PDA

View Full Version : தினமலர் ஆசிரியர் கைது



அறிஞர்
08-10-2009, 03:14 PM
நடுத்தரமான செய்திகளை வெளியிடவேண்டிய பத்திரிக்கைகள்... மக்களை கவர்தற்காக சில செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. அவற்றில் சில உண்மை, பொய் செய்திகள் இடம் பெறுகின்றன...

பத்திரிக்கை நடுநிலை என்பது முக்கியம்

---------------
தினமலர் செய்தி ஆசிரியர்.. பெண் கொடுமை சட்டத்தில் கைதாகி
புழல் சிறையில் அடைப்பு


சென்னை, அக். 8- நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக, தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின், பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியில், சில முக்கிய நடிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் மீது நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார்கள் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார். இதுபற்றி, போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகை புவனேஸ்வரி, மற்ற நடிகைகள் பற்றி அவதூறாக கூறியதாக தவறான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி புகார் அளித்தார். அதில், ‘இந்த செய்திநடிகைகள் மனதை புண்படுத்துவதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். இச்செய்தியை வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு எழும்பூர் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் லெனின் அடைக்கப்பட்டார்.

தினமலரில் வெளியான தகவலில் பல நடிகைகள் (நமீதா, சீதா, நளினி, மஞ்சுளா, ஷகீலா, ஸ்ரீப்ரியா, அஞ்சு) பெயர்கள் வெளிவந்தது.

aren
08-10-2009, 03:17 PM
இந்தப் பெயர்களையெல்லாம் புவனேஷ்வரி சொல்லவில்லை என்கிறார்களா அல்லது இது உண்மையல்ல என்று சொல்கிறார்களா?

இருந்தாலும் பத்திரிக்கைகள் இந்த மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்தாலே நல்லது.

நம் மன்றத்திலும் இந்த விஷயங்களை குறைத்துக்கொண்டால் நல்லது.

அறிஞர்
08-10-2009, 03:19 PM
எந்த பத்திரிக்கையும் நடுநிலையில் செய்திகளை வெளியிடவேண்டும்.

தினமலர் வெளியானது பிடிபட்டவர் சொல்லப்பட்டதல்ல என வாதிடுகிறார்கள். எது உண்மையோ...

aren
08-10-2009, 03:24 PM
எது எவ்வாறு இருந்தாலும் ஒரு சிலருக்கு பப்ளிசிட்டி நன்றாகவே கிடைத்துள்ளது. அவர்கள் வியாபாரம் இன்னும் பெருகும் என்பது நிச்சயம்.

அமரன்
10-10-2009, 08:37 AM
தினமலருக்கு கண்மலரில்கோளாறு. வாசகனுக்கு.....?

வியாசன்
10-10-2009, 08:48 AM
எது எவ்வாறு இருந்தாலும் ஒரு சிலருக்கு பப்ளிசிட்டி நன்றாகவே கிடைத்துள்ளது. அவர்கள் வியாபாரம் இன்னும் பெருகும் என்பது நிச்சயம்.

ஆரேன் இலவச விளம்பரம் மக்கள் மத்தியில் நன்றாக எடுபட்டிருக்கின்றதுபோல் இருக்கின்றது. இதற்காக லெனின் கைதுசெய்யப்பட்டது தவறு என்று சம்மந்தப்பட்ட நடிகைகள் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்கள்.

aren
10-10-2009, 09:30 AM
ஆரேன் இலவச விளம்பரம் மக்கள் மத்தியில் நன்றாக எடுபட்டிருக்கின்றதுபோல் இருக்கின்றது. இதற்காக லெனின் கைதுசெய்யப்பட்டது தவறு என்று சம்மந்தப்பட்ட நடிகைகள் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்கள்.

இதைத்தான் கலியுலகம் என்பதா?

ஓவியன்
10-10-2009, 11:21 AM
முன்னணியில் இருப்பதற்கும், சர்வைவலுக்காகவும் எப்படியும் எழுதலாம்னு இருந்தா இப்படியும் நடக்கும் போல..!! :cool::rolleyes:

சிவா.ஜி
10-10-2009, 11:46 AM
இந்த லிஸ்டில் இருப்பவர்களில் சிலரின் பெயரை இதே விஷயத்துக்காக சில முறை செய்திகளில் பார்த்திருக்கிறேன். எது உண்மையோ.....?

ஆனாலும் பத்திரிக்கைதர்மம் என்பது நேர்மையானதாக இருக்கவேண்டும்.

aren
10-10-2009, 12:07 PM
புவனேஸ்வரி மற்றவர்களின் பெயர்களை சொன்னதால்தான் அந்தப் பெயர்களைப் போட்டார்கள் என்று சொல்கிறார்களே. அப்படியென்றால் புவனேஸ்வரி இவர்களின் பெயர்களை சொல்லவில்லையா?

வியாசன்
10-10-2009, 02:30 PM
விபச்சாரிகள் என்று சொன்னால்தான் இவைக்கு கோபம் வரும் தேவதாசிகள் என்றால் மெளனமாக இருப்பார்கள்.

எட்டாத உயரத்தில் இருக்கின்ற நட்சத்திரங்கள் கைகளில் தவழும் என்றால் வசதியானவர்கள் விடுவார்களா?

