PDA

View Full Version : சாம்பியன் லீக் டி20



அறிஞர்
08-10-2009, 02:58 PM
கிரிக்கெட் வியாபாரமாகி விட்டது.. தொடர்ந்து போட்டிகள்...

இன்று முதல் போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது.

கலந்துக்கொள்ளும் அணிகள் விவரம்

அணி பிரிவு நாடு

1. டெக்கான் சார்ஜர்ஸ் ஏ1 இந்தியா
2. சாமர்செட் சிசிசி ஏ2 இங்கிலாந்து
3. டிரினிடாட் - டுபாகோ ஏ3 வெ.இண்டீஸ்
4. நியூசவுத் வேல்ஸ் (புளூஸ்) பி1 ஆஸி.
5. டயமண்ட் ஈகிள்ஸ் பி2 தென் ஆப்ரிக்கா
6. சசெக்ஸ் ஷார்க்ஸ் பி3 இங்கிலாந்து
7. ராயல் சேலஞ்சர்ஸ் சி1 இந்தியா
8. கேப் கோப்ராஸ் சி2 தென் ஆப்ரிக்கா
9. ஒடாகோ வோல்ட்ஸ் சி3 நியூசிலாந்து
10. டெல்லி டேர்டெவில்ஸ் டி1 இந்தியா
11. விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் டி2 ஆஸி.
12. வயாம்பா லெவன்ஸ் டி3 இலங்கை


முதல் லீக் ஆட்டத்தில் இன்று... ராயல் சேலஞ்சர்ஸ் & கேப் கோப்ராஸ் மோதல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்


பெங்களூர், அக். 8: சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - கேப் கோப்ராஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடந்தும் இந்த தொடரில் (அக்.8 - 23), பல நாடுகளில் நடந்த உள்ளூர் டி20 சாம்பியன் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அணிகள் மோதுகின்றன. மொத்தம் 12 அணிகள் 4 பிரிவுகளாக தொடக்க லீக் சுற்று ஆட்டங்களில் விளையாடி, அதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரு பிரிவாக 2வது கட்ட லீக் சுற்றில் மோதவுள்ளன.

இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு (அக்.21, 22) தகுதி பெறும். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் 23ம் தேதி நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் டெல்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் நடக்கின்றன.
இந்த தொடரில் சேவாக், கம்பீர், டிராவிட், காலிஸ், கில்கிறிஸ்ட், தில்ஷன், மெக்ராத், கும்ப்ளே, உத்தப்பா, டுமினி, ஸ்டெய்ன் உட்பட முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில், கும்ப்ளே தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் கேப் கோப்ராஸ் அணி மோதுகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஷேகி, ஜமிலியா, சாகா கான் உட்பட சர்வதேச புகழ்பெற்ற இசை, நடன கலைஞர்களின் அமர்க்களமான கலை நிகழ்ச்சிகள், வண்ண மயமான லேசர் ஷோ, குங்பூ/ களறிபயட்டு சாகசங்கள் மற்றும் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மோதுவதால், இப்போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். டிராவிட், உத்தப்பா, வாண்டெர் மெர்வ், காலிஸ், பவுச்சர், கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெங்களூர் பேட்டிங் வரிசை மிரட்டலாக அமைந்துள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேப் கோப்ராஸ் அணியிலும் டுமினி, லாங்கவெல்ட் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது நிச்சயம்.

aren
08-10-2009, 03:11 PM
ஜாக் காலிஸ் அவுட் ஆகிவிட்டாரே

அறிஞர்
08-10-2009, 03:17 PM
20-20 போட்டிதானே... அடித்து விளையாடவேண்டும்... அதான் அவுட்டாகிவிட்டார்.

டிராவிட், உத்தப்பா சிறப்பாக விளையாடுகிறார்கள்.

aren
08-10-2009, 03:19 PM
எப்படியிருந்தாலும் வெற்றி யாருக்கு கிடைத்தாலும் நமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.

அறிஞர்
08-10-2009, 03:21 PM
எப்படியிருந்தாலும் வெற்றி யாருக்கு கிடைத்தாலும் நமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.
இந்தியாவை சேர்ந்த அணி வென்றால் சந்தோசம் தானே..

aren
08-10-2009, 03:23 PM
இந்தியாவை சேர்ந்த அணி வென்றால் சந்தோசம் தானே..

