PDA

View Full Version : காந்திக்கு நொபல் பரிசு ஏன் இல்லை? - நோபல் கமிட்டியின் விளக்கம்.lenram80
09-10-2009, 02:33 PM
நோபல் கமிட்டியே காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்காமல் விட்டதைப் பற்றி இப்போது வருத்தப் படுகிறது.

காந்தி 5 முறை பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் (1937, 1938, 1939, 1947, 1948)
ஏன் கொடுக்கவில்லை என்பதை பற்றி ஒரு விளக்கத்தை - மன்னிப்பை நொபல் கமிட்டி வெளியிட்டிருக்கிறது.

அந்த விளக்கத்தின் சுருக்கம்...

காந்திக்கு பரிசு கொடுத்தால் 'பிரிட்டனுடன் நார்வே/ஸ்வீடனுக்கு பகைமை உண்டாகலாம்' என்பதற்கான எந்த ஆதாயமும் இல்லை.

காந்தி பாகிஸ்தான் உடன் போர் செய்வோம் என்று கூறியதும், அமைதி வழியை பின்பற்றிய போதும் நாடு பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரமும் தான் காந்திக்கு விருது கொடுக்காமலிருந்ததற்கான காரணமாக கருதப் படுகிறது.

ஆனால், 1948 - ஆம் ஆண்டு நோபல் கமிட்டி காந்திக்கு பரிசு கொடுக்க முடிவு செய்து விட்ட நிலையில், "இறந்த ஒருவருக்கு பரிசு கொடுக்கமுடியாது" என்ற விதியின் அடிப்படையில் அவருக்கு 1948- ஆம் ஆண்டு கொடுக்கவில்லை. அந்த ஆண்டு "தகுதியான நபர் ஒருவரும் இல்லை" என்ற காரணத்தால் யாருக்கும் கொடுக்கவில்லை.
நிறைய பேருடைய எண்ணம் 1948- ல் காந்தி பெயர் இருந்திருக்க வேண்டும், அதனால் தான் அந்த இடம் வேறு யாருக்கும் அளிக்கப்படவில்லை".தற்போதைய வருடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கருத்தில் கொண்டால், இந்த விளக்கம் ஒரு "மாட்டுச் சாணி" (Bull shit) விளக்கமே!


http://nobelprize.org/nobel_prizes/peace/articles/gandhi/

.

அறிஞர்
09-10-2009, 02:46 PM
காந்தி கண்டிப்பாக வழப்பட்டிருக்கவேண்டும்.....

தற்பொழுது விருது பெறுபவர்களை விட... பல மடங்கு காந்தி சிறந்தவர்.

வியாசன்
09-10-2009, 03:08 PM
காந்தி கண்டிப்பாக வழப்பட்டிருக்கவேண்டும்.....

தற்பொழுது விருது பெறுபவர்களை விட... பல மடங்கு காந்தி சிறந்தவர்.

நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.

ஆனாலும் அறிஞர் இன்று சுயநலத்துக்காகத்தான் பரிசில்களை வழங்குகின்றது கெளரவிக்கின்றது. நீங்கள் காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லையென்று கவலைப்படுகின்றீர்கள்.

காந்தியவழி உண்ணாநோன்பு மேற்கொண்ட திலீபன் இந்தியாவின் அரசியல் சதுரங்க விளையாட்டில் கொல்லப்பட்டதற்காக கவலைப்படுகின்றோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அகிம்சையால் விடுதலை பெற்றநாடே அகிம்சையை கணக்கில் எடுக்கவில்லை. அடுத்தமுறை ராஜபக்ஷவுக்கும் கொடுக்கப்படலாம். பரிசுகள் பட்டங்கள் அல்ல ஒரு மனிதனுக்கு கெளரவம் கொடுக்கும்.

இந்தியமக்கள் நெஞ்சில் காந்தி வாழ்கின்றார். ஈழமக்கள் நெஞ்சில் திலீபன் வாழ்கின்றான். இதைவிட வேறு என்ன கெளரவம் வேண்டும். மக்கள் மனதில் இருந்தால் போதும்.

aren
09-10-2009, 03:41 PM
காந்திக்குக் கொடுக்காதது நல்லதே. அவரும் அந்த சாக்கடையில் விழுந்திருப்பார். நல்ல வேளை அப்படி நடக்கவில்லை.

நேசம்
09-10-2009, 05:00 PM
கந்திக்கு கொடுக்காது முலம் அந்த விருது உண்மையான பெருமை பெறவில்லை.

aren
10-10-2009, 12:05 AM
கந்திக்கு கொடுக்காது முலம் அந்த விருது உண்மையான பெருமை பெறவில்லை.

கொடுக்காமல் விட்டதால் காந்தி அவர்கள் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று தெரிகிறது

விக்ரம்
10-10-2009, 04:33 AM
கந்திக்கு கொடுக்காது முலம் அந்த விருது உண்மையான பெருமை பெறவில்லை.
சரியாக சொன்னீர்கள் நேசம்...

சில விருதுகள் வாங்கியவர்களுக்கு பெருமை சேர்க்கும், காந்திக்கு நோபல் பரிசு கொடுத்திருந்தால் -> அந்த விருதுக்கு பெருமை சேர்த்திருக்கும்.

அமரன்
10-10-2009, 08:33 AM
சரித்திரத்தில் தன் பெயர் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்திலோ பேரும் புகழும் விருதும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ காந்தி எதையும் செய்யவில்லை. அப்படியிருக்க காந்திக்கு விருது குடுக்கவில்லை என்ற ஆதங்கம் நமக்குத் தேவை இல்லை. நம் இதயத்தில் பூத்த நிரந்த தாமரையாக காந்தி இருப்பதே போதும்.

Mano.G.
11-10-2009, 02:55 PM
நோபல் பரிசுக்கு அப்பாற்பட்டவர் மகாத்மா காந்திஜி,
நோபல் பரிசால் காந்திக்கு பெருமை இல்லை
அப்படியே காந்திஜிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருந்தால்
அந்த பரிசுக்குத்தான் பெருமை.


மனோ.ஜி

kay
23-11-2009, 06:06 PM
நோபெல் சமாதானப் பரிசு தான் காந்திக்கு வழங்கப் பட்டிருப்பின் பெருமைப் பட்டிருக்கும்! இவ்வாண்டு பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப் பட்டதிலிருந்தே அதன் யோக்கியதை தெரியவில்லையா? அவர் என்ன சாதித்து விட்டார் பரிசு வழங்கப் படுவதற்கு! மகாத்மா காந்தி பரிசுக்கு அப்பாற்பட்டவர்!:mad::mad::mad:

குணமதி
24-11-2009, 12:00 PM
பொதுவாகவே, எத்தனை விழுக்காடு தகுதியானவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன என்பது ஆய்வுக்குரிய செய்தியாகவே இருந்து வருகின்றது!