PDA

View Full Version : என் முதல் காதல்



Ravee
30-09-2009, 06:45 PM
என் முதல் காதல்


என் பள்ளி காலத்தில்

வந்தது முதல் காதல்

அவளின் ஒரு நிமிட பார்வைக்கு

அடிமையாகி போனேன்

என் முகம் பார்த்து பின் முதுகு

துளைத்துப்போனது உன் பார்வை

ஈட்டியோ என்று இருந்தேன்

இல்லை அது நங்கூரம் என்று

என் நெஞ்கில் பாய்ச்சி விட்டு போனாள்

அடுத்த ஆண்டு பள்ளித்திறப்பில்

ஆவலோடு எதிர் பார்த்தேன் உன்னை

ம்ம் நேற்று வரை வரவில்லை நீ

இருபது வருடம் போனபின்பு

கண்டேன் உன்னை

உன் பிள்ளைகளுடன்

எங்கே அந்த கண்கள்

எங்கோ வெறித்த பார்வையில்

எத்தனையோ சோகங்கள்

உன் கண்கள் கண்டு

கலங்கின என் கண்கள்

இறைவா இவள் கண்களில் உயிர் கொடு.


இவள் வாழ்வில் ஒளி கொடு

அறிஞர்
30-09-2009, 07:34 PM
காதலியை மீண்டும் காண
20 வருடங்களா....
அதுவும் சோகமாக....
கண்டிப்பாக சோகம் மறையவேண்டும்...
வாழ்த்துக்கள்.. ரவி..

அமரன்
30-09-2009, 08:20 PM
எங்காவது மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற நினைப்பின் தகர்வு வேதனையானது. அதை விடக் கொடுமையானது உதவ முடியாத நிலையில் இறைவனிடம் கையேந்துவது.

இருதலைக் கொள்ளியை தாங்கிய கவிதை.

Ravee
01-10-2009, 02:06 AM
எல்லோர் வாழ்விலும் ஒரு முதல் காதல் அரும்பு விட்டு இருக்கும். இந்த முதல் காதல் ஒருதலை காதலாகவே பலரின் வாழ்வில் இருக்கும். பலர் சொல்ல துணிவது இல்லை.நல்ல தாயின் அணைப்பில் வளர்ந்தவன் வாழ்வில் காதல் என்னும் அன்பின் வாசல் ஒரு நாளாவது திறந்து இருக்கும்.

மஞ்சுபாஷிணி
01-10-2009, 05:25 AM
அருமையான கவிதை ரவி. காதல் வாழ்க்கையில் சோகம் அதிகம்கொடுக்கிறது. வாழ்த்துக்கள் ரவி.

கீதம்
01-10-2009, 11:34 AM
நட்பானாலும் சரி, காதலானாலும் சரி, காலங்கடந்து காணும்போது கவலைக்குரிய நிலையில் இருந்தால் கண்கள் கலங்கத்தானே செய்யும். கையாலாகாத நிலையில் கவிதை மட்டுமே படைக்க இயலும். கனத்த கவிதைக்கு பாராட்டு ரவீ அவர்களே.

Ravee
06-10-2009, 02:12 PM
யாரோ ஒருவர் கஷ்டப்படுவதையே பொறுக்காத மனம் , நாம் பிரியம் வைத்த ஒரு உயிர் வருந்துவதை எட்ட நின்று வேடிக்கை பார்க்க ஏற்படும் சங்கடத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

aren
08-10-2009, 03:34 PM
20 வருடம் கடந்து அவள் கண்கள் உயிரில்லா ஓவியமாக இருந்தாலும் உங்கள் காதலின் வீரியம் இன்னும் உங்கள் கண்களில் இருப்பது உங்கள் வார்த்தைகள் மூலம் தெரிகிறது.

இன்னும் எழுதுங்கள்.