PDA

View Full Version : பணம் பண்ணலாம் வாங்கsrimariselvam
15-10-2009, 01:17 PM
பங்குச்சந்தையில் புதிதாக கணக்கு துவக்கி தினவர்த்தகம் செய்வோருக்கு உதவ காத்திருக்கிறோம். மன்றத்திலுள்ள ப்ரைவேட் மெசேஜ் வசதியில் தொடர்பு கொள்ளவும்.

srimariselvam
15-10-2009, 01:23 PM
பங்குச்சந்தையில் கணக்கு துவங்கி எளியமுறையில் பணமீட்டலாம். உரிய ஆலோசனைகள் வழங்குகிறோம்.
விபரங்களுக்கு மன்றத்திலுள்ள ப்ரைவேட் மெசேஜ் வழியாக தொடர்புகொள்ளவும்.

அறிஞர்
15-10-2009, 02:39 PM
எது பற்றி சொல்ல விரும்புகிறீர்கள்... என்ன என்ன செய்யவேண்டும் என பொதுவில் சொல்லுங்கள்.

மன்றத்தில் சிலருக்கு இது உதவினால் நல்லது.

பணம் பண்ணும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் வியாபாரத்திரிகள் மன்றத்தில் அனுமதிப்பல்லை.. என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பிரம்மத்ராஜா
19-10-2009, 05:02 AM
பங்குச்சந்தையில் கணக்கு துவங்கி எளியமுறையில் பணமீட்டலாம். உரிய ஆலோசனைகள் வழங்குகிறோம்.
விபரங்களுக்கு மன்றத்திலுள்ள ப்ரைவேட் மெசேஜ் வழியாக தொடர்புகொள்ளவும்.மன்றத்திலுள்ள பிரைவேட் மெசேஜ் வசதி எது எப்படி தொடர்பு கொள்ளவேண்டும் எனக்கு சரியா தெரியவில்லை மட்டுமல்ல பொதுவிலும் சொல்லலாமே?

ஜெயாஸ்தா
19-10-2009, 01:08 PM
ஆமாம்... மாரிச்செல்வம் சார்...! இங்கே பொதுவிலேயே கொடுங்களேன்... ரொம்ப பயனுள்ளதாய் இருக்கும்...!

aren
19-10-2009, 03:38 PM
இது உங்களுடைய சொந்த வியாபார காரணங்களுக்கென்றால் இந்த தளத்தை உபயோகப்படுத்தாதீர்கள்.

praveen
19-10-2009, 04:05 PM
இப்படித்தான் ஒருவர் ஒரு பாரத்திலே பதிந்திருந்தார், நானும் பிரைவேட் மெசேஜ் கொடுத்திருந்தேன், அவர் தந்தார் பாருங்கள் தொகை வாரியாக சேவைகள். இண்ட்ரா டே டிப்ஸ் என்றால் 3000, சார்ட் டேம் இன்வஸ்ட்மென்ட் டிப்ஸ் என்றால் 2000, ஆப்சன் அண்ட் ப்யூட்சர் என்றால் ஒரு தொகை(மறந்துட்டேன் :)).

இதிலே கடைசியாக ஒரு வார்த்தை வேறு, நீங்கள் தரும் பணத்தை ஒரு சில நாளில் டிரேடிங் செய்து சம்பாதித்து விடலாம் என்று.

எனக்கு இந்த டிப்ஸ் விற்கும் கோமான்கள் பற்றி பெரிய சந்தேகம் ரெம்ப நாளாகவே எனக்கு உண்டு, இந்த டிப்ஸ் படி அவர்கள் பங்குவனிகம் செய்து கோடி கோடியாக சம்பாதிக்கலாமே, ஏன் இப்படி அந்த விதைநெல்லை நமக்கு விற்கிறார்கள் என்று. உணமையிலே டிப்ஸ் வாங்கி பணம் சம்பாதித்தவர் எவரும் இல்லை என்றே அறிகிறேன். லாபத்தை விட நஸ்டமே அதிகம். நாலுமுறை சொற்ப லாபம் வந்தால் ஒரே முறை பலத்த நஸ்டம் வந்து முதலுக்கே மோசம் ஆகி விடும். இந்த பங்குவனிகத்தில் தான் விற்றாலும் கமிசன் வாங்கினாலும் கமிசன் (மற்றும் வரிகள்) எனவே கூட்டிக்கழித்து பார்த்தால் கடைசியில் திருவோடு தான்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு ஒருவர், ஆங்கிலத்தில் TIP என்பதை திருப்பி போட்டால் PIT என்று வரும் என்று புலம்பியிருந்ததை ஒரு தளத்தில் பார்த்தேன். பின்னர் அதன் அர்த்தம் என்ன என்று தேடிப்பார்த்ததில் பிட் என்றால் மிருகங்களை பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழி என்று கண்டேன்.

