PDA

View Full Version : சிங்க் சாங்!!!



aren
04-10-2009, 08:23 AM
சிங்க் சாங்

நான் ஒரு வெள்ளக்கிழமை 4.00 மணியளவில் சிங்கப்பூரில் இருக்கும் தீவு விரைவுச்சாலையில் வந்துகொண்டிருந்தேன். அன்றக்கென்று அந்த நேரத்தில் டிராஃபிக் அதிகமாக இருந்தது. ஏதோ ஆக்ஸிடெண்ட் நடந்திருக்கிறது, கார்கள் எறும்புகள் மாதிரி ஊர்ந்துகொண்டிருந்தன. நானும் என்ன செய்வது, டிராஃபிக்கிற்கு தகுந்தமாதிரிதானே வண்டி ஓட்டிவேண்டும், ஆகையால் நானும் மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

திவு விரைவுச்சாலையின் இரண்டு பக்கங்களுக்கும் நடுவில் ஒரு டிவைடர் இருக்கும் அது இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்டிற்கு வண்டிகள் செல்லாமல் தடுக்க இந்த தடுப்பை போட்டிருக்கிறார்கள். அது எல்லா இடத்திலேயும் ஒரு சிறிய தடுப்பாகவே இருக்கும், ஆனால் ஓரிரு இடங்களில் மட்டும் மரங்கள் இருக்கும், அந்த இடங்களில் தடுப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

என்னுடைய வண்டியும் அந்த சமயத்தில் அந்த மரங்கள் இருக்கும் தடுப்பு பகுதியில் வந்தது. அங்கே அந்த தடுப்பின் மேல் ஒரு ஓனான் உட்கார்ந்து கொண்டிருந்தது. நானும் சந்தோஷத்தில் வண்டி கதவின் கண்ணாடியைத் திறந்து ஒரு ஹாய் சொன்னேன். அதுவும் பதிலுக்கு ஒரு ஹாய் சொன்னது.

உன் பேர் என்ன என்று கேட்டேன். என் பெயர் சிங்க் சாங் என்றது. என்னைப் பார்த்து உன் பெயர் என்ன என்றது, நானும் ஆரென் என்றேன். உன்னை தினமும் இங்கே பார்க்கிறேன் ஆனால் ஒரு முறை கூட நீ உன் வண்டியை நிறுத்தி என்னிடம் பேசியது கிடையாது. இன்றைக்கு என்னுடைய அதிர்ஷ்டம் டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது அதனால் நீ என்னிடம் பேசினாய் என்றது.

ஐயாம் சாரி சிங்க் சாங், நான் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை, இங்கே விரைவாகச் செல்லவேண்டும் ஆகையால் வண்டியை நிறுத்தமுடியவில்லை என்றேன். அதுவும் சரி சரி உன்னை மன்னித்தேன் என்றது. நானும் சந்தோஷத்தில், தாங்ஸ் சிங்க் சாங்.

நான் அந்த இடத்தை நோட்டம் விட்டேன். பத்துக்கு இருபது அடி என்ற அளவிலேயே அந்த இடம் இருந்தது. மொத்தம் 200 சதுர அடி மட்டுமே சிங்க் சாங்கின் உலகம்.

நான் யோசிப்பதைப் பார்த்தவுடன், என்ன ஆரென் யோசிக்கிறாய் என்றான் சிங்க் சாங். இல்லை இந்த குறுகிய இடத்தில் எப்படி இருக்கிறாய் என்று யோசித்தேன் என்றேன் நான். என்ன இதுவா குறுகிய இடம். இதுதான் எங்கள் உலகம். இங்கேதான் நாங்கள் பரம்பரை பரம்பரையக வாழ்கிறோம். மனிதர்கள் இங்கே வருவதற்கு முன்பிலிருந்தே நாங்கள் இங்கேதான் வசித்துவருகிறோம் என்றால் பார்த்துக்கொள்ளேன் என்றான் சிங்க் சாங்.

நான் உடனே சுதாரித்துக்கொண்டு, இல்லை அதைப் பற்றி சொல்லவில்லை, நீ இந்த இடத்தை ஒரு பத்து இருபது நிமிடத்திற்குள் வந்துவிடலாமே, உலகம் பரந்து இருக்கிறதே அதில் கொஞ்சமாவது பார்க்கவேண்டாமா?

இங்கேயே பல இடங்களை நான் இன்னும் பார்க்கவில்லை காரணம் நாங்கள் வெளியே சட்டென்று வரமுடியாது, எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எங்கள் குழுவிலிருந்து சிலர் நாங்கள் போகும் இடங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருப்பார்கள், ஏதாவது ஆபத்து வருமென்றால் அவர்கள் சத்தம் எழுப்பி எங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிடுவார்கள்.

அப்படி என்ன உங்களுக்கு ஆபத்து இந்த இடத்தில் வந்துவிடப்போகிறது என்றேன் நான் சந்தேகத்துடன்.

அதற்கு சிங்க் சாங், உங்களைப் போலுள்ள மனிதர்கள் வேண்டுமென்றே எங்களை கொன்றுவிடுவார்கள், அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. எங்களை உண்டாலாவது அவர்கள் எங்களை கொன்றதுக்கு ஏதாவது உபயம் இருக்கும், ஆனால் அவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக எங்களை கொன்று விடுகிறார்கள். அதனால் மனிதர்கள் இந்த பக்கம் நடந்துவந்தால் நாங்கள் வெளியே வரமாட்டோம்.

