PDA

View Full Version : இன்று தேக்கடி படகு விபத்து: பலி 30



ராஜா
30-09-2009, 04:08 PM
http://thatstamil.oneindia.in/img/2009/09/30-thekkady-200.jpg

தேக்கடி: கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.

இன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர்.

இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த சுற்றுலாப் படகில் அதிகபட்சம் 60 பேர் வரைதான் செல்ல முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

நன்றி ; தட்ஸ் தமிழ்.

aren
30-09-2009, 04:23 PM
நானும் சன் செய்தியில் படித்தேன். மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்க விதிகளை முறைப்படுத்தவேண்டும்.

அமரன்
30-09-2009, 08:08 PM
பேராசை பெரு நட்டம்.. தனக்கும் மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

அறிஞர்
30-09-2009, 08:21 PM
நானும் அங்கு சென்றுள்ளேன்.. ஆபத்தான, ஆழமான ஏரி...

எல்லாம் சரிவர கவனிக்கப்பட்டால், விபத்துக்களை தவிக்கலாம்

நேசம்
01-10-2009, 04:56 AM
விதிமுறைகளை கடுமியாக நடைமுறை படுத்த வேண்டும்.உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

கா.ரமேஷ்
01-10-2009, 05:20 AM
மிகவும் சோகமான நிகழ்வு,மரணமடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்... இனிமேல் இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகளை சுற்றுலாத்துறை எடுக்க வேண்டும்...

அன்புரசிகன்
01-10-2009, 06:45 AM
முன்பு கிளாலி கடலில் ஒரு இயந்திர படகுடன் 6-7 படகுகள் என்று இணைத்து பல உயிர்களை நடுக்கடலில் பலிகண்டது. பேராசைகளின் இறுதிவிளைவுகள் இவ்வாறாக அமைகிறது. தகுந்த கண்காணிப்புக்கள் அவசியம்... இதனால் சுற்றுலாத்துறையும் பாதிப்புறுமே..

பால்ராஜ்
10-10-2009, 05:37 AM
தேக்கடியில் இதுவரை இந்தமாதிரி விபத்து நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.