நகைச்சுவைக்காக:
கோவில்காளை என்ற திரைப்படத்திலே, கவுண்டமனி மற்றும் செந்தில் இருவரும் தனித்தனியே சென்று உள் அறையிலே அடி வாங்குவது போல, இருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் கொடுப்பதை பொதுவிலே கொடுங்கள் புண்ணியமாக போகும். தனியே அழைத்து தருவது வேண்டாம் அய்யா.

aren
19-10-2009, 04:09 PM
சரியாகச் சொன்னீர்கள் பிரவீன். எனக்குத் தெரிந்து இந்தமாதிரியான மக்களிடம் சென்றால் முதலுக்கே மோசமாகிவிடும்.

நான் வங்கிகளீல் மியூட்சுவர் பஃண்டில் பணத்தைப் போடும்பொழுது இண்டெக்ஸ் பஃண்டிலேயே அதிகம் முதலீடு செய்வேன், காரணம் அனைத்து பஃண்டு மேலாளர்களும் இந்த இண்டெக்ஸை கருத்தில் கொண்டே தங்கள் பஃண்டை நடத்துகிறார்கள். எதுக்கு இவங்களுக்கு அதிகமாக கமிஷன் கொடுக்கவேண்டும், நேராகவே இண்டெக்ஸ் பஃண்டில் பணத்தைப் போட்டால் கமிஷன் தொகையும் குறைவு.

வியாசன்
20-10-2009, 02:41 PM
நகைச்சுவைக்காக:
கோவில்காளை என்ற திரைப்படத்திலே, கவுண்டமனி மற்றும் செந்தில் இருவரும் தனித்தனியே சென்று உள் அறையிலே அடி வாங்குவது போல, இருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் கொடுப்பதை பொதுவிலே கொடுங்கள் புண்ணியமாக போகும். தனியே அழைத்து தருவது வேண்டாம் அய்யா.

என்ன பிரவீன் தம்பி நல்லா அடிவாங்கியிருக்கின்றீர்கள் போலும். தனிமடலுக்கு வரச்சொன்னாலே பயந்து கொள்கின்றீர்கள். நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள். என்னால் சிரிப்பை அடக்கிகொள்ள முடியவில்லை. நன்றி

உங்கள் முன்ஜாக்கிரதை ஏதோ வாங்கிக்கட்டின அனுபவமாக படுகின்றது.

aren
20-10-2009, 05:49 PM
உங்கள் முன்ஜாக்கிரதை ஏதோ வாங்கிக்கட்டின அனுபவமாக படுகின்றது.

அப்படின்னா, இது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சியா. பிரவீன் எங்களிடம் சொல்லவேயில்ல இதைப் பற்றி.

srimariselvam
21-10-2009, 02:21 PM
இனியவர்களுக்கு, வணக்கம். இது புதைகுழியோ, பிடிகுழியோ அதில் அருமை இதயங்களை சிக்கவைப்பதற்கான முயற்சியோ இல்லை.

பங்குச்சந்தையின் நிலவரங்களை துல்லியமாக கணித்துக்கூறக்கூடிய சாப்ட்வேர் நண்பரால் விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு நண்பர் செபியால் அங்கீகரிக்கப்பட்ட சப் புரோக்கர்.
உங்களில் யாருக்கேனும் சந்தையில் பணம் பண்ணலாம் என்ற ஆர்வம் இருப்பினும் இதோ இங்கேதான் என்று வழிசொல்வதற்கான முயற்சியே இப்பதிவு.
பான்கார்டு பெறுவதற்காக அணில் உதவிசெய்யலாம். மற்றபடி இப்பதிவால் பணம் செய்யும் விருப்பம் ஏதும் எனக்கில்லை.