அப்படியென்றால் எதற்காக என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ வண்டியிலேயே இருந்ததால் கொஞ்சம் தைரியம் வந்து உன்னிடம் பேசுகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது இதைப் பார்த்தால் என்னை குடும்பத்திலிருந்தே தள்ளி வைத்துவிடுவார்கள். நான் உன்னிடம் பயத்துடனேயே பேசிக்கொண்டிருக்கிறேன்.

கவலைப்படாதே, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன் உன்னை. நீ என்னுடைய நண்பனாயிற்றே என்றேன். நான் சொன்னதைக் கேட்டவுடனே என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தன் சிங்க் சாங்.

ஏன் இப்படி பார்க்கிறாய் என்றேன். இல்லை, உங்கள் மனிதர் குலத்தில்தான் நண்பர்களையே பணத்திற்காக கொல்வீர்கள், முதுகில் குத்துவீர்கள், இப்படி நண்பர்களையே அழித்துவிடுவீர்கள் ஆதாயத்திற்காக என்று எங்கள் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

நான் அவன் சொல்லும் உண்மையைக் கேட்டவுடம் வெட்கி தலை குணிந்தேன். ஹாய் ஆரென், ஐயாம் சாரி, உன்னை நோகடிக்க அப்படி சொல்லவில்லை. நீ என் நண்பன், நான் உன்னை முழுவதுமாக நம்புகிறேன் என்றான் சிங்க் சாங். இதைக் கேட்டவுடன் எனக்கு நிம்மதியாகியது.

வேறு யாரைப்பார்த்து உங்களுக்கு பயம் என்றேன். கழுகுகள், பருந்துகள், ராஜாளி ஆகியோரைப் பார்த்து பயம், ஆனால் இங்கே மரங்களுக்கு கீழே இருப்பதால் அவைகள் அவ்வளவாக உள்ளே வராது ஆகையால் நாங்களை இவைகளைப் பற்றி அவ்வளவாக பயப்படுவது இல்லை, மனிதர்கள்தான் எங்கள் பயம்.

பாம்பு, குரங்கு ஆகியவையால் உங்களுக்கு பயம் இல்லையா என்று பிடித்தேன் சிங்க் சாங்கை. இதை எப்படி சமாளிகிறான் என்று பார்க்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அதற்கு அவன், பாம்பும், குரங்கும் இங்கே இருக்கும் ரோடை கிராஸ் செய்தால் தான் இங்கே வரவேண்டும். அப்படி வருவதற்கு முன்பாகவே அவைகள் காரில் அடிபட்டோ அல்லது மனிதர்களின் கல்லடிபட்டோ இறந்துவிடும், ஆகையால் இங்கே அவைகள் வராது. ஆகையால் கொஞ்சம் கவலையில்லை என்றான் சிங்க் சாங்.

உங்களுக்கு உணவு எது என்று இன்னொரு கேள்வியை விட்டேன். இப்பொழுது எப்படி பதில் சொல்லப்போகிறான் என்று பார்க்கலாம். நாங்கள் இங்கே இருக்கும் எறும்பு போன்ற சிறிய பூச்சிகளை உண்டே வாழ்கிறோம். இந்த குட்டி இடத்தில் எவ்வளவு எறும்புகள் இருக்கபோகிறது என்று கேட்டேன். அதற்கு சிங்க் சாங், இங்கே இருக்கும் பத்து மரங்களில் ஒரு வித தேன் சுரக்கிறது. அதை இந்த எறும்புகள் சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. அந்த எறும்புகளை நாங்கள் உண்டு உயிர் வாழ்கிறோம்.

அப்படின்னா உன் தினம் டயட் வெறும் எறும்புகள்தானா என்றேன். ஆமாம், நாங்கள் உயிர்வாழ உணவு வேண்டும், அதற்கு இந்த எறும்புகள் எங்களுக்கு உதவுகின்றன. இதில் என்ன இளக்காரம் வேண்டிக்கிடக்கிறது என்றான் கடுப்புடன்.

சாரி, மன்னிச்சுக்கோப்பா, நாங்கள் விதம் விதமாக சாப்பிடுகிறோம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சாப்பாட்டு வகைகள் வேண்டும், இல்லையென்றால் எதையோ இழந்துவிட்டது போல் ஆகிவிடுகிறது என்றேன் நான்.

அதற்கு சிங்க் சாங், இந்த மன்னில் நாம் பிறந்தது நம்முடைய சந்ததியை வளப்படுத்துவதற்கு, இதைத் தவிற வேறு எதையும் நாங்கள் இந்த உலகத்திலிருந்து எதிர் பார்ப்பது கிடையாடு. நாங்கள் முட்டையிலிருந்து வெளியே வந்தவுடனேயே எங்களுக்குத் தேவையான உணவை நாங்களே தேடிக்கொள்கிறோம். என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்த என் பெற்றோர்களுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வளவே, அதற்காக அவர்கள் எனக்கு சாப்பாடு போட்டு காப்பாற்ற வேண்டும் என்று என்றுமே நாங்கள் எதிர்பார்க்கமாட்டோம்.

எங்களால் எவ்வளவு சாப்பிட முடிகிறதோ அவற்றை நாங்களே தேடி கண்டுபிடித்து சாப்பிடுகிறோம். எங்களுக்கு ஒரு நாள் உடம்பு சரியிலையென்றால் நாங்கள் பட்டினிதான், எனக்காக என் தம்பியோ அல்லது அண்ணனோ உணவு கொண்டு வரமாட்டார்கள், இது எங்களுக்கு பழக்கம் இல்லை, யாரிடமும் பிச்சை கேட்க மாட்டோம். எல்லாவற்றையும் நாங்களே வேட்டையாடித்தான் உண்போம், இதுதான் எங்கள் பழக்கம் என்றான் சிங்க் சாங்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் நம் மக்களை நினைத்தேன், மற்றவர்கள் பணத்தை சுருட்டுவதிலேயே மனதை செலுக்கும் இந்த மனித ஜென்மத்தை நினைத்து சிங்க் சாங் எதிரில் தலை குணிந்தேன்.

