PDA

View Full Version : word ல் எப்படி பக்கங்கள் உருவாக்குவது.



வியாசன்
02-10-2009, 03:20 PM
மைக்ரோசாப்ட் வேர்ட்டில் ஒரு Logo வை இணைத்து அதிக பக்கங்கள் உருவாக்க வேண்டும் எப்படி உருவாக்குவது . உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

ஓவியன்
02-10-2009, 03:30 PM
உண்மையில் உங்கள் தேவை எனக்குப் புரியவில்லை வியாசன், ஒரே மாதிரி பல பக்கங்களை உருவாக்க வேண்டுமா..??, இன்னமும் கொஞ்சம் தெளிவாக விளக்கினால் உங்கள் பிரச்சினை எனக்குப் புரிய ஏதுவாக இருக்கும்...

வியாசன்
02-10-2009, 03:49 PM
உதாரணமாக 100 பக்கங்களை கொண்ட ஒரு டாக்குமெண்ட் உருவாக்க விரும்புகின்றேன். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு Loga வை இணைக்கவேண்டும். ஒரே முறையில் அதை எப்படி உருவாக்குவது. இப்போது புரிகின்றதா என்னுடைய பிரச்சனை?

praveen
02-10-2009, 04:27 PM
fotter என்பதில் கொடுங்கள் உங்கள் பிரச்சினை தீர்ந்தது.

நேசம்
02-10-2009, 04:49 PM
பக்கத்தின் ஆரம்பத்தில்வரவேண்டுமென்றால் header பகுதியிலும் அடியில் வேண்டுமெண்றால் footer பகுதியில் கொடுங்கள்.இந்த வசதி பைல் மெனுவில் பேஜ் செட் அப் -ல் உள்ளது

பா.ராஜேஷ்
02-10-2009, 05:03 PM
வாட்டர் மார்க் பத்தி கேக்கறீங்களா!!???

வியாசன்
02-10-2009, 07:09 PM
உதவ வந்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். View என்பதில் Header and Footer என்பதனை தெரிவு செய்து இணைத்தேன் சரியாகிவிட்டது

களத்தில் இணைந்த பயனை நான் அடைகின்றேன்
நன்றி நன்றி நன்றி

aren
03-10-2009, 05:53 AM
உதவ வந்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். View என்பதில் Header and Footer என்பதனை தெரிவு செய்து இணைத்தேன் சரியாகிவிட்டது

களத்தில் இணைந்த பயனை நான் அடைகின்றேன்
நன்றி நன்றி நன்றி

இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் பல விஷயங்கள் நம் மன்றத்தில் கிடைக்கும்.

வியாசன்
03-10-2009, 06:10 AM
இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் பல விஷயங்கள் நம் மன்றத்தில் கிடைக்கும்.

உதை கிடைக்காவிட்டால் சரி

சும்மா லுலுலுலுலுலுலுலுலுலுலுலு

aren
03-10-2009, 06:39 AM
உதை கிடைக்காவிட்டால் சரி



இதுக்கும் நம் மன்றத்தில் பஞ்சமில்லை. சிலர் ஆட்டோவெல்லாம் வீட்டிற்கு அனுப்புவார்கள்.

சரண்யா
03-10-2009, 07:20 AM
word padla type பண்ணுவது ஒரு பக்கம்(இடது) இருக்க அதற்கு பக்கத்தில் அது சம்மதமாக வேறு சில குறிப்புகள் எடுக்க முடியுமா?

மஞ்சுபாஷிணி
03-10-2009, 08:30 AM
உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்... எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. இப்போது அறிந்து தெளிந்தேன். நன்றி நண்பர்களே...

பா.ராஜேஷ்
03-10-2009, 09:12 AM
word padla type பண்ணுவது ஒரு பக்கம்(இடது) இருக்க அதற்கு பக்கத்தில் அது சம்மதமாக வேறு சில குறிப்புகள் எடுக்க முடியுமா?

