PDA

View Full Version : தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களின் மர்மம் என்ன?



வியாசன்
12-10-2009, 08:34 AM
தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களின் மர்மம் என்ன? – காந்தன்

சிறீலங்கா கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் காயப்படுத்தப்படுவதும் மீன்கள் கொள்ளையிடப்பட்டு துரத்தப்படுவதும் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதும் தமிழகத்தில் வழக்கமான செய்திகளாகி விட்டன.

சிறீலங்காயில் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு வடக்கு கிழக்கு கடலில் அமுல்ப்படுத்தப்பட்டு இருந்த மீன்பிடித் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசே தெரிவித்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்கடையின் தாக்குதல்கள் தெரிவிக்கும் செய்திதான் என்ன?

இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்காக இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைவிட பலமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு மூலமாக சிறீலங்கா கடற்படையானது இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுதல் மீது நடவடிக்கை எடுப்பதானது இந்திய மீனவர்களை விடுதலைப்புலிகளாக கருதுவதாலா அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆயுத வினியோகம் செய்பவர்களாக கருதுவதாலா அல்லது சிறீலங்கா கடல் வளத்தில் சிறீலங்கா கடற்படை கொண்டுள்ள அக்கறையிலா?

விடுதலைப்புலிகளின் ஆயுதவழிப்போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக சிறீலங்கா அரசே அறிவித்து விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பினை பேணுவதாக இதுவரை காலமும் மீன்பிடிக்கான முழுமையான தடை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த சிறீலங்கா தமிழ் மீனவர்களுக்கே மீன்பிடித்தடை நீக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தலானது சாத்தியப்பாடானதொன்றல்ல. அத்துடன் சிறீலங்கா கடல்வளத்தில் சிறீலங்காக்கடற்படை கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்திய மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவதென்பது஼br />?் சாத்தியமானதொன்றல்ல.

கடலெல்லைகள் தரை எல்லைகளைப் போன்று கோடுகளால் பிரிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதும் மீனவர்கள் மீன்கள் அதிகமாக மீன் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கடலெல்லைகளை குறிப்பிட்ட அளவு கடப்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இவ்வாறாக மீனவர்கள் கடல் எல்லை தாண்டும் சந்தர்ப்பங்களில் இரண்டு நாட்டின் மீனவர்கள் தமக்கிடையேயான புரிந்துணர்வு அடிப்படையில் அவற்றிற்கு தீர்வு காண்பது வழக்கமாகும்.

அவ்வாறில்லையெனில் குறிப்பிட்ட நாட்டின் கடற்படையினால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதே வழக்கம். இந்திய பாகிஸ்தான் கடற்பரப்புகளின் பதட்டமான கடலெல்லையில் கூட இடம்பெறாத வகையில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவதும் ஏன் என்ற கேள்வி எல்லோருக்கும் ஏற்படலாம்.

இதைவிட முக்கியமான ஒரு விடயத்தினை நாம் இங்கு நோக்க வேண்டியுள்ளது. சிறீலங்கா கடற்படையின் இந்திய மீனவர்கள் மீதான இந்த அத்துமீறிய தாக்குதல்களை தடுக்கக்கூடிய வல்லமை இந்திய மத்திய அரசுக்கு இல்லையா என்பதே அது.

போரியல் ரீதியாக சிறீலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து நின்ற இந்தியா தமது மக்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களை நிறுத்தும்படி தெரிவிப்பதை விடுத்து கச்சதீவு பிரதேசம் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான பிரதேசம் இல்லை என்று தெரிவிப்பதானது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இந்திய மத்திய அரசு துணை போவதையே தெளிவுபடுத்துகின்றது.

தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களுக்கு இந்திய மத்திய அரசு துணைபோகக் காரணம் என்ன?

விடுதலைப்புலிகளுக்கெதிரான போரை நடாத்தியது சிறீலங்கா. முண்டு கொடுத்தது இந்தியா. கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்கள். வதைக்கப்படுகிறவர்கள் தமிழ்மக்கள். தமது சொந்த இன மக்கள் இன்னல் கண்டு துடிதுடித்து பொங்கியெழுந்தவர்கள் தமிழக தமிழர்கள்.

இங்கேதான் இந்திய மத்திய அரசினதும் சிறீலங்காக் கடற்படையினதும் கூட்டு நடவடிக்கை ஆரம்பமாகிறது. சமையல் எரிவாயுவுக்கு விலை கூட்டும்போது கூட பொய்யாகவேனும் ஒரு யுத்த வெற்றியை தெரிவித்து மக்களின் மனதை மாற்றும் தந்திரம் சிறீலங்கா அரசுக்கு பழகிப்போன ஒன்று. அதே பெரிய கோட்டை சிறிய கோடாக்கும் தந்திரமே தமிழக மீனவர்கள் மீதான இந்தக் கடற்படை தாக்குதலும்.

தமிழக தமிழ்மக்களின் பொங்கியெழலானது சிறீலங்காயின் இன விரோத போக்கிற்கெதிராக சர்வதேச ரீதியில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதும் இது இந்திய அனுசரணையுடன் நடாத்தப்பட்ட சிறீலங்காயின் போரில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் இந்தியாவும் சிறீலங்காயும் நன்கு உணர்ந்துள்ளன.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெறும் நாட்களையும் அதன் வீரியத்தினையும் ஆராய்து பார்க்கும்போது தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்று ஈழத்தமிழர் இன்னல்கள் எப்போதெல்லாம் தமிழகத்தில் பெரிய செய்தியாக வருகிறதோ, ஈழத்தமிழருக்காக எப்போதெல்லாம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கின்றதோ, ஈழத்தமிழருக்காக எப்பொழுதெல்லாம் குரல்கள் வலுப்பெறுகிறதோ அப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தி தலைப்புச் செய்தியாக வரும்படி நடாத்தப்படுவதே சிறீலங்காக் கடற்படையின் தாக்குதல்கள்.

அதிலும் வேதனையானது சிறீலங்காயின் ஈழத்தமிழர் மீதான வெற்றிக்காக ஈழத்தமிழர் விரோதப்போக்கு கொண்ட இந்திய மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டதே இந்திய தமிழக மீனவர்களின் மீதான கொலைகளும் கொள்ளையடிப்புக்களும் நிர்வாணப்படுத்தல்களும். இது தொடரும்.

http://www.meenagam.org/?p=13143