Log in

View Full Version : கபீர் அவர்களின் கவிதைகள்(தோஹா)



rajeshkrv
14-10-2009, 07:37 PM
கபீர் அவர்களின் கவிதைகள்(தோஹா)

Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye
Jo Munn Khoja Apnaa, To Mujhse Bura Naa Koye


புரா ஜோ தேகன் மைன் சலா புரா நா மில்ய கோயி
ஜோ மன் கோஜா ஆப்னா, முஜ்சே புரா நா கோயி



கபீர் சொல்வது இது தான். கெட்டவர்களை தேடி அலைந்தேன் யாரும் கிடைக்கவில்லை. என்னுள்ளே சென்று பார்த்தேன் என்னைவிட கெட்டவன்/ள் யாரும் இல்லை

aren
14-10-2009, 07:44 PM
என்ன அப்பட்டமான உண்மை இந்தக் கவிதையில் இருக்கிறது.

நம்மைவிட மட்டமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? வாவ்!!! அருமையான கவிதை வரிகள்.

rajeshkrv
15-10-2009, 10:38 PM
Bada Hua To Kya Hua, Jaise Ped Khajoor
Panthi Ko Chaya Nahin, Phal Laage Atidoor

பனை மரம் உயர்ந்து வளர்ந்திருந்தாலும் கீழே இருப்பவர்களுக்கு நிழல் தருவதில்லை பழம் தருவது என்பது கேள்விக்குறி. அதேபோல் நீ வாழ்க்கையில் எவ்வளாவு உயர்ந்தாலும் பிறருக்கு உதவாமலோ, நேசிக்காமலோ இருந்தால் எந்தவித பயனுமில்லை

அன்புரசிகன்
16-10-2009, 04:32 AM
திரைக்கு பின்னால் போல் நமக்குள் என்று ஒன்று இருப்பதை உணர்த்துகிறார் கபீர். சுவாரசியத்துடன் கூடிய சாட்டையடிபோல் உள்ளது...

உண்மைகள் கசக்கும் என்பதற்கு கபீர் அவர்களின் கவிதை உதாரணமோ...

கூத்தரசன்
07-08-2010, 11:35 AM
அருமை! அருமை!


கூத்தன்

அமரன்
07-08-2010, 02:01 PM
உண்மை..

நன்றி!

கலையரசி
09-08-2010, 02:03 PM
கெட்டவர்களை தேடி அலைந்தேன் யாரும் கிடைக்கவில்லை. என்னுள்ளே சென்று பார்த்தேன் என்னைவிட கெட்டவன்/ள் யாரும் இல்லை

உன்னையே நீ உணர்ந்து கொள் எனும் தத்துவத்தை வேறுவிதமாக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அருமையான தத்துவம். பகிர்வுக்கு நன்றி.