சுகந்தப்ரீதன்
11-10-2009, 10:32 AM
தினமலருக்கு கண்மலரில்கோளாறு. வாசகனுக்கு.....?மிகச்சரியாக சொன்னீர்கள் அமர் அண்ணா..!!

ஆண்கள் அடக்கிக்கொண்டு இருந்தாலே எந்த பெண்ணும் இந்த அவலநிலைக்கு ஆளாக வேண்டிய அவசியம் வராது..!! ஆனால் கொடுமை பாருங்கள்... எப்போதும் செய்திகளில் பெண்கள் மட்டும்தான் மாட்டிக்கொள்கிறார்கள்..!!

குனிந்தாலும் குட்டும்... நிமிர்ந்தாலும் திட்டும்.. ஆணாதிக்க உலகம்..!! பாவம் பெண்கள்..!!

விக்ரம்
11-10-2009, 11:14 AM
ஆண்கள் அடக்கிக்கொண்டு இருந்தாலே எந்த பெண்ணும் இந்த அவலநிலைக்கு ஆளாக வேண்டிய அவசியம் வராது..!! ஆனால் கொடுமை பாருங்கள்... எப்போதும் செய்திகளில் பெண்கள் மட்டும்தான் மாட்டிக்கொள்கிறார்கள்..!!

குனிந்தாலும் குட்டும்... நிமிர்ந்தாலும் திட்டும்.. ஆணாதிக்க உலகம்..!! பாவம் பெண்கள்..!!
ஆண்கள் கூட, தங்களை முழுமையாக மறைத்துக் கொள்ளும் அளவுக்கு ஆடைகள் அணியும் போது, கர்சீப் அளவு உடையை மர்ம உறுப்பை மறைக்க பயன்படுத்துகிறார்கள் இந்த நடிகைகள் (மற்றும் சில பெண்கள்). காட்டினா பார்க்கிறோமோ, பார்க்கிறதால காட்டுறாங்களோ -> ஆனா காட்டுறது மட்டும் தப்பு சுகந்தா.

தமிழ் சினிமாவில், அறைகுறை ஆடைகளை தாராளமாக பயன்படுத்த ஆரம்பித்தவர் யார்? பார்த்திபன், ராமராஜன் போன்றோருக்கு சீதா மற்றும் நளினியைப் பற்றி அதிகமாகத் தெரியும்.

காசுக்காக எதையும் காண்பிக்கும் நமீதா, ஷகீலா போன்றோர் செய்யும் தொழில் என்ன சமூக சேவையா? அஞ்சு ஏற்கனவே போலீசாரால் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று நினைக்கிறேன். இவர்களையெல்லாம் பெண்கள் என்று சொல்லி வக்காளத்து வாங்காதே சுகந்தா!!!

பெண்கள் என்றால் அன்னை தெரெசா போன்று இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை.

ஒரேயொரு நாள் நீலப்படத்தில் நடித்தால், ஒரு வருடம் விபச்சாரம் செய்தாலும் கிட்டாத ஊதியத்தை அடைந்துவிடலாம். அப்படி இருந்தும் பல விபச்சாரிகள் நீலப்படத்தில் நடிக்காமல் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சமுதாயத்தின் மீது இருக்கும் பயம் தான் காரணம் எனலாம்.

அந்த அடிப்படை பயம் கூட இல்லாதவர்கள் தான் இந்த கூத்தாடிகள். அவர்களைப் பார்த்து நாம் அடையும் சந்தோஷத்திற்குத் தான் கோடிகளை வாரியிறைக்கிறோம். அதற்கு மேலும் என்ன கும்பாபிஷேகமா வேண்டும் அவர்களுக்கு???

சுகந்தப்ரீதன்
11-10-2009, 12:17 PM
மாம்ஸ்... நடிகைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுவில் நான் சொல்லியிருப்பதை இன்னொருமுறை நன்றாக படித்து பார்த்தால் நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை என்பதும்... இந்த பிரச்சனையின் ஆரம்பத்தையும் ஆழத்தையும் சொல்லியிருக்கேன் என்பதும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..!!

நேசம்
11-10-2009, 01:45 PM
http://www.dinamani.com/Images/New_Gallery/2009/10/10/cartoon10.JPG

இதை இங்கு பகிர்ந்து கொள்ளனும் என்று தோன்றியது. இது தினமனியில் வந்தது

மன்மதன்
12-10-2009, 04:12 AM
எது எவ்வாறு இருந்தாலும் ஒரு சிலருக்கு பப்ளிசிட்டி நன்றாகவே கிடைத்துள்ளது. அவர்கள் வியாபாரம் இன்னும் பெருகும் என்பது நிச்சயம்.

முற்றிலும் மாறுபட்ட கோணம்...:D

thalaivan
12-10-2009, 08:19 AM
இதுவரை தினமலர் கோஞ்சம் தூக்கலாவே செய்தி வெளியிட்டதில் தற்போது சினிமாக்காரங்களை சினிமாக்காரியே சொன்னதா போட்டதுல சாட்சியமான ஆதாரத்துடன் போட்டிருக்கலாம்...அல்லது கோர்ட்டில் புவனேஸ்நரி சொன்ன நடிகைகள் வீடியோ பதிவாக கோர்ட்டில் சரண்டர் பாண்ணுவாங்கன்னு நினைக்கேன்..