PDA

View Full Version : நோபல் பரிசு-2009அறிஞர்
06-10-2009, 02:22 PM
முதுமையின் காரணம் கண்டறிந்த 3 அமெரிக்கருக்கு நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம், அக்.6: உடல் முதுமை அடைய காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலிசபெத் பிளாக்பர்ன், கேரல் க்ரீடர், ஜாக் சோஸ்டாக் ஆகிய மூவரும் இந்த பரிசை பெறுகின்றனர். அவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.7 கோடி கிடைக்கும்.

மனிதர்கள் முதுமை அடைய காரணம் என்ன என்பது பற்றி இவர்கள் மூவரும் ஆராய்ந்தனர். அப்போது, உடலில் உள்ள செல்கள் முதுமையடைய டெலோமேராஸ் என்கிற வேதிப்பொருள்தான் காரணம் என்று கண்டுபிடித்தனர். மேலும் டெலோமேராஸ் அதிக அளவில் இருந்தால் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்றும் கண்டறிந்தனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக மூவரும் 2009ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது.

அறிஞர்
06-10-2009, 02:27 PM
இயற்பியல் (பௌதிகம்) துறைக்கான பரிசு

பைபர் ஆப்டிக்ஸ் சம்பந்தப்பட்ட ஒளிக்கடத்து திறன்பற்றிய சிறப்பான ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த சார்லஸ் கே. காவ்
அமெரிக்காவின் வில்லியார்ட் எஸ் பாய்ல் மற்றும் ஜார்ஜ் ஈ. ஸ்மித் என்பவர்கள் விருது பெறுகிறார்கள்.
-----------
செய்தி


நவீன தொழில்நுட்பம் கண்டுபிடித்த 3 அமெரிக்கர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம், அக். 7: டிஜிட்டல் போட்டோகிராபி தொழில்நுட்பம் மற்றும் கண்ணாடி இழை வலைப்பின்னலில் உலகை இணைய வைத்த தொழில்நுட்பம் ஆகியவற்றுக்காக 3 அமெரிக்கர்களுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் கே கவோவுக்கு, இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசான ரூ.6.72 கோடியில் பாதி அளிக்கப்படுகிறது. இவர் ஷாங்காயில் பிறந்த இங்கிலாந்துக்காரர். ஆனால், பின்னர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.

கண்ணாடியிழை வலைப்பின்னல் மூலம் ஒளியை நீண்ட தூரத்துக்கு எடுத்து செல்லும் தொழில்நுட்பத்தை 1966ல் இவர் கண்டுபிடித்தார். இப்போது உலகமே இந்த தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில்தான் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வில்லார் போலே மற்றும் ஜார்ஜ் ஸ்மித் ஆகிய இருவருக்கு மீதமுள்ள நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் கண்ணாக இருக்கும் சிசிடி, அதிநவீன அறுவை சிகிச்சை கருவிகள் உட்பட பலவற்றை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

aren
06-10-2009, 02:29 PM
நீங்களும் இதே துறைதானே. அடுத்தது உங்களுக்கா அறிஞரே. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அறிஞர்
06-10-2009, 02:31 PM
என் துறைக்கான நோபல் பரிசு இன்று தான் அறிவிக்கப்பட உள்ளது....

நோபல் பரிசு கிடைக்கவேண்டுமானால் இன்னும் 10-15 வருட ஆராய்ச்சியில் இருக்கவேண்டும்.

aren
06-10-2009, 02:32 PM
என் துறைக்கான நோபல் பரிசு இன்று தான் அறிவிக்கப்பட உள்ளது....

நோபல் பரிசு கிடைக்கவேண்டுமானால் இன்னும் 10-15 வருட ஆராய்ச்சியில் இருக்கவேண்டும்.

அவ்வளவுதானே. அப்படியே செய்துவிட்டால் போயிற்று. இன்னும் பத்து வருடத்தில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்த பெருமையை என் நண்பர்களிடத்தில் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா.

மறுபடியும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அறிஞர்
07-10-2009, 02:46 PM
வேதியியல் துறைக்கான விருதுகள்

உடலில் காணப்படுகிற ரிபோசோம்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மூவர் இந்த விருதை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

1. வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன், இங்கிலாந்து (பிறந்த பூமி சிதம்பரம், தமிழ்நாடு)

2. தாமஸ் ஏ. ஸ்டீட்ஸ், அமெரிக்கா

3. அடா. ஈ. யோனத், இஸ்ரேல்

அறிஞர்
08-10-2009, 02:44 PM
இலக்கியத்தியற்கான விருது

ஜெர்மனியை சேர்ந்த ஹெர்டா முல்லர் என்பவர் 2009ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்.

aren
08-10-2009, 03:44 PM
இந்தியாவைவிட்டு நம் மக்கள் வெளியே சென்றால் நன்றாகவே முன்னேறுகிறார்களே. இதுக்குக் காரணம்தான் என்ன.

தாமரை அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியோ?

அறிஞர்
08-10-2009, 03:52 PM
இந்தியாவைவிட்டு நம் மக்கள் வெளியே சென்றால் நன்றாகவே முன்னேறுகிறார்களே. இதுக்குக் காரணம்தான் என்ன.

தாமரை அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியோ?

1. வசதி வாய்ப்புகள் இன்னும் தேவை...
2. அரசியல் சூழல் (வளரவிடாமல் தடுப்பது)

வெளிநாடுகளில்
1. நல்ல வசதி வாய்ப்புகள்...
2. மற்றவர்கள் இணைந்து பணியாற்றும் பொழுது நம்பகத் தன்மை உள்ளது...
3. ஆராய்ச்சியை மற்றவர் இடையூறு இல்லாமல் விடுதலையோடு வேலை செய்யலாம் (Research Freedom)

aren
08-10-2009, 03:56 PM
இந்தியாவில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கிறேன் உதவி வேண்டும் என்று கேட்டுப்போனால் அதை வாங்குவதற்குள் அடுத்த நாட்டுக்காரன் அந்த கண்டுபிடிப்பை வெளியே கொண்டுவந்துவிடுகிறான். இதுதான் இந்தியாவின் இன்றைய நிலமை. இது மாறும் என்றே நினைக்கிறேன்.

சிவா.ஜி
08-10-2009, 05:15 PM
பரிசு வாங்கிய அனைத்து மேதைகளுக்கும் வாழ்த்துகள். நமது தமிழருக்கு சிறப்பு வாழ்த்துகள்.

அறிஞர்
08-10-2009, 05:29 PM
ஸ்டாக்ஹோம், அக்.8, 2009 : ஜெர்மென் பெண் எழுத்தாளர் ஹெர்ட்டா முல்லர், 2009-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

இந்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட ஸ்வீடன் அகெடமி, "கவிதையில் முத்திரைப் பதித்ததற்காகவும், வெளிப்படையான கட்டுரைகளை எழுதியதற்காகவும், உரிமைகள் பறிக்கப்படும் அவலத்தை எழுத்தில் வடித்ததற்காகவும் நடப்பாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை, ஜெர்மென் பெண் எழுத்தாளர் ஹெர்ட்டா முல்லர் " என தெரிவித்தது.
ஹெர்ட்டா முல்லர்.

முன்னதாக, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறப் போகிறவர்கள் குறித்து பல்வேறு விதமான யூகங்கள் இருந்தது. இறுதியில், இலக்கிய உலகம் வியக்கும் வகையில் வெற்றி பெற்றிருக்கிறார், ஹெர்ட்டா முல்லர்.

அமெரிக்க எழுத்தாளர்களான ஜாய்ஸ் கேரல் ஓயட்ஸ், பிலிப் ரூத் மற்றும் இஸ்ரேலின் அமோஸ் ஓஸ் ஆகியோரில் ஒருவர் தான் இலக்கிய நோபல் பெறுவர் என பரவலாக பேசப்பட்டது. முக்கிய நடுவர் ஒருவரும் கூட, 'அமெரிக்க எழுத்தாளர்களே விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள்,' என அண்மையில் கூறியதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

சமூக மாற்றத்துக்கு வித்திட முனையும் ஹெர்ட்டாவின் எழுத்துலகம்!

1953-ம் ஆண்டு ருமேனியாவில் பிறந்த ஜெர்மென் எழுத்தாளரான ஹெர்ட்டா முல்லர் தனது கவிதை, நாவல், கட்டுரைகள் முதலிய இலக்கிய வடிவங்களில் சமூக அக்கறை என்ற அம்சம் எப்போதும் நிறைந்திருக்கும்.

கொஸாக்கோ ஆட்சியின் கீழ் ருமேனியாவில் மக்கள் அவலம் நிறைந்த வாழ்க்கை நிலையை தனது எழுத்துகள் மூலம் பதிவு செய்து போராடியவர் என்பது கவனத்துக்குரியது.