இருந்தாலும் இந்தியா குழு என்றால் நமக்கு சொந்தமானதுபோல் இருக்கிறது, ஆனால் இங்கே விளையாடும் குழுக்கள் கார்பரேட்டுக்குச் சொந்தமானது, ஆகையால் அந்த அந்நோன்யம் வரவில்லை.

aren
08-10-2009, 03:41 PM
உத்தப்பாவும் அவுட் 91/2 12 ஓவர்களில்

aren
08-10-2009, 03:47 PM
திராவிடும் அவுட் 101/3 13.1 ஓவர்களில்

அறிஞர்
08-10-2009, 03:49 PM
14 ஓவரில் 108/3

நல்ல ரன் விகிதம் தான்..

180 ரன்கள் எடுத்தால் போட்டி விறுவிறுப்பாக செல்லும்

aren
08-10-2009, 03:51 PM
நன்றாகத்தான் அடித்து ஆடுகிறார்கள், ஆனால் விக்கெட்டுகள்தான் அடிக்கடி விழுகின்றன. கொஞ்சம் நின்று விளையாடினால் வெற்றி பெறலாம்.

aren
08-10-2009, 03:55 PM
நான்காவது விக்கெட்டும் காலி. 115/4 15.2 ஓவர்களில். கோலி கோலியாடிவிட்டார் கிரிக்கெட் ஆட்டத்தில்

நேசம்
08-10-2009, 05:12 PM
180 ரன்கள் எடுத்து உள்ளது.டைலரின் அதிரடி ஆட்டத்தால் இந்த ரன்கள் எடுக்க முடிந்தது.அவர் 24 பந்துகளில் 53ரன்கள் எடுத்தார்

அறிஞர்
08-10-2009, 05:19 PM
திரும்ப சரியான பதிலடி கொடுக்கிறார்கள்.

96/3 (11.3 ஓவர்)

சிவா.ஜி
08-10-2009, 05:19 PM
அடுத்த இன்னிங்ஸில் நன்றாக விளையாடுகிறார்கள். பார்ப்போம்.

நேசம்
08-10-2009, 05:41 PM
16 ஒவருக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.குமினி 39 பந்துகளில் 66 ரன்கல்ள் எடுத்து விளையாடி கொண்டு இருக்கிறார்

அறிஞர்
08-10-2009, 06:37 PM
டும்னி.. சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார்.

19.4 ஓவரில் 184 ரன்கள் எடுத்து கேப் கோபுராஸ் வெற்றி பெற்றது

aren
08-10-2009, 11:49 PM
பெங்களூர் அணியில் பந்துவீச்சாளர்கள் சரியாக இல்லை. அவர்கள் மட்டையாளர்களை கவனித்த அளவு பந்துவீச்சாளர்களை கவனிக்கவில்லை என்றே தெரிகிறது

அறிஞர்
09-10-2009, 02:50 PM
டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று... முதலில் பேட் செய்கிறது...
கம்பீர் விக்கெட்டை முதலில் பறிகொடுத்துள்ளது

24/1 (4 ஓவர்)

aren
09-10-2009, 03:36 PM
நியூ சவுத் வேல்ஸ் முதல் போட்டியில் வென்றுவிட்டது. வெளிநாட்டவர்களே முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார்கள். இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெல்லுமா?

aren
09-10-2009, 03:50 PM
டெல்லி சொதப்புகிறதே. ஆறு விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. பூட்டகேஸ்தான் போலிருக்கிறது.

அன்புரசிகன்
09-10-2009, 11:08 PM
விக்டோரியா அணி வென்றுவிட்டது...
98 ஓட்டங்களுக்கு டெல்லி அணி சுருண்டது... 16வது ஓவரில் 100 ஓட்டங்கள் பெற்று விக்டோரியா அணி வென்றுள்ளது.

aren
10-10-2009, 12:01 AM
விக்டோரியா அணி வென்றுவிட்டது...
98 ஓட்டங்களுக்கு டெல்லி அணி சுருண்டது... 16வது ஓவரில் 100 ஓட்டங்கள் பெற்று விக்டோரியா அணி வென்றுள்ளது.

இவ்வளவு பணம் கொடுத்து ஆட்களைக் கொண்டுவந்தாலும் இப்படி விளையாடுகிறார்களே. அப்படியென்றால் நம்ம ஐபில் வெறும் பணத்திற்காக மட்டும்தானா

ஓவியன்
10-10-2009, 04:17 AM
டில்ஸானை நம்பினேன், அவரும் ஏமாற்றி விட்டார்.... :frown:

aren
10-10-2009, 04:51 AM
பணம் ரொம்பவும் அதிகமாக கொடுத்துவிட்டோமோ?

aren
10-10-2009, 04:51 AM
உழைப்புக்குத்தகுந்த ஊதியம் என்ற முறையைக் கொண்டுவந்தால்தான் இவர்கள் சரிபட்டு வருவார்கள்.

