PDA

View Full Version : இனி வரும் தீபாவளி....!!சிவா.ஜி
10-10-2009, 12:54 PM
இனிப்பையுண்ட வாயில்
தித்திப்பை தேக்கிக்கொண்டு
மத்தாப்பைக் கொளுத்தி
மலர்ந்து சிரித்ததுண்டு.....

ஊரெங்கும் உலா வந்து
உறவுகளின் இல்லம் புகுந்து
உள்ளதையெல்லாம் உண்டதுண்டு
அன்று தீபாவளி கொண்டாடியதுண்டு...

நேற்றய நரக நாட்களில்
தினம் தினம் தீபாவளி....
ஊரெங்கும் வெடிச்சத்தம்
சுற்றி நின்று போடும்
சந்தோஷக் கூச்சலில்லை....
வலிதாங்கா கூக்குரலுக்கு ஓய்ச்சலில்லை.....

ஊரெங்கும் உலா வந்து
உறவுகளின் சடலம் தேடி
ஓய்ந்து அழுததுண்டு....
ஒன்றுமற்று போனதுண்டு

நரகாசுரர்கள் கிருஷ்ணர்களை
வதம் செய்த
வித்தியாச தீபாவளி
கோடித்துணி போர்த்தி
கொண்டாடிய தீபாவளி
வீடெங்கும் ஒளிவீசிய தீபங்கள்
நடுகற்களில் நின்றெரிந்தன....
இன்றுமெரிகின்றன....

எரியட்டும்....அணையாது எரியட்டும்
நாளை மீள வரும் தீபாவளிக்கு
பூத்திரி கொளுத்த
புது நெருப்பு வேண்டாம்....
நயவஞ்சக நரகாசுரர்களை
வதம் செய்து வரப்போகும்
வருங்கால தீபாவளிக்கு
வழிகாட்டும் தீபங்களாய்
எரியட்டும்....அணையாது எரியட்டும்...!!

நம் மண்ணில் நாம் காணப்போகும்
நரகச் சதுர்த்திக்கு நாமேற்றும்
முதல் விளக்கின் வெளிச்சம் இவையாகட்டும்...!!

aren
10-10-2009, 01:05 PM
அருமையான தீபாவளிக் கவிதை சிவாஜி.

வார்த்தைகள் அழகாக அமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

வியாசன்
10-10-2009, 04:16 PM
ஊரெங்கும் உலா வந்து
உறவுகளின் சடலம் தேடி
ஓய்ந்து அழுததுண்டு....
ஒன்றுமற்று போனதுண்டு

கணக்கெடுக்க போயிருக்கின்றார்கள்
வந்தவுடன் வயிற்றுப்பிழைப்புக்காய்
கண்துடைப்பாய் ஓர் அறிக்கை
சிலவேளை மூன்று நான்கு மணிநேர
உண்ணாவிரதம் ..................... இவை போதும்...

சிவா.ஜி
10-10-2009, 04:43 PM
மிக்க நன்றி ஆரென். இனி வரும் தீபாவளி, நம் உறவுகளுக்கு மெய்யான கொண்டாட்டமாய் இருக்கட்டும்.

சிவா.ஜி
10-10-2009, 04:44 PM
உண்மைதான் வியாசன். வாய்ச்சொல் வீரர்களிடம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்.

மிக்க நன்றி.

aren
10-10-2009, 04:48 PM
மிக்க நன்றி ஆரென். இனி வரும் தீபாவளி, நம் உறவுகளுக்கு மெய்யான கொண்டாட்டமாய் இருக்கட்டும்.

தீபாவளியின் வீரியம் குறைந்துவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. நாம் சிறுவயதில் இருந்த அளவு எதிர்பார்ப்புகள் இப்பொழுது இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்பொழுதெல்லாம் தீபாவளி என்றால் மட்டுமே புதுத்துணிகள் மக்களுக்குக் கிடைக்கும். இப்பொழுதெல்லாம் எந்த சமயம் கடைத்தெருவிற்குப் போனாலும் ஒரு புதுத்துணியுடனேயே மக்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஆகையால் அப்பொழுது இருந்த எதிர்பார்ப்பு இப்பொழுது குறைந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.

சிவா.ஜி
10-10-2009, 05:18 PM
ரொம்ப சரிதான் ஆரென். அப்போதெல்லாம் விடிய விடிய காத்திருப்போம். புதுத்துணிக்காகவும், பட்டாசுக்காகவும். இப்போது எந்த சமயத்திலும் எல்லாமும் கிடைத்துவிடுவதால் அதன் சுவாரசியம் குறைந்துவிட்டது.

