PDA

View Full Version : டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல்



ராஜா
03-10-2009, 03:15 PM
டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்


http://thatstamil.oneindia.in/img/2009/10/03-arunachal-pradesh-200.jpg

டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

நன்றி ; தட்ஸ் தமிழ்.

வியாசன்
03-10-2009, 05:42 PM
எளியோரை வலியோர் வதைத்தால் வலியோரை தெய்வம் வதைக்கும்.
30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் இறப்புக்கும் 3 இலட்சம் மக்களின் முட்கம்பி சிறைவாழ்வுக்கும் இரண்டு தரப்பினருக்கும் பங்கு இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் கரங்கள்தான் அதிகமாக அப்பாவி மக்களின் குருதியால் நனைந்துள்ளது.

aren
04-10-2009, 03:40 AM
சீனா இந்தியாவின் ஆழம் தெரியாமல் காலை விடுகிறது.

இனிமேல் இந்தியாவை யாரும் படை எடுத்து வெற்றிக்கொள்ளமுடியாது. இப்பொழுது 1961 கிடையாது, 2009. இந்தியா எல்லாவிஷயத்திலும் முன்னேறியிருக்கிறது என்பதை சீனா மறந்துவிட்டது என்பதே இந்த பதிவிலிருந்து தெரிகிறது.

சீனாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறைக்க இந்த மாதிரியான விஷயங்களை சீனா வெளியிடுகிறது என்று நினைக்கிறேன்.

மேற்கில் இருக்கும் முஸ்லீம்கள் தனியாக செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுபோல் திபேத்தில் இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வருவது மாதிரி தெரியவில்லை.

மக்களை திசை திருப்ப இந்த மாதிரி சீனா பலமுறை செய்துள்ளது. ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல.

ஓவியன்
04-10-2009, 04:39 AM
இந்த செய்தி எத்தனை தூரம் நம்பகமானது, உலகில் எத்தனையோ இணையத்தளங்கள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்ச மெயில்கள் வருகின்றன....
அவை;

விளம்பரத்துக்காக
குழப்பம் விளைவிப்பதற்காக
உண்மையான நோக்கிற்காக
அனுப்புவருக்கு பொழுது போவதற்காக


என்று பல்வகைப்படும், இது போன்ற செய்திகளை ஊர்ஜிதப் படுத்தாமல் ‘தற்ஸ் தமிழ்’ போன்ற இணையத் தளங்கள் வெளியிடுவதே தப்பு, ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயம். விடயம் உணமையாக இருந்தால் கூட விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்து விட்டு மெளனித்திருப்பதே தாய் நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும். அதனை விடுத்து இது போன்ற செய்திகளைப் பர பரப்பூட்ட பயன்படுத்திக் கொண்டு தம்மையும் தம் தளங்களையும் விளம்பரப் படுத்துவது கேவலமானது.

நேசம்
04-10-2009, 04:41 AM
ஆனால் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.ஆரென் அண்ணா சொல்வது போல் சீனாவுக்கு எந்த விதத்திலும் இந்தியாவின் பலம் குறைய வில்லை.

ஓவியன்
04-10-2009, 04:49 AM
ஆனால் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

உண்மைதான் நேசம், ஆனால் உண்மையாக சீனா இது போல செய்ய நினைத்தால் இப்படி மெயில் அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த மெயிலை அனுப்பியவர்கள் நோக்கமே குழப்பம் விளைவிப்பதே - அவர்களது நோக்கத்தினை ‘தற்ஸ்தமிழ்’ திறம்பட நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தூயவன்
04-10-2009, 05:25 AM
இன்றைய பத்திரிகைகளிலும் முக்கிய செய்தி இது தான்.

அய்யா
04-10-2009, 08:48 AM
இன்றைய பத்திரிகைகளிலும் முக்கிய செய்தி இது தான்.

அந்த பத்திரிகைகளும் பரபரப்பூட்டவும், சுய விளம்பரத்துக்காகவும் இவ்வாறு செய்திருக்குமோ?

இன்றைய ஊடகங்களுக்கிடையேயான போரில், முன்னணியில் இருப்பதற்கும், சர்வைவலுக்காகவும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் ஸ்கூப்களை வெளியிடத்தான் வேண்டியிருக்கிறது.