உனக்கு நண்பர்கள் இருகிறார்களா என்றேன். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் என்னை மாதிரிதான். உழைத்து சாப்பிடும் வர்க்கங்கள். ஆகையால் அவர்களும் படு பிசியாக இருப்பார்கள் பகல் முழுவதும், இரவு சில சமயங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம் என்றான் சிங்க் சாங்.

உங்கள் உறவினர்கள் எல்லாம் இங்கேதான் இருக்கிறார்களா என்று கேட்டேன். ஆமாம் இங்கே இருப்பவர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது எனக்கு உறவினர்களாகத்தான் இருப்பார்கள் என் நண்பர்கள் உட்பட. ஆனால் எங்களிடம் குடும்ப பகை கிடையாது, குடும்ப சொத்து என்று எதுவும் கிடையாது. ஆகையால் எங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் கிடையாது.

நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? நான் அப்படி நினைத்தது இல்லை, ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒரு சிலர் இந்த ரோட்டை கிராஸ் செய்து அங்கேயிருக்கு காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அதில் ஒருவர் திரும்பி வந்து அங்கே பல வகையான உணவு வகைகள் இருப்பதாகவும் அனைவரும் அங்கே சென்று விடலாம் என்று சொன்னார்.

அதைக் கேட்டு என் சொந்தக்காரர்களில் சிலர் வெளி உலகுக்குப் போகலாம் என்று நினைத்து அங்கேயிருந்து திரும்பிவந்த சொந்தக்காரருடன் திரும்பி சென்றார்கள், ஆனால் அவர்களில் மூன்று பேர் ரோடு கிராஸ் செய்யும்பொழுது காரில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள்.

ஐய்யய்யோ!!! அப்புறம் என்னவாச்சு என்றேன் கொஞ்சம் படபடப்புடன். அதற்கு சிங்க் சாங் சிரித்துக்கொண்டே, இதுதான் வாழ்க்கை என்ன செய்வது, இறந்தவர்களின் உடல்களை நாங்கள் கஷ்டப்பட்டு இழுத்துவந்தோம்.

இழுத்துவந்து அவர்களுக்கு சடங்குகள் செய்தீர்களா என்றேன். சடங்குன்னா என்ன என்றான் ஒன்றும் புரியாமல்.

சடங்கு என்றால் இந்த சடலங்களை மண்ணில் பள்ளம் தோண்டி புதைப்பது என்றேன்.

ஐய்ய என்ன சொல்றே நீ, இறந்தவர்களை புதைப்பதா, இல்லையில்லை, நாங்கள் பிறந்து பின் இறந்தால் எங்கள் உடல்கள் யாருக்காவது பயன் படவேண்டும் அல்லவா, ஆகையால் நாங்களே அந்த இறந்தவர்களை கூறுபோட்டு சாப்பிட்டோம்.

ஐயே, எப்படி இது எப்படி உங்கள் சொந்தக்காரர்களை சாப்பிட உங்களுக்கு மனது வந்தது.

இதிலென்ன தப்பு, இறந்தவுடன் அந்த உடல் மற்றவர்களுக்கு பயன்படவேண்டும், அப்படியில்லையெனில் பிறந்து வளர்ததிற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போயிவிடுமே என்றான் சிங்க் சாங்.

அவனுடைய அறிவு முதிர்ச்சியை நினைத்து வியப்புடன் அவனைப் பார்த்தேன்.

நீ கடலைப் பார்த்திருக்கிறாயே என்றேன், அதற்கு அவன் ஏன் பார்த்ததில்லை. இங்கே சிங்கப்பூரில்தான் அடிக்கடி மழை பெய்கிறது. இங்கே அடிக்கடி கடல் வரும் என்றான் சிங்க் சாங்.

நான் அதற்கு, அது கடல் இல்லை, குட்டை. குட்டை கூட கிடையாது அதைவிட சிறியது.

கடல் என்றால் மிகவும் பெரியது. நம் உலகத்தின் மூன்றில் இரண்டு பாதி கடல்தான். அவ்வளவு பெரியது.

நீ பார்த்திருக்கிறாயா என்றான் சிங்க் சாங்.

ஏன் பார்த்ததில்லை, நிறைய முறை பார்த்திருக்கிறேன். சிங்கப்பூர் அருகிலேயே ஒரு கடல் இருக்கிறதே. நீ வருகிறாயா, பார்க்கலாம் என்றேன்.

அதற்கு சிங்க் சாங், உன்னை நம்பி எப்படி வருவது. நான் உன்னிடம் இருப்பதைப் பார்த்தால் உன் சக நண்பர்கள் என்னை கொன்று விடுவார்களே. அது தவிற நான் இருட்டுவதற்குள் என் வீட்டிற்கு வந்துவிடவேண்டும், இல்லையென்றால் என்னை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றான் சிங்க் சாங்.

அவனுடைய ஆசையைக் கேட்டவுடன், இவனை எப்படியாவது அழைத்துக்கொண்டு அவனுக்கு கடலை காட்டிவிடவேண்டும் என்று நினைத்தேன்.

சரி நாளை இதே நேரம் இங்கேயே இருக்கிறாயா, நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்றேன். அவன் சரியென்றான்.