வானதிதேவி
10-10-2009, 05:33 PM
ஆம் அண்ணா நான் கூட நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.
தோளில் சாய்த்து, ஆறுதலும் தேறுதலும்
இல்லா இடத்தில் அழுகையும் மற(று)க்கப்பட்ட
வேதனை நினைககுங்கால் விம்மும்
நெஞ்சிற்கு ஆறுதலை யார் தருவார்
எதிர்பார்த்தே வாழ பழகிக்
கொண்டுவிட்டோம்
அழகான வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா.ஜி
10-10-2009, 05:53 PM
மிக்க நன்றிம்மா. சோதனைகளனைத்தையும் கடந்து, நாளை சந்தோஷங்களை மட்டுமே அடைய வேண்டுமென்பதுதான் நமது விருப்பம். நல்லதே நடக்கும். நம்பிக்கை வைப்போம்.

பா.ராஜேஷ்
12-10-2009, 02:58 PM
நல்லதோர் சிந்தனை. விரைவில் விடியல் பிறக்கட்டும்...

aren
12-10-2009, 03:26 PM
மிக்க நன்றிம்மா. சோதனைகளனைத்தையும் கடந்து, நாளை சந்தோஷங்களை மட்டுமே அடைய வேண்டுமென்பதுதான் நமது விருப்பம். நல்லதே நடக்கும். நம்பிக்கை வைப்போம்.

நல்லதே நடக்கும் என்று எத்தனை நாட்கள் காத்திருப்பது.

aren
12-10-2009, 03:27 PM
நல்லதோர் சிந்தனை. விரைவில் விடியல் பிறக்கட்டும்...

விடியல் பிறக்கட்டும் என்பதெல்லேம் வெறும் ஏட்டிலேதான் எழுதிப்பார்க்கிறோம். நிஜத்தில் ஒன்றும் நடப்பதில்லையே.

அருள்
14-10-2009, 06:00 AM
விடியல் பிறக்குமா?

samuthraselvam
14-10-2009, 06:27 AM
எதுவும் ஒருநாள் மாறும். அதுவரை பொறுத்திருப்போம்... ஆனால் அதற்குள் வரும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு...?

சின்ன வயது சந்தோசங்களையும் இந்த வயது சோதனைகளையும் அருமையாக சொல்லி இருக்கீங்க அண்ணா...

வாழ்த்துக்கள்...

ஜனகன்
14-10-2009, 07:39 AM
என் நெஞ்சை தொட்டு விட்டீர்கள்
சிவாஜி

நேசம்
14-10-2009, 09:08 AM
நான் அப்படி நினைக்க வில்லை அண்ணா.இன்னும் இத்திருநாளை கொண்டாட எதிர்பார்ப்புகளுடன் காத்து இருக்கிறார்கள்அழகான கவிதை.நம்பிக்கையுடன் இருப்போம்

அமரன்
16-10-2009, 09:18 PM
தீபவலி..

உலகின் எந்த மூலையில் காயம் பட்டாலும் அழுபவன் கவிஞன். நீங்கள் கவிஞன்.

ஒரு கறுப்புக் கதையை கவிதைக்குள் புதைத்து தந்த தாய்மனசுக்காரருக்கு நன்றியும் வாழ்த்தும்.

மன்றம் வந்த இன்றுதான் தீபாவளி என்பதே தெரிந்தது சிவா.

சிவா.ஜி
17-10-2009, 02:09 PM
நன்றி ராஜேஷ். நம்பிக்கை வைப்போம்.

சிவா.ஜி
17-10-2009, 02:11 PM
நிச்சயம் பிறக்கும் அருள். நம்பிக்கைதானே வாழ்க்கை.

சிவா.ஜி
17-10-2009, 02:12 PM
உண்மைதான் லீலும்மா. எதுவும் ஒருநாள் மாறும், நம் இனமும் அந்நாள் காணும். அன்று எரியட்டும் சந்தோஷ தீபங்கள்.

நன்றி லீலும்மா.

சிவா.ஜி
17-10-2009, 02:13 PM
நன்றி ஜனகன்.

சிவா.ஜி
17-10-2009, 02:14 PM
அந்த நம்பிக்கைதான் வேண்டும் நேசம். விடியல் வராமலா போய்விடும்.

மிக்க நன்றி.

சிவா.ஜி
17-10-2009, 02:16 PM
ஒரு வார்த்தையில் சோகம் சொல்லிவிட்டீர்கள் அமரன். எரியும் தீபங்களை அணையாது காப்போம்....நாளை நம்மினம் கொண்டாடப்போகும் சந்தோஷ தீபாவளிக்கு தீபங்களுடன் நாமும் சிரிப்போம்.

நன்றி பாஸ்.