PDA

View Full Version : பாகிஸ்தான் அணி கேப்டன் -பயிற்சியாளர் நீக்கம்



நேசம்
06-10-2009, 11:30 AM
பாகிஸ்தான் அணி கேப்டன் -பயிற்சியாளர் நீக்கம்
http://img.dinamalar.com/data/images_news/tbltopnews1_90727961064.jpg

பாகிஸ்தான் அணி கேப்டன் யுனூஸ்கான் மற்றும் பயிற்சியாளர் இந்திகாப் ஆலம் இருவரும் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் அறிவித்துள்லது.

சமீபத்தீல் நடந்த சாம்பியம் டிராபியில் சூதாடம் நடந்தாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் எடுத்துள்ளது.

அரையிறுத்தில் நியுசிலாந்து எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு காரணமாக இஉந்த இலியட் கொடுத்த எளிய கேட்சை பாகிஸ்தான் கேப்டன் யுனூஸ்கான் தவற விட்டதன் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த விவாகரத்தை கையில் எடுத்த பாகிஸ்தான் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது

தகவல் தினமலர்

ஓவியன்
06-10-2009, 11:34 AM
ஆமா அப்போ யார் அடுத்த அணித்தலைவர்..???

சர்வதேச கிரிக்கட் அணிகளுக்கு இதுவரை அணித்தலைவர்களாக இருந்தவர்களில் பாதிக்கு மேல் பாகிஸ்தானில் இருப்பார்கள் போல....

நேசம்
06-10-2009, 11:42 AM
அடுத்தது அப்ரிதி தான் இருப்பார் ஒவியன்

ஓவியன்
06-10-2009, 11:55 AM
’முகமட் யூசப்’ ஆகவும் இருக்கலாம்...

நேசம்
06-10-2009, 12:00 PM
ஏன் நான் அப்ரிதியை சொன்னேன் என்றால் சாம்பியன் டிரபி போட்டியில் முதல் ஆட்டத்தில் அப்ரிதி தான் அணியை வழி நடத்தினார்.ஒவியன்

aren
06-10-2009, 02:27 PM
நானும் படித்தேன்.

பாவன் யூனிஸ், காப்டன் பதவி வேண்டவே வேண்டாம் என்றவரை வற்புறுத்தி கொடுத்துவிட்டு இப்படி பிடிங்கினால் எப்படி. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திறமையானவர்கள் கையில் போகவேண்டும்.

அடுத்தது ஆப்ரிதிதான். வேறு யாரும் சமீபத்தில் இல்லை.

அறிஞர்
06-10-2009, 02:29 PM
சர்வதிகாரிகள் ஆளும் எந்த பூமியில் நிகழும் நிகழ்வுதான் இது....

புதிய பயிற்சியாளர் யார் எனப்பார்ர்ப்போம்.
அடுத்த அணித்தலைவராக அப்ரிடி வரலாம்.

aren
06-10-2009, 02:36 PM
பயிற்சியாளராக அக்ரம் அல்லது வக்கார் யூனிஸை நியமிக்கலாம். இருவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் அக்கறையுடையவர்கள்.

அறிஞர்
06-10-2009, 02:41 PM
20-20 கோப்பை வென்றவுடன்
யூனிஸ்கான் - ஹீரோ
இப்போ - ஸீரோ....

காலத்தின் கொடுமை... (ஒரு கேட்சை விட்டதற்காக இப்படியா)

aren
06-10-2009, 02:42 PM
ஒரு காட்சை விட்டதற்காக இல்லை அறிஞரே. அவர் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைக்கு சலாம் போடததற்காக. காத்துக்கொண்டிருந்தார்கள் இவரை தூக்குவதற்கு சந்தர்பம் கிடைத்தது.

நேசம்
07-10-2009, 04:52 AM
பயிற்சியாளர் மற்றும் கேப்டம் ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.வேண்டுமென்று இந்தியாவை போட்டியில் இருந்து வெளியெற்ற வேண்டுமென்று ஆஸ்திரேலியாவிடம் தொற்றதாகவும்,சூதாட்டத்தின் காரணமாக அரையிறுதியில் நியுசிலாந்திடம் தோற்றது என்று கூறி அதற்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் கூறியுள்ளது