்று நினைத்து நன்றி சொன்னேன் நண்பரே. இப்படித்தான் பலதும் சிலதும்..


நாங்கள் நம்பி இருக்க வேண்டிய அந்த மக்கள் நம்பும் தலைவனை என்ன செய்ய வேண்டும்....? கண்டபடி திட்ட வேண்டுமா...? அல்லது தப்பு செய்கிறார் என நினைத்தால் அதைப் பக்குவமாக எடுத்துக் கூற வேண்டுமா..? கொஞ்சம் யோசனை செய்வோமா..

பானை உடைந்தால் சோற்றுக்கும் நட்டமில்லை. பானைக்கும் நட்டமில்லை. பசியுடன் இருப்பவனுக்குத்தான் நட்டம். புரிந்து நடப்போம்.

நான் திருப்பிய பாதையில் திரியைக் கொண்டு செல்ல நாட்டமில்லாத போக்கு உங்கள் பதிலில் தெறிக்கிறது வியாசரே.

உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் கூறலாம். எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே கதைக்கும் கெட்ட பழக்கம் எனக்கு உள்ளதே அதுக்குக் காரணம்.

அமரன்
18-10-2009, 09:56 AM
ஏன் உண்ணாவரதம் இருந்த கலைஞர் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்றார் நீங்களும் அதை நம்பினீர்கள். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை அதை நீங்கள் யோசிக்கவில்லையா?

இதுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது.

அந்தப் பொழுதுகளில் வாழிட உண்ணாநிலைப் போராட்டப் பந்தலில் இரவுபகலாக இருந்ததால் கலைஞரின் உண்ணாவிரத விவகாரம் சில நாட்கள் கழித்தே எனக்குத் தெரிந்தது. அது தொடர்பான என் நிலலப்பாட்டை இதே மன்றத்தில் பதிவு செய்திருக்கிறேன். நேரமிருந்தால் படியுங்கள் அதையும் இன்னும் பலதையும்..

வியாசன்
18-10-2009, 12:40 PM
நன்றி அமரன் நானும் எனது நாட்டில் வீதி வீதியாய் போராட்டத்தில் இணைந்து நின்றேன். ஒன்றும் நடக்காவிட்டாலும் எமது இனத்துக்காக குரல்கொடுத்த திருப்தியாவது இருக்கின்றதல்லவா. நாம் மெளனமாக இருந்திருந்தால் மனச்சாட்சியே கொன்று விடும். உங்கள் பதிவு இடம்பெற்ற திரியை இணைத்துவிடுங்கள் பார்க்கின்றேன்.