PDA

View Full Version : சமாவோ தீவில் சுனாமி-100க்கும் மேற்பட்டோர் பலி



Honeytamil
30-09-2009, 05:27 AM
சிட்னி: பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமிக்கு 100க்கும் அதிகமானோர் பலியாகினர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன.

இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. நூற்றுக்கணக்கான கார்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.

பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

டோங்காவில் 5 பேர் பலி...

அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி 5 பேர் பலியானார்கள். மேலும், இந்த சுனாமி அலைகள் நியூசிலாந்து வரை வந்தன. அங்கு குறைந்த உயர சுனாமி அலையே வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சமோவா தீவு அமெரிக்காவின் கட்டு்ப்பாட்டில் உள்ள நாடாகும்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அப்பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன.

நன்றி : Oneindia.com

கா.ரமேஷ்
30-09-2009, 07:28 AM
மிகவும் துயரமான சம்பவம்.
கடற்கரை ஓரங்களில் வாழும் நண்பர்கள் அனைவரும் எதற்க்கும் எச்சரிக்கையாக இருங்கள்... வருமுன் காத்துக்கொள்வது நல்லதல்லவா...

அமரன்
30-09-2009, 08:42 AM
இந்தமுறை ஆழிப்பேர்லை ஆசைகொண்டது அமெரிக்காக் "கண்ட"த்திலா. வேதனை தரும் தகவல்.

பால்ராஜ்
30-09-2009, 09:57 AM
எந்த இயற்கைப் பேரிடருமே துயரத்தைத் தருவது..

அன்று நம் நாட்டில் அடித்த சுனாமிக்கு லட்சத்துக்கும் அதிகம் பேர் உயிரிழந்தனர்..
அதைப் பார்க்கும்போது இது .. சின்னதாகவே தெரிகிறது..

உயிரிழந்தவர்கள் ஆத்துமா சாந்தி அடைய நமது பிரார்த்தனைகள்.

அமரன்
30-09-2009, 11:10 AM
ஆழிப்பேரலை எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் எத்தனை உயிர்களைத் தின்னப்போகுதோ..