சங்கிலி அறுத்தவனை உதைத்ததை படம் பிடித்த வீடியோ, காட்டுக்குள்
தீவிரவாதிகளை பேட்டி எடுத்து வந்து வெளியிடுவது என்று எத்தனையோ
முன்னுதாரணங்கள். இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலுமே இதே
நடைமுறைதான்.

இந்த செய்திகளுக்கு காரணம் கண்டுபிடிப்பதைவிட, இது போன்ற அச்ச நிலை ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும். அந்நிலை ஏற்படின், எதிர்கொள்ளத் தயாராக இராணுவம்
தயார்நிலையில் இருக்க வேண்டும். அதற்கு எச்சரிக்கை மணியாகக்கூட
இந்த செய்தியைப் பார்க்கவேண்டும்.

அடிக்கடி "விபத்துக்குள்ளாகும்" போர் விமானங்கள் விடயத்தில் இந்தியா மெத்தனமாக இருத்தல் ஆகாது.

நானறிந்தவரை, சீன இந்தியப்போர் வந்தால், இந்தியாதான் அதிகம் பாதிக்கும் என்று படுகிறது.

aren
04-10-2009, 09:07 AM
இல்லை அய்யா அவர்களே.

சினாவிற்கும் இந்தியாவிற்கும் போர் வந்தால் அதிகம் பாதிக்கப்படுவது சினாவாகத்தான் இருக்கும்.

திபத்திலிருந்தும் மேற்கு சீனாவிலிருந்தும், இன்னர் மங்கோலியாவிலிருந்தும் சீனாவிற்கு பிரச்சனை வரும். அது உள்நாட்டுப் போராக மாறக்கூடும். அப்படி நடந்தால் சீனால் சில நாடுகளாக ஆகிவிடும். அது சீனாவிற்கும் தெரியும்.

praveen
04-10-2009, 09:25 AM
சீனா சமீபகாலமாக பொருளாதர சிக்கலில் இருந்து வருகிறது, அது போர் அல்லது வேறு விதமான சிக்கலில் மாட்டினால் அதோ கதி தான்.

இந்தியாவிற்கு இந்த விசயத்தில் பாதுகாப்பாக பல நாடுகள் உள்ளன. மேலும் சீனா மறைமுகமாக இந்தியப்பொருட்களை தனது நாட்டில் தரக்குறைவாக தயாரித்து, இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று அச்சிட்டு மூன்றாவது நாடுகளில் விற்று நம் பெயரை கெடுக்க பார்க்கிறது, சமீபத்தில் இந்தியாவில் கூட சீனாவில் இருந்து வந்த அழகுசாதன பொருட்கள் கண்டெயினரை(யாரும் பெற்றுக்கொள்ளாத்தால்) உடைத்து பார்த்தால் அதில் இருந்த போலியின் மூலம் அவர்கள் சுயரூபம் தெரிந்தது.

நேரடி போர் முடியாது என்பதால் மறைமுகமாக வேலை காட்டி வருகிறது. இந்தியாவிற்கு அருகில் இருக்கும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தானிற்கு வால் பிடிக்கிறது. மறைமுக உதவி செய்து வருகிறது.

ஆளும்/இந்திய அரசு இதனை அறியாமல் இல்லை, சமீபத்திய உள்நாட்டு போரின் போது கூட, சீனா பக்கம் இலங்கை சென்று விடக்கூடாது என்றே அதிகபட்ச உதவிகள் இலங்கைக்கு செய்து வந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

பாகிஸ்தான் அமெரிக்கா அடிவருடியாக இருப்பதால் அது சீனா பக்கம் செல்லாமல் இருக்க அமெரிக்கா பார்த்துகொள்ளும்.

இருந்த போதிலும் நம் ராணுவம் மற்றும் நம் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடுதல் சரியானதில்லை. தேசப்பற்று என்பதை விட நாம் ஜனநாயக நாடு என்பதால், நம் நாட்டு பலம் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் வின்வெளி மற்றும் ராணுவத்திற்கு நீர்முழ்கி கப்பல் தயாரித்தது என அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறோம்.

இந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவை சில விசயங்களுக்காக கேட்டு, முடியாது என்றவுடன் அமெரிக்காவிடம் கோரிக்கை விட்டது என்ன ஆயிற்று என்பதை அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவின் மனஓட்டத்திற்கு எதிராக எந்த நாடும் செயல்பட முடியாது.

சீனாவுடன் போர் என்று வந்தால் இருவருக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். தாங்க முடியாத பட்சத்தில் இருக்கவே இருக்கிறது அனு ஆயுதம். நாம் அனு ஆயுதம் செய்து வைத்திருப்பது ஆயுத பூஜைக்கு கொண்டாடவா?. என்ன.

