PDA

View Full Version : வலி



வானதிதேவி
10-10-2009, 11:53 AM
நிலா காட்டி சோறுட்டிய அன்னையிடம்
நினைவு தெரிந்தது கேட்ட முதல் பொருள்
நிலா
தும்பி பிடித்து வாலில் நுல்கட்டி விளையாட
துடித்தது ஒருகாலம்
பட்டுபுச்சி வண்ணம் பார்த்து பாவாடை
கே்ட்டதொரு பருவம்
வண்ணமலர் தோட்டத்தில்
மணிகணக்கில் அமர்ந்து புவோடு புவை
பேசிய காலங்கள்

அத்தனையும் மறைய புறப்பட்டேன்
கல்லுரிக்கு முதல்வர் கேட்டார்
விருப்பப்பாடமென்ன
சட்டென்று சொன்னேன் தாவரவியல்
தினமும் ஒரு குடும்பம் பல உதாரண உறுப்பினர்களாய்
ஆர்வமும் ஆசையுமாய் கழிந்தன நாட்கள்

அய்யகோ அந்த நாளும் வந்தது செய்முறை என்ற
பெயரில் வேரோடு பிடுங்கி வரப்பட்டன செடிகள்
எல்லோரும் பார்க்கையிலேயே
கருவி எடுத்து அறுவை சிகிச்சை
நீள்வெட்டு தோற்றம் இது
குறுக்குவெட்டு தோற்றம் இதென்று

நெஞ்சிலே இதுவரை அனுபவித்தறியா
புதுவலி
என்கண்ணீர் கண்டு காரணமறிந்த
ஆசிரியர் நகைத்து நுண்ணோக்கியில்
பார் என்றார் பார்த்தேன்

மலரே நீ விந்தையானவள்
உள்ளும் புறமுமாய் உன்னுள் அழகின்
பிறப்பிடம் அறியா பேதையாய்
பிரசவித்த தாயின் வேதனை
கலந்த மகிழ்வோடு

ஆனாலும் நிதமும் உன்னை
காணுகையில் கழுத்தறுத்த
ஞாபகச்சிதறல்கள் என்னில்
ஆனாலும் மெளனமாய் என்னைப்
பார்த்து சிரிக்கிறாய் காற்றுடன்
கும்மி கொட்டி, என்ன பெண் இவள்
என்று எள்ளி நகையாடி

aren
10-10-2009, 12:18 PM
வாவ்!!! என்று சொல்லவைக்கும் கவிதைவரிகள். அருமை.

எனக்கும் இந்தமாதிரி எண்ணங்கள் அடிக்கடி வருவதுண்டு. எனக்கு மரம் வெட்டுவதைப் பார்த்தாலே பிடிக்காது. ஆனால் நான் உட்கார, எழுத, படுக்க, இப்படி பல விஷயங்கள் மரத்திலானாலான உபகரணங்கள். என்னத்த சொல்றது.

இதுதான் வாழ்க்கையா? ஒன்னு வாழனும்னா இன்னொன்று போகனுமா? சர்வைவல் ஆஃப் தி பிஃட்டஸ்ட் என்பார்களே அது இதுதானா?

கவிதை நன்றாக உள்ளது. இன்னும் தொடருங்கள்.

பாரதி
10-10-2009, 12:40 PM
பொதுவாக இயற்கையை நேசிப்போர் வதையை விரும்பார்.
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்றாராம் வள்ளலார். வானதிதேவி அவர்களும் அவர் வழிதான் போலும்!

கவிதை நன்று.

இந்தக்கவிதைக்கு முதல்பத்தி தேவையில்லையோ என்று தோன்றுகிறது. நுண்ணோக்கி : புறக்கண்களில் புலப்படாதவற்றை விரிவாக நோக்கவும், அகக்கண்களில் வலம் வரவும் உதவும் என்பதை அழகாக கூறி இருக்கிறீர்கள்.

இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகிறேன்.
(எழுத்துப்பிழைகளை களைந்தால் இன்னும் நன்றாக இருக்குமே?)

