PDA

View Full Version : 1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனைHoneytamil
05-10-2009, 02:50 PM
தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன் கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக் கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை மேற்கொண்டார்.

http://i34.tinypic.com/14uu8h1.jpg

ஆடுகளுக்கு போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில் துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர் தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர் தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.

இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.

அறிஞர்
05-10-2009, 03:33 PM
செய்தியை வெளிட்டி தினமலருக்கு (http://www.dinamalar.com/new/humantrustdetail.asp?News_id=15) நன்றி

எப்படியெல்லாம் சாதனை புரிகிறார்கள்.
---------
ஒரு டம்பளர் தண்ணீரில் துணியை நனைத்து.. துடைத்து.. சிக்கனம் செய்யலாம்...

தூயவன்
05-10-2009, 03:41 PM
நல்ல முயற்சி.. அவர் மேலும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க வாழ்த்துகள்.

[SIZE=5]
ஒரு டம்பளர் தண்ணீரில் துணியை நனைத்து.. துடைத்து.. சிக்கனம் செய்யலாம்...

ஆகா அடுத்த சிங்கம் கிளம்பிருச்சு.... :D:D

வாழ்த்துகள் அறிஞர் அண்ணா

aren
06-10-2009, 04:41 AM
அதே தண்ணீரை சுட வைத்து ஒரு துணியில் நனைத்து உடம்பைத் துடைத்துக்கொண்டால் 1/2 லிட்டரே போதுமானது.

aren
06-10-2009, 04:43 AM
தென்னகம் முழுவதும் ஒரே வெள்ளம், ஆனால் தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதையெல்லேம் ஒழுங்காக இணைத்தாலே நாம் நன்றாக தண்ணீர் ஊற்றி குளிக்கலாம். அப்படி குளித்தபின் வீணாகும் தண்ணீரையும் செடிகளுக்கு பாய்ச்சலாம்.

samuthraselvam
06-10-2009, 05:18 AM
வித்யாசமான விழிப்புணர்வு சாதனை தான்....

இன்னும் சிக்கனப்படுத்த ஒரு யோசனை....:redface::D

யாருமே குளிக்க வேண்டாம்...:p:p:icon_ush:

ஐயோ யாரோ உருட்டு கட்டையோட வர மாதிரி தெரியுதே...:eek: எஸ்கேப்....:icon_rollout::icon_rollout:

மன்மதன்
06-10-2009, 05:35 AM
தென்னகம் முழுவதும் ஒரே வெள்ளம், ஆனால் தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதையெல்லேம் ஒழுங்காக இணைத்தாலே நாம் நன்றாக தண்ணீர் ஊற்றி குளிக்கலாம். அப்படி குளித்தபின் வீணாகும் தண்ணீரையும் செடிகளுக்கு பாய்ச்சலாம்.

மற்ற மாநிலங்களிலிருந்து எதையெல்லாமோ கத்துகிறாங்க.. இதை விட்டிடுறாங்க..

ஓவியன்
06-10-2009, 05:39 AM
ஹ், ஹா, இதைப் பார்த்திட்டு நம்ம ஆளுங்க, அப்ப நாமெல்லாம் தண்ணிரை சிக்கனமா செலவு பண்ணிட்டு வாறம்னு அப்பாவியாகக் கேட்கிறாங்க - வழமை போலவே குளிக்காமலேயே இருந்து கொண்டு... :D:D:D

நேசம்
06-10-2009, 05:50 AM
யாருமே குளிக்க வேண்டாம்...:p:p:icon_ush:
- வழமை போலவே குளிக்காமலேயே இருந்து கொண்டு... :D:D:D
யாருக்கெல்லாம் அக்கறை இருக்குன்னு தெரியுது ஒவியன்

அக்னி
06-10-2009, 07:12 AM
ஓவியன்: ஏன் தண்ணீர் தண்ணீர் ன்னு சொல்லி வேஸ்ட் பண்ணுறாங்களோ புரியல...

samuthraselvam
06-10-2009, 07:17 AM
யாருக்கெல்லாம் அக்கறை இருக்குன்னு தெரியுது ஒவியன்

என் யோசனையை ஏற்றுக் கொண்ட ஓவி அண்ணாவுக்கும் நேசம் அவர்களுக்கும் ரொம்ப நன்றி....:lachen001:

arun
06-10-2009, 07:32 AM
தீபாவளிக்கு ஒரு தடவை குளிச்சா இன்னும் தண்ணி மிச்சம் ஆகுமில்ல ? :D

விகடன்
06-10-2009, 08:02 AM
தீபவளிக்கு ஒருதடவை குளித்தால் போதுமானதுதானே?
அன்றைய நாளில் மட்டும் ஏன் (தேவையின்றி) பலதடவை குளிக்க முனைகிறீர்கள்?

samuthraselvam
06-10-2009, 09:53 AM
தீபாவளிக்கு ஒரு தடவை குளிச்சா இன்னும் தண்ணி மிச்சம் ஆகுமில்ல ? :D

