PDA

View Full Version : சமைக்காமலேயே சாதமாகும் அரிசி.... இந்தியா விஞ்ஞானிகள் கண்டுப்பிடிப்பு



நேசம்
06-10-2009, 11:09 AM
சமைக்காமலேயே சாதமாகும் அரிசி....

சமைக்காமலேயே சாதமாக சாப்பிடும் புதிய ரச அரிசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது குறித்து ஒரிசாவின் காட்டாக் நகரில் அமைந்துள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தபன் குமார் ஆதியா கூறியாதவது:

சமைக்காமலேயே சாதமாக சாப்பிடும் புதிய ரச அரிசியை எங்கல் ஆய்வகத்தில் கண்டுபிடித்துள்ளொம். 'அகனிபோரோ' என்று பெயரிபட்டுள்ள இந்த அரிசியை சாப்பிடுவதற்கு நீரில் 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.சுடுதண்ணிர் என்றால் 15 நிமிடங்கள் போதும்.
மறபணு மாற்றத்தின் முலம் இதை நாங்கள் கண்டுப்பிடிக்க வில்லை.இந்தியாவில் பயிரிடப்படும் மற்ற அரிசி போன்றது தான் இந்த புதிய ரக அரிசி.

3 ஆண்டுகளாக நடைப்பெற்ற ஆராய்ச்சிக்கு பின் இந்த அரிசியை எங்கள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்லனர்.பிற அரிசிகளில் இருக்கும் அனைத்து சத்துகளும் இதில் உண்டு என்றார் தபன் குமார்.

தகவல் தினமனி

ஓவியன்
06-10-2009, 11:19 AM
பரவாயில்லையே சமைக்க முடியாத தருணங்களிலெல்லாம் நன்றாக உபயோகப்படும், தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி நேசம்..!!

கா.ரமேஷ்
06-10-2009, 11:23 AM
40 நிமிடத்துக்கு மேல தண்ணீரில் வைத்தால் சாப்பாடு குழைந்து விடாதே....?:aetsch013::icon_rollout::icon_rollout:

நேரவிரையம் நிறைய குறையும்...


எப்படியாயிருந்தாலும் இந்த அரிய கண்டுபிடிப்பிற்க்கு நமது இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்....:icon_b:

நேசம்
06-10-2009, 11:32 AM
அப்படியே குழம்புக்கு ஏதும் கண்டுபிடிச்சா நல்ல இருக்கும்

மன்மதன்
06-10-2009, 03:22 PM
நல்ல கண்டுபிடிப்பு.. வாழ்த்துகள்..

aren
06-10-2009, 03:58 PM
சாப்பிடாமலேயே வயிறு நிரம்பும் விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்

வானதிதேவி
06-10-2009, 04:12 PM
அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் தருவிக்கப்பட்ட வரம்.நன்றி பகிர்வுக்கு.

Mano.G.
07-10-2009, 03:31 AM
சாப்பிடாமலேயே வயிறு நிரம்பும் விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்

நல்ல அலோசனை, வேலை செய்யாமலே சம்பளம் வாங்கும் ஐடியா பிரமாதம் ஐயா ,

புதிய வகை அரிசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

மனோ,ஜி

samuthraselvam
07-10-2009, 06:33 AM
40 நிமிடத்துக்கு மேல தண்ணீரில் வைத்தால் சாப்பாடு குழைந்து விடாதே....?:aetsch013::icon_rollout::icon_rollout:



அனுபவம் பாருங்க.....:lachen001:


அப்படியே குழம்புக்கு ஏதும் கண்டுபிடிச்சா நல்ல இருக்கும்

உங்களுக்கு வேலை சுலபமா முடியும் இல்லையா?:p


சாப்பிடாமலேயே வயிறு நிரம்பும் விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்


இதெல்லாம் ஓவரு....:eek:

அது வரவேற்க தக்கதே....:icon_b:

aren
07-10-2009, 06:43 AM
அனுபவம் பாருங்க.....:lachen001:



உங்களுக்கு வேலை சுலபமா முடியும் இல்லையா?:p




இதெல்லாம் ஓவரு....:eek:

அது வரவேற்க தக்கதே....:icon_b:

உங்களுக்கு என் ஐடியா பிடித்திருக்கிறது. இல்லையா? அதுமாதிரி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க உதவுங்களேன்.

தாமரை
07-10-2009, 07:04 AM
உங்களுக்கு என் ஐடியா பிடித்திருக்கிறது. இல்லையா? அதுமாதிரி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க உதவுங்களேன்.

வயித்துக்கு கேஸ் நிரப்பிக்கலாமே!!! :icon_b:

aren
07-10-2009, 01:26 PM
வயித்துக்கு கேஸ் நிரப்பிக்கலாமே!!! :icon_b:

அதுக்கும் இண்டியன் கேஸ் 21 நாட்களுக்கு ஒரு தடவைத்தான் கொடுக்குமே.

நேசம்
07-10-2009, 01:50 PM
முக்கியமாக நேரத்துக்கு கிடைக்குமா....

அறிஞர்
07-10-2009, 02:07 PM
சில நாட்களுக்கு முன் இந்த செய்தியை பேப்பரில் படித்தேன்...

மக்களுக்கு உதவ, மக்களை சோம்பேறியாக்க எத்தனை வழிமுறைகள்..

aren
07-10-2009, 02:24 PM
முக்கியமாக நேரத்துக்கு கிடைக்குமா....

அதானே. அப்புறம் பசித்தால் என்ன சாப்பிடுவது என்று தெரியாதே

செழியன்
08-10-2009, 11:11 AM
எப்படியோ, 40 நிமிடம் பச்சைத் தண்ணீரில் ஊற வைத்து எரிப்பொருள் 'பில்'லை கொஞ்சம் சேமிக்கலாம். ;);)

விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.

நேசம்
08-10-2009, 01:49 PM
எப்படியோ, 40 நிமிடம் பச்சைத் தண்ணீரில் ஊற வைத்து எரிப்பொருள் 'பில்'லை கொஞ்சம் சேமிக்கலாம். ;);)

விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.
எரிப்பொருளை மிச்ச பண்ணலாம்.ஆனால் பில்லை மிச்சண்ண முடியுமாகுறது அரிசி விலை பார்த்த பிறகு சொல்ல முடியும்:D