PDA

View Full Version : ஒரு கவிதை ஒரு காமெடி



umakarthick
13-10-2009, 01:56 PM
இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..

மணிரத்னம்:

மணி: ”காபி”

சுஹாசினி: ”நேரமாகும்”

”எனக்கு வேணும். இப்ப வேணும்..”

”முடியாது”

”ஏன்?”

”முடியாதுன்னா முடியாது”

”அதான் ஏன்?”

”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”

”நிறுத்து”

”எதை..எதை நிறுத்தறது?”

”சாம்பாரை நிறுத்து..”

”ஏன்?”

”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”

---------------------------------------------------------



ரமீஸ் ராஜா ஒரு முறை நோ-பாலில் பிடிபட்டார். அம்பயர் கூறிய நோ-பால் அறிவிப்பை சரியாக கேட்காமல் பெவிலியன் சென்று விட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆகியதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்தார்.



என்னிடம் பெரிதாக
-------------------
'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

http://parisalkaaran.blogspot.com/

aren
13-10-2009, 02:47 PM
நல்லகாலம் அடுத்த தடவை மணிரத்னம் வீட்டிற்கு போகும்போது காப்பி சாப்பிடாமல் இருப்பதே நலம்.

பா.ராஜேஷ்
13-10-2009, 04:36 PM
நல்லதொரு காமெடி... நல்ல கவிதை. நன்றி !

ஆ.ஜெயஸ்ரீ
13-10-2009, 08:07 PM
கஷ்டங்களை மறைமுகமாக சொல்லும் ஊடகங்கள் சிறுகதை . அதுவும் ஒரு கலையே.

ஜனகன்
13-10-2009, 08:53 PM
எப்படி மனரத்தினம் வீட்டுக்குள் போனீர்கள்?
அப்படியே புட்டுப்புட்டு வைக்கின்றீர்கள்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்

கா.ரமேஷ்
14-10-2009, 04:50 AM
//////என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.
///////


அருமை....

TamilPura
04-11-2009, 12:56 PM
நல்ல சிரிப்பான கற்பனை.

தமிழ்புறா.