டிராஃபிக்கும் கொஞ்சம் சரியாகியது போல் தெரிந்தது, நான் அவனிடம் சரி நான் உன்னை நாளை சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அவனும் என்னிடம் இத்தனை நேரம் பேசிய சந்தோஷத்துடன் சரியென்று சொல்லி தலையாட்டிவிட்டு புதருக்கு நுழைந்து மறைந்து போனான.

நாளைக்கு இவனை எப்படி கடலுக்கு அழைத்து செல்வது. எப்படி வண்டியை இந்த இடத்தில் நிறுத்துவது. இங்கே வண்டியை நிறுத்துவது குற்றமாச்சே. அதுவும் இந்த வளைவில் வண்டிகள் மிகவும் வேகமாக வருமே எப்படி இது நடக்கப்போகிறது என்று கவலைப்பட்டேன்.

சிங்க் சாங்கிற்கு எப்படியாவது கடலைக் காட்டிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வாழ்க்கையில் பிறந்து ஏதாவது ஒரு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தேன். சிங்க் சாங்கிற்கு கடலை காட்டினால் அவன் மிகவும் சந்தோஷப்படுவான் என்று நினைத்தேன், அதனை செயலில் காட்டிட முடிவு செய்தேன்.

மறுநாள் ஒரு மூன்று மணிக்கு கிளம்பத்தயாரானேன். மூன்று முப்பதிற்கு என் வீட்டிலிருந்து கிளம்பினேன், வீட்டிலிருந்து தீவு விரைவுச் சாலைக்குச் சென்று ஒரு யூ டர்ன் செய்து, சிங்க் சாங் இருக்கும் இடத்திற்கு வந்து வண்டியை மெதுவாக்கினேன். வண்டியில் ஏதோ கோளாறு இருப்பதுபோல் ஹஸார்ட் லைட்டைப் போட்டேன், என் பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் அடுத்த லேனிற்கு சென்று என் பிரச்சனையை கொஞ்சம் குறைத்தன. நான் வண்டியை நிறுத்தினேன், அங்கே சிங்க் சாங் என்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான்.

நான் வண்டியை நிறுத்து என் கார் கண்ணாடியை கீழே இறக்கி என் கையை வெளியே நீட்டினேன். என் கையைப் பிடித்துக்கொண்டே மேலே ஏறினான். என் உள்ளங்கையில் வந்தவுடன் அவனை அப்படியே எடுத்து என் காரின் முன் பகுதியில் அவனை உட்கார வைத்து, ஹஸார்ட் லைட்டை அனைத்துவிட்டு, கார் கண்ணாடியை மேலே தூக்கிவிட்டேன்.

சிங்க் சாங் என்னைப் பார்த்து மிகவும் சந்தோஷத்துடன் இதுதான் முதல் முறையாக நான் என் வீட்டை விட்டு வெளியே வருகிறேன் என்றான்.

நானும் கவலைப்படாதே உனக்கு எல்லாவற்றையும் காட்டிவிட்டு மறுபடியும் உன்னை உன் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்றான்.

எல்லாம் சரியாக முடியவேண்டும் என்பதே என் கவலை என்றான் சிங்க் சாங்.

நான் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி கடல் இருக்கும் திசை நோக்கி வண்டியை வேகமாகச் செலுத்தினேன்.

வண்டி வேகமாக சென்று கடலை நெருங்கியது. சிங்க் சாங் என்னிடம், நான் நீ போனதிலிருந்து தூங்கவே இல்லை, கடல் எப்படி இருக்கும் என்று காண ஆசையாக இருந்ததால் தூக்கமே வரவில்லை, ஏதோ ஒரு டென்ஷன். என் அம்மா கூட என்னவாயிற்று உனக்கு என்றார்கள். நானும் ஏதோ சொல்லி சமாளித்தேன் என்றான் சிங்க் சாங்.

இப்படி பேசிக்கொண்டே கடலை அடைந்த்துவிட்டேன். வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, அவனை என்னுடையை கையில் எடுத்து என் சர்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். அவன் தலை மட்டும் வெளியே தெரிந்தது.

அவன் சந்தோஷத்துடன் வெளியே பார்த்துக்கொண்டு வந்தான். கடலின் சத்தம் அவன் காதில் கேட்டது. சத்தம் எப்படி என்றேன், நன்றாக இருக்கிறது, இதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்றான். அது தவிற இங்கே காற்று அருமையாக வருகிறது என்றான்.

இப்படி பேசிக்கொண்டே கடல் அருகில் வந்துவிட்டோம். நான் என்னுடைய ஷூவைக் கழட்டிவிட்டு அவனுடன் தண்ணீரில் இறங்கினேன். என் சட்டைப் பையிலிருந்து சிங்க் சாங்கை வெளியே எடுத்து இதுதான் கடல் என்றேன்.

அவன் அதன் ஆக்ரோஷத்தைப் பார்த்து பிரமித்தான். உலகம் இவ்வளவு பெரியதா என்றான். ஆமாம் மிகவும் பெரியது என்றேன்.

அவனிடம் தண்ணீரில் இறங்குகிறாயா என்றேன், சரியென்றான். மெதுவாக அவனுடைய வயிற்றில் ஒரு கயிற்றை கட்டினேன், அவன் என்னைப் பார்த்தான், இது ஒரு பாதுகாப்புக்குத்தான், தண்ணீர் உன்னை அடித்துக்கொண்டு ஓடாமல் இருக்க என்றென்.

அவனும் சரியென்று தன் வயிற்றைக் காண்பித்தான். அவன் வயிற்றில் ஒரு கயிற்றைக் கட்டி அவனை மெதுவாக தண்ணீரில் இறக்கினேன். அவன் சந்தோஷமாக தண்ணீரில் நீந்தினான்.

