PDA

View Full Version : உதவி தேவை



kalaiselvan2
11-10-2009, 04:08 PM
என் நண்பர் தன்னுடைய மகளுக்கு புகழினியா எனப் பெயர் சூட்ட உள்ளார். அந்தப் பெயரை ஆங்கிலத்தில் சரியாக எவ்வாறு எழுதுவது என யாராவது கூறுங்களேன்.

வியாசன்
12-10-2009, 01:30 PM
pugazhiniya

ஜனகன்
12-10-2009, 01:35 PM
pugalineeya

வானதிதேவி
12-10-2009, 01:37 PM
Pugazhiniyaa என்றும் எழுதலாம் தவரில்லை.

சரண்யா
12-10-2009, 01:41 PM
Pughazhiniyaa
Pukhazhiniyaa

அன்புரசிகன்
12-10-2009, 11:47 PM
இதுக்கு சாதாரணமாக அவர் பிறந்த திகதி நட்சத்திரம் (இது தான் பிரதானம்) பார்த்து ஆங்கிலத்தில் எது சரி என எழுதிப்பார்த்து வைக்கலாம்.

பொதுவாக இறுதியில் யம் யா என்று வரும் போது yam yaa என்று போடுவது குறைவு. am aa என்று போடுவர். உதாரணமாக Subramaniam. அதற்காக Subramaniyam என்று எழுதுவது தவறென்று இல்லை. ஆங்கிலத்தில் சொல்லும் போது சுப்ரமணிஅம் என்று சொல்வது போல் தான் இருக்கும்... சுப்பிரமணியம் என்பது அடித்து சொல்வது போல் இருக்கும்.

உங்களுடைய பெயரில் புக என்பதற்கு g அல்லது k அல்லது h போடுவதற்கு நட்சத்திரத்தினை பார்த்து போடலாம்.

ழி ற்கு zhi தான் சிறந்தது. மீதி நம் மன்ற நண்பர்களின் பரிந்துரை படி செய்யுங்கள்...

நட்சத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றால் எப்படியும் எழுதலாம்... நம் மன்றில் தாமரைஅண்ணாவையும் அணுகலாமே...

aren
13-10-2009, 05:38 AM
வியாசன் அவர்கள் சொன்னதுதான் சரி என்று எனக்குப்படுகிறது.

அன்பு சொல்வதுபோல் நட்சத்திரங்கள் மேல் நம்பிக்கையிருந்தால் நம் தாமரை அவர்களுக்கு ஒரு தனிமடலிடுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார் என்றே நினைக்கிறேன்.

kalaiselvan2
13-10-2009, 02:34 PM
நன்றி தோழர்களே மிக்க நன்றி என் நண்பருக்காக நான் வினவிய வினாவிந்கு சிரமெடுத்து பதில் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

kalaiselvan2
13-10-2009, 02:35 PM
நண்பர்கள் அன்புரசிகன், ஆரேன் கூறியது போல் என் நண்பணிடம் அவரின் குழந்தையின் பிறந்த நட்சத்திரம் பற்றி கேட்டுவிட்டு தாமரை அவர்களை தொடர்புகொள்கிறேன். நன்றி நண்பர்களே

வியாசன்
13-10-2009, 05:18 PM
நன்றி தோழர்களே மிக்க நன்றி என் நண்பருக்காக நான் வினவிய வினாவிந்கு சிரமெடுத்து பதில் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நண்பரே உங்களுக்கு நண்பர் என்றால் அவர் எங்களுக்கும் நண்பர்தான் நண்பராகலாம். எந்தவித பிரச்சனையுமில்லை. இதை உங்கள் நண்பரிடம் கூறுங்கள் இங்கு அழைத்து வாருங்கள்

குணமதி
10-11-2009, 04:57 AM
Pugazhiniyaa

பா.ராஜேஷ்
14-11-2009, 03:27 PM
முடிவு என்ன ஆயிற்று என்றே சொல்லவில்லையே!!