PDA

View Full Version : எழுதுவதை விட படிப்பது எனக்கு பிடித்த விஷயம்umakarthick
13-10-2009, 02:57 PM
எழுதுவதை விட படிப்பது எனக்கு பிடித்த விஷயம் ..அப்படி படித்த சில1.

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.”

2.

எனக்கு நிகழ்ந்த எல்லாமும்
உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’
என்ற வரிகளில் ஆரம்பித்த
என் அடுத்த கவிதையை
எப்படித் தொடர்வதென்ற
யோசனையில் இருக்கிறேன் நான்.
எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...3.

நேற்று என் அப்பாவுக்கு
ஸ்போக்கன் இந்தி!
இன்று எனக்கு
ஸ்போக்கன் இங்கிலீஷ்!
நாளை என் மகளுக்கு
ஸ்போக்கன் தமிழ்!
http://www.parisalkaaran.com

aren
13-10-2009, 03:34 PM
நன்றாக உள்ளது.

ஸ்போக்கன் தமிழ் என்ன செய்வது. அப்படியாகிவிட்டது.

பா.ராஜேஷ்
13-10-2009, 05:38 PM
ஸ்போக்கன் தமிழ்!!!!!????

நாட்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன!!!???

ஆ.ஜெயஸ்ரீ
13-10-2009, 09:04 PM
இன்றைய காலகட்டத்தில் தமிழ் என்பது தவறான ஒன்றாக நம் இளைய தலைமுறையிடம் தோன்றி இருப்பது வேதனைக்குஉரியது .

ஜனகன்
13-10-2009, 10:45 PM
நீங்கள் சுட்டதை வாசித்தேன் நன்றாக உள்ளது
பெற்றோர் வீ ட்டில் தாரளமாக தமிழ் கதைத்தால்
ஸ்போக்கன் தமிழ் அற்றுப்போகும் இளைய தலைமுறைகளிடமிருந்து:)

அறிஞர்
13-10-2009, 11:03 PM
அருமையான வரிகள்.. நன்றி அன்பரே.

நன்றாக உள்ளது.

ஸ்போக்கன் தமிழ் என்ன செய்வது. அப்படியாகிவிட்டது.
உங்க வீட்டுல பயிற்சி நடக்குதா....

எங்க வீட்டுல பேச்சுத்தமிழ் இப்பொழுதைக்கு ஓகே 75% தமிழ், 25% ஆங்கிலம் என்ற ரீதியில் செல்கிறது...

அறிஞர்
13-10-2009, 11:05 PM
ஸ்போக்கன் தமிழ்!!!!!????

நாட்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன!!!???


இன்றைய காலகட்டத்தில் தமிழ் என்பது தவறான ஒன்றாக நம் இளைய தலைமுறையிடம் தோன்றி இருப்பது வேதனைக்குஉரியது .
வாழும் இடம் சூழ்நிலையை பொறுத்தது தான் எல்லாம்.
வீட்டில் ஒரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

aren
14-10-2009, 01:52 AM
அருமையான வரிகள்.. நன்றி அன்பரே.

உங்க வீட்டுல பயிற்சி நடக்குதா....

எங்க வீட்டுல பேச்சுத்தமிழ் இப்பொழுதைக்கு ஓகே 75% தமிழ், 25% ஆங்கிலம் என்ற ரீதியில் செல்கிறது...

இல்லை அறிஞரே. எங்கள் வீட்டில் 0% தமிழ் 100% ஆங்கிலம் என்ற ஈதியிலேயே இருக்கிறது. ஆனால் நாங்கள் மட்டும் தமிழில் பேசுகிறோம், பதில் ஆங்கிலத்திலேயே வருகிறது.

சில நாட்கள் தமிழில் மட்டுமே பதில் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் மனைவி தமிழில் பேசுவார், என் மகள் முடிந்தவரை பதிலை தமிழில் சொல்லப்பார்க்கிறாள். இன்னும் நிறைய பிராக்டிஸ் வேண்டும்.

நேசம்
14-10-2009, 05:42 AM
இப்போதே தமிழ்கிங்ஸ் வந்து விட்டது.அயல் நாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தகளுடன் தமிழிழ் உறையாட வேண்டும்

கா.ரமேஷ்
14-10-2009, 05:48 AM
நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்....

//நேற்று என் அப்பாவுக்கு
ஸ்போக்கன் இந்தி!
இன்று எனக்கு
ஸ்போக்கன் இங்கிலீஷ்!
நாளை என் மகளுக்கு
ஸ்போக்கன் தமிழ்!
///
ம்ம்ம் என்ன சொல்வது...?

அருள்
14-10-2009, 06:00 AM
ஆம்மா, ஸ்போக்கன் தமிழ்!- க்கு என்ன தமிழில்?

samuthraselvam
14-10-2009, 07:05 AM
அருமையான பகிர்வு... நன்றி உமாகார்த்திக்... சமுத்ரா கொஞ்சம் பரவாயில்லை... 50 % தமிழ், 25 % ஆங்கிலம், 25 % தெலுங்கு..... தெலுங்கு பக்கத்து வீட்டுக்காரங்க மொழி....

சின்ன வயசு குழந்தைகளுக்கு தான் எத்தனை நினைவாற்றல்..!!!

அதை பெற்றவர்கள் தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும்... குட்டிகொடுத்து கெடுக்கக்கூடாது....

ஒரு முறை எனது மகள் "அம்மா... நான் உன்னையும் அப்பாவையும் எப்படி கூப்பிடுவேன் தெரியுமா? அப்பாவை டாடின்னு உன்னை மம்மின்னு" என்றாள். அதற்கு நான் " அப்படியெல்லாம் இங்லீஷில் கூப்பிடக்கூடாதுடி செல்லம்.. அம்மா, அப்பான்னு தமிழில் கூப்பிடு" என்று கொஞ்சிக்கொண்டே சொன்னேன்... அத்துடன் சரி அவள் பின் பற்றுகிறாள்...

இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் நம் பிள்ளைகளை அன்பாக சொல்லிக்கொடுத்து தோள் தட்டினால் போதும், நாளைக்கு இவன்/இவள் என் பிள்ளை என்று நாம் மார்தட்டலாம்......

ஜனகன்
14-10-2009, 08:01 AM
எல்லோருடைய பகிர்வையும் வாசிக்கும் போது
தமிழுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை இட்டு
சந்தோசம். ஆனால் ஒரு தீவில் தமிழ் அழிகிறதே
வேதனையாக உள்ளது:(

umakarthick
14-10-2009, 04:37 PM
எல்லாருடைய பதிலுக்கும் நன்றி ..எல்லா புகழும் பரிசல் காரனுக்கே