சந்தோஷம் பிடிபடவில்லை. அவன் இவ்வளவு ஜாலியாக இருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம். அவன் இஷ்டப்பட தண்ணீரில் நீந்த விட்டேன்.

ஒரு முப்பது நிமிடம் கடந்தவுடன் என்ன போலாமா என்றேன். இருட்ட ஆரம்பித்துவிட்டது நான் உன்னை உன் வீட்டில் விடவேண்டும் என்றேன்.

அவன் அப்பொழுதுதான் இருட்டிவிட்டதை நினைத்தான். ஆமாம், நேரம் போனதே தெரியவில்லை, சரி போகலாம் என்றான்.

அவனை மறுபடியும் எடுத்து என் சட்டை பையில் போட்டுக்கொண்டேன், வயிற்றில் கட்டிய கயிற்றை அவிழ்த்தேன்.

காருக்கு வந்து அவனை டாஷ் போர்டில் இறக்கிவிட்டேன். மிகவும் சந்தோஷமாக இருந்தான். ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட திருப்தி அவன் முகத்தில் இருந்தது எனக்கு தெரிந்தது.

வழி முழுவதும் அவன் ஏதோ பேசிக்கொண்டே வந்தான். அவன் வீடு வந்தவுடன் வண்டியை கொஞ்சம் ஸ்லோ செய்தேன், நீ வண்டியை நிறுத்தவேண்டாம், இங்கேயிருந்தே அந்த புதருக்குள்ள என்னை தூக்கிபோடு நான் அந்த கிளையைப் பிடித்துக்கொள்கிறேன் என்றான்.

அவன் சொன்னபடியே அவனை மெதுவாக புதருக்குள் தூக்கிப் போட்டேன்.

அவனும் புதரில் இருக்கும் ஒரு கிளையைப் பிடித்துகொண்டு, தாங்க்ஸ், இந்த டிரிப் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. உன்னை என் உயிர் உள்ள அளவும் மறக்கமாட்டேன் என்றேன்.

சரி சிங்க் சாங், மறுபடியும் இன்னொரு சந்தர்பத்தில் சந்திப்போம், அப்பொழுது வேறு ஏதாவது ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்றேன்.

நிச்சயம் போகலாம் ஆரென். உன் மூலம் மனிதர்களில் ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன் என்றான்.

உன்மூலம் உங்கள் வாழ்க்கை எப்படிபட்டது என்று தெரிந்துகொண்டேன் சிங்க் சாங். எனக்கும் இந்த சந்திப்பு மறக்குமுடியாதது என்றேன்.

கொஞ்சம் மனது கஷ்டத்துடனேயே இருவரும் அவரவர் திசை நோக்கி சென்றோம்.

ஓவியன்
04-10-2009, 10:35 AM
வேகமாக வாசித்து முடித்ததும், மனம் கொஞ்சம் கனத்திருந்தது ஆரென் அண்ணா...

ஒரு ஓணானின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மனிதராகிய நாம் எத்தனை தப்புக்களை செய்து கொண்டிருக்கின்றொமென உறைக்க செய்த விதத்தில் நீங்கள் ஒரு கதாசிரியராக பூரண வெற்றியடைந்து விட்டீர்கள்.

சிங்கபூர் ஓணான் என்பதால் ‘சிங் சாங்’ எனப் பெயரிட்டு, அவற்றின் வாழ்க்கை இப்படித்தானிருக்குமென ஊகித்து அதனை எழுத்தாக்கிய விதம் அருமை.

அத்துடன் ஒரு ஓணானிடம் நீங்கள் செலுத்தியதாக கூறிய பரிவு உங்களது இளைய மகள் ஜாக்கி மீது நீங்கள் செலுத்தி வரும் அன்பினூடாக நானறிந்ததே, அதனால் மனதார வாழ்த்துகிறேன் இன்னும் இது போல பல படைப்புக்களைப் படையுங்களென்ற வேண்டுகோளுடன்....!! :icon_b:

___________________________________________________________________________________________________________________

உங்களுடைய வண்டியில் சிங்கை வீதியொன்றில் வைத்து நான் ஏறிப் பயணப் பட்டது போலவே சிங் சாங்க்கும் பயணித்திருக்கிறது என்று நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது. :D:D:D

என்னே ’சிங் சாங்’ டாஸ்போர்டில் இருந்து பயணித்தது, நான் சீட்டில இருந்து பயணித்தேன்..!! :icon_ush:

aren
04-10-2009, 01:19 PM
என் கதையைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதியதற்கு நன்றி ஓவியன்.

வித்யாசமான கரு எடுத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று நினைத்தேன். எதேச்சயாக இந்த ஓணானைப் பார்த்தேன், அதன் பாதிப்புதான் இந்தக்கதை.

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பதுகண்டு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

samuthraselvam
05-10-2009, 03:41 AM
வித்யாசமான சிந்தனையில் உதித்த கதை இதுவோ... அருமையாய் விரித்து இருக்கீங்க அண்ணா..! இதுவரை இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லை....

படித்ததும் ஒரு விதமான உணர்வைத் தருகிறது....

இது தங்களின் இரண்டாவது கதை தானே...!!?? அருமை....

உங்களின் இரக்க குணம் அனைவருக்கும் பயன்பட வாழ்த்துக்கள்...

கா.ரமேஷ்
05-10-2009, 05:32 AM
வித்தியாசமான சிந்தனை... சின்ன வயதில் காரணமே இல்லாமல் அவற்றை அடித்து துன்புறுத்திய சம்பவங்கள் நிறைய உண்டு.ஆனால் காலம் மாறி அவற்றை தற்பொழுது சில சமயம் பார்க்கும் போதெல்லாம் மனம் கஷ்டமாக இருக்கும்... அவை யாரையும் துன்புருத்தாத ஜீவன் அதனை ஏன் துன்புறுத்தினோம்..? என பல கேள்விகள் எழுந்ததுண்டு.

