PDA

View Full Version : இரட்டைப்பதிவு



Raaj
01-10-2009, 11:57 AM
அவள் வருகைகள் யாவும்
என் செலவு பக்கத்திலே பதியபட்டுவிட்டது
ஆனால் எவனுக்கோ தெரியவில்ல
அவள் வரவுகள் அவன் வரவு பக்கத்தில்
பதிய படுகின்றது...

சிவா.ஜி
01-10-2009, 05:53 PM
செலவு வைக்கும் காதலி....நாளை யாருக்கோ தட்சணையோடு மனைவியாகப் போகிறாளோ.....

பாவம் செலவு செய்யும் இந்நாள் காதலன். அழகான புலம்பல் கவிதை. வாழ்த்துகள் ராஜ்.

samuthraselvam
02-10-2009, 06:18 AM
அனுபவமோ ராஜுக்கு..? ஹா ஹா.... செலவு வைக்காத காதலி கிடைக்க வாழ்த்துக்கள்...

அமரன்
28-11-2009, 06:51 PM
அனுபவமோ ராஜுக்கு..? ஹா ஹா.... செலவு வைக்காத காதலி கிடைக்க வாழ்த்துக்கள்...

வஞ்சப் புகழ்ச்சி கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதென்ன சாயம் பூசிய சாபமா..?

குணமதி
29-11-2009, 01:04 AM
அவள் வருகைகள் யாவும்
என் செலவுப் பக்கத்திலே பதியப்பட்டுவிட்டது
ஆனால் எவனுக்கோ தெரியவில்லை
அவள் வரவுகள் அவன் வரவு பக்கத்தில்
பதிய படுகின்றன...


இன்றைய செலவுகள் நாளை வரவுகளாகவும் வாய்ப்பிருக்கிறதே.

jawid_raiz
03-12-2009, 09:33 AM
சிலர் கணக்கில் வரவு வைப்பதும்
சிலர் கணக்கில் செலவு வைப்பதும்
இறைவனின் ஐந்தொகையை
சமப்படுத்துவதட்கே!