PDA

View Full Version : சிறந்த இரட்டை சிம்கார்டு போன் எது?மன்மதன்
06-10-2009, 03:46 PM
நான் இரண்டு சிம் கார்டு உள்ள மொபைல் போன் வாங்கலாம் என்று இருக்கிறேன். சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் உள்ள சிறந்த போன் எதாவது இருக்கிறதா?

சிடிஎம்ஏ போனில் நெட் கனெக்ட் உள்ள குறைந்த விலை போன் எது என்று சொன்னாலும் வசதியாயிருக்கும்.

நன்றி.

aren
06-10-2009, 03:48 PM
நானும் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த மாதிரியான ஒரு போன் வாங்கினேன், ஆனால் அது கொஞ்சம் நாட்களிலேயே படுத்துவிட்டது. ஆகையால் நோக்கியா அல்லது சோனி எரிக்சன் போன்களை மட்டுமே வாங்குங்கள் என்பது என்னுடைய கருத்து.

மன்மதன்
06-10-2009, 04:15 PM
கூல்பேட் (coolpad) 2938 என்ற போனை வாங்குங்கள் என்று ஒரு சேல்ஸ்மேன் பரிந்துரைத்தார். 13000ல் இருந்த இது இப்பொழுது ஒருவாரம் மட்டும் 8000த்துக்கு ப்ரோமோஷன் ஆஃபரில் விற்கப்படுகிறது.

அறிஞர்
06-10-2009, 04:48 PM
போன் பற்றி review படித்துவிட்டு வாங்கலாமே..

சிலர் உதிரிபாகங்கள் கிடைப்பதில்லை என குறை கூறியுள்ளனர். மேலும் சில குறைகள் (http://www.testfreaks.com/cellphones/coolpad-2938/) உள்ளது என கூறியுள்ளனர்.

aren
06-10-2009, 04:55 PM
தோபோட் என்ற போனை இனிமேல் உபயோகிக்கக்கூடாது என்று இந்தியாவில் சட்டம் வந்திருக்காமே. அதுமாதிரி இது இருந்துவிடபோகிறது. கொஞ்சம் கவனிக்கவும். 5000 ரூபாய் விலை குறைத்து விற்பது இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்வதற்காக இருக்கலாம். கொஞ்சம் கவனிக்கவும்.

Mano.G.
06-10-2009, 04:57 PM
சம்சுங் D880 2 சிம் கர்ட் உபயோகிக்கலாம்
இதை MODEM ஆகவும் பயன்படுத்தலாம்,
இதில் ஒரு குறை இந்த போன் 3G இல்லாத போன்

aren
06-10-2009, 04:59 PM
இங்கே நாமெல்லாம் ஒரு சிம் கார்டிற்கே பணம் கட்ட முடியாமல் தவிக்கிறொம். மன்மதன் இரண்டு சிம் கார்டு போட்டு ஒரு போன் வேண்டும் என்கிறார். என்னத்தச் சொல்றது.

தாமரை
07-10-2009, 06:16 AM
தில்லு முல்லு படம் மாதிரி இரட்டை வேஷமோ என்னவோ?

ஓவியன்
07-10-2009, 06:23 AM
நான் இரண்டு சிம் கார்டு உள்ள மொபைல் போன் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

இதிலே எதோ உள்குத்து இருக்கு...!! :D:aetsch013::icon_ush:

aren
07-10-2009, 07:46 AM
தில்லு முல்லு படம் மாதிரி இரட்டை வேஷமோ என்னவோ?

அப்படின்னா வீட்டிற்கு வந்தவுடன் ஒரு சிம் கார்டை ஆஃப் செய்துவிடுவாரா? பரவாயில்லையே, நல்ல ஐடியாவாக இருக்கிறதே.

அன்புரசிகன்
07-10-2009, 10:11 AM
சாம்சங் அலைபேசி ஒன்றில் உள்ளது. இந்திய பெறுமதிக்கு ஏறத்தாள 10-13 ஆயிரங்களாக இருக்கும்... (AED 1000.00) எனது நண்பன் பாவித்தான். ஒரு பிரச்சனையுமின்றி ஒன்றரை வருடங்கள் பாவித்தான்.

