PDA

View Full Version : ஸ்கைப், கூகுள் டாக் இந்தியாவில் தடை????



Honeytamil
08-10-2009, 04:58 AM
இணையதளம் மூலம் மிகக் குறைந்த செலவில் பல சர்வதேச நகரங்களுக்கும் தொலைபேசுவதற்கு பயன்படுத்தப்படும் இந்த VoIP தொழில்நுட்பத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை, உளவுத் துறை கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஸ்கைப், கூகுள் டாக் உள்ளிட்ட சேவைகளுக்கு இந்தியாவில் விரைவில் தடை விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பயங்கரவாதிகள் தங்களது தொடர்புக்கு VoIP தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இணைய தொலைபேசியையே பயன்படுத்துவதாகவும், அவ்வகையில் நடைபெறும் உரையாடல்கள் கொண்ட அழைப்புகளின் விவரம் மற்றும் எங்கிருந்து அழைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்களை தங்களால் பெற முடிவதில்லை என்பதே உளவுத் துறையின் பரிந்துரைக்குக் காரணம்.

எந்த நாட்டில் இருந்து அழைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை அறிய, CLI எனப்படும் காலர் லைனர் ஐடென்டிஃபிகேஷன் (Caller Line Identification) இல்லாததே, உளவுத் துறைக்கு பின்னடைவாக இருக்கிறது.

VoIP தொழில்நுட்பத்தை அளிக்கும் நிறுவனங்கள் ரகசிய குறியீடுகளை (encryption code) அளிக்க மறுத்ததைத் தொடர்ந்தே, ஸ்கைப்-பை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு இந்திய உளவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய சில நாடுகளின் அரசுகளுக்கு ஸ்கைப் தனது ரகசிய குறியீடுகளைப் பகிர்ந்து கொண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் VoIP தொலைபேசி அழைப்புகளை கண்காணிப்பதற்கான வசதிகள் உண்டு.

இந்தியாவில் தங்களது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் VoIP சேவைகளை அளித்து வரும் நிலையில், ஸ்கைப் , கூகுள், யாஹூ, விண்டோஸ் லைவ் உள்ளிட்டவற்றில் இருந்து VoIP சேவைகள் வழியாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு தொலைபேசும் வசதியை ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் (2009) மட்டும் 13 கோடி நிமிடங்கள் இணைய தொலைபேசி மூலமாக பேசப்பட்டுள்ளது என டெலகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆஃப் இந்தியா (TRAI) கணக்கிட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், பாதுகாப்பு நலன் கருதி, இணைய தொலைபேசி சேவைக்கு தடை விதிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட நேரலாம் என்பதும் கவனத்துக்குரியது.

நன்றி : தமிழ்இன்போ

வியாசன்
08-10-2009, 05:54 AM
சிலவேளை விற்பனை பாதிக்கப்படுவதால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே இப்படி தூண்ட முயற்சி செய்யலாம்

aren
08-10-2009, 05:56 AM
நிச்சயம் ஸ்கைப் மற்றும் கூகுள் டாக் தன்னுடைய ரகசிய குறியீடுகளை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும், காரணம் இந்தியா இதைக் கேட்பது வியாபாரா நோக்கத்திற்காக கிடையாது. தனது நாட்டை எதிரிகளிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்து காத்துக்கொள்ளவே. அதுபோல் ஸ்கைப்பும் கூகுளும் இந்தியா இல்லாத மார்க்கெட் யுத்தியை கடைபிடிக்காது. ஆகையால் இந்தியா கேட்பதற்கு நிச்சயம் செவி சாய்த்துவிடும். ஆகையால் இந்த இரண்டு சேவைகளும் இந்தியாவில் தடைசெய்யப்படமாட்டாது.

நேசம்
08-10-2009, 06:34 AM
நிச்சயமாக தடை செய்ய படாது.அது கேட்கப்படும் நோக்கத்தை பொறுத்து விரைவைல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும்

komalselva
08-10-2009, 06:48 PM
நிச்சயம் ஸ்கைப் மற்றும் கூகுள் டாக் தன்னுடைய ரகசிய குறியீடுகளை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும், காரணம் இந்தியா இதைக் கேட்பது வியாபாரா நோக்கத்திற்காக கிடையாது. தனது நாட்டை எதிரிகளிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்து காத்துக்கொள்ளவே. அதுபோல் ஸ்கைப்பும் கூகுளும் இந்தியா இல்லாத மார்க்கெட் யுத்தியை கடைபிடிக்காது. ஆகையால் இந்தியா கேட்பதற்கு நிச்சயம் செவி சாய்த்துவிடும். ஆகையால் இந்த இரண்டு சேவைகளும் இந்தியாவில் தடைசெய்யப்படமாட்டாது.

:icon_good: நான் கூற நினைத்ததை நீங்கள் மிகவும் தெளிவாக கூறிவிடீர்கள். எந்த நிறுவனமும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை புறக்கணிக்காது. இத்துடன் இந்தியா இன்டர்நெட் பயன்பாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடு. இந்த இரு நிறுவனங்களும் விரைவில் அடிபணியும்.

aren
09-10-2009, 12:00 AM
அமெரிக்கா சீனா ஐரோப்பிய குழுமம் ஆகியவற்றிக்குக் கொடுத்திருக்கும்பொழுது இந்தியாவிற்கு கொடுக்காமல் இருக்கமுடியாது. அமெரிக்காவைப்போல் இந்தியா மட்டுமே தீவிரவாதிகளால் பல பிரச்சனைகளை தினமும் சந்திக்கிறது. ஆகையால் நமது கோரிக்கைக்கு முதலில் அடிபணிந்துவிடும். கவலை வேண்டாம்.