அழகான உங்கள் கதையில் அவற்றின் இயல்பையும் அபிலாசைகளையும் தோழனாக தொடர்பு படுத்தி சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழரே...

அன்புரசிகன்
05-10-2009, 06:02 AM
வித்தியாசமான கரிசணையுடன் கூடிய ஒரு கதை... ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்து கதையை வார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா...

நமக்கு என்னமொ இப்படிப்பட்ட உயிரினங்களருகில் செல்லவே ஒரு பயம் மனதில் உள்ளது. அதனால் அவற்றை துன்புறுத்துவதும் இல்லை. பாம்புக்கு மட்டும் விதிவிலக்கு.... :D அதற்கு காரணம் வன்னிப்பெருநிலப்பரப்பிற்கு நான் இடம்பெயர்ந்திருந்தது... பாம்பை கண்டு பயந்தால் அங்கு இருக்கமுடியாது. கையில் அம்பிட்டதால் விளாசிவிடுவேன்...

அக்னி
05-10-2009, 06:23 AM
ஆரென் அண்ணா சிங் சாங்கைக் கடத்திக்கொண்டு போய் வீட்டில் அடைத்து வைத்துவிடுவாரோ என்ற பதைபதைப்புடனேயே வாசித்தேன்.

நல்ல வேளை... ஆரென் அண்ணா அப்படிச் செய்யவில்லை.

ஓணானின் மனித நிலைப்பாடு, நாண வைக்கின்றது.

ஒரு குறியீட்டுக் கதையில், இவ்வளவு சுவாரசியம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
சுவாரசியத்தோடு, சொல்லவந்ததை அழகாகத் தெளிவுறுத்திய ஆரென் அண்ணாவின் எழுத்துக்கு மிகுந்த வந்தனங்கள்...
ஆரென் அண்ணாவுக்குக் கண்டனங்கள்... பின்னே, இவ்வளவு காலமும் இந்தத் திறமையை வெளிப்படுத்தாமைக்கு யாராச்சும் பாராட்டுவாங்களா...

வித்தியாசமான வடிவில், கருத்துப் பொதிந்த நிறைவான கதை,
இன்றைய நாளை (எனக்கு) அழகாகத் தொடக்கி வைத்துவிட்டது.

சிவா.ஜி
05-10-2009, 07:06 AM
வித்தியாசப் பார்வை. ஒரு ஓணானின் மூலம் மனிதர்களின் வெட்கக்கேடுகளை அழகாய் வெளிப்படுத்தி....அத்தனை கெட்டவர்களிலும் இன்னும் நல்லவை நாடும் மனிதரும் இருக்கிறார்களென்று சொன்னது மிக அருமை.

ஆரென் உங்கள் எழுத்துக்களின் கனம் கூடிக்கொண்டே வருகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

மதுரை மைந்தன்
05-10-2009, 10:30 AM
வித்தியாசமான கருத்துள்ள கதை. நானும் சிங்சாங்கைப் போல உங்களுடன் சிங்கபூரை வலம் வந்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள்

aren
05-10-2009, 01:58 PM
வித்யாசமான சிந்தனையில் உதித்த கதை இதுவோ... அருமையாய் விரித்து இருக்கீங்க அண்ணா..! இதுவரை இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லை....

படித்ததும் ஒரு விதமான உணர்வைத் தருகிறது....

இது தங்களின் இரண்டாவது கதை தானே...!!?? அருமை....

உங்களின் இரக்க குணம் அனைவருக்கும் பயன்பட வாழ்த்துக்கள்...

நன்றி லீலுமா. ஆமாம், ஏதாவது வித்யாசமாக எழுதவேண்டும் என்று நினைத்ததால் வந்த விணை இது.

ஆமாம், இது என்னுடைய இரண்டாவது கதை.

என் மனைவியிடம் கேட்டால் எனக்கு இரக்கமே இல்லை என்பார்கள். என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-10-2009, 02:00 PM
வித்தியாசமான சிந்தனை... சின்ன வயதில் காரணமே இல்லாமல் அவற்றை அடித்து துன்புறுத்திய சம்பவங்கள் நிறைய உண்டு.ஆனால் காலம் மாறி அவற்றை தற்பொழுது சில சமயம் பார்க்கும் போதெல்லாம் மனம் கஷ்டமாக இருக்கும்... அவை யாரையும் துன்புருத்தாத ஜீவன் அதனை ஏன் துன்புறுத்தினோம்..? என பல கேள்விகள் எழுந்ததுண்டு.

அழகான உங்கள் கதையில் அவற்றின் இயல்பையும் அபிலாசைகளையும் தோழனாக தொடர்பு படுத்தி சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழரே...

நன்றி ரமேஷ். நீங்கள் மட்டுமில்லை, நம் மன்றத்தில் இருக்கும் அனைவருமே சிறிய வயதில் இந்தமாதிரியான சிறிய விலங்குகளை துன்புறுத்தியிருப்பார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-10-2009, 02:01 PM
வித்தியாசமான கரிசணையுடன் கூடிய ஒரு கதை... ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்து கதையை வார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா...

