PDA

View Full Version : கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் ......



அருள்
14-10-2009, 04:54 AM
தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு

சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..

வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!

வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!

-யுகபாரதி

கா.ரமேஷ்
14-10-2009, 05:01 AM
ஆஹா எவ்வளவு அழகான வரிகள்.... யுகபாரதிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்...


பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்...

samuthraselvam
14-10-2009, 05:35 AM
ஒவ்வொரு பெண்ணும் கணவனிடம் எதிர் பார்க்கும் வார்த்தைகளே கவிஞர் வரிகளாக தொடுத்திருக்கிறார்... வாழ்த்துக்கள்.....பகிர்ந்த அருளுக்கும்.....

மதி நீங்களும் இப்படி ஒரு கவிதை எழுதி துண்டு பிரசுரம் போல ஏதாவது ஒரு கல்லூரி முன் நின்று அனைவருக்கும் வழங்குங்கள்..... கண்டிப்பா சீக்கிரம் ஏதாவது நடக்கும்...

அன்புரசிகன்
14-10-2009, 05:56 AM
அழகான வரிகள்...

பகிர்வுக்கு நன்றிகள்...



காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு





மதி நீங்களும் இப்படி ஒரு கவிதை எழுதி துண்டு பிரசுரம் போல ஏதாவது ஒரு கல்லூரி முன் நின்று அனைவருக்கும் வழங்குங்கள்..... கண்டிப்பா சீக்கிரம் ஏதாவது நடக்கும்...
அப்புறம் பிறக்கிற பிள்ளைக்கு எத்தனை பெயர் தான் வைக்கிறது...

samuthraselvam
14-10-2009, 06:20 AM
அப்புறம் பிறக்கிற பிள்ளைக்கு எத்தனை பெயர் தான் வைக்கிறது...

சுமார் எத்தனை ஆளுங்கன்னு சொல்லுங்க... நான் கணக்கு போட்டு எத்தனை குழந்தைக்கு எத்தனை பெயர்ன்னு சொல்லுறேன்...:icon_rollout::icon_rollout:

ஜனகன்
14-10-2009, 07:08 AM
யுகபாரதியின் மனைவி கொடுத்து வைத்தவள்

மன்மதன்
14-10-2009, 10:02 AM
யுகபாரதிக்கு சென்ற வருடம் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

அருள்
14-10-2009, 12:28 PM
ஆம் நண்பரே ஆனாலும் நான் கவிதை படித்தது போன வாரம் தான்.

பா.ராஜேஷ்
14-10-2009, 04:33 PM
அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி !

aren
14-10-2009, 04:39 PM
கடைசி வரி கண்களில் நீர் வரவழைக்கிறது. ஒரு கவிஞனின் நிலையை அழகாக எடுத்துச் சொல்கிறது அந்த வரிகள்.

lenram80
14-10-2009, 05:40 PM
வாவ்! அழகான கவிதை!!!!

அறிஞர்
14-10-2009, 06:01 PM
அழகான வரிகள்....
கவிதை போல் வாழ்க்கையில் அவர் நடந்தால்...
அவர் குடும்பத்தில் இன்பமே..

யாழ்_அகத்தியன்
27-10-2009, 01:26 PM
அழகான கவிதை வாழ்த்துக்கள் யுகபாரதி
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்