நமக்கு உண்மையிலே கம்யூனிச நட்பு நாடான ரஷ்யா இருக்கும் வரை இந்தப்பிரச்சினையில் துனைக்கு வேறு ஆள் தேவையில்லை.

உலகமெங்கும் பொருளாதர தேக்கநிலை நிலவுவதால் போர் என்பது சும்மா உதார் தான்.

ஓவியன்
04-10-2009, 09:44 AM
இன்றைய ஊடகங்களுக்கிடையேயான போரில், முன்னணியில் இருப்பதற்கும், சர்வைவலுக்காகவும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் ஸ்கூப்களை வெளியிடத்தான் வேண்டியிருக்கிறது.

தாய்நாட்டு நலனிலும், இது போன்ற சர்வை வலுதான் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெரிதாக இருக்கிறது எங்கிறீங்க....!! :wuerg019:

நல்ல தகவல், நன்றி..!! :)

வியாசன்
04-10-2009, 09:47 AM
என்ன பிரவீன் உங்களுடைய கருத்தின்படி ஏதோ இந்தியாவிடம்தான் அணுஆயுதம் இருக்கின்றது என்பதுபோல் எழுதுகின்றீர்கள். இந்தியா அணுஆயுதப் பரிசோதனையின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது.
உங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா?
ஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா?
உங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

aren
04-10-2009, 10:09 AM
இங்கே பிரிவினையை தூண்டும்விதத்தில் பதிவுகள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நமக்குள் பிரிவினைதான் இதனால் உண்டாகும். வேறு எதற்கும் இதனால் தீர்வு கிடைக்காது.

நண்பர்கள் இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-10-2009, 10:10 AM
இந்தத் திரியை இத்துடன் பூட்டிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அக்னி
04-10-2009, 02:59 PM
உங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா?
ஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா?
உங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

வியாசன் அவர்களே...
ஈழத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளின் போது,
மன்ற உறவுகள் தமது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இலங்கை, இந்தியா என்ற வேறுபாடின்றி வந்த மனப்பதிவுகள்,
மன்றத்தில் இன்னமும் இருக்கின்றன.

ஈழம் சார்ந்து நிகழ்ந்த,
தவறுகளையும், சூழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டியதில் என்றுமே பிரவின் பின்னின்றதில்லை.
நியாயம் பேசும் மன்ற உறவுகளில், ஒருவர் பிரவின்.

தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம்.
அதனால், இந்திய சட்டதிட்டங்கள் தான் தமிழகத்திற்கு முதன்மையானவை.

தமிழகம் தனிநாடாக இருந்து,
ஈழப்படுகொலைகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகள் எடுக்காதிருந்திருப்பின்,
தமிழகம் மேல் குற்றம் சொல்வதிற் குற்றமில்லை.

இப்போது குற்றம் சொல்வது,
தடைகளைத் தாண்டித், தமிழக மக்கள் கொடுத்த குரலையும், ஈகம் செய்த உயிர்களையும்
கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

இந்திய மக்களுக்கு,
தம் மொழி தாண்டி இந்தியர் என்ற உணர்வே மேலானது.
ஏனென்றால் இந்திய மக்களுக்கான உரிமை அவர்கள் நாட்டில் கிடைக்கின்றது.

இதே, இலங்கையை எடுத்துக்கொண்டால்,
தமிழ் என்றாலே தடைகளும் சந்தேகங்களும் சிறையும் சித்திரவதையும் படுகொலையும் சகஜமானதாகிப்போனதால்,
ஈழத்தமிழருக்கு இலங்கை என்பது அந்நியமாகிப்போனது.
இந்தநிலை மாறினால், ஈழத்தமிழனுக்கும் இலங்கை என்ற உணர்வு முதன்மையாகலாம்.

மன்றத்தில்,
நாடுகள், மதங்கள் தாண்டித் ‘தமிழ்’ என்ற மொழியுணர்வே முதன்மையானதாக இருக்கின்றது.
இந்த உணர்வைச் சிதையவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

தேவையற்ற சாடல்களைத் தவிர்த்துக்கொண்டு,
தமிழ்மன்றத்தில் என்றும் இணைந்திருப்போம்.

நன்றி!

