PDA

View Full Version : முருகன் வேடத்தில் மு.க. ஸ்டாலின்ராஜா
29-09-2009, 03:11 PM
http://i292.photobucket.com/albums/mm22/arroo/stalin-murugan.jpg

கரூர்: தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இந்த டிஜிட்டல் பேனரை உடனே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபர் மாதம் 3 ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கு பெறவும், திமுக சார்பில் நடைபெறும் பெரியார், அண்ணா சிலை திறப்பு விழாவிற்கும் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இதையொட்டி திமுகவினர் தற்போது முதலே சாலையின் இரு புறமும் டிஜிட்டல் பேனர் , போஸ்டர், தட்டி என தூள் கிளப்பி வருகின்றனர்.

இந் நிலையில், லைட்வுஸ் கார்னர் ரவுண்டானா அருகில் முருகன் படத்தோடு மு.க. ஸ்டாலின் படத்தையும் இணைத்து தமிழ் கடவுளே வருக வருக என்று டிஜிட்டல் பேனரை திமுகவினர் வைத்துள்ளனர்.

மலேசியாவின் புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிரமாண்ட முருகன் சிலையின் உருவத்தில் ஸ்டாலின் முகத்தை இணைத்து இந்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் பேனரைக் கண்டு ஆவேசம் அடைந்துள்ள இந்து அமைப்புகள் சில, தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் இந்த பேனரை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போலவே, கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இளம் வள்ளுவரே வருக என்று வள்ளுவர் வேடத்தில் மு.க. ஸ்டாலின் படத்துடன் பேனரை திமுகவினர் வைத்துள்ளனர். இதற்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி ; தட்ஸ் தமிழ்.

அறிஞர்
29-09-2009, 03:35 PM
அரசியல்வாதிகளை.. அரசியல்வாதியாகவே பார்க்கவேண்டும்...

ஆனால் இது போன்று பலர்.... முன்பு பல அரசியல்வாதிகளை... பல சாமிகளுக்கு ஒப்பிட்டுள்ளனர்...

இது தவறானது..

தலைப்பு மாற்றப்பட்டது

வியாசன்
29-09-2009, 04:07 PM
முன்பு ஜெ அவர்களை அம்மனாகவும் ஆதிபராசக்தியாகவும் போஸ்டர்கள் ஒட்டினார்கள் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சூரனாக செய்தால் பொருத்தமாக இருக்கும்

Mano.G.
29-09-2009, 04:11 PM
அதுக்காக மலேசிய பத்து மலை முருகன்
தான் கிடைத்தாரா??
முருகா காப்பாத்து இவங்கள


மனோ.ஜி

ஓவியன்
29-09-2009, 04:36 PM
மதத்தினை வியாபாரமாக்கி, விளம்பரமாக்கி....

மனோ அண்ணா கூறியது போல அந்த முருகன் தான் இவர்களைக் காப்பாற்றணும்...

நேசம்
29-09-2009, 04:36 PM
இது நிச்சயமாக கண்டிக்க தக்கது.இது பொண்ற செயல்களை சம்பந்தப்பட்டவர்களே தடுக்க வேண்டும்

அய்யா
29-09-2009, 04:49 PM
நேசம் அண்ணா சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

தடுப்பதோடன்றி, மற்றவரும் இவ்வாறு செய்யாவண்ணம் கடுமையாகக் கண்டிக்கவும் வேண்டும்.

ஸ்டாலின் மற்றைய சராசரி அரசியல்வாதி போன்றவரல்ல. ஆவன செய்வாரென நம்புகிறேன்.

aren
29-09-2009, 05:14 PM
இது கொஞ்சம் அதிகம்தான். நிச்சயம் கண்டனத்துக்குரியது.

போலீஸார் இதை உடனடியாக அகற்றுவார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.

பகுத்தறிவு கொள்கை என்பதெல்லாம் அவ்வளவுதானா? எல்லாம் பெரியாருடனேயே போய்விட்டதா?

சிவா.ஜி
29-09-2009, 06:11 PM
மஞ்சள் துண்டு போட்டு, சாய்பாபாவை வீட்டுக்கு அழைத்து திருநீறு வாங்கியவர்கள், இப்போது பக்தர்களையும் உருவாக்கிவிட்டார்கள். அய்யோ பாவம்...பெரியாரின் ஆன்மா இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.

வாழ்க பகுத்தறிவு?

Ranjitham
30-09-2009, 12:34 AM
அரசியல் தலைவர்களின் கவனத்தை தன்னைநோக்கித்திருப்ப இவ்வாரு செய்யும் சிலகோமாளிகள் எல்லாக்கட்சிகளிலும் உண்டு. தலைவர்கள் இவர்களை பாராட்டாமல் சரியான முரையில் அடக்கி வைத்தால் அனைவருக்கும் நன்மையே.
நன்றியுடன்
இரன்சிதம்.