ஓவியன்
10-10-2009, 05:11 AM
பேசாம ஐ.சி.எல் இந்தியன் அணியில் இருப்பவர்களை உள்ளே கொண்டு வரலாம், அவர்களில் பலர் இவர்களிலும் திறமைசாலிகளாக உருவெடுக்கக் கூடியவர்கள்...

முக்கியமாக சதீஸ், விக்னேஸ், இந்திரசேகரரெட்டி, ராஜூ, ஸ்ரூவர்ட் பின்னி அத்துடன் ஜேசுராஜாவையும் கணக்கில் கொள்ளலாம்...

aren
10-10-2009, 07:50 AM
பேசாம ஐ.சி.எல் இந்தியன் அணியில் இருப்பவர்களை உள்ளே கொண்டு வரலாம், அவர்களில் பலர் இவர்களிலும் திறமைசாலிகளாக உருவெடுக்கக் கூடியவர்கள்...

முக்கியமாக சதீஸ், விக்னேஸ், இந்திரசேகரரெட்டி, ராஜூ, ஸ்ரூவர்ட் பின்னி அத்துடன் ஜேசுராஜாவையும் கணக்கில் கொள்ளலாம்...

அப்படி நேரடியாக எடுத்துவிட்டால் இவர்களை முதலில் களத்தில் இறக்கிய ஐசிஎல்லிற்கு பெருமை வந்துவிடுமே, ஆகையால் இவர்களை அழவைத்தே பிறகு உள்ளே கொண்டுவருவார்கள், அதற்குள் இவர்கள் ஆடும் திறமைகள் குறைந்துவிடும்

aren
10-10-2009, 07:51 AM
கணபதி விக்னேஷ் இப்பொழுது இந்திய சிமெண்டின் விஜய் சி.சி.க்கு ஆடுகிறார். அப்படியென்றால் கூடிய விரைவில் தமிழ்நாடு மற்று சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பிடிப்பார் என்றே நினைக்கிறேன்.

ஓவியன்
10-10-2009, 09:50 AM
அப்போ விக்னேஸை விரைவில் எதிர்பார்க்கலாமெங்கிறீங்க, ஆனால் சதீஸ் போன்ற திறமைசாலியை நாம் இன்னமும் மிஸ் பண்ணுறமே....

aren
10-10-2009, 09:57 AM
அப்போ விக்னேஸை விரைவில் எதிர்பார்க்கலாமெங்கிறீங்க, ஆனால் சதீஸ் போன்ற திறமைசாலியை நாம் இன்னமும் மிஸ் பண்ணுறமே....

ராஜகோபால் சத்தீஷ் நிச்சயம் உள்ளே வருவார்

aren
13-10-2009, 01:54 AM
அடுத்த சுற்றுக்கு இரண்டு இந்திய அணிகள் தேர்வாகிவிட்டன. இன்னும் டெக்கான் சார்ஜர்ஸ் ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும், வென்றால் அவர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வழி இருக்கிறது.

ஓவியன்
13-10-2009, 04:10 AM
ஆஹா நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் ரோஸ் டெஸ்லரின் ஆட்டத்தைப் பார்க்க கொடுத்து வைத்திருந்தேன்..!! :)

aren
13-10-2009, 04:16 AM
ஆஹா நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் ரோஸ் டெஸ்லரின் ஆட்டத்தைப் பார்க்க கொடுத்து வைத்திருந்தேன்..!! :)

யார்கிட்டே கொடுத்து வைத்திருந்தீர்கள். திரும்ப வாங்கிவிட்டீர்களா?