வியாசன்
04-10-2009, 04:41 PM
என்ன பிரவீன் உங்களுடைய கருத்தின்படி ஏதோ இந்தியாவிடம்தான் அணுஆயுதம் இருக்கின்றது என்பதுபோல் எழுதுகின்றீர்கள். இந்தியா அணுஆயுதப் பரிசோதனையின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது.
உங்களின் இந்தக் கருத்து சர்வாதிகாரத்தன்மையாக உள்ளது. உங்கள் குடும்பத்தை அழிக்க உதவி செய்த ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா?
ஈழத்தமிழர் தமிழக மக்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இந்திய என்று வரும்போது அவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்களுடைய நலன்களுக்காக இரண்டு நாளில் 30 ஆயிரம் மக்களை கொல்லமுடியும். அதை அந்த இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றீர்களா?
உங்களுடைய கருத்தை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

அக்னி நான் தமிழக மக்களை எங்காவது குறை கூறியுள்ளேனா? அப்படி குறைகூறினால் நாங்கள் எங்களையே தூற்றுவதை போலாகும். நீங்கள் கூட என்னுடைய கருத்தை குறிப்பிடும்போது பிரவீன் எழுதிய வார்த்தைகளை வேண்டுமென்று விட்டுவிட்டீர்கள்.

இந்தவிசயத்தில் இலங்கையை தாயகமாக கொண்ட நண்பர்கள், இந்தியாவை மாட்டிக்கொண்டயா என்பது போல பதிவிடுவது கண்டிக்கத்தக்கது. இது பிரவீன் வார்த்தைகள். பாதிக்கப்பட்ட ஒருவன் தகுந்த நேரத்தில் தனக்கொரு சந்தர்ப்பம் வரும்போது அதை பயன்படுத்துவான்.


இந்திய மக்களுக்கு,
தம் மொழி தாண்டி இந்தியர் என்ற உணர்வே மேலானது.
ஏனென்றால் இந்திய மக்களுக்கான உரிமை அவர்கள் நாட்டில் கிடைக்கின்றது.

அக்னி இது நீங்கள் எழுதியது. உண்மையில் இது உங்கள் அடிமனத்திலிருந்து வந்ததா?
தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?


நான் இந்திய தமிழர்களை ஒருபோதும் குறைகூறவில்லை. அவர்கள் எமது சகோதரர்கள். ஆனால் இந்தியா என்ற சொல் வரும்போது எங்களிடமிருந்து நட்பை எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால் நாம் கொத்துகொத்தாய் உறவுகளை இழந்தவர்கள். வலிகளை நெஞ்சில் சுமப்பவர்கள். எமது வடுக்கள் உடனடியாக ஆறமாட்டாது.
பிரபாகரன் இந்தியாவை நேசித்தமையால்தான் சீனாவுடன் உறவை வளர்க்க விரும்பவில்லை. சீனாவுடன் நெருங்கியிருந்தால் முடிவுகள் மாறிப்போயிருக்கலாம்.

எல்லாவற்றையும் விட ஐநாவில் இலங்கைக்காக வக்காலத்து வாங்கி தமிழர் படுகொலையை நியாயப்படுத்திய இந்தியாவை நாம் நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்களுக்கு சரியாகப்படலாம்.

அய்யா
04-10-2009, 05:30 PM
தாய்நாட்டு நலனிலும், இது போன்ற சர்வை வலுதான் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெரிதாக இருக்கிறது எங்கிறீங்க....!! :wuerg019:

நல்ல தகவல், நன்றி..!! :)


இந்தச் செய்தியால் தாய்நாட்டு நலனுக்கு எவ்வித பங்கமும் வந்ததாக நான் நினைக்கவில்லையண்ணா. மாறாக மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.

தூயவன்
04-10-2009, 06:02 PM
பொறுமை நாம் தமிழர் தமிழால் இணைந்திருகின்றோம்....
தேவையான இடத்தில் தேவையானதை பேசுவோம்...
மன்றத்தில் எப்போதும் அமைதி நிலவட்டும்......

ஓவியன்
04-10-2009, 06:22 PM
மாறாக மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.

அடடே நீங்க சர்வே நடாத்தி கண்டறிஞ்சிங்க போல....!! :wuerg019:

அந்த விழிப்புணர்வு எப்படி, எந்த வகையில் ஏற்பட்டுள்ளதென கொஞ்சம் விளக்கலாமே...?? ;)

praveen
05-10-2009, 05:11 AM
இவ்வளவு நாளும் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இருந்த போதும் மண்ணிக்கிறோம். ஏனென்றால் அவரவர் சுபாவம் அப்படி.