சிவா.ஜி
10-10-2009, 12:49 PM
கவிதையின் கரு பிரமாதம். ரசித்து அனுபவித்த மலர்களையே அறுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிர்பந்தம். மென்மையான மனம் என்ன பாடு படும்?

வாழ்த்துகள் தங்கையே. இன்னும் எழுதுங்கள். பாராட்டுக்கள்.

(கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி செய்தால் நன்றாக இருக்கும். அதே போல...

”அத்தனையும் மறைய புறப்பட்டேன்
கல்லுரிக்கு முதல்வர் கேட்டார்
விருப்பப்பாடமென”

இந்த வரிகளை...

அத்தனையும் மறைய
புறப்பட்டேன் கல்லூரிக்கு
முதல்வரின் வினா
விருப்பப்பாடம் எதுவென...

இப்படியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் பூவெல்லாம் ஆராய்ச்சியில் காலை இழந்து விட்டதா? பூ....'பு' ஆன காரணம் என்னவோ?)

வானதிதேவி
10-10-2009, 04:51 PM
ம்ம்ம் முதலில் எனக்கு எவ்வாறு(which button to press poo)பு நெடில் எழுதுவது என்றுதெரியவில்லை.அன்று கவிதையில் எந்த சுட்டியை தட்டினோம் என்று வெகுநேரம் யோசித்தும் நினைவில்லை.மன்னியுங்கள் தோழர்களே.முதல் பாரா பெண்ணின் மாறுபட்ட மனதிற்கு கூறப்பட்ட நிகழ்வுகள்.பெண்ணின் மனது புரியாத புதிர் தான்.மலருக்கு மட்டும் புரிந்துவிடுமா என்ன?(கவிதை நிஜங்களின் வெளிபாடுகள் தான் அன்பர்களே)ஆம் அண்ணா.எழுதி வைத்து எழுதும் பழக்கம் இல்லாததால அப்படியே வந்துவிட்டது.இனி திருத்தி கொள்கிறேன் அண்ணா.

வானதிதேவி
10-10-2009, 05:11 PM
அது போன்றே து நெடிலும் எந்த சுட்டியை தட்ட வேண்டும் என்று உரைப்பீர்களா

சிவா.ஜி
10-10-2009, 05:12 PM
நீங்கள் எழுதியிருப்பதைப்போலத்தான். நெடிலுக்கு இரண்டு முறை அழுத்த வேண்டும். அ என்றால் a ஆ என்றால் aa. பூ என்றால் puu. இப்போது புரிகிறதா தங்கையே.

சிவா.ஜி
10-10-2009, 05:14 PM
அது போன்றே து நெடிலும் எந்த சுட்டியை தட்ட வேண்டும் என்று உரைப்பீர்களா

து= thu

தூ= thuu

ஞ= nja

சரி விடுங்கள் எல்லா எழுத்துக்கும் எப்படி என்று தனிமடலில் அனுப்பி விடுகிறேன்.

வானதிதேவி
10-10-2009, 05:54 PM
அண்ணா நான் இந்த n.h.m சுட்டி தான் உபயோகிக்கின்றேன்.அதில் சொல்லுங்கள் அண்ணா.(h தமிழில் தெரியவில்லை அதான் ஆங்கிலத்தில் பொருத்தருள்க அனைவரும்)

பா.ராஜேஷ்
12-10-2009, 02:55 PM
மிக மெல்லிய கவிதை. நன்று!

கா.ரமேஷ்
13-10-2009, 05:32 AM
அருமையான கவிதை வானதி...
உண்மையிலேயே தாவரத்தை வெட்டும்போதும்,மலர்களை சேகரிக்கும் போதும்,தவளை எலிகளை வெட்டும் போதும் எதுவும் தெரியவில்லை அப்போது இப்போது யோசிக்கத்தான் வைக்கிறது...

வாழ்த்துக்கள்...

வானதிதேவி
22-10-2009, 12:17 PM
நன்றி நண்பருக்கு.