அறிஞர்
21-10-2009, 02:29 PM
உதவி செய்ய நினைப்பதற்கு நன்றி...

யாராவது ஒருவர் தவறு செய்தால்.. மன்றத்தின் பெயரை பாதிக்கும் என்பதாலே இங்கு பலவற்றை நேரடியாக/தனி மடல் வாயிலாக அனுமதிப்பதில்லை.

தாங்கள் கூறும் விபரங்களை... ஒரு பிளாக்ஸ்பாட்டில் அல்லது இணைய தளத்தில் ஏற்றிவிட்டு... இங்கு இணைப்பை கொடுங்கள்.

விருப்பமுள்ளோர் அங்கு பார்த்துக்கொள்ளட்டும்.

மன்றத்தின் வாயிலாக ஏமாற்றப்பட்டோம் என யாரும் சொல்லிவிடக்கூடாது.. என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

praveen
21-10-2009, 02:31 PM
அப்படின்னா, இது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சியா. பிரவீன் எங்களிடம் சொல்லவேயில்ல இதைப் பற்றி.

அவருக்கு தான் வேற வேலை இல்லை என்றால் ஆரென் நீங்களுமா?. என் முதல் பதிவை முதல் வரியை முழுதும் திரும்ப படியுங்கள்.பங்குச்சந்தையின் நிலவரங்களை துல்லியமாக கணித்துக்கூறக்கூடிய சாப்ட்வேர் நண்பரால் விற்பனை செய்யப்படுகிறது.


தாங்கள் கூறும் விபரங்களை... ஒரு பிளாக்ஸ்பாட்டில் அல்லது இணைய தளத்தில் ஏற்றிவிட்டு... இங்கு இணைப்பை கொடுங்கள்.

திரி ஆரம்பித்த நண்பரே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த மாதிரி விற்பனை (உங்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டாலும்) விவரங்களை இங்கே பொதுவிலோ அல்லது தனிமடலிலோ தர வேண்டாம். பின்னர் அதனை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்திய யாருக்காவது, அவர் பணம் பங்கு வனிகத்தால் போனால் அறிஞர் சொன்னது போல மன்றத்திற்கு தான் அவப்பெயர்.

இலவச மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் அல்லது சுட்டி இங்கே தாருங்கள்.

aren
21-10-2009, 03:31 PM
இந்த மாதிரியான வியாபார சம்பந்தமான திரிகளை இங்கே தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

srimariselvam
22-10-2009, 11:33 AM
நண்பர்களுக்கு நன்றி.
இப்பதிவுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

விகடன்
26-10-2009, 06:39 PM
உங்களைக் குற்றம் சொல்லவில்லை செல்வம்.
பிரவீன் பொதுவில்த்தான் சொன்னார்.
முக்கியமாக இந்த விடயத்தை பொதுவில் எழுதும்போது, தருவிக்கப்பட்ட தகவலிற்கேற்ப பயந்தரு அறிவுரை வழங்குவோரும் மன்றத்திலேயே கிடைக்கின்றனர். எல்லோருடைய ஆலோசனைப்படி எடுக்கும் முடிவு, தீர விசாரித்து எடுத்த முடிவாக அமையும். ஆகையால்த்தான் தனிமடலின்றி பொதுவில் தரச்சொல்லியிருக்கிறார்கள்.

srimariselvam
21-11-2009, 02:08 PM
நன்றி, விராடன்.

somasundar2007
21-08-2011, 01:13 PM
கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள் மூலம் தாங்களே பங்கு வர்த்தகதில் நல்ல டெக்னிக்கல் அட்வைசர் ஆகலாம். All the best. இணைப்பு:
www.chartnexus.com

பால்ராஜ்
20-09-2011, 04:35 AM
தலைப்பே சற்று தவறாக இருக்கிறது??
பணம் பண்ண முடியுமா என்ன?????????