இப்போதும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களை தமிழகத்து மக்களாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இது மத்திய அரசு இசைவில்லாமல் நடந்து விடுமா?.

வீணாய் போன என் சகோதரர்கள், தமிழகத்தில் ஆங்காங்கே முள்வேலி தடுப்பு முகாம் பற்றி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவித்து கொண்டிருகிறார்கள், அவர்களிடம் உங்கள் உள்ளக்கிடக்கையை தெரிவியுங்கள்.

வணங்காமன் கப்பலை திருபியனுப்பிய போது, நீங்கள் யாரை வேண்டி நின்றீர்கள், இப்போதும் யார் தயவை எதிர்பார்த்து நிற்கிறீர்கள் என்று தெரியுமா?. அடுத்து தமிழக எம்பிக்கள் குழு இலங்கை செல்ல இருப்பது எதற்கு?

மெத்த சந்தோசம், இந்த மட்டில் உங்களைப்பற்றி அறிய தந்ததற்கு.

அமரன்
05-10-2009, 05:23 AM
பிரவீன்..

மன்றத்தில் என்னைப் போன்ற பலரும் இருக்கிறார்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


*************************************************************************************************

அன்று தொட்டு இன்று வரை தமிழக>>>தமிழீழ மக்களை ஒன்றாக விடாமல் தடுக்க முனையும் சக்திகளின் சதிக்கு இரையாவதே நம்மவர் விதியாச்சு.

இனி ஒரு விதி செய்வோமே.. அதை எந்நாளும் காப்போமே..

நன்றி அனைவருக்கும்.

praveen
05-10-2009, 05:30 AM
நன்றி அமரன், உதைக்கும் கால் என் சகோதரன் கால் என்றாலும் அதற்கு முத்தம் தர தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு பதிவிற்கு எதிர்பதிவு இல்லை என்றால் நாளை மன்றம் முழுக்க ஒரு சார்பாக இருக்கிறது என்ற அவப்பெயர் வரும் என்பதால் மாற்றுக்கருத்து பதிக்க வேண்டாம் என்றிருந்த நான் பதிந்தேன்.

எனக்கும் சமயத்தில் சந்தேகம் வரும் ஒரே ரத்தம் என்றால் ஏன் இப்படி மட்டமாக யோசிக்கிறார்கள் என்று, உங்கள் பதிவிற்கு பிறகு உண்மை தெரிந்து கொண்டேன் அமைதி பெறுகிறேன்.

நன்றி.

அன்புரசிகன்
05-10-2009, 05:33 AM
சீனாவின் உற்பத்திகளை தள்ளுவதற்கு இலங்கையில் இனி போர் இல்லை. அதனால் வுடான்ஸ் விட்டிருக்கும். இதுக்கேன் இவ்வளவு முக்கியத்துவம்... எப்படியும் குளிர்காயப்போவது மூன்றாவது நபர் தான் என்று இந்த திரியின் திரிபு காட்டுகிறது. தற்போதய பொருளாதார சரிவிலிருந்து மீள்வதே சீனாவுக்கு பெரிய சவால். இதுல இது வேறயா....

அய்யா
05-10-2009, 05:58 AM
அடடே நீங்க சர்வே நடாத்தி கண்டறிஞ்சிங்க போல....!! :wuerg019:

அந்த விழிப்புணர்வு எப்படி, எந்த வகையில் ஏற்பட்டுள்ளதென கொஞ்சம் விளக்கலாமே...?? ;)

ஊடகங்களில் வந்த செய்திகளால்தானண்ணா!

வியாசன்
05-10-2009, 06:33 AM
நன்றி அமரன், உதைக்கும் கால் என் சகோதரன் கால் என்றாலும் அதற்கு முத்தம் தர தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு பதிவிற்கு எதிர்பதிவு இல்லை என்றால் நாளை மன்றம் முழுக்க ஒரு சார்பாக இருக்கிறது என்ற அவப்பெயர் வரும் என்பதால் மாற்றுக்கருத்து பதிக்க வேண்டாம் என்றிருந்த நான் பதிந்தேன்.

எனக்கும் சமயத்தில் சந்தேகம் வரும் ஒரே ரத்தம் என்றால் ஏன் இப்படி மட்டமாக யோசிக்கிறார்கள் என்று, உங்கள் பதிவிற்கு பிறகு உண்மை தெரிந்து கொண்டேன் அமைதி பெறுகிறேன்.