அன்புரசிகன்
30-09-2009, 12:56 AM
தந்தைக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டார் போலும்... யாருக்கு தலையில் குட்டு விழப்போகுதாம்??? அதையும் பொறுத்து பார்ப்போமே...

தூயவன்
30-09-2009, 03:43 AM
போலீஸார் இதை உடனடியாக அகற்றுவார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.அவங்க எல்லாம் பிரபாகரன் போஸ்டர் அகற்றுவதில் ரொம்ப பிஸி....:lachen001::lachen001::lachen001::lachen001:

கா.ரமேஷ்
30-09-2009, 05:27 AM
மிகவும் மலிவான விளம்பர நோக்கு இது.முதலில் மனிதன் மனிதனாக இருக்கட்டும்,அதன்பிறகு கடவுளாக மாறட்டும்...

இத்தனை பணம் செலவழித்து செய்யும் இது போன்ற அற்ப காரியங்களால் தங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்ற நோக்கம்,தன் செல்வாக்கு தெரிய வேண்டும் என்ற* காரணம், உண்மையில் பற்றும் அரசியல் திறத்தண்மையும் இருந்தால் மக்களுக்கு சேவை ஆற்றுவதில் அவர்கள் காண்பித்திருந்தால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படலாம்... தலைமையில் உள்ளவர்கள் இது போன்றவர்களை கண்டிக்க வேண்டும்... மற்றவர்களுக்கு ஒரு நீதி தனக்கு ஒரு நீதி என செயல்படுத்தினால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்... இவர்களுக்கென்ன கடுமையாக உழைத்து சம்பாதித்திருந்தால் அருமை புரியும் அரசியல் கொள்ளை அடித்ததில் கொஞ்சம் செலவழிப்பதில் அவர்களுக்கென்ன ஆக போகிறது...?

மற்றவர்களுக்கென்றால் ஒரே நாளில் சட்டம் இயற்றி பின்பற்ற முடியும்.. மற்றவர்களுக்குதானே சட்டமும் கொள்கைகளும் அரசியல் வாதிகளுக்கு இல்லைதானே......

சுகந்தப்ரீதன்
30-09-2009, 06:54 AM
திமுக சார்பில் நடைபெறும் பெரியார், அண்ணா சிலை திறப்பு விழாவிற்கும் ஸ்டாலின் வருகை தர உள்ளார்..கடவுள் உருவ வழிபாட்டை எதிர்த்தவர்களின் உருவசிலையை திறக்க வருபவருக்கு கடவுள் உருவத்தில் பேனர்...!! அதுவும் அவர்கள் வழிவந்த கட்சி உறுப்பினர்களால்...!! ஆக மொத்தம் இங்கேயும் கலி முத்திடுத்து போலிருக்கு...:icon_rollout:

பால்ராஜ்
30-09-2009, 07:44 AM
கந்தசாமி ஸ்டாலின்சாமி ஆகிவிட்டரோ என்னவோ..??

முதலாவது இந்த கட் அவுட் கலாசாரத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும்
வாரிசு அரசியல் ... ஆழ்கடலில் மூழ்கப் பட வேண்டியது...

இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

dhani
30-09-2009, 06:10 PM
2009 ம் ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை நாயகன் பட்டம் கொடுக்க வேண்டும். முருகா உன் புகழை நீயே காப்பாற்றிக்கொள்... பாவம் இந்த கோமாளிகளை மன்னித்துக்கொள்

samuthraselvam
02-10-2009, 08:56 AM
மஞ்சள் துண்டு போட்டு, சாய்பாபாவை வீட்டுக்கு அழைத்து திருநீறு வாங்கியவர்கள், இப்போது பக்தர்களையும் உருவாக்கிவிட்டார்கள். அய்யோ பாவம்...பெரியாரின் ஆன்மா இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.

வாழ்க பகுத்தறிவு?கடவுள் உருவ வழிபாட்டை எதிர்த்தவர்களின் உருவசிலையை திறக்க வருபவருக்கு கடவுள் உருவத்தில் பேனர்...!! அதுவும் அவர்கள் வழிவந்த கட்சி உறுப்பினர்களால்...!! ஆக மொத்தம் இங்கேயும் கலி முத்திடுத்து போலிருக்கு...:icon_rollout:இருவருடைய கருத்தே என் கருத்து.....

இதெல்லாம் அவிங்களாகவே பண்ணுறாங்களா? இல்ல..! முருகன்கிட்ட காசு வாங்கிட்டு பண்ணுறாங்களா?

எப்பா முருகா....(மெய்யான முருகனைதாம்பா) உன்னையவே நெறைய பேருக்கு புடிக்காது... உன்னோட ட்யூப்பிளிகேட்டை யாருக்கு புடிக்கும்..? :sauer028:

மன்மதன்
02-10-2009, 10:58 AM
இது எங்கே போயி முடியுமோ..??

அன்புரசிகன்
03-10-2009, 06:41 AM
இது எங்கே போயி முடியுமோ..??
ஏன்??? போற இடம் தெரிஞ்சா பின்னால போற உத்தேசமோ??? :D