PDA

View Full Version : இந்தியாவின் விஜேந்தர் நம்பர் 1 - குத்து சண்டை



அறிஞர்
30-09-2009, 02:10 PM
இந்தியாவின் விஜேந்தர் நம்பர் 1 உலக குத்துச்சண்டை ரேங்கிங்


புதுடெல்லி, செப். 30: உலக குத்துச்சண்டை மிடில் வெயிட் பிரிவு (75 கி.)தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் விஜேந்தர் சிங் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் மிலன் நகரில் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய விஜேந்தர் (23 வயது), உலக அளவில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறிய முதல் இந்திய குத்துச் சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது குறித்து விஜேந்தர் கூறுகையில், ‘உலகின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல வெற்றிகளைக் குவித்து இந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

நன்றி-தினகரன்

அமரன்
30-09-2009, 08:23 PM
குத்துச்சண்டை உலகில் இந்தியக்கொடியை பறக்க விட்ட வீரனுக்கு வாழ்த்துகள்.

நேசம்
01-10-2009, 10:19 AM
இந்தியாவே தூக்கி கொண்டாட வேண்டிய வீரரை ஊடகங்களும்,மக்களும் இச்சாதனை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.வாழ்த்துகள் விஜயேந்தர்