பவர்பாயின்ட்ல நீங்க ப்ரேசெண்டஷன் தயார் பண்ணும் பொது அதுக்கு கீழேயே குறிப்பு எடுத்தக்கலாம். வொர்ட்பட்லனா ரெண்டு விண்டோ திறந்து பரலல்ல அலைன் பண்ணி ஒன்னுல தட்டச்சு செய்யும் பொது மத்ததுல குறிப்பு எடுத்தக்கலாம்... வோர்ட்ல கம்மென்ட் கொடுக்க Alt+i+m அழுத்தினால் குறிப்பு எடுத்துk கொள்ளலாம்... தேவையான வார்த்தைகளை தெரிவு செய்த பின் மேற் சொன்ன ஷாட்கட் அழுத்தினால் அந்த வார்த்தைகளுக்கான கம்மென்ட் தட்டச்சு செய்யலாம். இது வலது புறத்தில் தெரியும்...

praveen
03-10-2009, 09:47 AM
word padla type பண்ணுவது ஒரு பக்கம்(இடது) இருக்க அதற்கு பக்கத்தில் அது சம்மதமாக வேறு சில குறிப்புகள் எடுக்க முடியுமா?

வேர்டு பேர்டு என்பது அனைத்து விண்டோஸ் பதிப்பிலும் அக்ஸ்ஸரிஸில் இருக்கும் ஒரு RTF வடிவ கோப்புகளை கையாள்வதற்கு அண்ணன் மைக்ரோசாப்டினால் ஓசியில் கொடுத்த ஒரு விசயம். அதில் காசு கொடுத்து வாங்கினால் வேர்ட்+எக்ஸல்+பவர்பாயின்ட் -ல் கிடைக்கும் கூடுதல் வசதிகள் கிடைக்காது.

நீங்கள் கேட்ட வசதி எனக்கு தெரிந்த வரை அதில் அநேகமாக இல்லை.

வியாசன்
03-10-2009, 01:16 PM
QUOTE=aren;434996]இதுக்கும் நம் மன்றத்தில் பஞ்சமில்லை. சிலர் ஆட்டோவெல்லாம் வீட்டிற்கு அனுப்புவார்கள்.[/QUOTE]


ஆட்டோ அனுப்பினால் பரவாயில்லை. கனல்கண்ணன் ,ராம்போ ராஜ்குமார், சூப்பர் சுப்பராயன்களை அனுப்பினால்தான் பிரச்சனை. :lachen001:

aren
04-10-2009, 12:43 AM
QUOTE=aren;434996]இதுக்கும் நம் மன்றத்தில் பஞ்சமில்லை. சிலர் ஆட்டோவெல்லாம் வீட்டிற்கு அனுப்புவார்கள்.


ஆட்டோ அனுப்பினால் பரவாயில்லை. கனல்கண்ணன் ,ராம்போ ராஜ்குமார், சூப்பர் சுப்பராயன்களை அனுப்பினால்தான் பிரச்சனை. :lachen001:[/QUOTE]

நீங்கள் சொல்லும் ஆட்களெல்லாம் டூப் பேர்வழிகள். நம் மன்றத்தில் இருப்பவர்கள் நிஜம். சொன்னதை செய்பவர்கள். ஆட்டோவில் வந்து அள்ளிபோட்டுக்கொண்டு போய்விடுவார்கள் நண்பரே.

komalselva
07-10-2009, 11:19 AM
இதுக்கும் நம் மன்றத்தில் பஞ்சமில்லை. சிலர் ஆட்டோவெல்லாம் வீட்டிற்கு அனுப்புவார்கள்.

அந்த "சிலர்" யாரென்று கூறிவிட்டால் அவர்களிடம் மட்டும் ஜக்கரதையாக இருப்போம். ஏனென்றால் "நாம ஆடோல மோதினாலும் ஆட்டோ நம்ம மேல மோதினாலும் சேதம் நமக்குதான். "

தாங்களாவே ஒத்துகொண்டாலும் சரிதான்