நேசம்
13-10-2009, 11:05 AM
ஆஹா நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் ரோஸ் டெஸ்லரின் ஆட்டத்தைப் பார்க்க கொடுத்து வைத்திருந்தேன்..!! :)
பாவம் டெய்லர்.ஜிம்பாப்பே வீரர்,தில்சானை தொடர்ந்து(ஒவியனுக்கு புரிந்து இருக்கும்)

aren
14-10-2009, 04:15 PM
பாவம் டெய்லர்.ஜிம்பாப்பே வீரர்,தில்சானை தொடர்ந்து(ஒவியனுக்கு புரிந்து இருக்கும்)

இந்த டெய்லர் ஜிம்பாப்வே வீரர் கிடையாது, இவர் நியூஜிலாந்தைச் சேர்ந்தவர்

aren
14-10-2009, 04:15 PM
இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றி பெற்றேயாகவேண்டிய கட்டாயம், ஜெயிப்பார்களா?

aren
14-10-2009, 05:06 PM
முதல் பத்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை எடுத்துள்ளார்கள் சார்ஜர்ஸ் அணி. இன்னும் 76 ஓட்டங்கள் எடுக்கவேண்டும். கில்கிரிஸ்டும் ரோஹித் சர்மாவும் ஆடுகிறார்கள். இவர்களை இருவரைவிட்டால் சார்ஜர்ஸில் அடித்துவிளையாட வேறு யாருமில்லை. பார்க்கலாம் என்ன செய்யப்போகிறார்கள் என்று

aren
14-10-2009, 05:09 PM
இந்த மாட்சில் ஜெயித்தாலும் தோத்தாலும் திரினிடாட் குழு அடுத்த சுற்றுக்கு தேர்வாகிவிட்டது.

டெக்கான் ஜெயித்துவிட்டால் சம்மர்சட் வெளியேறவேண்டும். ஆகையால் இப்பொழுது டெக்கானுக்கும் சம்மர்சட்டுக்கும்தான் போட்டி

aren
14-10-2009, 05:10 PM
சம அளிவிலேயே போட்டியிருக்கிறது இப்பொழுது. இப்பொழுது ஆடும் இருவருமே இன்னும் கொஞ்ச நேரம் நின்று விளையாடினால் டெக்கான் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது

aren
14-10-2009, 05:15 PM
டெக்கான் அவுட் என்றே தோன்றுகிறது. 5 விக்கெட்டுகள் காலி.

aren
14-10-2009, 07:50 PM
ஐபிஎல் சாம்பியன் டெக்கான் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இரண்டு போட்டிகளிலும் ஓரிரு ரன்களில் தோல்வி.

அறிஞர்
14-10-2009, 09:00 PM
பவுலர்கள் சரியில்லை.. அதான்... டெக்கானின் தோல்விக்கு முக்கிய காரணம்.

இன்று வேணுகோபால் ராவ் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள்.

நேசம்
15-10-2009, 04:50 AM
இந்த டெய்லர் ஜிம்பாப்வே வீரர் கிடையாது, இவர் நியூஜிலாந்தைச் சேர்ந்தவர்
எனக்கு தெரியும் அண்ணா.நான் சொல்ல வந்தது ஜிம்ப்ப்ப்வே விரர்(பெயர் ஞாபகம் இல்லை),தில்சானை தொடர்ந்து டெய்லர் என்று சொல்ல வந்தேன்

ஓவியன்
20-10-2009, 07:46 AM
இல்லை நேசம், நேற்று டில்ஸானின் பந்து வீச்சையும் களத்தடுப்பையும் பார்த்திருந்தீர்களானால் உங்கள் எண்ணம் மாற்றமடையும்... :)

அதாவது இந்த ஓவியனால் பாராட்டப்படுபவர்கள் இன்னும் நன்றாக முன்னேறுவாங்கனு... :aetsch013:

பால்ராஜ்
20-10-2009, 02:57 PM
தற்போதைய நிலையில் ஒன்றும் பார்க்க முடியவில்லை.
ஆனாலும் இந்தப் பழம் புளிக்கும் என்ற போக்கில்.."கிரிக்கெட் வேஸ்ட்-டுப்பா...!"

aren
20-10-2009, 05:41 PM
நம்ம பசங்க ரொட்டி சுடத்தான் லாயக்கு. சுத்தம்!!!

அறிஞர்
21-10-2009, 01:58 PM
மற்றவங்க ஆட்டத்தை இரசிக்க வேண்டியது தான்...
இன்று ஒரு அரையிறுதி...

aren
21-10-2009, 03:35 PM
மற்றவங்க ஆட்டத்தை இரசிக்க வேண்டியது தான்...
இன்று ஒரு அரையிறுதி...

நான் என்னுடைய நேரத்தை நல்ல விஷயத்தில் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன். இனிமேல் கிரிக்கெட் மாட்ச் பார்ப்பதை நிறுத்திவிடலாம் என்றிருக்கிறேன்.

இவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கு நான் ஏன் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்ற விரக்தியில் இனிமேல் இவர்களின் மாட்சை பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.