தீபாவளிக்கு ஏன் குளிச்சு தண்ணிய வெஸ்ட் பண்ணுறீங்க அருண் அண்ணா....:mad:

நேசம்
06-10-2009, 11:17 AM
தீபாவளிக்கு ஏன் குளிச்சு தண்ணிய வெஸ்ட் பண்ணுறீங்க அருண் அண்ணா....:mad:
சுத்தி சுத்தி வந்து குளிக்க வேண்டாமுன்னு சொல்ற உங்க சமுக அக்கறை பாரட்டுகிரியது :lachen001:

praveen
06-10-2009, 11:22 AM
ஹ், ஹா, இதைப் பார்த்திட்டு நம்ம ஆளுங்க, அப்ப நாமெல்லாம் தண்ணிரை சிக்கனமா செலவு பண்ணிட்டு வாறம்னு அப்பாவியாகக் கேட்கிறாங்க - வழமை போலவே குளிக்காமலேயே இருந்து கொண்டு... :D:D:D

ஒவியன் தினமும் குறைந்தது 1.2 லிட்டர் தண்ணீர் மிச்சம் பிடிக்கிறார் என்று தெரிகிறது, அவரை (நம்)மூக்கை பிடித்து கொண்டு வாழ்த்துவோமாக :lachen001:

ஓவியன்
06-10-2009, 11:29 AM
இங்கே வாங்க பிரவின்..!! :D:D

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=435357&postcount=251

aren
06-10-2009, 03:37 PM
ஒவியன் தினமும் குறைந்தது 1.2 லிட்டர் தண்ணீர் மிச்சம் பிடிக்கிறார் என்று தெரிகிறது, அவரை (நம்)மூக்கை பிடித்து கொண்டு வாழ்த்துவோமாக :lachen001:

நம்மளை வாழ்த்துவோரும் அப்படியே செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

செழியன்
08-10-2009, 12:34 PM
இந்தியாவில் தூசிப்படிந்த முகத்தை அலம்பவே இந்த நீர் சிலருக்கு போதாது.

சாதனைக்கு வாழ்த்துக்கள். இனி நம்மக்கள் கொஞ்ச நீரிலாவது குளிக்கட்டும்.;)

விகடன்
09-10-2009, 09:58 AM
கடலில் குளித்தால் ஓர் சொட்டுத்துளி நீரும் விரயமாகாதே...

விகடன்
09-10-2009, 10:00 AM
சுத்தி சுத்தி வந்து குளிக்க வேண்டாமுன்னு சொல்ற உங்க சமுக அக்கறை பாரட்டுகிரியது :lachen001:

தீபாவளி வருடத்தில் ஓர் நாள்தானே!!

aren
10-10-2009, 02:46 AM
தீபாவளி வருடத்தில் ஓர் நாள்தானே!!

ஐயய்யோ, அன்னைக்கு குளிக்கனுமா?

இன்பா
10-10-2009, 05:34 AM
தண்ணீரே இல்லாமல் குளித்து, நானும் சாதனை படைத்திருக்கிறேன்....!!!

கின்னஸில் போடலாம்னா என்னைப் போல் பலர் இருக்கிறீர்களே...!!!!!!!

anna
10-10-2009, 08:50 AM
நல்ல முயற்சி , மக்களுக்கு இதனால் தண்ணீர் சிக்கனத்தின் மீது விழிப்புணர்வு ஏற்பட்டால் மகிழ்ச்சி. ஏற்படுமா?

இருந்தாலும் இந்த வாலிபருக்கு இவ்வளவு சிக்கனம் கூடாது.

aren
10-10-2009, 08:56 AM
தண்ணீரே இல்லாமல் குளித்து, நானும் சாதனை படைத்திருக்கிறேன்....!!!

கின்னஸில் போடலாம்னா என்னைப் போல் பலர் இருக்கிறீர்களே...!!!!!!!

ஆமாம், அவ்வளவு சீக்கிரம் உங்களை ஜெயிக்க விட்டுவிடுவோமா

விகடன்
10-10-2009, 08:59 PM
ஐயய்யோ, அன்னைக்கு குளிக்கனுமா?

அன்னைக்காவது குளிக்காமல் தண்ணீரை சேமிக்கலாமே!!! :icon_b:

அன்புரசிகன்
11-10-2009, 02:12 AM
என்றுமே நீரை சேமிக்கவேண்டும் என்று நம்மன்றிலும் சிலர் இருக்கிறார்கள்... எப்படித்தான் முடியுதோ???

சுகந்தப்ரீதன்
11-10-2009, 10:57 AM
என்றுமே நீரை சேமிக்கவேண்டும் என்று நம்மன்றிலும் சிலர் இருக்கிறார்கள்... எப்படித்தான் முடியுதோ???
ஆமாம்.. அன்பு.. நான்கூட அப்பப்ப வியந்திருக்கேன்.. எப்படி அன்புவால இப்படியெல்லாம் இருக்க முடியுதோன்னு..??:icon_rollout: