PDA

View Full Version : ஒபாமாவுக்கு நோபல் பரிசு



அறிஞர்
09-10-2009, 01:41 PM
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

இது பலருக்கு ஆச்சரியமான விசயம்...

aren
09-10-2009, 02:06 PM
அபத்தம் ஒஃப் தி ஹயஸ்ட் ஆர்டர்.

என்னத்த சொல்றது. பைத்தியக்காரத்தனம் என்பதா அல்லது பத்தாம்பசலித்தனம் என்பதா. ஒன்றுமே புரியாமல் நான்?

ஒபாமா இதை வாங்கிக்கொள்ளக்கூடாது. அசிங்கம்

அறிஞர்
09-10-2009, 02:16 PM
பல அமெரிக்க செய்திகள் இதை கடுமையாக விமர்சித்துள்ளது.....

ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை... அதற்குள் சமாதான விருதா.....

aren
09-10-2009, 03:34 PM
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒபாமாவுடன் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவும் இதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

பேர் சமாதானம் என்று தப்பாக சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்தமுறை இந்தப் பரிசு ஒசாமாவிற்குப் போகும் என்று நினைக்கிறேன்

மதி
09-10-2009, 03:56 PM
ஒன்னுமே புரியல ஒலகத்துல..
மன்மோகன்சிங்குக்கு ஏன் குடுக்கல... அட.. புஷ் என்னப்பா பாவம் பண்ணினார்..?

நேசம்
09-10-2009, 05:04 PM
சிறந்த நகச்சுவை விருது நோபல் கமிட்டிக்கு கொடுக்க வேண்டும்

சிவா.ஜி
09-10-2009, 05:30 PM
அடக் கடவுளே.......!!!

வியாசன்
09-10-2009, 06:00 PM
கொடுக்கிறதுக்கு ஆள் தேடினார்களாம் கிடைக்கவில்லையாம் போனால்போகுது என்று ஒபமாவுக்கு கொடுத்துவிட்டார்களாம்.

காதோடுகாதாக ஒரு கொசுறு செய்தி ராஜபக்ஷ கோத்தபாய பெயர்களும் சிபார்சு பட்டியலில் இருந்ததாம்.

அதுதான் கண்ணதாசன் அப்பவே சொல்லிவிட்டார்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்

அன்புரசிகன்
09-10-2009, 10:33 PM
சமாதானத்தினை கொண்டுவராவி்ட்டாலும் சண்டைக்கு அமெரிக்காவை போகவிடாதிருப்பதே பெரியவிடையம் என்று நினைத்திருப்பார்கள்...
-----
ஏன் மகிந்த ராஜபக்ஷவுக்கு இதனை வழங்கவில்லை. மனிதாபிமானத்திற்கு என்று நோபல் பரிசு இருந்தால் அவருக்கு அதனை சிபாரிசுசெய்கிறேன். :D

aren
09-10-2009, 11:58 PM
கொடுமையிலும் கொடுமையான விஷயம் என்றால் அது இதுதான்

பால்ராஜ்
10-10-2009, 05:33 AM
கோமாளித்தனம் நமது நாட்டில் மட்டும் அல்ல உலகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர வைக்கிறது.

ஓவியன்
10-10-2009, 05:38 AM
ஹீ, ஹீ நாங்க விஜய்க்கும் சிம்புவுக்கும் ‘டாக்டர்’ பட்டம் கொடுக்கிற மாதிரிலே இது இருக்கு... :D:D:rolleyes:

aren
10-10-2009, 07:46 AM
ஹீ, ஹீ நாங்க விஜய்க்கும் சிம்புவுக்கும் ‘டாக்டர்’ பட்டம் கொடுக்கிற மாதிரிலே இது இருக்கு... :D:D:rolleyes:

ஏன் திரிஷா, தமன்னா, நயனதாரா ஆகியோரை விட்டுவிட்டீர்கள். அவர்களுக்கும் சேர்த்துக்கொடுக்கலாமே

ஓவியன்
10-10-2009, 07:48 AM
ஏன் திரிஷா, தமன்னா, நயனதாரா ஆகியோரை விட்டுவிட்டீர்கள். அவர்களுக்கும் சேர்த்துக்கொடுக்கலாமே

நீங்க ஆசைப்பட்டா அவங்களுக்கும் கொடுக்கலாம்..!! :lachen001:

aren
10-10-2009, 07:57 AM
நீங்க ஆசைப்பட்டா அவங்களுக்கும் கொடுக்கலாம்..!! :lachen001:

ஏன் நீங்கள் ஆசைப்படவில்லையா?

தம்ன்னா ரசிகர் மன்றத்தலைவர் நம் மன்றத்தின் ஆதவா இருக்கிறாரே.

anna
10-10-2009, 07:59 AM
நல்ல இருக்கிறது இந்த செய்தி பாவம் இந்த உலக மக்கள். நரிக்கு நட்டாமை வேலை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம். என்பது பழமொழி. அது ஓபாமவுக்கு மிகச்சரியாக பொருந்தும்.

உலகத்தின் அமைதிக்காக எதை கிழித்து விட்டார் ஒபாமா என்பது தான் புரியவில்லை. ஒருவேளை வடிவேல் கோப்பை வாங்குவது போல் சொந்தமாக ஓபாமா வாங்கி விட்டாரோ? நோபல் பரிசு கொடுப்பதற்கு பதிலாக நோ -பல் (No Teeth) பரிசு கொடுத்தால் சரியாக இருக்கும்.

அமரன்
10-10-2009, 08:27 AM
எளிய மக்களிடத்தில் புகுந்து நல்லுணர்வை விதைத்து ஒருமைப்பாட்டை முளைக்க வைத்தமைக்கக இந்தப்பரிசு என்றும் காதோடு காதோடு கதைக்கிறது.

தகுதிக்கு மீறிய விருது என்றால் விருதுக்கேற்ற தகுதியை உருவாக்கிக் கொள்ளட்டும் ஒபேமா.

எனிவே, வாழ்த்துகள் ஒபேமவுக்கு.

தூயவன்
11-10-2009, 04:37 PM
எளிய மக்களிடத்தில் புகுந்து நல்லுணர்வை விதைத்து ஒருமைப்பாட்டை முளைக்க வைத்தமைக்கக இந்தப்பரிசு என்றும் காதோடு காதோடு கதைக்கிறது.

தகுதிக்கு மீறிய விருது என்றால் விருதுக்கேற்ற தகுதியை உருவாக்கிக் கொள்ளட்டும் ஒபேமா.

எனிவே, வாழ்த்துகள் ஒபேமவுக்கு.

என்ன ஆச்சு அமரண்ணா ? :D :D

மன்மதன்
12-10-2009, 04:12 AM
அவர் அடிக்கடி காந்திய பத்தி பேசும் போதே நெனச்சேன்.. இது மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று..:rolleyes:

samuthraselvam
12-10-2009, 04:44 AM
அவருக்கே கொடுக்கும் போது நம் மன்றத்திலும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.... எனக்கும் தான்....

யாருக்கு வேணும் 'நோ'பல்ஸ்.... ஒரு தரம்... ரண்டு தரம்... மூணு தரம்....

மதி
12-10-2009, 06:18 AM
அவருக்கே கொடுக்கும் போது நம் மன்றத்திலும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.... எனக்கும் தான்....

யாருக்கு வேணும் 'நோ'பல்ஸ்.... ஒரு தரம்... ரண்டு தரம்... மூணு தரம்....
இது வரை 'அமைதி'யான புள்ளைன்னு பேர் எடுத்ததால எனக்கும் தான்...:eek::eek:

தாமரை
12-10-2009, 06:20 AM
தாத்தாவானா ஆட்டோமேடிக்கா நோ"பல்"ஸ் கிடைக்கும்.. அவசரப்பட்டு சமுத்ராசெல்வத்திடம் அடிபட்டு "பல்"ஸை பறி கொடுக்காதே!!!

thalaivan
12-10-2009, 08:03 AM
நாம்மூருல கொடுக்குற கதைதான் .....அங்கையும்போல!!!!!!!!

aren
12-10-2009, 08:06 AM
இன்றைய ஜாதிக்கட்சிகளுக்கு இந்த பாமாக தான் முன்னோடியாகியிருக்கும் அளவுக்கு அவர்களின் ஆரம்ப காலத்தில் அப்படி ஒரு போராட்டத்த வட மாவட்டாங்கள் பார்த்ததில்லை.

சமூக பிணைப்பின் தரம் தாழ்த்தும் அடுக்குகளில் இருந்து அது வெளியே வர ராமதாஸின் உழைப்பு நிறையவே இருந்தது.
அவரின் தளபதிகளாயிருந்த ஜான்பாண்டியன்,பசுபதி பாண்டியன் போன்றோர் தனித்து இயங்க நினைத்து தொண்டர்களை கட்டுக்கோப்பான போக்கில் கொண்டுபோகமுடியவில்லை.அதனால்தான் இன்றளவும் ராமதாஸ் மற்றைய திராவிட கட்சிகளின் போட்டியாளராக இருக்கிறார்.

ஆனால் தேர்தல் நேரத்தில் பிகு பண்ணியது அளவுக்கு அதிகம்தான்.எனவே மக்களும் என்ன இவர்....திராவிட கட்சிகளில் ஓரளவுக்கு தி மு கதான் கொஞ்சமாவது பெரியாரை ஒட்டி இஉக்கிறது....அதைவிடுத்து இப்படி அதிமுகவில் இருப்பதை மக்களே விரும்பாதபோது மகனும் விரும்பாதபோது கூட்டணிகளை அலட்சியப்படுத்துவதே வாடிக்கையாய் கொண்டிருக்கும் ஜேவிடம் இருந்தது முள்ளில் அமர்ந்த கதை என்பதை இனி ராமதாஸ் இனியாவது உணருவார்..


திமுகவில் சேருவதை மக்களும் ஏற்றுக்கொள்வர் என நினைக்கிறேன்....ஏனென்றால் காங்கிரஸின் சோம்பேறிகளுக்கு மந்திரி பதவி கொடுக்கும் கட்டாயம் இல்லாமல் போய்விடும்...

தவறுதலாக இங்கே பதித்துவிட்டார் என்றே நினைக்கிறேன்

aren
12-10-2009, 08:07 AM
நாம்மூருல கொடுக்குற கதைதான் .....அங்கையும்போல!!!!!!!!

திரையுலகில் விருதுகள் கொடுத்தார்களே கடந்த்வாரம். அதுமாதிரி இதுவும் என்கிறீர்களா?

thalaivan
14-10-2009, 10:37 AM
திரையுல்கு என்பதே ஒரு தில்லுமுல்லு உலகு....