SGH-D880

http://www.samsung.com/ae/system/consumer/product/2009/06/02/sgh_d880lkdxsg/D1_medium.jpg

மேலதிக விபரம் இந்த சுட்டியில் (http://www.samsung.com/ae/consumer/detail/detail.do?group=mobilephones&type=mobilephones&subtype=businessphones&model_cd=SGH-D880LKDXSG)...

Sharaf DG ல் வாங்கியது...
(http://www.samsung.com/ae/consumer/detail/detail.do?group=mobilephones&type=mobilephones&subtype=businessphones&model_cd=SGH-D880LKDXSG)

நேசம்
07-10-2009, 02:16 PM
வேறு மாடலில் சாம்சங் வந்துள்ளது என்று நினைக்கிறென்.எனது நண்பரும் இதை பயன்படுத்துகிறார்.எந்த பிரச்சனையுமில்லை.

மன்மதன்
07-10-2009, 02:37 PM
சம்சுங் D880 2 சிம் கர்ட் உபயோகிக்கலாம்
இதை MODEM ஆகவும் பயன்படுத்தலாம்,
இதில் ஒரு குறை இந்த போன் 3G இல்லாத போன்சாம்சங் அலைபேசி ஒன்றில் உள்ளது. இந்திய பெறுமதிக்கு ஏறத்தாள 10-13 ஆயிரங்களாக இருக்கும்... (AED 1000.00) எனது நண்பன் பாவித்தான். ஒரு பிரச்சனையுமின்றி ஒன்றரை வருடங்கள் பாவித்தான்.

SGH-D880

http://www.samsung.com/ae/system/consumer/product/2009/06/02/sgh_d880lkdxsg/D1_medium.jpg

மேலதிக விபரம் இந்த சுட்டியில் (http://www.samsung.com/ae/consumer/detail/detail.do?group=mobilephones&type=mobilephones&subtype=businessphones&model_cd=SGH-D880LKDXSG)...

Sharaf DG ல் வாங்கியது...இது 13000 ரூபாய்க்கு இங்கு விற்கிறது.
அன்புவோ / மனோஜி அண்ணாவோ எனக்கு கூரியர் அனுப்புவதாக இருந்தால் தனிமடலில் அட்ரஸ் தருகிறேன்..:rolleyes:

மன்மதன்
07-10-2009, 02:38 PM
வேறு மாடலில் சாம்சங் வந்துள்ளது என்று நினைக்கிறென்.எனது நண்பரும் இதை பயன்படுத்துகிறார்.எந்த பிரச்சனையுமில்லை.

சாம்சங் மியூசிக் என்று வந்துள்ளது . 5000 ரூ. நெட் கனெக்ட் இருக்கிறது. நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

மன்மதன்
07-10-2009, 02:45 PM
இங்கே நாமெல்லாம் ஒரு சிம் கார்டிற்கே பணம் கட்ட முடியாமல் தவிக்கிறொம். மன்மதன் இரண்டு சிம் கார்டு போட்டு ஒரு போன் வேண்டும் என்கிறார். என்னத்தச் சொல்றது.தில்லு முல்லு படம் மாதிரி இரட்டை வேஷமோ என்னவோ?இதிலே எதோ உள்குத்து இருக்கு...!! :D:aetsch013::icon_ush:

அப்படின்னா வீட்டிற்கு வந்தவுடன் ஒரு சிம் கார்டை ஆஃப் செய்துவிடுவாரா? பரவாயில்லையே, நல்ல ஐடியாவாக இருக்கிறதே.

ம்ம். இரு சிம் உள்ள கேஸ் அடுப்பு வாங்கினா குத்தமில்ல. இரண்டு சிம் உள்ள செல்போன் வாங்கினா வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடுவீங்களே...:D:rolleyes:

ஒண்ணு அலுவலக உபயோகத்துக்கு. இன்னொண்ணு அலுவலகம் சாரா உபயோகத்துக்கு :grin:. இருந்தாலும் ஆரென்ஜி சொன்ன ஐடியாவை பின்பற்றவும் உதவும் போல..:icon_wink1:

-பல சிம்கார்டு உள்ள செல்போன் தேடும்
மன்மதன்

aren
07-10-2009, 03:29 PM
ஆனால் நீங்கதான் வீட்டிற்கு வந்தவுடனேயே ஒரு சிம் கார்டில் வரும் கால்களை இன்னொரு சிம் கார்டிற்கு மாற்றிவிட்டு, முதல் சிம் கார்டை அணைத்துவிடும் பார்ட்டியாயிற்றே

praveen
08-10-2009, 08:59 AM
Spice என்ற பொபைல் போன் (சோனி எரிக்சன் சிஸ்டர் கன்சர்ன் என்று சொல்லுகிறார்கள் நிஜமா என்று தெரியாது) சகட்டு மேனிக்கு 2 சிம் போன் வழங்குகிறது. அவர்கள் வெப்சைட் சென்று பாருங்கள் விலை மற்ற விபரங்களும் அதிலே இருக்கிறது.

http://www.spice-mobile.com/Models.aspx

மன்மதன்
12-10-2009, 05:18 AM
ஆனால் நீங்கதான் வீட்டிற்கு வந்தவுடனேயே ஒரு சிம் கார்டில் வரும் கால்களை இன்னொரு சிம் கார்டிற்கு மாற்றிவிட்டு, முதல் சிம் கார்டை அணைத்துவிடும் பார்ட்டியாயிற்றே

அணைக்கலேன்னா பிரச்சனையாயிடும்.. :D:rolleyes:

மன்மதன்
12-10-2009, 05:19 AM
Spice என்ற பொபைல் போன் (சோனி எரிக்சன் சிஸ்டர் கன்சர்ன் என்று சொல்லுகிறார்கள் நிஜமா என்று தெரியாது) சகட்டு மேனிக்கு 2 சிம் போன் வழங்குகிறது. அவர்கள் வெப்சைட் சென்று பாருங்கள் விலை மற்ற விபரங்களும் அதிலே இருக்கிறது.

http://www.spice-mobile.com/Models.aspx

நன்றி பிரவீண். Spice உபயோகிக்கும் சிலர் அதை பற்றி குறை கூறியதால் அதை வாங்கவில்லை.

mania
12-10-2009, 06:15 AM
இங்கே நாமெல்லாம் ஒரு சிம் கார்டிற்கே பணம் கட்ட முடியாமல் தவிக்கிறொம். மன்மதன் இரண்டு சிம் கார்டு போட்டு ஒரு போன் வேண்டும் என்கிறார். என்னத்தச் சொல்றது.

என்ன செய்வது.....????!!!! அவர் நிலைமை அந்த மாதிரி......:rolleyes::rolleyes: ஏதோ ரெண்டோடு நிறுத்தினா சரி.....:D:D:D
பாதி சிம் கார்ட் கிடைக்குமா என்று அலையும்
மணியா......:D:D:D

Mano.G.
12-10-2009, 06:20 AM
ஆரென் சொன்னது போல் 2 சிம் கார்ட் போன்
பார்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக
இருக்கும் ஆனால் உபயோகிக்கும் பொழுது பிரச்சனைகள் வரும், இந்த சம்சுங் D880 நான் ஏற்கனவே ஒரு மூன்று மாதங்கள் உபயோகித்தேன் பிறகு விற்றுவிட்டேன் வாங்கும் பொழுது ரிங்1400.00 விற்கும் பொழுது ரிங் 400.00, முன்று மாதத்தில் ரிங் 1000.00 பறந்துவிட்டது.அதனால் 2 செல் போன் வாங்கி உபயோகிக்கலாம் (நோக்கியா 3120 கிலாசிக் 3.5G விலை ரிங்.400.00) மற்றொன்று நோக்கியா E52 (smartphone) விலை ரிங் 1200.00

மன்மதன்
12-10-2009, 02:37 PM
என்ன செய்வது.....????!!!! அவர் நிலைமை அந்த மாதிரி......:rolleyes::rolleyes: ஏதோ ரெண்டோடு நிறுத்தினா சரி.....:D:D:D
பாதி சிம் கார்ட் கிடைக்குமா என்று அலையும்
மணியா......:D:D:D

பாதி சிம்கார்டை வைத்து எப்படி ஆந்திராவை சமாளிப்பீங்க...:rolleyes::D
ஊருக்கு ஒரு சிம்கார்டு உபயோகிக்கும்
மன்மதன்:D:D