நமக்கு என்னமொ இப்படிப்பட்ட உயிரினங்களருகில் செல்லவே ஒரு பயம் மனதில் உள்ளது. அதனால் அவற்றை துன்புறுத்துவதும் இல்லை. பாம்புக்கு மட்டும் விதிவிலக்கு.... :D அதற்கு காரணம் வன்னிப்பெருநிலப்பரப்பிற்கு நான் இடம்பெயர்ந்திருந்தது... பாம்பை கண்டு பயந்தால் அங்கு இருக்கமுடியாது. கையில் அம்பிட்டதால் விளாசிவிடுவேன்...

நன்றி ரசிகரே. பாம்புகள் உங்களை என்ன செய்தது. அது யாரையுன் துன்புறுத்தாதே. அதை ஏன் விளாசவேண்டும்

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-10-2009, 02:03 PM
ஆரென் அண்ணா சிங் சாங்கைக் கடத்திக்கொண்டு போய் வீட்டில் அடைத்து வைத்துவிடுவாரோ என்ற பதைபதைப்புடனேயே வாசித்தேன்.

நல்ல வேளை... ஆரென் அண்ணா அப்படிச் செய்யவில்லை.

ஓணானின் மனித நிலைப்பாடு, நாண வைக்கின்றது.

ஒரு குறியீட்டுக் கதையில், இவ்வளவு சுவாரசியம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
சுவாரசியத்தோடு, சொல்லவந்ததை அழகாகத் தெளிவுறுத்திய ஆரென் அண்ணாவின் எழுத்துக்கு மிகுந்த வந்தனங்கள்...
ஆரென் அண்ணாவுக்குக் கண்டனங்கள்... பின்னே, இவ்வளவு காலமும் இந்தத் திறமையை வெளிப்படுத்தாமைக்கு யாராச்சும் பாராட்டுவாங்களா...

வித்தியாசமான வடிவில், கருத்துப் பொதிந்த நிறைவான கதை,
இன்றைய நாளை (எனக்கு) அழகாகத் தொடக்கி வைத்துவிட்டது.

நன்றி அக்னி அவர்களே,

என்னுடைய இந்தக்கதை உங்கள் நாளை அழகாக தொடங்க வைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

எப்படி சிங்க் சாங்கை கடத்தமுடியும். என் நண்பராச்சே அவர்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-10-2009, 02:04 PM
வித்தியாசப் பார்வை. ஒரு ஓணானின் மூலம் மனிதர்களின் வெட்கக்கேடுகளை அழகாய் வெளிப்படுத்தி....அத்தனை கெட்டவர்களிலும் இன்னும் நல்லவை நாடும் மனிதரும் இருக்கிறார்களென்று சொன்னது மிக அருமை.

ஆரென் உங்கள் எழுத்துக்களின் கனம் கூடிக்கொண்டே வருகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி சிவாஜி அவர்களே. பார்த்துங்க, கனம் கூடினால் பிரச்சனைகள்தான் நிறைய வரும். எனக்கு ஏற்கெனவே கனம் அதிகம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-10-2009, 02:06 PM
வித்தியாசமான கருத்துள்ள கதை. நானும் சிங்சாங்கைப் போல உங்களுடன் சிங்கபூரை வலம் வந்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள்

நன்றி மதுரை மைந்தன் அவர்களே. வாங்க, நீங்களும் சிங்கப்பூர் வாங்க. சிங்க் சாங் மாதிரி சுத்திட்டு வரலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
05-10-2009, 09:07 PM
ஓணானை வைத்தே ஒரு கதையென்றால்...
ஒவ்வொரு மனிதரையும் வைத்து.. பல கதை கொடுங்கள்...
பலே ஆரென்...

aren
05-10-2009, 10:28 PM
ஓணானை வைத்தே ஒரு கதையென்றால்...
ஒவ்வொரு மனிதரையும் வைத்து.. பல கதை கொடுங்கள்...
பலே ஆரென்...

நன்றி அறிஞர் அவர்களே. நிச்சயம் நேரம் கிடைக்கும்பொழுது இன்னும் எழுதுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

samuthraselvam
06-10-2009, 04:06 AM
என் மனைவியிடம் கேட்டால் எனக்கு இரக்கமே இல்லை என்பார்கள். என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

அதெல்லாம் சும்மா.... நானும் கூட என் வெங்கியை அப்படித்தான் சொல்லுவேன்...:p

ஓவியன்
06-10-2009, 04:32 AM
அது யாரையுன் துன்புறுத்தாதே. அதை ஏன் விளாசவேண்டும்

அன்பு குறிப்பிட்ட ஈழத்தின் அந்தப் பகுதிகளில் மனிதர்கள் நகரங்களில் இருக்க முடியாது காடுகளில் தஞ்சமடைந்த போது பாம்புகள் போன்ற உயிரினங்கள் கடும் தொல்லை கொடுத்தன. அந்தப் பிரதேசத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் கணிசமான பகுதியினர் விஷக் கடிக்கு ஆளாகியிருப்பார்கள், அதனையெல்லாம் தவிர்க்க வேண்டின் பாம்புகளை எதிர்க்க வேண்டியிருந்தது, முக்கியமாக விரியன் வகை கொடிய விஷப் பாம்புகளை....

நேசம்
06-10-2009, 05:14 AM
அருமை.மனிதர்களாகிய நாம் எவ்வாறு இருக்கிறொம் என்பதை ஓணான் முலம் வெளிப்படுத்தியது வித்தியாசமான பார்வை.தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.வாழ்த்துகள்

aren
06-10-2009, 07:56 AM
அன்பு குறிப்பிட்ட ஈழத்தின் அந்தப் பகுதிகளில் மனிதர்கள் நகரங்களில் இருக்க முடியாது காடுகளில் தஞ்சமடைந்த போது பாம்புகள் போன்ற உயிரினங்கள் கடும் தொல்லை கொடுத்தன. அந்தப் பிரதேசத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் கணிசமான பகுதியினர் விஷக் கடிக்கு ஆளாகியிருப்பார்கள், அதனையெல்லாம் தவிர்க்க வேண்டின் பாம்புகளை எதிர்க்க வேண்டியிருந்தது, முக்கியமாக விரியன் வகை கொடிய விஷப் பாம்புகளை....

