PDA

View Full Version : வசந்த விழா

கீதம்
13-10-2009, 09:24 AM
வசந்தகால வருகைப்பதிவேட்டில்
பெயர் பதித்துச் செல்கின்றன,
பாடும் பறவைகளும்,
பூத்துக் குலுங்கும் மரங்களும்!

பறவைகளில் இத்தனை ரகமா?
அவற்றின் பாடல்களில்
இத்தனை ராகமா?
ஏங்கவைக்கின்றன,
இன்னிசை கீதங்கள்!

எங்கே போயிருந்தன,
இவை யாவும்?
எப்படி வாய்மூடிக்கிடந்தன,
இத்தனைக் காலம்?

காலத்தின் கையில் சிக்கிய
வானவில் ஒன்று
சின்னாபின்னமாகிச்
சிதறிக்கிடக்கிறது
காணுமிடமெல்லாம்!

அவசரமாய் ஆடைமாற்றும்
அழகுப்பெண்ணைப்போல
மரங்கள் யாவும்
பச்சைச் சீருடை களைந்து
பூக்களால் நெய்த
புத்தாடை போர்த்து நிற்க,
தானே நிற்கத் தடுமாறும்
புற்களின் தலையிலும்
பூவாலே கிரீடங்கள்!

மாயவித்தைக்காரன் ஒருவன்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைக்குழலிலிருந்து
பூங்கொத்து தருவிப்பது போல்
ஒரு தருவிலிருந்து
ஓராயிரம் மலர்ச்செண்டுகள்!

காலம் பார்த்து காதல் செய்ய,
காத்திருந்த புட்களும், பூக்களும்
வசந்தத்தின் வாயிலில் நுழைந்து
வண்ணவித்தை புரிவதை
வாய் கொண்டு நான் வர்ணிக்க இயலுமோ?
கைக்கொண்டு நான் கவி புனைய இயலுமோ?

வண்ண மலர்கள் யாவும்
கண்ணுக்கு விருந்தளிக்க,
அற்புதப் பறவைகளின் கானம்
காதுக்கு இதமளிக்க,
சுவாசிக்கும் காற்று மட்டும்
சுமையாகிப் போனதே,
மகரந்தத் துகள்களும்
தென்றலோடு உறவாடி
மயங்கித் திரிவதாலே!

அமரன்
16-10-2009, 09:26 PM
பாவேந்தன் கூதிர்காலம். இந்தப் பாவேந்துவதோ வசந்தகால மகரந்தம்.

ஒவ்வாமைத் தொல்லை பெருந்தொல்லைதான்.

எத்தனை கோடி நிறைவிருந்தாலும் ஏதோ ஒரு கோடியில் இருக்கும் குறை உறுத்தும் கண்ணில் விழும்போது. அதைத் தத்ரூபமாகச் சித்தரித்திருப்பது அழகு.

அழகுக்கு அழகூட்டுவது போல் ஆங்காங்கே பூசப்பட்டிருக்கும் கற்பனைத் தூரிகை பூசிய வார்த்தை வர்ணங்கள்.

இலை உதிர்காலத்தில் நீந்தியபடி இந்த வசந்தகாலத்தை உறிஞ்சிக் குடித்தேன்.

இனிமை கீதம்.

ஜனகன்
16-10-2009, 09:42 PM
நல்ல அருமையான கவிதை தந்திருக்கிறிர்கள் கீதம்.
மேலும் படையுங்கள் உங்கள் எண்ணங்களையும், ஆக்கங்களையும்
நன்றி

கீதம்
23-10-2009, 09:51 PM

பாராட்டுகளுக்கு நன்றி அமரன் அவர்களே. ஒவ்வாமையால் அவதிப்படுவரால் வசந்தகாலத்தை அனுபவிக்க இயலாமல்போவது துரதிஷ்டமே.

கீதம்
23-10-2009, 09:53 PM
நல்ல அருமையான கவிதை தந்திருக்கிறிர்கள் கீதம்.
மேலும் படையுங்கள் உங்கள் எண்ணங்களையும், ஆக்கங்களையும்
நன்றி

மிக்க நன்றி ஜனகன் அவர்களே.

ஜனகன்
23-10-2009, 09:57 PM
வாழ்த்துக்கு நன்றி கீதம்:lachen001:

கலையரசி
24-10-2009, 02:45 PM
கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் வசந்தத்தைத் தங்கள் கவிதை கண் முன்னே நிறுத்துகிறது. அருமை!

வியாசன்
24-10-2009, 06:19 PM
காலம் பார்த்து காதல் செய்ய,
காத்திருந்த புட்களும், பூக்களும்
வசந்தத்தின் வாயிலில் நுழைந்து
வண்ணவித்தை புரிவதை

காலமாற்றத்தை நயத்துடன் சொன்ன வரிகள் வார்த்தைகள் உண்மையில் கவிதைக்கு மிகவும் சிறப்பை தருகின்றது.

உங்களைப்போன்றோர் சினிமாவுக்கு பாடல் எழுத சென்றால் காயடிக்கப்பட்டுவிடுவீர்கள். பாராட்டுக்கள்

கீதம்
04-11-2009, 08:46 PM
கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் வசந்தத்தைத் தங்கள் கவிதை கண் முன்னே நிறுத்துகிறது. அருமை!

நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
04-11-2009, 08:47 PM
காலம் பார்த்து காதல் செய்ய,
காத்திருந்த புட்களும், பூக்களும்
வசந்தத்தின் வாயிலில் நுழைந்து
வண்ணவித்தை புரிவதை

காலமாற்றத்தை நயத்துடன் சொன்ன வரிகள் வார்த்தைகள் உண்மையில் கவிதைக்கு மிகவும் சிறப்பை தருகின்றது.

உங்களைப்போன்றோர் சினிமாவுக்கு பாடல் எழுத சென்றால் காயடிக்கப்பட்டுவிடுவீர்கள். பாராட்டுக்கள்

பாராட்டுக்கு நன்றி வியாசன் அவர்களே.

கா.ரமேஷ்
05-11-2009, 03:43 AM
வசந்த காலத்தின் இனிமையை போலவே கவிதையும் இனிமை..

கீதம்
09-11-2009, 02:58 AM
வசந்த காலத்தின் இனிமையை போலவே கவிதையும் இனிமை..

நன்றி கா.ரமேஷ் அவர்களே.

இளசு
16-11-2009, 08:40 PM
மிக ரம்மியமான கவிதை...

வண்ண ஓவியம் போல் அழகான கவிதை..

அமரன் சிலாகித்த pollen allergy என்னையும் கவர்ந்தது..

இதை விஞ்சி இன்னொன்றும் மனதை நிறைத்தது -

''தானே நிற்கத் தடுமாறும்
புல்லின் சிரசிலும்
பூச்சுமை''

மிகப் புதிய கற்பனைக்காட்சி...

பாராட்டுகள் கீதம்!

கீதம்
17-11-2009, 03:54 AM
மிக ரம்மியமான கவிதை...

வண்ண ஓவியம் போல் அழகான கவிதை..

அமரன் சிலாகித்த pollen allergy என்னையும் கவர்ந்தது..

இதை விஞ்சி இன்னொன்றும் மனதை நிறைத்தது -

''தானே நிற்கத் தடுமாறும்
புல்லின் சிரசிலும்
பூச்சுமை''

மிகப் புதிய கற்பனைக்காட்சி...

பாராட்டுகள் கீதம்!

தங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.