மன்மதன்
12-10-2009, 02:39 PM
ஆரென் சொன்னது போல் 2 சிம் கார்ட் போன்
பார்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக
இருக்கும் ஆனால் உபயோகிக்கும் பொழுது பிரச்சனைகள் வரும்,

இதைதான் பலரும் சொன்னாங்க.. எனக்கு சிடிஎம்ஏ போன் வாங்கணும். ஏற்கனவே நோக்கியா ஜிஎஸ்எம் போன் இருக்கு. அதனால் எம்பவர் 699 என்ற புதிய சாம்சங் வாங்கிவிட்டேன். 6100 ரூ. ஒற்றை சிம்தான். எல்லா வசதியும் இருக்கு. இது இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள OMH ஹேண்ட்செட்.

ஜனகன்
12-10-2009, 03:08 PM
இரட்டை சிம் கார்டு பாவிக்கத்துடிக்கும் மன்மதா!!!!!!!!!!!!!!!!
வீட்டில் எப்படி சிங்கிளா? அல்லது டபிளா?ஹி ஹிஹி ஹி

aren
12-10-2009, 03:29 PM
இரட்டை சிம் கார்டு பாவிக்கத்துடிக்கும் மன்மதா!!!!!!!!!!!!!!!!
வீட்டில் எப்படி சிங்கிளா? அல்லது டபிளா?ஹி ஹிஹி ஹி

ஒருத்தர்கிட்டேயே வாங்குற அடி பத்தாதா?

அன்புரசிகன்
12-10-2009, 11:35 PM
ஒருத்தர்கிட்டேயே வாங்குற அடி பத்தாதா?
அடிக்கடி அடிஉதை வாங்கும் சங்கம் ஒன்று நம் மன்றில் உருவாக்கி கோவில் கட்டீடுவோமா??? :icon_rollout:கோயிலில் பிரதான கடவுளாக யார் இருக்க தயார்???? ஆரன் அண்ணா.. எந்த இடத்தில் உங்களை பிரதிஷ்டை செய்வது???:D

aren
13-10-2009, 03:59 AM
அடிக்கடி அடிஉதை வாங்கும் சங்கம் ஒன்று நம் மன்றில் உருவாக்கி கோவில் கட்டீடுவோமா??? :icon_rollout:கோயிலில் பிரதான கடவுளாக யார் இருக்க தயார்???? ஆரன் அண்ணா.. எந்த இடத்தில் உங்களை பிரதிஷ்டை செய்வது???:D

பிள்ளையாரை எங்கே வைப்பீங்களோ, அங்கே. ஏன்னா, உங்களுக்குத்தான் தெரியுமே!!!!

வெற்றி
14-10-2009, 11:59 AM
டுயல் சிம் போன்கள் தான் என் சாய்ஸ் ... சிலிம்மா , கைக்குஅடக்கமா,இரண்டு சிம் வசதியுடன்மைக்ரோ மேக்ஸ்சும் (http://www.micromaxinfo.com/aboutus.html) LimeMobile லும் (லைம் ஆஸ்திரேலியா போன் (http://www.limemobile.com.au/) :) ) குறைந்த பட்சம் 1 வருடம் முதல் அதிக பட்சம் 2 வருடம் வரை வாரண்டி தருகிறார்கள் .. விலை 1600 முதல் 4500 வரை ...
நான் தற்போது பாவிப்பது சிக்மா டெல் என்ற ரொம்ப காஸ்ட்லியான மாடல் :) :) :) (ரூபாய் 2350 )எல்லா வசதியும் இருக்கும் ..ஆனால் வாரண்ட்டி என்ற பேச்சே இல்லை.. :)
(நான் ஏற்கனவே 1 சிக்மா டெல்லும் 1 சைனா கிங் என்ற மாடலையும் சுமார் 2 வருடமாக உபயோகிக்கிறேன்..இது வரை எந்த பிரச்ச்சனையும் இல்லை ... )

aren
14-10-2009, 06:03 PM
மொக்காசாமி அவர்களே, நீங்கள் சொல்லும் செல்போன்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டதேயில்லையே. எந்த ஊரிலிருந்து வருகின்றன அவைகள்

மன்மதன்
15-10-2009, 05:12 AM
சைனா சரக்கு....