நன்றி.

நன்றி பிரவீன் உங்கள் குறுகிய மனப்பான்மைக்கு முள்ளிவாய்க்காலில் 3 இலட்சம் மக்கள் முற்றுகைக்குள் இருந்தபோது இலங்கை அரசு 70 பேர்தான் இருக்கின்றார்கள் என்று பிரச்சாரம் செய்தது. அதை ஆமோதித்து இந்திய அமைச்சர்கள் 70 ஆயிரம்பேர்தான் இருக்கின்றார்கள் என்று படுகொலையை ஊக்குவித்தது. ஆனால் இப்போது எப்படி 3 இலட்சம் மக்கள் அங்கிருந்து வந்தனர்.? ஐ.நா வில் படுகொலைக்கு விசாரணை தேவை என்ற மேற்கு நாடுகளின் கோரிக்கையை எதிர்த்து இலங்கை மீது போர்க்குற்றம் வராமல் தடுத்து உதவினீர்கள். எப்படி நாம் இந்தியாவை ஏற்றுக்கொள்வது.

நீங்கள் ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்கின்றீர்கள் தமிழக மீனவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டபோது என்ன செய்தது இந்தியா? நீங்கள் ஒருமைப்பாடு பற்றி வாய் கிழிய கத்துங்கள் மீனவர்கள் மானத்தை இழந்து கொண்டிருக்கட்டும். சிலவேளை நீங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்காக பொறுத்துக்கொண்டிருப்பீர்கள்

நீங்களே இதே திரியில் சொல்லியிருக்கின்றீர்கள் சீனாவுக்காகதான் இலங்கைக்கு உதவி செய்ததாக. அதற்காக ஒரு இனத்தை அழிக்க இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கின்றது.

நீங்கள் பாம்புக்கு பால் வார்த்தாக கூறுகின்றீர்கள் நீங்கள் பால் வார்த்த இலங்கை கடற்படைதான் இன்று தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்துகின்றது. நான் கூறுவதைவிட வை.கோ சீமான் போன்றவர்கள் கூடுதலாக விமர்சிக்கின்றார்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள்.

பிரவீன் இந்த கேள்விகளுக்கு நீங்கள் நுனிப்புல் மேயாமல் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லுங்கள் நான் இந்திய எதிர்ப்பை கைவிட்டுவிடுகின்றேன். இனிமேல் எதிராக எழுதமாட்டேன்.

அய்யா
05-10-2009, 06:37 AM
திரி தலைப்பைவிட்டு விவாதம் விலகுவதாகத் தெரிகிறதே!

இத்திரியைப் பூட்டிவிடலாம் எனக் கருதுகிறேன்.

ஆதி
05-10-2009, 07:54 AM
சமீப மாதங்களில் சீனா இந்தியாவை சீண்டிக் கொண்டுத்தான் இருக்கிறது..

இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. அதுமட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன..

சமீபத்தில் இந்திய எல்லையில் ஊடுறுவிய சீனா ராணுவம், சீனத்தில் ஏதோ இந்திய எல்லையில் கிறுக்கி சென்றதாக தகவல்களும் பரவின.. பிறகென்னவாயிற்றோ தெரியவில்லை, மத்திய அரசே அதை மறுத்தது..

இப்படி அரசே களவானித்தனங்கள் செய்ய, இங்கு நாமேன் உரப்பாய் விவாத்தித்து கொள்ள வேண்டும்..

இது செய்திச்சோலை.. இங்கு செய்திகளை செய்திகளாய் மட்டும் பார்ப்போம்..

இந்த திரி பலரையும் ரணப்படுத்துவதாய் தோன்றுவதால் பூட்டுகிறேன்..

இனி இது போல் உறவுகளூடு பிளவு உண்டாக்கும் திரிகள் துவங்கப்பட்டால் அவை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிச்சியமாய் குப்பைக்கு நகர்த்தப்படும் என்பதை மன்றம் சார்ப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்..

நம் உறவுகளின் காயங்களை ஆற்ற முன்வராது போனாலும் பரவாயில்லை, மேலும் அதனை ஆழபுண்ணாக்கி ஆறவிடாமல் செய்வதை தவிர்ப்போம்.

உங்கள் ஆதவரையும் ஒத்துழைப்பையும் நாடி தமிழ்மன்றம்.