இப்பொழுது புரிகிறது ஓவியன்.

aren
06-10-2009, 07:56 AM
அருமை.மனிதர்களாகிய நாம் எவ்வாறு இருக்கிறொம் என்பதை ஓணான் முலம் வெளிப்படுத்தியது வித்தியாசமான பார்வை.தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.வாழ்த்துகள்

நன்றி நேரம். நேரம் கிடைக்கும்பொழுது நிச்சயம் எழுதுவேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
06-10-2009, 01:27 PM
ஆஹா.. ஆரென் அண்ணா.. சிங்கப்பூர் விரைவுச் சாலையில் சில நிமிட வாகன நெருக்கடிக்கிடையில் ஒரு ஓணான் நட்பைப் பிடித்து இத்தனை அழகாக ஒரு கதை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும் அண்ணா..

அசத்தல்..

மனித மனங்களையும் ஓணான் புரிந்து இடித்துரைப்பது அருமை..

உங்களின் எண்ணவோட்டம் வெகு சிறப்பாக மெருகேறியிருக்கிறது. ஓரிடத்தில் இருமுறை "உன்னை" என்ற வார்த்தை வருகிறது. கவனிக்கவும்.

மனமார்ந்த பாராட்டுகள் ஆரென் அண்ணா. :)

தாமரை
06-10-2009, 02:15 PM
ஓ! நான் யார்? என்று கேட்க வைத்த ஓணான்!!!

aren
06-10-2009, 02:39 PM
ஆஹா.. ஆரென் அண்ணா.. சிங்கப்பூர் விரைவுச் சாலையில் சில நிமிட வாகன நெருக்கடிக்கிடையில் ஒரு ஓணான் நட்பைப் பிடித்து இத்தனை அழகாக ஒரு கதை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும் அண்ணா..

அசத்தல்..

மனித மனங்களையும் ஓணான் புரிந்து இடித்துரைப்பது அருமை..

உங்களின் எண்ணவோட்டம் வெகு சிறப்பாக மெருகேறியிருக்கிறது. ஓரிடத்தில் இருமுறை "உன்னை" என்ற வார்த்தை வருகிறது. கவனிக்கவும்.

மனமார்ந்த பாராட்டுகள் ஆரென் அண்ணா. :)

என் கதையைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதியதற்கு நன்றி பூமகள். ஆமால் அந்த தவறை நானும் கவனித்தேன். ஆனால் பின்னால் திருத்திக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
06-10-2009, 02:41 PM
ஓ! நான் யார்? என்று கேட்க வைத்த ஓணான்!!!

நன்றி தாமரை. ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன். உங்களுக்கு பிடித்திருப்பதுகண்டு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

கீதம்
08-10-2009, 07:15 AM
பெயரைப் பார்த்துவிட்டு சீனக் கதையோ என்று நினைத்தேன். ஒரு ஓணானின் கதையென்று பிறகுதான் புரிந்தது. ஓணானுக்கும் தங்களுக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் மிகவும் அருமை. தொடர்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துகள். அன்புடன் கீதம்

aren
08-10-2009, 04:06 PM
நன்றி கீதம் அவர்களே. ஓணான் என்று எழுதவேண்டாம், மக்கள் உள்ளேவந்து தெரிந்துகொள்ளட்டும் என்று பெயரை மட்டுமே வைத்தேன்.

நேர*ம் கிடைக்கும்பொழுது இன்னும் எழுதுகிறேன்

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
21-11-2009, 08:23 PM
அன்பின் ஆரென்

அடைமொழிக்கு ஏற்ற அன்புள்ளம் காட்டும் மற்றொரு படைப்பு.

வேலியில் இருந்த ஓணானை --- என வலிய ஏற்றுக்கொள்ளும் வம்புக்குக் குறியீடு இது!

அதை வைத்து அன்பே வாழ்வு.. எளிமையே அதன் சூத்திரம்..
நம்பிக்கையும் நட்புமே அடிநாதம் என அருமையாய்ச் சொன்னீர்கள்.

ஓணானைத் தாண்டி பல தளங்களில் சிந்திக்க வைத்த இலக்கியத்தரமான சிறுகதையை அனாயமாய் எழுதி, அடக்கமாய் இருக்க உங்களால் மட்டுமே இயலும் ஆரென்!


விபத்து, கடல் மூழ்கல், குடும்ப நிராகரிப்பு என பல கசப்பான முடிவுகள் சிங் சாங்குக்கு நேர்ந்துவிடுமோ என பதைப்புடன் வாசித்த என்னை
நிம்மதியான பெருமூச்சில் முடிக்க வைத்த உங்கள் அன்பெழுத்துக்கு என் வந்தனம்..


(அதி விரைவுச்சாலைகளில்
அத்திப்பூப்போல் என்றாவது
ஊர்ந்து செல்கையில்
பார்வையில் படும் புதியவை சுகமே!)


பாராட்டுகள் ஆரென்!

மன்மதன்
22-11-2009, 08:24 AM
The Bee என்ற படத்தை பார்த்த போது ஏற்பட்ட பரவசம் இந்த கதையை படித்தவுடன் கிடைத்தது.

தொடர்ந்து இது மாதிரியான உணர்வு பூர்வமான கதைகளை கொடுங்க ஆரென்ஜி.. பாராட்டுகள்..