PDA

View Full Version : பேரெழில் போற்றுதும்! பேரெழில் போற்றுதும்!



ஆதி
06-10-2009, 11:43 AM
மலையருவி மேல்கவியும் மையல் நிலவும்
துளைவானைப் போர்த்துகிற காரிருளும் இட்டுக்
குலைத்தளாவி செய்த குழலவிழ்ந் தாடும்
தலையருவி யெனவிரிந் து!


பனித்தோய்த்து சூரியனை பக்குவ மாக்கி
மணிக்கோர்த்து மென்மையும் மையலும் ஈர்ப்பும்
தனித்தனியாய் சேர்த்து தவிப்பூட்டும் பார்வை
இனிப்பாய்சேர்த் தாக்கிய கண்!


கள்ளாடி போதையில்க விழ்ந்தா டுவதைப்போல்
பொல்லாத மார்ப்பிரண்டும் தள்ளாடி என்நெஞ்சை
அல்லாட வைத்துவிட்டு சல்லாப கண்களையும்
மல்லாடச் செய்யும் நிதம்.

விண்ணெறிந்த மின்னென்றார் வீசுகின்ற காற்றிலாடும்
மென்கொடி தானென்றார் வில்லாடும் நாணென்றார்
உன்னிடையை எப்படிப் பாட இடைக்குறுக்கம்
என்றுரைப்ப தைத்த விர

தொடரும்..

அறிஞர்
06-10-2009, 02:08 PM
தங்களின் கவித்துவம்... காதல் வரிகளில்.....

இயற்கையோடு... காதலியை ஒப்பிட்டு பாராட்டும் வரிகளும்..
தங்களை தள்ளாட வைக்கும் வரிகளும் அருமை...

ஆதி
06-10-2009, 06:29 PM
நன்றி அறிஞர் அண்ணா..

சிவா.ஜி
07-10-2009, 05:42 AM
காதலே சுவைதான்.....அந்த சுவையோடு தமிழின் தனிச்சுவையும் சேர்ந்தால்...ஆகா....அதுவும் ஆதியின் கொஞ்சுதமிழ்....வஞ்சியைப் பாடும் அழகு சொக்க வைக்கிறது.

அருமை ஆதி. தொடரட்டும் காதல் சுவை. வாழ்த்துகள்.

அக்னி
07-10-2009, 06:28 AM
தலையருவியாய் அவிழ்ந்த குழல்,
சிற்றிடைவழியே பாய்ந்து பரந்தது.
இடைவழி(யில்) அணை போடவேண்டும்...

கனதிகள் அழகாக,
அழகே கனதியாக,
நசுங்குவதே பெரும் சுகமாக...

ஆதி...
அழகைச் சொல்கின்றார்... அழகாய்ச் சொல்கின்றார்...

பாராட்டுக்கள்...

கீதம்
08-10-2009, 06:45 AM
அற்புத வர்ணனை! பேரெழிலைத் தொடர்ந்து போற்றுங்கள்.

பா.ராஜேஷ்
24-10-2009, 12:12 PM
அருமையான கவிதை தந்த
ஆதிக்கு பாராட்டுக்கள்
இனிய வரிகள்
ஈர்க்கின்றன வசமாய்!!!

குணமதி
06-12-2009, 03:08 AM
மலையருவி மேல்கவியும் மையல் நிலவும்
துளைவானைப் போர்த்துகிற காரிருளும் இட்டுக்
குலைத்தளாவி செய்த குழலவிழ்ந் தாடும்
தலையருவி யெனவிரிந் து!


பனித்தோய்த்து சூரியனைப் பக்குவ மாக்கி
மணிகோர்த்து மென்மையும் மையலும் ஈர்ப்பும்
தனித்தனியாய்ச் சேர்த்து தவிப்பூட்டும் பார்வை
இனிப்பாய்ச்சேர்த் தாக்கிய கண்!


கள்ளாடி போதையில்க விழ்ந்தா டுவதைப்போல்
பொல்லாத மார்பிரண்டும் தள்ளாடி என்நெஞ்சை
அல்லாட வைத்துவிட்டுச் சல்லாபக் கண்களையும்
மல்லாடச் செய்யும் நிதம்.

விண்ணெறிந்த மின்னென்றார் வீசுகின்ற காற்றிலாடும்
மென்கொடி தானென்றார் வில்லாடும் நாணென்றார்
உன்னிடையை எப்படிப் பாட இடைக்குறுக்கம்
என்றுரைப்ப தைத்த விர.



அருமையான இன்னிசை வெண்பாக்கள்.

மனமாரப் பாராட்டுகிறேன்.

தலையருவி யெனவிரிந்து - இங்குக் காய் முன் நிரை வருகிறது. திருத்திவிடுங்கள்.

நன்றி.