வெற்றி
15-10-2009, 12:00 PM
மொக்காசாமி அவர்களே, நீங்கள் சொல்லும் செல்போன்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டதேயில்லையே. எந்த ஊரிலிருந்து வருகின்றன அவைகள்

சைனா சரக்கு....
அதே..அதத
சிக்மா டெல் வகையராக்கள் சீனா மற்றும் கொரியா வில் இருந்து வருகிறது..
ஆனால் மேலே சொன்ன மைக்ரோ மேக்ஸ் இந்தியாவாக்கும் (மேரா பாரத் மகான் :) )
லைம் போன்கள் ஆஸ்திரேலியா ...
என்ன இந்த வகை போன்கள் விளம்பரத்துக்கு மாதவனையோ அமீர்கானையோ போடுவதில்லை..
இந்த செல்கள் பிரத்தியோக ஏ.சி ஷோ ரூம்களில் விற்கப்படுவதில்லை (ஆனால் சமீபகாலமாக யுனிவர்சல் கடைகளுல் கிடைக்கிறது :) ) ..அதனால் சிலருக்கு மட்டும் இவ்வகை போன்கள் பற்றி ஏதும் அறியவில்லை...ஆனால் பல கோடி மக்கள் இவ்வகை போன்களையே பாவிக்கிறார்கள் ..
என் வீட்டில் 3 நோக்கியா N சீரியலும் 2 சோனி எரிக்சன் W சீரியலும் சும்மா கிடக்கிறது.. ( யாருக்காச்சும் வேணுமா ? நான் வாங்கிய விலையில் பாதிக்கு தருகிறேன் :) :) )

க.கமலக்கண்ணன்
15-10-2009, 12:59 PM
N சீரியல் இந்தால் எனக்கு தாருங்கள் நான் வாங்கி கொள்கிறேன்...

வெற்றி
15-10-2009, 01:02 PM
N சீரியல் இந்தால் எனக்கு தாருங்கள் நான் வாங்கி கொள்கிறேன்...

N 72 நான் வாங்கும் போது 18500
N 73 நான் வாங்கும் போது 16500 அதில் பாதி விலை ஓ.கே வா ?

க.கமலக்கண்ணன்
15-10-2009, 01:18 PM
மொக்க போடுறீங்களே மொக்கசாமி...

N 72 - 3500 க்கும்
N 73 - 4500 க்கும்

கிடைக்குதே... நண்பர் என்பதால் குறைவான விலையில் தருவீர்கள் என நினைத்தேன்...

வெற்றி
15-10-2009, 01:22 PM
என் வீட்டில் 3 நோக்கியா N சீரியலும் 2 சோனி எரிக்சன் W சீரியலும் சும்மா கிடக்கிறது.. ( யாருக்காச்சும் வேணுமா ? நான் வாங்கிய விலையில் பாதிக்கு தருகிறேன் :) :) )

மொக்க போடுறீங்களே மொக்கசாமி...

N 72 - 3500 க்கும்
N 73 - 4500 க்கும்

கிடைக்குதே... நண்பர் என்பதால் குறைவான விலையில் தருவீர்கள் என நினைத்தேன்...

அதேதான் ..இப்படி அடி மாட்டு விலைக்கு கேட்பதால் தான் வெறுத்துப்போய் சீனா மொபைலுக்குமாறி விட்டேன் ... ( ஒரு சின்ன திருத்தம் N-72 3000 த்துக்கும் N-73 4000 க்கும் செகண்ஸ் கிடைக்கிறது...)

srimariselvam
15-10-2009, 02:04 PM
இரட்டை சிம் மொபைல்கள் தான் இப்போது இளசுகளிடையே பிரபலம். சீனாமொபைல்களின் பல மாடல்களில் இரட்டை தாராளம்.
ப்ளை மொபைலில் இரட்டைசிம் மாடல் சிக்கனவிலையில். நாம் பராமரிப்பதைப் பொருத்து நீண்டநாள் உபயோகத்துக்கு வரும். கூல்பேடும், ரிலையன்சும் கைகோர்த்து இரட்டைசிம் மொபைல்களை கொண்டுவரவுள்ளன.