ருமேனியாவின் ஜெர்மென் மைனாரிட்டி குடும்பத்தில் பிறந்த முல்லர், ரகசிய போலீஸுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததன் காரணமாக, 1970களில் தனது வேலையை இழந்தார். பின்னர், ஜெர்மெனிக்கு 1987-ம் ஆண்டு குடிபெயர்ந்தார்.

ஜெர்மென் மொழியில் இவர் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு, 1982-ம் ஆண்டு வெளியானது. 1998-ல் அயர்லாந்தின் இம்பாக் விருது உள்பட உலக அளவில் பல்வேறு விருதுகளை குவித்தார்.

2001-ல் இவர் எழுதிய தி அப்பாயின்மென்ட் என்ற புத்தகம், சர்வாதிகாரத்தின் கீழ் வாழும் மக்களின் நிலையை துல்லியமாக பிரதிபலித்தது. உலக அளவில் கவனத்தையும் ஈர்த்தது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹெர்ட்டா முல்லருக்கு இலக்கியத்துக்கான நோபல் விருதுடன் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
நன்றி-விகடன்

aren
08-10-2009, 11:52 PM
வெற்றி பெற்ற ஹெர்ட்டா முல்லருக்கு நம் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

கீதம்
09-10-2009, 02:31 AM
உலகப் பணக்காரர்கள் பலரும் நொபல் போன்றதொரு பெரிய விருதினையும் பரிசினையும் அறிமுகப்படுத்தி இன்னும் பலதுறைகளிலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் பலரையும் ஊக்குவிக்கவேண்டும். எவ்வளவோ ஆராய்ச்சியாளர்களின் திறமைகள் இன்னும் புடம் போடப்படாத தங்கமாகவே இருக்கின்றன.

aren
09-10-2009, 02:38 AM
உலகப் பணக்காரர்கள் பலரும் நொபல் போன்றதொரு பெரிய விருதினையும் பரிசினையும் அறிமுகப்படுத்தி இன்னும் பலதுறைகளிலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் பலரையும் ஊக்குவிக்கவேண்டும். எவ்வளவோ ஆராய்ச்சியாளர்களின் திறமைகள் இன்னும் புடம் போடப்படாத தங்கமாகவே இருக்கின்றன.

சந்தர்பம் கொடுத்தால் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் வெளிஉலகிற்கு கொண்டு வருவார்கள். பணம்தான் இதற்கு முக்கிய மூலதனம். அது இருந்தால் இன்னும் பலர் இது மாதிரியான ஆராய்ச்சியில் ஈடுபடமுடியும்.

அறிஞர்
09-10-2009, 01:44 PM
சமாதானத்திற்கான நோபல் பரிசு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமாதானத்திற்கான நோபல் பரிசை பெறுகிறது.

உலகளாவிய சமாதானத்திற்கு ஒத்துழைப்பதற்காக.. வழங்கப்பட்டுள்ளது.

aren
09-10-2009, 02:07 PM
சமாதானத்திற்கான நோபல் பரிசு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமாதானத்திற்கான நோபல் பரிசை பெறுகிறது.

உலகளாவிய சமாதானத்திற்கு ஒத்துழைப்பதற்காக.. வழங்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதே நல்லது. எனக்கு இந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே ரத்தக்கொதிப்பு அதிகமாகிவிட்டது.

அறிஞர்
13-10-2009, 02:37 PM
பொருளாதாரத்தி்ற்கான நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த எலினர் ஆஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக எலினர் ஆஸ்ட்ரோம் (76) பணியாற்றுகிறார். பயன்பாட்டாளர்கள் மூலம் எப்படி பொது சொத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பது என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆய்வுகளுக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1968ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இப்பரிசை பெறும் முதல் பெண் இவர்.

இவருடன் பொருளாதார நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் இன்னொருவர் ஆலிவர் வில்லியம்சன் (77). இவர் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாக பணியாற்றுகிறார். நிறுவன பொருளாதாரவியலை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

கடந்த 30 ஆண்டுக்காலத்தில் இந்த தோற்றமானது, பொருளாதார நிர்வாக ஆய்வு முதிர்நிலைக்கு செல்ல உதவி உள்ளது.

aren
13-10-2009, 02:44 PM
எலினர் ஆஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்.

பால்ராஜ்
04-03-2010, 02:03 PM
ஒபாமா விருது ... நமது கலைஞருக்குக் கொடுக்கப்பட்டது போல..??