PDA

View Full Version : புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்!



Honeytamil
06-10-2009, 01:41 PM
நாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் போன்ற அரச பயங்கரவாதத்தால் முகாம்களுக்கு வெளியே வாழும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு அடக்கப்பட்டு விட்டார்கள்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அதிகம் அசைவியக்கமற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் இருப்புக்கான அளவைத் தாண்டி நகரப் போவதில்லை. நகரவும் அனுமதிக்கப்படப் போவதில்லை. தங்களது இயலாமையை இந்திய சார்பாக மாற்றித் தற்காத்துக் கொள்ளும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

இப்போது, ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள பலம் புலம்பெயர் தமிழீழ மக்களே. யுத்தத்தின் இறுதி நாட்களில் புலம்பெயர் தேசங்கள் எல்லாம் புலிக்கொடி ஏந்திய தமிழீழ மக்களின் போராட்டங்கள் மேற்குலகின் இலங்கை குறித்த கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

சிங்கள தேசத்தால் தொட்டுவிட, நெருங்க முடியாத தூரத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களை நிகழ்த்தியவாறே உள்ளனர். இது சிங்கள தேசத்திற்குப் பாரிய நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன.

அதை விடவும், புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.

நாடு கடந்த தமழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் அடித்துக்கொண்டு எதிர்த் துருவங்களாக நகரும் என்ற சிங்கள எதிர்பார்ப்பும் தவறாகிவிட்டது. ஆரம்ப கால சலசலப்புக்களைத் தாண்டி இந்த இரு அமைப்புக்களும் சிங்கள அரசை நிலைகுலைய வைக்கும் இரு ஏவுகணைகளாக, ஒரே திசை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றன.

தற்கோதைய நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும் பரஸ்பர நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் முழு மூச்சாக இறங்கியுள்ளது. சிங்களத்தின் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான சதிகளுக்காக புலம்பெயர் தேசங்களில் ஒட்டுக் குழுக்களை ஒத்த சில தமிழர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், விடுதலைப் புலிகள் புலிகளுடன் இருந்து நிறம் மாறிய சில கருணாக்கள், சில வரலாற்றுப் பிழையானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட சிலர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

அண்மையில் பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதம் ஒன்றும் இதன் பின்னணியிலேயே நிகழ்த்தப்பட்டது. ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்திற்காகப் பணி புரிவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி வேறொன்றும் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றைத் தனி நபர்கள் அபகரிப்பதாகவும் நடாத்தப்பட்ட வானொலி விவாதம் அவர்களது அறியாமையின் உச்சத்தையும், துரோகத்தின் வீரியத்தையும் மட்டுமே தமிழர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்வாக ரீதியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களைக் கொண்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கட்டமைப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டாத உலக நாடுகளே இல்லை என்று சொல்லலாம்.

சிங்கள தேசத்தில் கூட அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து அங்கலாய்ப்பது வழக்கம். புலம் பெயர் தேசங்களிலும் இந்த ஒழுக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நாங்கள் இழந்தது எவ்வளவு? அழிந்தது எவ்வளவு? எங்கள் மக்கள் அழிந்தார்கள்… எங்கள் போராளிகள் அழிந்தார்கள்… எங்கள் தளபதிகள் அழிந்தார்கள்… எங்கள் படைக் கட்டுமானங்கள் அழிந்தன…

இத்தனை அழிவுகளை எதிர்கொண்டும் நிம்மதியாக வாழ மறுக்கப்பட்ட வன்னி மக்கள் வதை முகாம்களில் நாளாந்தம் செத்து மடிகின்ற வேளையில் இப்படியான, புலம்பெயர் தமிழர்களிடம் மனச் சிதைவை ஏற்படுத்தும் இப்படியான விவாதங்கள் திட்டமிட்ட தமிழின அழிப்புச் சதியின் தொடர்ச்சியே.

ஈழத் தமிழர்களிடம் உள்ள வாழ்வின் முதன்மையான இலட்சியங்கள் பிள்ளைகளின் படிப்பு, குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு. இந்த வாழ்வியல் தொடர்ச்சி புலம் பெயர் தேசங்களிலும் தொடர்கின்றன. அதற்காக ஓடி ஈடிப் பணியாற்றுகின்றனர்.

ஒருவர் தேசியக் கடமையிலும் தன் நேரங்களைச் செலவிடுகிறார் என்ற காரணத்திற்காக அவர் வாங்கும் வீடு, அவர் ஓடும் கார் என்று எல்லாமே தேசியக் கடமையிலிருந்து திருடியதாகக் குற்றம் சுமத்துவது ஈனத் தனமானது. கோழைத்தனமானதும் கூட.

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை எழுந்தமானமாக கற்பனைவாதத்தின் அடிப்படையில் சுமத்த முடியாது. அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் தகைமை தனக்கு இருக்கின்றதா? என்பதையும் குற்றம் சுமத்துபவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி யாரால்? எந்த நிலையில்? எந்த அடிப்படையில்? உருவாக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள தேசத்தால் நியமிக்கப்பட்ட திரு. எஸ். குகநாதன் அவர்கள் தற்போது ‘டண்’ என்ற தொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து கொழும்பிலிருந்து ஒளிபரப்பி வருகின்றார்.

அவரது தமிழ்த் தேசிய சிதைப்புச் சேவையின் ஒரு அங்கமாக பிரான்சிலும் ‘தமிழ் அலை’ என்ற பெயரில் வானொலி ஒன்று தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. முற்று முழுதாக தமிழத் தேசியத்தைச் சிதைக்கும் பணியில் பல வருடங்களாக திரு. எஸ். குகநாதன் அவர்களுடன் இணைந்து நடாத்தியவர்களே தற்போது ‘ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி’ என்ற பெயரில் வானொலியை ஆரம்பித்து நடாத்தப் பணிக்கப்பட்டுள்ளாhகள்.

அடையாளம் காணப்பட்ட தமிழ் அலை வானொலியால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிக சிதைவினை ஏற்படுத்த முடியாது என்பதால், சிங்கள அரசின் முதலீட்டுடன் இந்த வானொலி நடாத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தற்போது ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இந்த வானொலி விவாதம் உறுதிப்படுத்துகின்றது.

துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.

இது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணிலும் இது தொடர்கின்றது.

– ஈழநாடு (பாரிஸ்)

அறிஞர்
06-10-2009, 03:00 PM
தமிழனத்திற்கு விரோதமாக எத்தனை செயல்கள்...
பகைவரின் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்படட்டும்.